Ultimate Star என்ற பட்டத்தை விட்டு அன்புமணியின் அநியாய எதிர்ப்பையும் மீறி வரும் தலயின் அசல் திரைப்படத்தின் விமர்சனம் தான் இது.

தல எப்போதும் நடிப்பில் கமலுக்கு அடுத்து தான் தான் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்த படம் இந்த அசல். சரண்-அஜித்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணியின் இன்னொரு அற்புத படைப்பு. திருப்பாச்சியில் ரவுடியாக ஒரு அஜித்(இவரின் உடை எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.)ஆனால் எதிலும் வித்தியாசம் விரும்பும் அஜித் இங்கே போட்டிருப்பது பில்லா ஸ்டைலில் கோட் சூட். அவருக்கு ஜோடியாக நம் பாவனா. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம். அடுத்த அஜித் இளமையாக பெண்களை கவரும் இன்னொரு காதல் மன்னன். இவரின் ஜோடியாக என் கனவுக்கன்னி சமீரா ரெட்டி.வழக்கம் போல காதல் காட்சிகளில் அமர்க்களம் பண்ணுகின்றார் அஜித். சமீரா ரெட்டியின் அழகை மீண்டும் ஒரு தடவை கண்கொண்டு பார்க்கும் படி காட்டி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர். கதை என்ன வென சொன்னால் சுவாரஷ்யம் இருக்கதேன்பதாலும் முதலிலேயே விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவாவிலும் சுருக்கமான விமர்சனமாக தருகின்றேன். அஜித் இரண்டுவேடங்களில் வந்தாலும் இருவரும் ஒருவருடன் ஒருவர் மோதும் காட்சி வரவேண்டும் என்பதற்காக அஜித்-சமீரா ரெட்டி காதல் வானில் சிறகடிக்கப் போகும் போது தாதா அஜித்திடம் மாட்டி தப்பிப்பதே கதை. எதற்க்காக மாட்டினார்கள் எப்படி மாட்டினார்கள் இருவரும் யார் யார் என்பதே மீதிக்கதை.

இரண்டுவேடகளிலும் பிளந்து கட்டி இருக்கின்றார் அசல் நாயகன். கதாநாயகிகள் அழகோ அழகு. பிரபுவுக்கு இந்த இரண்டு அஜித்தின் அப்பா கதாபாத்திரம். மனிதர் சிவாஜியை நினைவூட்டுகின்றார். பரத்வாஜ் மீண்டும் ஒருதடவை தன் இசையால் கொள்ளை கொள்கின்றார். எங்கே எங்கே பாடல் படமாக்கப்பட்ட விதம் சூப்பர். சரணின் நேர்த்தியான திரைக்கதை சுவாரஷ்ய முடிச்சுக்கள் என்று அஜித்தின் அசல் தான் நிஜமான அசல் நாயகன் என்பதை நினைவூட்டி உள்ளது. Ultimate Star பட்டத்தை துறந்ததற்கு அஜித்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதை பார்த்தாவது மற்ற நாயகர்கள் தளபதிகள், டாக்டர்கள் திருந்தி நல்ல படங்களை தருவார்களா பார்க்காலாம்

இதையும் படிங்க....
அஜித்-சரண் கூடனியில் இன்னொரு மொக்கைப்படம் அசல். பருந்தை பார்த்து ஊர்க்குருவி பறக்க நினைத்தது போல ஆகிவிட்டது அஜித் நிலைமை. பில்லாவை ரீமேக்கி ரஜினியாக நினைத்தவர் இதிலும் அதை தொடர்வதை ஏற்க முடியவில்லை. (தன் போட்டியாளருக்கு இந்த விடயத்திலும் தான் சளைத்தவர் இல்லை என நிரூபித்துள்ளார்.)
கதை?????அதை தேடவேண்டியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த படம் தொடர்பான ஸ்டில்ஸ்களை பார்க்கும் போதே இது இன்னொரு பில்லா என நினைத்தது சரியாயகிவிட்டது. ஆனால் வெற்றி பெறுமா என்பது கேள்வியே. அஜித்தின் உடல் தாங்கமுடியவில்லை. அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் நடனம் என்ற பெயரில் துள்ளிக்குதிப்பது என்ன கொடுமை சரவணா என பிறப்பு இருந்தும் சொல்லலையே என பார்ப்பவர்களை கடுப்பாக்குகின்றது. மற்றபடி அஜித்தின் வழக்கமான இரட்டை வேட படங்களில் என்ன செய்தாரோ அதே போல நடந்து (நடித்து அல்ல) விட்டு போகின்றார்.

பாவனா என்ற நடிகை இனி எங்கே என தேடவேண்டிவரும். இப்படி ஒரு படத்தில் நடித்து விட்டோமே என இனி சமீரா ரெட்டி தமிழ் சினிமா பக்கமே வரமாட்டார். பிரபு இன்னுமா நீங்கள் இந்த தறுதலைய நம்புகின்றீர்கள். பரத்வாஜ் இசை என்ற பெயரில் ஏதோ ரணகளம் பண்ணுகின்றார். சரண் சிறந்த திரைக்கதை ஆசிரியராக தன்னை காட்டியவர் இப்போது அப்படி என்றால் என்ன என கேட்கும் நிலை. அஜித்தின் நிலை மேலும் படுகுழியில். மொத்தத்தில் இந்த அசல் ஒரு நசல்.