Sunday, September 27, 2009

சொதப்பல் ஆட்டம் ஆடிய இந்தியாவும் சாதித்து காட்டிய பாகிஸ்தானும்.இங்கேயும் வெற்றி இல்லை.

இம்முறை நடைபெறும் ஐ.சி.சாம்பியன் கிண்ண தொடரின் மிக முக்கியமான போட்டியாக நடை பெற்ற போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்த போட்டியில் இந்தியா ஏமாற்றி விட்டது. நாணய சுழற்ச்சியில் பாகிஸ்தான் வென்றவுடன் முதலில் தாங்களே துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார் பாகிஸ்தான் அணித்தலைவர். காயத்திலிருந்து மீண்டு வந்த யூனுஸ், இந்த போட்டியில் எப்படியும் இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம் என சொன்னதை சாதித்து காட்ட முதல் படியாக நாணய சுழற்சியில் வென்றார்.


துடுப்பாட்டத்தில் விட்டதை துடிப்பாக ஆடி ஈடுகட்டியவர்.

இம்ரான் நசீர்-கம்ரான் அக்மால் இணையை நீண்ட நேரம் நிலைக்கவிடாமல் நசீரை நெஹ்ரா அனுப்பி வைத்து இந்தியாவிற்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து கம்ரான் அக்மாலையும் குறித்த இடைவெளியில் அவரே அனுப்பி வைக்க, அணித்தலைவர் யூனுஸ் கானை ஹர்பஜன் பார்த்துக்கொண்டார். நன்றாக போய் கொண்டிருந்த இந்த பயணத்தில் மாலிக் - முஹம்மத் யூசுப் ஜோடி இடியை கொடுக்க ஆரம்பித்தது. எந்த பந்து வீச்சாளராலும் இந்த இணையை பிரிக்க முடியாமல் போனது. இதற்குள் இந்திய அணியின் களத்தடுப்பு உலகத்தரம் வாய்ந்த ஒரு அணியிடம் இருக்க வேண்டிய களதடுப்பா இது என கேட்கவைத்தது. ஓட்டங்களை இவர்கள் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தானின் ஓட்ட எண்ணிக்கையும் அசுர வளர்ச்சி கண்டது. மாலிக் வழக்கம் போல இந்தியர்களை அடித்து துவைத்தார். மீண்டும் ஒரு சதம் கண்ட அவரின் துடுப்பாட்டம் மற்றவர்களுக்கு பாடமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிரிடி ஏமாற்ற பாகிஸ்தான் ஐம்பது ஓவர் முடிவில் ஓட்டங்களை பெற்றது.


இந்தியாவின் கனவை தகர்த்த ஜோடி.

நம் இந்தியர்கள் தான் துடுப்பாட்ட சூரர்களாச்சே. அதுவும் கம்பீரும் வந்திருக்கிறார் கலக்குவார் என்னும் நம்பிக்கையில் காத்திருக்க சச்சினும் கம்பீரும் நன்றாக தான் தொடங்கினர். ஆனால் வழக்கமாக முக்கிய ஆட்டங்களில் சொதப்பும் சச்சின் இங்கேயும் அந்த நோயை ஆரம்பித்தது வைத்தார். ஆனால் தொடர்ந்து வந்த திராவிட் நம்பிக்கை கொடுக்க அடித்து பிளந்து கொண்டிருந்தார் கம்பீர். திராவிட் ஆமை ஆட்டம் ஆட கம்பீர் அனல் பறக்கும் ஆட்டம் நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கை நெடுநேரம் நீடிக்கவில்லை. அநியாயமாக ரன் அவுட் முறையில் கம்பீர் வெளியேற இந்தியாவின் வெற்றியும் அவர்களை விட்டு வெளியேறி விட்டது. இருந்தாலும் இந்திய ரசிகனாக இன்னும் நம்ம தோணி,ரெய்னா,யுஸுப் எல்லாம் இருக்கிறார்களே பார்க்கலாம் என நானும் ஆவலாக இருந்தேன்.


மீண்டு வந்து பலியாகிய சூரர்.

ஷேவாக் இல்லாதது ஆரம்பத்தில் தெரிய இடை வரிசையில் ஆடும் யுவராஜ் வெளியேற அந்த இடத்துக்கு வந்த கோலி கலக்குவார் என நம்பி இருக்க ஓரளவிற்கு அடித்து ஆடினார். இந்த நிலையில் ஆமை வேகத்தில் இருந்து திராவிட் அதிரடிக்கு மாறினார். இதை பார்த்து தானும் அதிரடிக்கு மாறிய கோலியின் அனுபவமினமையால் அவரும் நடையைக் கட்டினார். தொடர்ந்து வந்த அணித்தலைவர் தனக்கும் போட்டிக்கும் சம்பந்தமில்லை என்பது போல உப்பு சப்பு இல்லாமல் ஆட நீங்கள் போய் வாருங்க என அபிரிடி அனுப்பி வைத்தார். அதன் பின் வந்த ரெய்னா டிராவிட்டுடன் இணைந்து வெற்றியை நோக்கி கொண்டுவந்தார். இருவரும் இணைந்து பாகிஸ்தானை பந்தாட திராவிட் தன அரை சதத்தை கடந்து தன்னை இவ்வளவு நாளும் ஒதுக்கி வைத்த தெரிவாளர்களுக்கு சாட்டைஅடி கொடுத்தார்.


தன் பங்குக்கு அசத்தியவர்.

ஆனால் இந்த சந்தோஷமும் நெடுநேரம் நீடிக்கவில்லை.ரெயினாவும் நாற்பத்தாறு ஓட்டங்களோடு வெளியேற கனவு களைய தொடங்கியது. அப்போதும் டிராவிட்க்கு யுஸுப் கை கொடுப்பார் என எதிர்பார்க்க கைவிட்டு விட்டார். இறுதி நம்பிக்க ஹர்பஜனிடம். அதை காப்பாற்றும் படி ஹர்பஜன் ஆடினாலும் மீண்டுமொருமுறை முட்டாள் ஆட்டமாடிய திராவிட் இம்முறை தன விக்கெட்டை பரிதாபமாக பறி கொடுத்து நடையைக் கட்டினார். அத்துடன் இந்தியா ஜெயிக்கும் எனும் கனவும் கலைய தொடங்கியது.


தன்னை ஒதுக்கியவர்களுக்கு சாட்டை கொடுத்து விட்டு கரை சேர்க்க முடியாமல் போனவர்.

மொத்தத்தில் நீண்ட நாட்களாக திட்டம் தீட்டியது மட்டுமன்றி இந்தியாவை இம்முறை கவிழ்ப்போம் என கூறிய பாகிஸ்தான் வீரர்கள் அதை சாதித்தும் காட்டி விட்டனர். ஆனால் இந்த போட்டியில் சச்சின் உட்பட இந்திய வீரர்கள் பொறுப்பற்ற சொதப்பல் ஆட்டமாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. இல்லையேல் உலகின் முதல் நிலை அணி இப்படி மூஞ்சியில் கரி படும் படி தோற்றிருக்காது. மொத்தத்தில் இம்முறை கிண்ணம் யாருக்கு என்ற என் கணிப்புகளும் பொய்யாகி வருகின்றன.சிலவேளை பாகிஸ்தானோ ஏன் இங்கிலாந்தோ கிண்ணத்தை சுவீகரித்தலும் ஆச்சரியமில்லை.
Share:

4 கருத்துரைகள்:

sanjeevan said...

நான் அப்பவே சொன்னன் பாகிஸ்தானை கணக்கெடுக்காம விட்டுட்டீங்கள் என்று..........

Prapa said...

அவங்க எப்பவும் இப்படித்தானே அத விடுங்க....இப்ப
தம்பி கொஞ்சம் தாமதமாக உங்கள் அழைப்பு ,,,, பதிவாகியிருக்கிறது. வந்து பாருங்க

ஷாஜ் said...

இதற்குள் இந்திய அணியின் களத்தடுப்பு உலகத்தரம் வாய்ந்த ஒரு அணியிடம் இருக்க வேண்டிய களதடுப்பா இது என கேட்கவைத்தது. /////அய்யோ அய்யோ காமெடி கீமெடி பண்ணலீயே

Unknown said...

நான் பாகிஸ்தான் இரசிகர் என்பதால் எனக்கு மகிழ்ச்சி தான்...
ஹா ஹா ஹா... தொப்பி தொப்பி...

ஹம்பீரின் ஆட்டமிழப்புத் தான் திருப்புமுனை எனலாம்.

ஆனூல் இந்திய அணியின் பந்துவீச்சுத் தான் சொதப்பியது.
வேகப்பந்துவீச்சு தான் அவர்களின் பலவீனம் எனப்பார்த்தால் ஹர்பஜனும் சொதப்பியது தான் கொடுமையாய்ப் போனது.

ஆனால் மலிக், யூசுப் ஜோடியின் ஆட்டத்தை இரசித்தேன்.
அழகான ஆட்டமுறைகளில், risk எதுவும் எடுக்காமல் ஓட்டங்களை இலகுவான எடுத்தார்கள். அதுவும் third man, deep pint, cover திசைகளில் பெற்ற நான்கு ஓட்டங்கள் நுணுக்கம் என்றால் என்னவென்று காட்டின.

இந்தியா அனேகமாக தொடரின் வெளியே தான் இப்போது.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive