Thursday, September 17, 2009உரிமைக்குரல், மீனவ நண்பன் என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து ஒருவாறு சுறா என விஜயின் ஐம்பதாவது படத்துக்கு பெயர் சூட்டிவிட்டார்கள். இதென்னடா பெயர் என நாமே கொஞ்சம் யோசிக்கின்றோம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் ஒரு கறுப்பு சரித்திரமே இருக்கின்றது.

எதிர் எதிர் துருவங்களாக இருந்து விஜயும் அஜித்தும் மோதியது ஒருகாலம் இப்போது ஒரே தட்டில் உணவருந்தும் அளவிற்கு இந்த மானுக்கும் புலிக்கும் இடையில் நட்பு. ஒருவர் மேல் ஒருவர் என்ன அக்கறை. இப்படி இருக்கையில் விஜய் கேட்கும்போது மறுப்பாரா என்ன அஜித். ஆனால் விஜய் கேட்டதோ படப்பெயரை, அதுவும் அஜித் தன் படத்துக்கு சூட்டி மகிழ இருந்த பெயரை.

வெளி உலகிற்கு தான் இவர்கள் நட்பு உள்ளுக்குள்ளே இன்னும் அதே புகைச்சல் எரிவு என கூறி இரண்டுபேரின் ரசிகர்களின் மனதிலும் கர்ப்பூரத்தை ஏற்றிவைத்தவர்களுக்கு இப்போது அவர்கள் வயிற்றில் கர்ப்பூரம் எரியும் நிலை. காரணம் சுறா என்னும் தலைப்பு சிவாஜி புரடக்சன் சார்பில் அஜித் நடிக்க இருந்த திரைப்படத்துக்கு சூட்டிய பெயர். அதன் பின் ஒரு சில காரணங்களால் சுறா அசலாகிப்போனது.இந்த நிலையில் சிவாஜி புரடக்சனிடம் வேறொரு சந்தர்ப்பத்தில் இதே பெயரில் இன்னொரு படம் செய்யலாம் என சொல்லி வைத்திருந்த அஜித்துக்கு சுறா மீது அளவில்லா காதலாம். இப்படி இருக்கையில் தான் சிவாஜி புரடக்சனிடம் சுறா என்னும் பெயரை விஜய் கேட்டிருக்கின்றார். விஜய் கேட்பதை மறுக்க முடியாத அதேநேரம் அஜித்தின் பேச்சையும் தட்டமுடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக தவித்த ராம்குமார். இந்த பெயரை தெரிவுசெய்த அஜித்திடமே நீங்கள் கேளுங்கள் என சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் கிளைமாக்ஸ்.

நட்பு ரீதியில் அஜித்திடம் பேசிய விஜய் பெயரை வாங்கிவிட்டார். மனமுவந்து பெயரைக் கொடுத்தாலும் அஜித்துக்கு உள்ளுக்குள் ஒரு கவலையாம். வேறொன்றுமில்லை தன் நண்பன் விஜயின் படங்களுக்கு சுறா என்னும் பெயர் பொருந்தாதே என்பதுதானாம். இதுதானே உண்மையான நண்பர்களுக்குள் இருக்கவேண்டியது.


அஜித்தின் மனம் யாருக்கு வரும். விஜய்-அஜித் என சண்டை இடும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இந்த நட்பு காலம் பூர நிலைக்கவேண்டும். அதே நேரம் விஜயும் அரசியலை தவிர்த்து விட்டு சினிமாவில் கவனம் செலுத்தினால் ரஜினி- கமல் இணைக்கு அடுத்து அசைக்கமுடியாத இனியாக விஜய்-அஜித் இணை வேரூன்றி நிற்கும்.

15 கருத்துரைகள்:

Suresh Babu said...

Thala pola varuma....

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

hmmm.......... அந்த நாலு பேருக்கு....... விளங்கக்கூடிய மாதிரி நச்னு சொல்லியிருக்கீங்க சதீஸ்..

யோ வாய்ஸ் (யோகா) said...

ஆஹா!

கார்த்தி said...

"சுறா" இது ஒரு பெயரெண்டு இதுக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் வேறையா??? இதுக்கு பேசாமா "திமிங்கிலம்", "நண்டு", "றால்" எண்டு வைச்சிருக்கலாம்...
நல்லாத்தான் choose பண்ணுறாங்க பெயரை...... :)

Subankan said...

விஜயின்ட படம் ஓடுதில்ல, தத்தளிக்குது. சுறா எண்டு வச்சாலாவது நீந்திக் கரையேறும் எண்டு நினைச்சிட்டார் போல.

Nimalesh said...

எல்லாம் ஓகே விஜய் அவருடைய அரசியல் தான் இடிக்குது

கனககோபி said...

// கார்த்தி கூறியது...
"சுறா" இது ஒரு பெயரெண்டு இதுக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் வேறையா??? இதுக்கு பேசாமா "திமிங்கிலம்", "நண்டு", "றால்" எண்டு வைச்சிருக்கலாம்...
நல்லாத்தான் choose பண்ணுறாங்க பெயரை...... :) //

ஹா ஹா...

ம்...
உச்சத்தில் இருப்பவர்களிடையே இப்படியான நட்பு பாராட்டத்தக்கது தான்...

SShathiesh said...

Suresh Babu கூறியது...
Thala pola varuma....

=>>
நிச்சயமாக நல்ல மனம் கொண்ட தலைக்கு விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

SShathiesh said...

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் கூறியது...
hmmm.......... அந்த நாலு பேருக்கு....... விளங்கக்கூடிய மாதிரி நச்னு சொல்லியிருக்கீங்க சதீஸ்.

=>>
உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள். என்னத்த சொன்னாலும் புரியாத நாலு பேர் இன்னும் இருக்கின்றார்கள். அந்த மாயையில் இருந்து இன்னும் பலர் வெளி வரவேண்டும். இரண்டு நடிகர்களுக்கும் இடையில் ஆரோக்கியமான போட்டி இருந்தால் போதும்.

SShathiesh said...

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
ஆஹா

=>>

ஒஹோ

SShathiesh said...

கார்த்தி கூறியது...
"சுறா" இது ஒரு பெயரெண்டு இதுக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் வேறையா??? இதுக்கு பேசாமா "திமிங்கிலம்", "நண்டு", "றால்" எண்டு வைச்சிருக்கலாம்...
நல்லாத்தான் choose பண்ணுறாங்க பெயரை...... :

=>>
உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் தொலைபேசி என்னை அனுப்பி வையுங்கள் விஜய்-அஜித்திடம் கொடுத்து விடுகின்றேன். அவர்களின் அடுத்த பட தலைப்பிற்கு நீங்கள் பிரயோசனமா இருப்பீர்கள்.

SShathiesh said...

Subankan கூறியது...
விஜயின்ட படம் ஓடுதில்ல, தத்தளிக்குது. சுறா எண்டு வச்சாலாவது நீந்திக் கரையேறும் எண்டு நினைச்சிட்டார் போல

=>>

ஏதோ கரை ஏறினால் போதும்.....

SShathiesh said...

Nimalesh கூறியது...
எல்லாம் ஓகே விஜய் அவருடைய அரசியல் தான் இடிக்கு

=>>
அதுக்கும் முடிவு கிடைத்து விட்டது. கவலை வேண்டாம் நண்பா.

SShathiesh said...

கனககோபி கூறியது...
// கார்த்தி கூறியது...
"சுறா" இது ஒரு பெயரெண்டு இதுக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் வேறையா??? இதுக்கு பேசாமா "திமிங்கிலம்", "நண்டு", "றால்" எண்டு வைச்சிருக்கலாம்...
நல்லாத்தான் choose பண்ணுறாங்க பெயரை...... :) //

ஹா ஹா...

ம்...
உச்சத்தில் இருப்பவர்களிடையே இப்படியான நட்பு பாராட்டத்தக்கது தான்..

=>>
உங்களையிம் அந்த குழுவில் சேர்ப்போமா? நன்றிகள் வருகைக்கு.

Anonymous said...

tiruppathi vijay oda film name. ajith ku vijay kudutaar

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive