Friday, September 11, 2009

ஸ்ரேயாவின் பிறந்தநாளும் மீண்டு வந்த நானும்.இப்போதுள்ள கதாநாயகிகளில் மிக முக்கியமான ஒருவர். இறுதியாக வந்த கந்தசாமியில் கூட தன கதாபாத்திரத்தில் கூட வித்தியாசம் காட்டியவர். இருப்பினும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஒருவர். குறுகிய காலத்திலேயே ரஜினி,விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகைய பெருமைக்காரி. அழகான அம்மணி பல ரசிகர்களின் கனவுக்கன்னி. இப்படி எல்லாம் கொண்டாடப்படும் ஸ்ரேயாவிற்கு இன்று இருபத்தேழாவது பிறந்தநாள்.(எனக்கு அக்காவுங்கோ!)
2001ஆம் ஆண்டு இஷ்டம் திரைப்படம் மூலம் தெலுங்கில் திரைபிரவேசம் செய்தார் ஸ்ரேயா.இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ஸ்ரேயாவை அடையாளம் காட்டியது. தொடர்ந்து நான்கு படங்கள் செய்தபின் 2003ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பின் மீண்டும் தெலுங்குப்பக்கம் போனவரை தமிழ் சினிமாவும் 2003ஆம் ஆண்டு எனக்கு20 உனக்கு18 மூலம் அழைத்துவந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி வேடம் இல்லை என்றாலும் பலரின் மனதில் பசக்கென ஒட்டிவிட்டார். அதற்க்கு காரணாம் முதல் படத்திலேயே அவர் அணிந்த ஆடைகள். ஆனால் என்ன செய்வது இந்த கிளி மீண்டும் தெலுங்கும் ஹிந்தியும் பேச போய்விட்டது. அங்கே பிரபலமாகி விட்டால் விடுவார்களா. ஜெயம் ரவியுடன் மழை திரைப்படத்தில்தனிக்கதாநாயகியாகதன் இன்னிங்க்சை ஆரம்பித்தார். 2005ஆம் ஆண்டு தெலுங்கு சத்ரபதி திரைப்படத்துக்காக பிலிம்பெயர் வழங்கிய தெலுங்கு சிறந்த நடிகை விருது ஸ்ரேயாவை அலங்கரித்தது. மழை மிகப்பிரமாண்டமான வெற்றியை பெற்றுக்கொடுக்க தமிழிலும் ஸ்ரேயா கால் ஊன்றினார்.
அதன் பின் மாமனாருடனும் மருமகனுடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் பாக்கியம் ஸ்ரேயாவிற்கு கிடைத்தது. ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம். இதில் திருவிளையாடல் ஆரம்பம் முதலில் வந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ஸ்ரேயாவை இங்கேயே தங்க வைத்தது. அதன் பின் வந்த சிவாஜி ஸ்ரேயாவின் தலை எழுத்தையே மாற்றி விட்டது. தமிழில் நடித்ததோ மூன்று படங்கள் நாலாவதிலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி. எல்லோரும் திரும்பிப்பார்க்கும் நேரம் வந்த சிவாஜி செய்த சாதனைகள் ஸ்ரேயாவின் நடிப்பு நடனம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். இந்த படத்துடன் நட்சத்திர அந்தஸ்துள்ள முன்னணி நடிகை ஆகிவிட்டார். தலைவருடன் ஜோடியான அதிஷ்டம் தளபதியுடனும் ஜோடியாக்கியது. விஜயின் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நன்றாக நடித்திருக்கின்றார் என பாராட்டப்பட்டது. ஆனால் என்ன செய்வது படம் படுத்துக்கொண்டது. இடையில் கன்னட பக்கமும் போய் வந்தார்.
இதுவரை முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்த ஸ்ரேயா சனியனை தூக்கி தன் ஜாக்கட்டுக்குள் போட்டார். இந்திரலோகக்த்தில் நா அழகப்பன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வடிவேலுக்கு ஜோடியாக ஆடியதால் பல முன்னை கதாநாயகர்களின் எரிச்சலுக்கு உள்ளானார். மிக முக்கியமாக தல அஜித்தின் பாடங்களில் இன்றுவரை ஸ்ரேயா நடிக்க முடியாமல் போக காரணமும் இதுதான். தமிழில் இருந்து சற்றே ஒதுங்கியவர்(ஒதுக்கப்பட்டார்) The Other End of the Line என்ற படத்தின் மூலம் ஆங்கிலத்திலும் காலடி வைத்தார். பல மொழிகளில் சிறகடித்து பறக்க ஆரம்பித்த கிளியை தோரணை செய்ய கூடி வந்தார் விஷால் படம் பப்படமாகி மீண்டும் கிளியை கிழித்தெடுத்தது.அதன் பின்னர்தான் கந்தசாமி வந்தார். சிறுவர் முதல் பெரியோர் வரை Excuse me என சொல்லும்படி பிரபலம் கிடைத்தது. வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கின்றார். இருப்பினும் கந்தசாமியை கடித்து குதரியவர்களிடம் இருந்தும் ஸ்ரேயாவினால் தப்பமுடியவில்லை. எல்லாவற்றிலும் இருந்து மீள இப்போது மீண்டும் தனுஷுடன் நடிக்கும் குட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார். தொடர்ந்து ஜக்கு பாய்,சிக்கு புக்கு பாடங்களில் எதிர்பார்ப்போடு நடித்து வருகின்றார். What's cooking, Stella?என்ற ஆங்கில படமும் இப்போ ஸ்ரேயா வசமே. அவரின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள். அதேநேரத்தில் இன்னும் சிறப்பாக நடித்து(அப்படி எண்டால் என்ன) வெற்றித் திரைப்படங்களில் இருக்க(காரணம் வெற்றி பெற்றால் கதாநாயகியால் என சொல்வது குறைவு) பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கூடிய வாழ்த்துக்கள்.
ஸ்ரேயாவின் பிறந்தா நாள் எல்லாம் சரி மீண்டு வந்த நான் என்பது என்ன என சொல்லாமலா?. மிகப்பெரிய ஒரு இடைவேளைக்கு பின் மீண்டும் ஒரு பதிவு வாயிலாக சந்திக்கிறேன். என் பெரியப்பாவின் சுகவீனம் காரணாமாக நான் வெளியூர் செல்லவேண்டி ஏற்ப்பட்டது அதை எல்லாம் முடித்து விட்டு வந்திருக்கின்றேன். இதை தான் மீண்டு வந்த நான் என்றேன். போதுமா இதை விட நயன்தாராவின் சிங்கத்துக்கு வாழைப்பழம் கொடுக்கும் அளவிற்க்கெல்லாம் எனக்கும் ஸ்ரேயாவிற்கும் தொடர்ப்பில்லை என நினைக்காதீர்கள் இருந்தாலும் இருக்கலாம் முடிந்தால் ஸ்ரேயாவிடம் கேட்டுப்பாருங்கள்.


பி.கு: ஸ்ரேயா என்றாலே மழை நினைவு வரும் மழை என்றால் குளிர்ச்சி நினைவு வரும் அந்தக்குளிர்ச்சிக்காக இந்த படங்கள் படங்களை தெரிந்து தந்ததே ஸ்ரேயாதான் நம்புங்க.
Share:

9 கருத்துரைகள்:

யோ வொய்ஸ் (யோகா) said...

நேற்று இரவு ஸ்ரேயா என்னுடன் பேசி கொண்டிருந்த போது இலங்கையில் சதீஸ் என்று யாரோ ரசிகராம் ஒரே தொல்லைன்னு சொல்லிக்கிட்டுருந்தா, நானும் யாராயிருக்கும் என யோசித்தேன், அட நீங்க தானா அது.

Nimalesh said...

kodumai da ithu.....................

வந்தியத்தேவன் said...

சதீஸ் நயந்தாராவின் சிங்கத்தை விட ஸ்ரேயாவின் படங்கள் அழகாக இருக்கின்றன. அப்படியே என்ரை வாழ்த்துகளையும் நைட் அவரைப் பார்ட்டியில் சந்திக்கும் போது சொல்லிவிடுங்கள்.

KANA VARO said...

mudiyala saami...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கலக்கல் ஸ்ரேயா புராணம்

இப்படிக்கு
அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றம்

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
நேற்று இரவு ஸ்ரேயா என்னுடன் பேசி கொண்டிருந்த போது இலங்கையில் சதீஸ் என்று யாரோ ரசிகராம் ஒரே தொல்லைன்னு சொல்லிக்கிட்டுருந்தா, நானும் யாராயிருக்கும் என யோசித்தேன், அட நீங்க தானா அது
=>>

அடடா என்னைப்பற்றி தான் பேச்சா? பரவாயில்லை ஆனால் தொல்லை என்று உங்களை தான் சொல்ல்லி இருக்கின்றார் ஏனென்றால் பின்னர் எனக்கு அழைப்பெடுத்து யோ என்னும் ஒரு அருவைப்பாட்டிக்கு உங்கள் பெயரை சொல்லி தொல்லை என்றேன் அப்போதும் மண்டையில் ஏறாமல் தொல்லை கொடுத்துக்கொண்டு கதைக்கின்றார் என்றார் அது நீங்கதானா?

SShathiesh-சதீஷ். said...

வந்தியத்தேவன் கூறியது...
சதீஸ் நயந்தாராவின் சிங்கத்தை விட ஸ்ரேயாவின் படங்கள் அழகாக இருக்கின்றன. அப்படியே என்ரை வாழ்த்துகளையும் நைட் அவரைப் பார்ட்டியில் சந்திக்கும் போது சொல்லிவிடுங்கள்

=>>
உங்கள் வாழ்த்துக்களை சொன்னேன். நன்றிகளை சொல்ல சொன்னார். அண்ணா உங்கள் படங்களை அடிக்கமுடியுமா?

SShathiesh-சதீஷ். said...

VARO கூறியது...
mudiyala saami..

=>>
உன்னால் முடியும்......
lol

SShathiesh-சதீஷ். said...

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) கூறியது...
கலக்கல் ஸ்ரேயா புராணம்

இப்படிக்கு
அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்ற

=>>
நன்றி நன்றி நன்றி

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive