Friday, May 7, 2010

இந்தியனுக்கு அவுஸ்திரேலியனை பார்த்தால் பயமண்ணே.இன்றுதான் T20 பற்றிய என் பதிவை போட்டேன் அது போட்ட மை ஆறும் முன்(எங்கடா இங்கே மை என கேட்கப்படாது சும்மா சொல்லி பழகிப்போச்சு.) இப்போது அடுத்த கிரிக்கெட் பதிவு. காரணம் தொடர்ந்து நான் ஆதரிப்பவர்கள் சொதப்புறாங்க தல. முடியல அழுதிடுவன். இளைய தளபதி விஜய் என்று ஒருத்தர் படம் நடிக்கிறன் என்ற பேர்வழியில் அவர் ரசிகர்கள் எங்களை வெளியே தலை காட்ட விடுறார் இல்லை. மத்தப்பக்கம் பார்த்தா இந்திய கிரிக்கெட் அணி.

கடந்த முறை சொதப்பலை எல்லாம் விட்டிட்டு இம்முறை புது வேகத்தோடதான் வந்திருக்காங்க என்று தென் ஆபிரிக்காவோட மோதின போது தப்புக்கணக்குப் போட்டிட்டனோ. பயலுகளுக்கு ப்ரீத்தியையும், ஷில்பாவையும் கட்டிப் பிடிச்சு பிடிச்சு Bat பிடிக்கிறது மறந்து போச்சண்ணே. அட நெசமாத்தானுங்க இன்று நடந்த போட்டியில முதலில நாணய சுழற்சியில வென்றவர் நம்ம தோணி தாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்தார் முதலில பந்தை போடிறம் எண்டு. ஆனால் இந்த தலையில கொண்டய் போட்டுக்கொண்டு ஆடுவார் பாருங்க ஆஹ் அம்பானி குடும்ப பொண்ணையே தூக்கினாரே நம்ம பஜ்ஜி மாமா அவருக்கு விக்கெட் எடுக்கிறதெண்டா என்ன எண்டு மறந்து போச்சு. ஆனால் கொஞ்சம் குறைஞ்ச ஓட்டங்களை கொடுத்து நிம்மதி கொடுத்தார்.

அடுத்ததா பாருங்கோ இந்த விக்கெட் விழுந்திட்டா காகம் பறக்கிற மாதிரி மைதானத்திலேயே பறப்பார் ஒரு வெள்ளைக் காக்கா மாமா அட நம்ம நெஹ்ரா தாங்க அவரு பாருங்க இரண்டு அவுஸ்திரேலியாக்காரன்களை அனுப்பி வைச்சாரு ஆனால் முதலில அவங்களுக்கே நல்லாய் சோப்பும் போட்டாரு சாரி சோப்பு இல்லை பந்துதான் இருக்கு. அனால் கடைசியில பாருங்க போட்டார் ஒரு ஓவர் பறவாயில்லை. அட நெசமாத்தான் எனக்கொரு சந்தேகம் அண்ணே தோணி இந்த கோவா படம் பார்த்து ஏதும் பாதிக்கப்பட்டுட்டாரோ ஏன் சார் ஒரு பக்கம் அசின் வீட்டுக்கு போறிங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணாய் இருக்கிங்க அப்புறம் எதுக்குங்க இந்த ரவீந்தர் ஜடேஜா என்ற பயலை எப்ப பார்த்தாலும் பொக்கட்டுக்குள்ள போட்டுக்கொண்டு அலையிறிங்க. துடுப்பாடமும் சரியில்லை பந்துவீச்சும் பல்லுக்கழண்டு போச்சு. இரண்டு ஓவர்ல கிட்டத்தட்ட நாற்பது ஓட்டங்கள் கொடுத்து பயபுள்ள அவனுங்களுக்காக விளையாடினான். நல்ல காலம் இரண்டு ஓவரோடவேரோட நிறுத்திடானப்பு. அடுத்ததா சகீர் கான் மாமா இவர்தான் பந்து வீச்சாளர்களுக்கு குருவாம். அட அட அட அதுதான் எல்லோரும் இப்படி போடான்களோ. அண்ணே இது இருபது ஓவர் போட்டி என்ற நினைப்பே இல்லாமல் நல்லாய் போடிறார் எவ்வளவுதான் அடிச்சாலும் நம்ம வடிவேலு மாதிரி வலிக்காத மாதிரியே காட்டிக்கொண்டு நல்லாய் போட்டார். இதிலே இருந்து சொல்லிக்கொள்வது என்னவென்றால் தோணி கூல் கப்டன் இல்லை, கூமுட்டை கப்டனுங்க. என்னை விட்டிருந்தாலே எப்போ எந்த பந்துவீச்சாளரை போடணுமென போட்டிருப்பன்.யூசுப் பதான் யுவராஜ் என்று இரண்டுபேர் ஓரளவு போட்டானுக.

அட பாருப்பா அந்த வார்னர் தான் தான் வானுக்கு சொந்தகாரன் என்பது போல தூக்கி தூக்கி போட்டான். அடுத்த பக்கம் வாட்சன் தான் Bat Son(Batன் மகன்) என்று சொல்லி சொல்லி அடிச்சான். ரொம்ப வலிச்சுதுங்க. இதில வேற நம்ம கான்கொன் பின்னூட்டத்தில வேற சொன்னான் மரண அடி இருக்கெண்டு நான் பார்த்தண்டா பார்த்தன் அந்த மரண அடியை. ஆனால் பாருங்க அந்த இரண்டுபேரும் போன பிறகு இவனுங்க கொஞ்சம் அடங்கிட்டாங்க. முதலே இவன்களை தூக்கி இருக்கணும் இல்லாட்டி வயித்தால போறமாதிரி ஏதும் கொடுத்திருகலாமேடா?

சரி நூற்று எண்பத்திநாலு தானே சாவ்லாவை நிறுத்திட்டு ரோஹித் ஷர்மாவை கொண்டுவந்து எட்டுப்பேரை துடுப்பாட்டக்காரனாய் தறுதல தோணி கொண்டுவந்தார். அட ஒபெனிங் நம்ம விஜயும் கம்பீரும், விஜய் என்ற பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ நேரம் அண்ணருக்கு சரில்லை. டெஸ்ட் மேட்ச் போல தொடங்கிட்டான் பாவிப்பயல். இதைவிட மொகமத் யூசுப்பே பறவாயில்லை ராசா. கொஞ்சம் பாத்து ஆடு இல்லாட்டில் அடுத்த ஐ.பி.எல் நீ காலிடா. ஆனால் பாருங்க ரொம்ப நேரம் அவன் நம்மள சோதிக்கல பயப்புல்லைக்கு வேற வேலை போல போய்டான் . போனமுறை வயித்தால போனதால வராமல் போன கம்பீராவது இந்த முறை இந்த திமிர் பிடிச்ச அவுஸ்திரேலியன்களுக்கு வயித்தால போறமாதிரி அடிப்பான் எண்டு பார்த்தா இவனுக்கு அதுக்குள்ளே வந்திட்டுதாம் போய்ட்டான்.

வேற யாரு அடுத்தது நம்ம ரன் மழைதாங்க வந்தது. பச்சப்புள்ள பயமில்லாமல் அடிப்பான் என்று பார்த்த சூனியம் வைச்சிட்டங்கள் அவங்கள். பாத்திங்களா சூனியம் வைச்சிட்டாங்கள் சின்ன புள்ளை எல்லா பயந்து தூக்கி இந்தா பிடி என்னை ஒன்றும் செய்திடாத என்று கொடுத்திட்டு போய்டான். பறவாயில்லை என் மச்சான் இருக்கான் தானே(ப்ரீத்தி நம்மாளு எண்டா யுவராஜ் மச்சான் தானே) ஆறு பந்தில ஆறு சிக்ஸ் அடிச்ச வீரனாச்சே இண்டைக்கு அடிச்சு தொலைச்சிடுவான் என நம்பினால் அய்யய்யோ என்னை பாத்து தம்பி என்டிட்டாலே நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் இவளை எப்பிடி இனி பிக் அப் பண்ணிறது என்ற யோசினை வர அவனும் புட்டுக்கிட்டான் ராசா. அவ்வ்வ்வவ்....

யூசுப்பதானும் ஏமாத்திட்டான் நம்ம தோனியின் கைப்புள்ள கோவா புகழ் ரவீந்தர் ஜடேஜாவும் தோணி கேட்டதால அவசரமா திரும்பிட்டான் ஆனால் பாருங்க என் செல்லம்(நிஜமாவே என் செல்லம் பேருக்கு கிட்ட வந்திட்டியே) ரோஹித் ஷர்மா அடி பின்றான்யா? நிசமா இன்னொருத்தன் கைகொடுத்தால் பந்தும் கூட இருந்தால் இவன் தனியவே வென்று கொடுத்திடுவான். ஐ லவ் யூடா செல்லம். அட நெசமாவே எனக்கு சில சந்தேகம் ஏனுங்க இந்த ஊத்தை அப்பா என்று ஒருத்தர் இருந்தாரே அவரை அணிக்குள் எடுத்திருக்கலாமே தெரிவுக்குழு. ஆடுங்க ஆடுங்க அடங்கபோரிங்களா இல்லை எழும்பப்போரிங்களா எண்டு அடுத்த போட்டிகளில் பார்ப்பம்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிது இந்த இந்தியப்பயலுகளுக்கு(இந்திய நண்பர்களே இது இந்திய கிரிக்கெட் அணியை மட்டுமே குறிப்பிடுகின்றது உங்களை காயப்படுத்தினால் மன்னித்துக்கொள்ளுங்கள்.) அவுஸ்திரேலியாக்காரன்களை பார்த்தால் வயித்தக்கலக்கிற மாதிரி பயம் போல கிடக்கு. இல்லாவிட்டால் இப்படி முக்கியமான போட்டிகளில் சொதப்புவானுகளா? ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகனாக என் ஆதங்கப்பதிவு இது.
Share:

8 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

அண்ணே நான் அப்பவே சொன்னன்...

கேட்டியளா?
இந்தியாவை நம்பினால் கைவிடப்படுவீர்கள்...
அவுஸ்ரேலியா நம்பினார் கைவிடப்படார்....

அழாதேங்கோ, பரவால்ல...
இந்தியா அரையிறுதிக்குப் போறது கஷ்ரம் தான்...
பரவால்ல, அழ வேணாம்,
நாங்கள் 2011 உலகக் கிண்ணத்த தட்டையான ஆடுகளங்களில நடத்தி வெல்லுவம்...

Anonymous said...

நீங்க இந்தியனா?

Lojee said...

சூப்பர் அண்ணே....

தர்ஷன் said...

விடுங்கள் அதான் ரோஹித் ஷர்மா கடைசி வரை போட்டியை பார்க்க வைக்கும் அளவிற்காவது வாணவேடிக்கை காட்டினாரே

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon
//இந்தியாவை நம்பினால் கைவிடப்படுவீர்கள்...
அவுஸ்ரேலியா நம்பினார் கைவிடப்படார்//

அவுஸ்திரேலியாவும் கைவிட்டதாக கேள்வி. நான் கிரிக்கெட்டை தான் சொன்னேன்.

//அழாதேங்கோ, பரவால்ல...
இந்தியா அரையிறுதிக்குப் போறது கஷ்ரம் தான்...
பரவால்ல, அழ வேணாம்,//

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிறியா தம்பி, வேணாம் அழுதிடுவன்

SShathiesh-சதீஷ். said...

@Lojee

நன்றி தம்பி...

SShathiesh-சதீஷ். said...

@பெயரில்லா

நான் இந்தியன் இல்லை. இந்திய கிரிக்கெட்டின் ரசிகன். இந்தியாவில் இருந்தால் தான் இந்தியக்கிரிக்கெட்டை ரசிக்கவேண்டும் என்று இல்லை. வீணாக அரசியல் ஆக்காதீர்கள்.

SShathiesh-சதீஷ். said...

@தர்ஷன்

அதே அதே இந்த பயலுக்கு இன்னுமொருத்தன் உதவி இருந்தால் போட்டி மாறி இருக்கும்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive