Monday, January 3, 2011

பாட்டெழுத சான்ஸ் கொடுங்கப்பா!

வணக்கம் நண்பர்களே,

முதலில் உங்கள் எல்லோருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்.

கடந்த என் சில பதிவுகள் மொக்கை என்பதை தாண்டிய மொக்கை என சில அபிமானிகள் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் கொஞ்சம் சீரியசாய் ஒரு மொக்கை பதிவு இது. இவன் திருந்த மாட்டானோ என நினைக்காதிங்க. நான் எழுதி இருப்பதில் உண்மை இல்லை என்றால் சொல்லுங்கள் நான் மொக்கை போடுவதை நிறுத்துகின்றேன்.

இன்று கொஞ்சம் வெட்டி சும்மா இருக்கையில் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அந்தக்காலம் இந்த காலம் என்று என் சிறுவயதில் வில்லிசையில் பாடிய பாடல் அதையே கொஞ்சம் மாத்தி இப்படி போட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன் இதோ வருகின்றது அந்த பாடல்.

கண்ணதாசன் உண்மைக்காதல் கவி படித்தான் அந்தக்காலம் ஆமா அந்தக்காலம் -இப்போ
modern காதல் பற்றி நானும் சொல்ல போறேன் இந்த காலம் ஆமா இந்த காலம்.

பொண்ணுங்க பின்னால் பையன் சுத்தியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பையன்க பின்னால் பொண்ணு சுத்துறது இந்த காலம் ஆமா இந்த காலம்.

Heartம் heartம் தான் beat போடுவது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
next dayயே எல்லை மீறி ஆட்டம் போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

பார்த்த பார்வையில் காதல் fire வரும் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
பார்க்காமலேயே பற்றி எரிகின்றது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் சொல்ல நாட்கள் பல கடக்கும் அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
கண்டவுடனேயே கையைபோடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

கடிதங்கள் எழுதி காதல் செய்ததுவோ அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
Dating மூலமே bracket போடுவது இந்த காலம் ஆமா இந்த காலம்

அத்தான் மாமா என்று சினுங்கியது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
அடேய் ராஸ்கல் என்று அழைப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

அன்பு பண்பின் ஆழம் பார்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
Car, Purse waitஐ first ஆய் பார்ப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலுக்காக உயிரைக்கொடுத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
கள்ள காதலுக்காய் உயிரை எடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலில் தோற்றால் தாடி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்தக் காலம் - love
தோல்வியிலும் அவள் friendஐ correct பண்ணும இந்த காலம் ஆமா இந்த காலம்

காதலி பிரிஞ்சதும் தாலி வளர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஆனால்
பிரிஞ்சா happy moodஇல் அடுத்த lady pick up இந்த காலம் ஆமா இந்த காலம்

Weddingஇன் பின்னர் மழலை சத்தம் அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
waiting இன்றி wait கொடுப்பது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் செய்தால் ஊரே எதிர்த்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போகாதல் பண்ணாட்டி fashion இல்லைஎன்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

காதல் கல்யாணம் கருப்பாய் இனித்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
தாலி ஏறமுன்னே diverse கேட்கிறது இந்த காலம்

காதலை காதலர் காதல் செய்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - செய்யும்
கண்றாவி எல்லாம் காதல் என்னுது இந்த காலம் ஆமா இந்த காலம்

லைலா மஜ்னு இறந்தும் வாழவைத்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
lovers வாழும் போதே loveஐ கொள்வது இந்த காலம் ஆமா இந்த காலம்

வாலி வரியதனில் காதல் உருகியது அந்த காலம் ஆமா அந்த காலம் - ஐயோ
நானும் கவிவடித்தேன் என்ன கொடுமை இது இந்த காலம் ஆமா இந்த காலம்.

முக்கிய குறிப்பு: திரையுலக நண்பர்களே படைப்புலக பிரமாக்களே நானும் கொஞ்சம் பாட்டு எழுதுகின்றேன் சினிமாவில் பாட்டு எழுத ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்கப்பா! என்னது இந்த மொக்கை எல்லாம் அங்கேயும் பார்க்கணுமா என திட்டாதிங்க. திருப்பி சந்திப்பம்.


Share:

9 கருத்துரைகள்:

Pain, pain and pain said...

நீங்கள் இலகுவாக் குறை சொல்லீற்றுப் போகலாம் தல, ஆனா உண்மையாக் காதலிச்சு வாற வலி இந்தக் காலத்தில நிறையவே அதிகம்.

Unknown said...

ம்ம் வெளிநாடு போனதால தான் இப்பிடியோ சதீஷ்??

Vathees Varunan said...

கொய்யால நீ இன்னும் திருந்தவே இல்லையா?

ம.தி.சுதா said...

/////காதல் கல்யாணம் கருப்பாய் இனித்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
தாலி ஏறமுன்னே diverse கேட்கிறது இந்த காலம்/////

தம்பி நீர் நிக்கிற இடம் ரொம்ப மோசமானவாய்ங்க இருக்கிற இடம்... மாத்திப் போடும் கவனம்... ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

ம.தி.சுதா said...

/////காதல் கல்யாணம் கருப்பாய் இனித்தது அந்த காலம் ஆமா அந்த காலம் - இப்போ
தாலி ஏறமுன்னே diverse கேட்கிறது இந்த காலம்/////

தம்பி நீர் நிக்கிற இடம் ரொம்ப மோசமானவாய்ங்க இருக்கிற இடம்... மாத்திப் போடும் கவனம்... ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

சௌந்தர் said...

என்ன எங்க எந்த காதலும் செட் ஆகலையா

Pain, pain and pain said...

@வதீஸ்-Vathees

Good question.

யோ வொய்ஸ் (யோகா) said...

அவ்வ்வ்வ்வவ்

anuthinan said...

குருவே!!! உங்கள் ஆற்றல்களும், கவி இயற்றும் சிந்தனையும் என்னை மேலும் மேலும் உங்களுக்கு சிஷ்யனாக்கி விடுமோ என்று அச்சபடுகிறேன்.

ஆனாலும், தங்களின் பல அனுபவங்கள் கவியாக வந்தது போலவே இருக்கிறது!!!

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox