Tuesday, September 1, 2009

கொலை வழக்கில் சிக்குவாரா பாவனா?நடிகைகளுக்கு இப்போ போதாத காலம் போலே. சினேகா தானாக வலையில் விழுந்து போனார். சோனியா நீதிமன்றம் ஏறுகின்றார். அந்த வரிசையில் இப்போது பாவனா. பாவனாவின் இந்த பிரச்சனைக்கு வர முதல் இன்னொரு விடயம்.

சித்திரம் பேசுதடியிலேயே பாவனாவை பார்த்து கவிழ்ந்தவன் நான். அந்த பாவனைக்கு இன்று ஒரு பிரச்சனை என்றால் விட்டுவிடலாமா? என்னை போன்ற பாவனா ரசிகர்கள் எத்தனை பேர் நொந்து நூலாகி நூடில்ஸ் ஆகி போயிருப்பர். சரி பாவனாவை டாவடிச்சது போதும் விசயத்துக்கு வா என மூத்த பிரபல பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் என்னை திட்டுவிங்க என தெரியும். விடுங்கப்பா நான் சொல்றத பாவனா பார்க்க மாட்டாங்க. மனதை தேற்றுங்க போட்டியாளர்களே.இன்னும் நான் விஷயத்தை சொல்லாட்டி என் தல (அஜித்தை சொல்லலப்பா) போயிடும்.
ஒரு பக்கம் புல்லட் பாவனாவை குறிவைக்க மற்ற பக்கம் வந்தி அண்ணா பாவனா மாதிரி பொண்ணுதான் வேணுமெண்டுதான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்காராம். இப்படி எல்லாப்பக்கத்தாலும் பாவனைக்கு தொந்தரவெண்டால் அந்த பொண்ணு என்னதான் செய்யும் உங்களை தான் கொலை செய்யும். ஆனால் இப்போது இன்னுமொரு கொலையில் பாவனா மாட்டுவார் போல தெரிகின்றது. சாட்சியாகத்தானுங்கோ. முத்தூட் அதிபர் பால் ஜோர்ஜ் கொலை சம்பந்தமாக பாவனாக்கும் தொடர்பிருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் ஊடகங்கள் அவருடன் பேச தொடர்பெடுக்க அந்த தொடர்பு டைவேர்ட் ஆகி பாவின் மனேஜரிடம் செல்கின்றது. கேட்கும் கேள்விக்கும் அவரின் பதிலோ கொலை இடம்பெற்ற சமயம் பாவ் மலையாள படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தார் பிறகு எப்படி அவர்க்கு அதில் சம்பந்தம் இருக்கும் என இவர்களையே திருப்பிக் கேட்கின்றார். அதுவாவது பரவாயில்லை பால் ஜோர்ஜை யாரெண்டே பாவனைக்கு தெரியாது என இன்னொரு விடயத்தை சொல்லி இருக்கின்றார்.இதேநேரம் இன்னொரு தகவலாக கொலை நடந்த சமயம் பாவனா ஜோர்ஜின் காருக்குள் இருந்ததாகவும் இந்தவிடயம் வெளியே தெரிந்தால் தான் பெயருக்கு பங்கம் வந்துவிடும் என்பதற்காக ஜோர்ஜின் உதவியாளரின் உஅத்வியுடன் அவ்விடத்தை விட்டு எஸ்கேப் ஆனதாகவும் சொல்லப்படுகின்றது.அதேநேரம் அந்த காரில் பாவனாவின் உடைகளும் கைப்பை ஒன்றும் இருந்ததாகவும் அது இப்போது போலீசாரிடம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த பூனையும் பால் குடிக்குமா இல்லையா என்பது இன்னும் சற்று நாளில் தெரிந்துவிடும்.

பி.கு:புல்லட் தான் கொள்கையை மாற்றியதாகவும் வந்தி அண்ணா உடனடியாக தான் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டதாகவும் ஒரு கதை அடிபடுகின்றது. எல்லாம் பட்டு தெளிந்தபின்தான்.
Share:

2 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை. ஆனாலும் எனக்கு பாவனாவையும் பிடிக்கும், இளம் பெண்களின் கனவு நாயகனான ஒரு பதிவருக்குத் தொடர்பிருப்ப்தாக செய்திகள் கசிகின்றன.

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

எங்கருந்தப்பா இந்தச்செய்திகலேல்லாம் எடுக்கிறிங்க? முக்கியமா சினிமா தில்லுமுல்லுகளை. உங்கள் சேவை எங்களுக்கு தேவை(?) சதீஸ்!

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive