Tuesday, September 22, 2009

ஆதிரையின் எலியை பிடிக்க வந்த பூனையும் பொண்ணு பார்க்க போன பிரபல பதிவரும்.எலி கொண்டுபோன ஆதிரையின் சேட்

நேற்று மாலை வேளை வெள்ளவத்தை ராமகிருஷ்ணன் மண்டபத்தில் கோபாலின் மஜிக் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்ச்சிக்கு போக நான் தயாரான போது பிரபல மூத்த பதிவர் (கட்டாயம் சொல்ல சொன்னார் சொல்லிட்டன்) வந்தியத்தேவன் மாமாவும்(எந்த தப்பான அசிங்கமான அர்த்தமும் அல்ல ஆனால் நான் அவரை வந்தி அங்கிள் என அழைப்பதை தமிழ் படுத்தி உள்ளேன்) கடலேறி ஆதிரையும் தாங்களும் வருவதாக சொன்னார்கள். இதன் படியே நான் அங்கே போக இரண்டு சிங்கங்களும் அங்கே வெயிட்டிங்க்.

மாமாவிற்கு ஒரு வணக்கத்தை போட்டு விட்டு ஆதிரையுடன் கை குலுக்கி விசாரித்துவிட்டு. என்ன மாமா ரொம்ப நல்லா உடுப்பெல்லாம் போட்டு சும்மா மாப்பிளை போல வந்திருக்கிறிங்க என கேட்டன் .ஏண்டா நான் மாப்பிளை தானே அதுக்குதானே பொண்ணு பார்க்கிறம். இன்னும் யாரும் சரிவரல ஒருவேளை எனக்கு பிடிச்ச ஏற்ற கடவுள் நினைத்து வைத்திருக்கும் பொண்ணு இங்கே கூட வந்திருக்கலாமேல்லா, அதுதான் மாமா ரொம்ப கஷ்டப்பட்டு அயன் பண்ணி மேக் அப எல்லாம் போட்டு நாலு தடவை சோப் போட்டு குளிச்சு நல்ல வாசனை திரவியம் அடிச்சு வந்திருக்கேன். நான் பட்ட கஷ்டம் யாருக்காப்பா தெரியும் என புலம்ப ஆரம்பிச்சிட்டார்.

நிலைமை மோசமாகிறது என தெரிஞ்ச ஆதிரை அப்போ நாங்க உள்ளே போவமா என மாமாவையும் சரிக்காட்டிக்கொண்டு உள்ளே போய் ஒரு முன் வரிசை இருக்கையில் இருக்கலாம் என நான் சொல்ல உடன மாமா பதறி அடிச்சு போனார். ஏண்டா மோனே என்ன பலி கொடுக்கிற முடிவா? இன்னும் கலியாணம் குழந்தை குட்டிய பார்க்கல அதுக்குள்ளே எண்டா உனக்கு இந்த ஆசை. நான் முன்னுக்கு இருக்க அந்த பாவி மஜிக் செய்றவன் என்னை தன இஷ்டத்துக்கு கூப்பிட நான் போக அவன் என் கழுத்தை வெட்ட வேண்டாண்டா ரொம்ப பயமா இருக்கு. விட்டிடு என சொல்ல அடடா மாப்பிளைக்கு இவளவு பயமா என நானும் ஆதிரையும் யோசித்தோம். ஒரு மாதிரி மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்து எங்கள் அலட்டலை ஆரம்பித்தோம்.

பதிவுகள், பதிவர்கள் பற்றி பேசிய எங்கள் கவனம் ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தை பற்றி தொட்டாலும் நம்ம மாமா சொன்னது போல இங்கே யாரும் அவரின் கற்பனை கதாநாயகி வந்திருக்கின்றாரோ என தேடிப்பார்த்தோம். எத்தனையோ அசின்கள், சமீரா ரெட்டிகள், அனுஷ்காக்கள் வந்தாலும் நம்ம மாமாக்கு செட் ஆகல. எனக்கோ சந்தேகம். ஆதிரையிடம் நேரடியா கேட்டன் என்ன இந்த மாமாக்கு யாரையுமே பிடிக்கலையே என்று அப்பத்தான் சொனார் பாருங்க நம்ம ஆதிரை நீங்க திரிஷா இல்லை அசினில்லை யாரை காட்டினாலும் நம்ம மாமா அசர மாட்டார் காரணம் அவர் தேடிறது கே.பி.சுந்தராம்பாள் மாதிரி ஒரு பொண்ணை. அட பாவி மனிஷா அவன் அவன் அசின், தமன்னா,நயன்தாரா ( யாருக்கு பிடிக்கும் என தெரியும்தானே. அவர் கோவிச்சுக்க மாட்டார் என நினைக்கிறன் தன் ஆள இங்கே இழுத்ததுக்கு.) கிடைக்கமாட்டாளவையா என அலைய உங்களுக்கு சுந்தராம்பாள் மாதிரி அதுவும் அந்த காலத்து பொண்ணுங்க போல இருக்கும் பொண்ணு வேணுமா என கோவம்தான் வந்திச்சு. அப்புறம் என்னை நானே சமாதான படுத்திவிட்டேன். என்ன இருந்தாலும் மாமா தன் வயசுக்கு ஏத்த மாதிரி தான் பொண்ணு தேடுகிறார். நம்ம லெவலுக்கு வரல என ஆறுதல்.

இந்த பந்தியை வாசிக்க முன்னர் கொஞ்சம் இந்த பதிவை வாசித்து விட்டு வந்தால் தான் விளக்கமா புரியும்.

எப்பிடியோ மாமனுக்கு மாமி இங்கே கிடைக்காதென எனக்கு தெரிஞ்சு போச்சு. நிகழ்ச்சியை ஆரம்பிக்க நானும் மேடை ஏறிவிட்டேன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நேரம் அந்த மண்டபத்தில பெரும் பரபரப்பு. சின்ன பிள்ளைகள் எல்லாம் பயத்தில் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அங்கே இங்கே என ஓடியும் அவர்கள் அடங்கவில்லை. என்னதான் பிரச்சனை என நான் கீழே பார்க்க நம்ம வந்தி மாமா ஒரு அசட்டு சிரிப்போட ஒரு பூனையை காட்டினர். என்ன மாமா என நானும் சைகையால் கேட்க ஒன்றுமில்லை நம்ம ஆதிரையின் எலியை தேடி பூனை ஒன்று இங்கேயே வந்து விட்டது என சொன்னார். பாவம் ஆதிரை எலியை என்ன காற்சட்டை பொக்கெட்டுக்குல கொண்டு திரிகின்றார். அங்கே ஆதிரையின் எலி இல்லை.(என்னது ஆதிரையின் எலி இப்போ அவருடன் இல்லையா?) என தெரியாத பூனை அங்கே இங்கே என ஓடி திரிய இறுதியாக மஜிக் நிபுணர் கோபால் தான் அந்த பூனையை விரட்டி நம்ம ஆதிரையை காப்பாற்றினார். இல்லாவிட்டால் ஆதிரையும் சரி ஆதிரையின் எலியும் நேற்று அதோ கதி ஆகி இருக்கும்.

இதெல்லாம் முடிய இடை நடுவில் எனக்கு வேலைதளத்துக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் நானும் அவர்களிடம் விடை பெற்றுவிட்டு வந்துவிட்டேன். அதன் பின் இன்று காலை இரண்டு பேருக்கும் தொலை பேசி அழைப்பெடுத்தேன். அப்போதான் மாமா ரொம்ப கவலைப்பட்டார் என்னடா மருமோனே இங்கேயும் எனக்கு யாரும் செட் ஆகல வேறு எங்கயாச்சும் ஏதும் கூட்டம் வார நிகழ்ச்சி இருந்த சொல்லு அங்கேயும் போய் பார்ப்போம். எனசற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். ஆதிரையோ ரொம்ப சந்தோசமாக இருந்தார். தன்னுடைய எலி பூனையிடம் இருந்து தப்பிவிட்டது கவலையாக இருந்தாலும் (அட பாவி எலி தப்பினது கவலையா) அந்த பூனையிடம் இருந்து தானும் புதிதாக வாங்கிய அந்த உடுப்பும் தப்பியதே தனக்கு பெரிய விடயம் என ஆறுதல் பெரு மூச்சு விட்டார்.

இந்த தொடர்கதை எப்போ தீருமோ?
Share:

10 கருத்துரைகள்:

சுபானு said...

நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்தில் இருவரைப் போட்டுதாக்கி உள்ளீர்கள்.. கவனம்.. ! இருவரும் சேர்ந்து உங்களை இம்சிக்ப் போறாங்க..

யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கள் சங்க தலைவர் பச்சிளம் பாலகர் வந்தியை கலாய்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

யோகா
பொருளாளர்,
அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்.

SShathiesh-சதீஷ். said...

சுபானு கூறியது...
நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்தில் இருவரைப் போட்டுதாக்கி உள்ளீர்கள்.. கவனம்.. ! இருவரும் சேர்ந்து உங்களை இம்சிக்ப் போறாங்க.

=>உண்மையை சொன்னால் நக்கல் என்கிறிங்க பொய்யா சொன்ன சீரியஸ் என்கிறிங்க நம்புங்கப்பா நானும் சீரியஸ் பதிவர் இது சீரியஸ் விசயம். எப்புடி நம்ம நக்கல்

SShathiesh-சதீஷ். said...

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எங்கள் சங்க தலைவர் பச்சிளம் பாலகர் வந்தியை கலாய்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

யோகா
பொருளாளர்,
அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்

=>
உங்க வயசு தெரியாமல் இருந்தது இப்ப எல்லாம் தெரிஞ்சு போச்சு. நீங்களும் வந்தி மாமாவோட செட்டா அப்போ உங்களுக்கு எத்தனை வயசு அப்பாடா ஒரு தாத்தா கிடைச்சிட்டார்.

Subankan said...

இந்த எலி மேட்டர் இப்போதைக்கு முடியாது போல?

// சுபானு கூறியது...
நீங்களும் நக்கல்ப் பதிவர் ஆகிட்டீங்களாப்பா..? வாழ்த்துக்கள்.. ஒரே நேரத்தில் இருவரைப் போட்டுதாக்கி உள்ளீர்கள்.. கவனம்.. ! இருவரும் சேர்ந்து உங்களை இம்சிக்ப் போறாங்க.//

அதே, அதே.

Sinthu said...

யார் இந்த idea கொடுத்தது..?

வந்தியத்தேவன் said...

வணக்கம் மருமகனே
என்னைப் பற்றியும் ஆதிரை பற்றியும் எல்லாம் சரியாகச் சொன்னனீ, எனக்கு என்னுடைய மகளை(அதுதான் உன் ஆள்) அறிமுகம் செய்கின்றேன் என்றுவிட்டு கடைசியில் ஏமாத்திவிட்டியே. மேடையில் சீனுக்குப் பின்னால் உன்னுடன் கதைத்துக்கொண்டிருந்த அந்த பிங்க் கலர் பிளவுஸும் கிரே கலர் முக்கால் ஜீன்ஸ்சும் போட்டவர் தானே உன் ஆள். மருமகனே உன் செலக்சன் என்றைக்கும் பிழையில்லை நல்ல தெரிவு.

ஆதிரையும் நானும் பூனையைப் பிடித்துக்கொண்டு வரும் வழியில் ரொலக்சில் ரோல்ஸ்சும் டீயும் குடிக்க இருந்தபோது அந்தப் பூனை தப்பி ஓடிவிட்டது. இதனால் நாம் மீண்டும் பூனை பிடிக்கச் செல்லவேண்டும்,.

சுபானு said...

//உண்மையை சொன்னால் நக்கல் என்கிறிங்க பொய்யா சொன்ன சீரியஸ் என்கிறிங்க நம்புங்கப்பா நானும் சீரியஸ் பதிவர் இது சீரியஸ் விசயம். எப்புடி நம்ம நக்கல்..

சாரி.. அதுசரி ஆதிரையின் எலி மார்ட்றரும் வந்தி அண்ணாவின் கல்யாண விடையமும் சீரியஸ் விடையம்தான்.. வாழ்க உங்கள் பணி... :)

யோ வொய்ஸ் (யோகா) said...

அனைவரும் நான் அறிவிப்பது என்ன வென்றால் கவலைபட வேண்டாம். ஆதிரைக்கு எலியிடம் இருந்து தப்பிப்பது என ஸ்பெஷல் பதிவு வந்து கொண்டிருக்கிறது..

Unknown said...

//இன்னும் கலியாணம் குழந்தை குட்டிய பார்க்கல அதுக்குள்ளே எண்டா உனக்கு இந்த ஆசை. நான் முன்னுக்கு இருக்க அந்த பாவி மஜிக் செய்றவன் என்னை தன இஷ்டத்துக்கு கூப்பிட நான் போக அவன் என் கழுத்தை வெட்ட வேண்டாண்டா ரொம்ப பயமா இருக்கு //

அது தானே...
வந்தியண்ணா பாவம் தானே...

நல்ல பதிவு...
ஒரே பதிவில் இருவர் தலையை உருட்டிவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள்...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive