உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

Monday, June 6, 2011

கிரிக்கெட் - போட்டோ கொமென்ட்ஸ்.

இலங்கை வீரர் டில்ஷான்






இலங்கை வீரர் சுரங்க ரக்மால்





இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தி பட்டேல்,விராத் கோலி மற்றும் சர்வான்





இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் தில்ஷன் மற்றும் இயன் பெல்








இந்திய மேற்கிந்திய நிகளுக்கிடையிலான போட்டியில் Danza Hyatt and Marlon Samuels








எனக்கு எதுவுமே தோணல நீங்களே கொமென்ட் போடுங்களேன்...



NO COMMENTS


Share:

Saturday, April 2, 2011

உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்



உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....

இந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்?

இந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ? எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.

இதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என்னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.
Share:

Saturday, January 15, 2011

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!




பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

Sunday, December 19, 2010

இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.

என்ன பதிவர்களே! ஒரு சின்ன மொக்கை போடபோகின்றேன் அதுக்கு முதல் ஒரு சீரியஸ் விடயம்.

இந்தியா, தென் ஆபிரிக்காவுடன் போட்டியில் டிரா செய்கின்றதோ இல்லையோ சச்சின் தன சாதனை பயணத்தில் இன்னொரு மயில் கல்லை தாண்டி விட்டார். சத்தத்தில் அரைச்சதம் கடந்து தன அணியை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றார். சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள் சொல்கின்றேன். இதை விட வேற ஒன்றும் நான் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?

வரபோகும் இரு நாட்களும் இதுவரை பதிவர்களால் போற்றி வழிபடப்பட்ட விஜயை பின்தள்ளி சச்சின் பெயர் அடிபடபோகின்றது. இந்தியா தோற்றாலும் சச்சின் நாமமமே அனைத்து தளங்களிலும் பரவலாக ஆக்கிரமிக்கப்படபோகின்றது. மீண்டும் ஒரு தடவை சச்சின் சாதனை புத்தகம் தூசு தட்டப்படபோகின்றது.(இந்த முறை தூசு இருக்காது காரணம் இப்பதான் சில நாட்களுக்கு முன்னம் இன்னொரு சாதனையை பதிக்க எடுத்திருப்பார்கள்.) சச்சின் கடவுளுக்கும் மேலாக வைத்து பதிவர்களால் பூசிக்கப்படபோகின்றார்.

இன்னொருபுறம் சாதனைக்காக ஆடும் சச்சின். சச்சின் சுயநலவாதி என்னும் விமர்சன பதிவுகளும் வரபோகின்றன. இன்னும் என்னென்னவோ பதிவுகள் வந்தாலும் சச்சின் தான் வரும் இரண்டு நாட்கள் எல்லா பதிவர்களாலும் எழுதப்படபோகின்றார். அப்புறம் எதுக்கு நான் அவரை பற்றி எழுதுவான். நீங்கள் எழுதுங்கோ வாசிக்கின்றேன்.
Share:

Thursday, July 22, 2010

முரளியை வாழ்த்தும் உலக நாயகனின் பாடல்!



முத்தையா முரளிதரன், இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாயெல்லாம் முணுமுணுக்கும் உன்னிப்பாக பார்க்கும் ஒரு பெயர். பல தடைகள் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி இன்று சிகரம் தொட இருக்கும் நிஜ ஹீரோ முரளிக்கு, திரை உலக உலக நாயகன் ஹீரோவுக்காய் எழுதிய பாடலை கொஞ்சம் மாற்றி போட்டு வாழ்த்து ஒன்றை படிக்கின்றேன் ஒரு சாதாரண ரசிகனாய்.

உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?
உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இலங்கை நாடு.
உலக நாயகனே எங்கள் தங்க தமிழனே
கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்.

நீ ஒரு தீரன் நிரந்தர இளைஞன் வேட்கை மிகுந்த விக்கெட் டேக்கர்
ஒரு பந்து கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் விக்கெட் கடந்தாய்
உன் வாழ்வில் எண்ணூறு டேஸ்ட் விக்கெட்டும் காண்பாய்.
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சாதனை முயற்சி சோர்ந்திடவில்லை.
இருபது முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை
உன் சாதனைகளை முறியடிக்க இனி எவரும் இல்லை.

உலகுக்கு நீ ஒரு பந்து வீச்சாளன் வீரர்கள் எதிரில் நூறு மடங்கு பலவான்
எதிர்ப்பினை ஜெயித்து மனங்களை வென்று பாரிய சாதனை படைத்தாய்.
உன் திறனை எதிரியும் புரிந்து கொண்டார்.
உன் விரல்களுக்குள்ளே பந்து மாயாஜாலம் செய்யும்
உன் ஒருவனுக்குள்ளே சாதனை அடங்கும்
தமிழனாய் பிறந்து இலங்கைக்காய் ஆடி இன மத மொழி கடந்தாய்
இப்போது சரித்திரம் ஆகிவிட்டாய்


Share:

Thursday, May 13, 2010

நாடு திரும்பியதும் இதை காட்டுவோம் - தோனி பெருமிதம்.


கடந்த பதிவில் வாக்குப்போட்டு உற்சாகம் தாருங்கள் என்று கேட்டதற்க் கிணங்க நீண்ட நாட்களின் பின் இருபது வாக்குகளை தொட வைத்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். ஐ.சி.சி T20 உலகக்கிண்ண போட்டிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கும் நிலையில் நடை பற்ற நிகழ்வுகளை வைத்துக்கொண்டு போட்டோ கொமண்ட்ஸ் போட்டிருக்கேன். இந்தப் பதிவிற்கும் வாக்குப் போட்டு ஊக்கம் தந்தால் நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப்போறேன்.

இது யார் மனதையும் புண்படுத்த அல்ல ரசிக்க மட்டுமே. ரசியுங்க இதை விட நல்ல கொமண்ட்ஸ் போடா உங்களால் முடியும் பார்க்கும் போது யாருக்காவது ஏதும் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.





























Share:

Friday, May 7, 2010

இந்தியனுக்கு அவுஸ்திரேலியனை பார்த்தால் பயமண்ணே.



இன்றுதான் T20 பற்றிய என் பதிவை போட்டேன் அது போட்ட மை ஆறும் முன்(எங்கடா இங்கே மை என கேட்கப்படாது சும்மா சொல்லி பழகிப்போச்சு.) இப்போது அடுத்த கிரிக்கெட் பதிவு. காரணம் தொடர்ந்து நான் ஆதரிப்பவர்கள் சொதப்புறாங்க தல. முடியல அழுதிடுவன். இளைய தளபதி விஜய் என்று ஒருத்தர் படம் நடிக்கிறன் என்ற பேர்வழியில் அவர் ரசிகர்கள் எங்களை வெளியே தலை காட்ட விடுறார் இல்லை. மத்தப்பக்கம் பார்த்தா இந்திய கிரிக்கெட் அணி.

கடந்த முறை சொதப்பலை எல்லாம் விட்டிட்டு இம்முறை புது வேகத்தோடதான் வந்திருக்காங்க என்று தென் ஆபிரிக்காவோட மோதின போது தப்புக்கணக்குப் போட்டிட்டனோ. பயலுகளுக்கு ப்ரீத்தியையும், ஷில்பாவையும் கட்டிப் பிடிச்சு பிடிச்சு Bat பிடிக்கிறது மறந்து போச்சண்ணே. அட நெசமாத்தானுங்க இன்று நடந்த போட்டியில முதலில நாணய சுழற்சியில வென்றவர் நம்ம தோணி தாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்தார் முதலில பந்தை போடிறம் எண்டு. ஆனால் இந்த தலையில கொண்டய் போட்டுக்கொண்டு ஆடுவார் பாருங்க ஆஹ் அம்பானி குடும்ப பொண்ணையே தூக்கினாரே நம்ம பஜ்ஜி மாமா அவருக்கு விக்கெட் எடுக்கிறதெண்டா என்ன எண்டு மறந்து போச்சு. ஆனால் கொஞ்சம் குறைஞ்ச ஓட்டங்களை கொடுத்து நிம்மதி கொடுத்தார்.

அடுத்ததா பாருங்கோ இந்த விக்கெட் விழுந்திட்டா காகம் பறக்கிற மாதிரி மைதானத்திலேயே பறப்பார் ஒரு வெள்ளைக் காக்கா மாமா அட நம்ம நெஹ்ரா தாங்க அவரு பாருங்க இரண்டு அவுஸ்திரேலியாக்காரன்களை அனுப்பி வைச்சாரு ஆனால் முதலில அவங்களுக்கே நல்லாய் சோப்பும் போட்டாரு சாரி சோப்பு இல்லை பந்துதான் இருக்கு. அனால் கடைசியில பாருங்க போட்டார் ஒரு ஓவர் பறவாயில்லை. அட நெசமாத்தான் எனக்கொரு சந்தேகம் அண்ணே தோணி இந்த கோவா படம் பார்த்து ஏதும் பாதிக்கப்பட்டுட்டாரோ ஏன் சார் ஒரு பக்கம் அசின் வீட்டுக்கு போறிங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணாய் இருக்கிங்க அப்புறம் எதுக்குங்க இந்த ரவீந்தர் ஜடேஜா என்ற பயலை எப்ப பார்த்தாலும் பொக்கட்டுக்குள்ள போட்டுக்கொண்டு அலையிறிங்க. துடுப்பாடமும் சரியில்லை பந்துவீச்சும் பல்லுக்கழண்டு போச்சு. இரண்டு ஓவர்ல கிட்டத்தட்ட நாற்பது ஓட்டங்கள் கொடுத்து பயபுள்ள அவனுங்களுக்காக விளையாடினான். நல்ல காலம் இரண்டு ஓவரோடவேரோட நிறுத்திடானப்பு. அடுத்ததா சகீர் கான் மாமா இவர்தான் பந்து வீச்சாளர்களுக்கு குருவாம். அட அட அட அதுதான் எல்லோரும் இப்படி போடான்களோ. அண்ணே இது இருபது ஓவர் போட்டி என்ற நினைப்பே இல்லாமல் நல்லாய் போடிறார் எவ்வளவுதான் அடிச்சாலும் நம்ம வடிவேலு மாதிரி வலிக்காத மாதிரியே காட்டிக்கொண்டு நல்லாய் போட்டார். இதிலே இருந்து சொல்லிக்கொள்வது என்னவென்றால் தோணி கூல் கப்டன் இல்லை, கூமுட்டை கப்டனுங்க. என்னை விட்டிருந்தாலே எப்போ எந்த பந்துவீச்சாளரை போடணுமென போட்டிருப்பன்.யூசுப் பதான் யுவராஜ் என்று இரண்டுபேர் ஓரளவு போட்டானுக.

அட பாருப்பா அந்த வார்னர் தான் தான் வானுக்கு சொந்தகாரன் என்பது போல தூக்கி தூக்கி போட்டான். அடுத்த பக்கம் வாட்சன் தான் Bat Son(Batன் மகன்) என்று சொல்லி சொல்லி அடிச்சான். ரொம்ப வலிச்சுதுங்க. இதில வேற நம்ம கான்கொன் பின்னூட்டத்தில வேற சொன்னான் மரண அடி இருக்கெண்டு நான் பார்த்தண்டா பார்த்தன் அந்த மரண அடியை. ஆனால் பாருங்க அந்த இரண்டுபேரும் போன பிறகு இவனுங்க கொஞ்சம் அடங்கிட்டாங்க. முதலே இவன்களை தூக்கி இருக்கணும் இல்லாட்டி வயித்தால போறமாதிரி ஏதும் கொடுத்திருகலாமேடா?

சரி நூற்று எண்பத்திநாலு தானே சாவ்லாவை நிறுத்திட்டு ரோஹித் ஷர்மாவை கொண்டுவந்து எட்டுப்பேரை துடுப்பாட்டக்காரனாய் தறுதல தோணி கொண்டுவந்தார். அட ஒபெனிங் நம்ம விஜயும் கம்பீரும், விஜய் என்ற பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ நேரம் அண்ணருக்கு சரில்லை. டெஸ்ட் மேட்ச் போல தொடங்கிட்டான் பாவிப்பயல். இதைவிட மொகமத் யூசுப்பே பறவாயில்லை ராசா. கொஞ்சம் பாத்து ஆடு இல்லாட்டில் அடுத்த ஐ.பி.எல் நீ காலிடா. ஆனால் பாருங்க ரொம்ப நேரம் அவன் நம்மள சோதிக்கல பயப்புல்லைக்கு வேற வேலை போல போய்டான் . போனமுறை வயித்தால போனதால வராமல் போன கம்பீராவது இந்த முறை இந்த திமிர் பிடிச்ச அவுஸ்திரேலியன்களுக்கு வயித்தால போறமாதிரி அடிப்பான் எண்டு பார்த்தா இவனுக்கு அதுக்குள்ளே வந்திட்டுதாம் போய்ட்டான்.

வேற யாரு அடுத்தது நம்ம ரன் மழைதாங்க வந்தது. பச்சப்புள்ள பயமில்லாமல் அடிப்பான் என்று பார்த்த சூனியம் வைச்சிட்டங்கள் அவங்கள். பாத்திங்களா சூனியம் வைச்சிட்டாங்கள் சின்ன புள்ளை எல்லா பயந்து தூக்கி இந்தா பிடி என்னை ஒன்றும் செய்திடாத என்று கொடுத்திட்டு போய்டான். பறவாயில்லை என் மச்சான் இருக்கான் தானே(ப்ரீத்தி நம்மாளு எண்டா யுவராஜ் மச்சான் தானே) ஆறு பந்தில ஆறு சிக்ஸ் அடிச்ச வீரனாச்சே இண்டைக்கு அடிச்சு தொலைச்சிடுவான் என நம்பினால் அய்யய்யோ என்னை பாத்து தம்பி என்டிட்டாலே நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் இவளை எப்பிடி இனி பிக் அப் பண்ணிறது என்ற யோசினை வர அவனும் புட்டுக்கிட்டான் ராசா. அவ்வ்வ்வவ்....

யூசுப்பதானும் ஏமாத்திட்டான் நம்ம தோனியின் கைப்புள்ள கோவா புகழ் ரவீந்தர் ஜடேஜாவும் தோணி கேட்டதால அவசரமா திரும்பிட்டான் ஆனால் பாருங்க என் செல்லம்(நிஜமாவே என் செல்லம் பேருக்கு கிட்ட வந்திட்டியே) ரோஹித் ஷர்மா அடி பின்றான்யா? நிசமா இன்னொருத்தன் கைகொடுத்தால் பந்தும் கூட இருந்தால் இவன் தனியவே வென்று கொடுத்திடுவான். ஐ லவ் யூடா செல்லம். அட நெசமாவே எனக்கு சில சந்தேகம் ஏனுங்க இந்த ஊத்தை அப்பா என்று ஒருத்தர் இருந்தாரே அவரை அணிக்குள் எடுத்திருக்கலாமே தெரிவுக்குழு. ஆடுங்க ஆடுங்க அடங்கபோரிங்களா இல்லை எழும்பப்போரிங்களா எண்டு அடுத்த போட்டிகளில் பார்ப்பம்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிது இந்த இந்தியப்பயலுகளுக்கு(இந்திய நண்பர்களே இது இந்திய கிரிக்கெட் அணியை மட்டுமே குறிப்பிடுகின்றது உங்களை காயப்படுத்தினால் மன்னித்துக்கொள்ளுங்கள்.) அவுஸ்திரேலியாக்காரன்களை பார்த்தால் வயித்தக்கலக்கிற மாதிரி பயம் போல கிடக்கு. இல்லாவிட்டால் இப்படி முக்கியமான போட்டிகளில் சொதப்புவானுகளா? ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகனாக என் ஆதங்கப்பதிவு இது.
Share:

Wednesday, March 24, 2010

உலககிண்ணப் போட்டிகளில் ஆடமாடேன்- சச்சின்.


இந்த வருடத்தில் பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் தொடர் சதங்கள் போதாக்குறைக்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கில்லியும் சில பல்லிகளும் எட்டிப்பார்த்தும் எட்டாக்கனியாகிப்போன 200 அதுவும் குறைந்தளவு பந்துகளில். போதாக்குறைக்கு இப்போது ஐ.பி.எல்லில் முதல் போட்டியில் 11 பந்துகளில் மூன்று 4 ஓட்டங்கள் அடங்கலாக 17 ஓட்டங்கள் அடுத்தபோட்டியில் மரண அடி வெறும் 32 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்கள்(கண்குளிர கண்டேன் இந்த தாண்டவத்தை.) அடுத்த போட்டியில் கொஞ்சம் மந்தமாக ஆடினாலும் இருபத்தைந்து ஓட்டங்கள் இறுதியாக கங்குலியின் அணிக்கெதிராக நாற்பத்தெட்டு பந்துகளில் ஆட்டமிழக்காமல் எழுபத்தொரு ஓட்டங்கள். இந்த தொடர் சிறப்பான ஆட்டத்துக்கு சொந்தக்காரர் தான் இப்போது உலகக்கிண்ண போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இளையவர்களின் ஆட்டம் என சொல்லப்பட்ட அதிரடி T20இல் சூறாவளியாக ஆடிக்கொண்டிருக்கின்றார். அப்படி இருக்கையில் பலரின் பேச்சும் வரும் உலகக்கிண்ண போட்டிகளில் ஆடி மீண்டும் ஒரு தடவை இந்தியாவை வெல்லவைக்க வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் இதற்க்கு சச்சின் மறுத்து விட்டார். அறிவிக்கப்பட்ட முப்பது பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் சச்சின் இடம்பெறவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டிலேயே சச்சின் T20 போட்டிகளில் இருந்து விலகியதே இதற்கு காரணம். இருப்பினும் அசத்தலாட்டம் ஆடும் இவரை நிச்சயம் சேர்க்கவேண்டுமென ஒலிக்கும் பலரின் குரலுக்கு செவிசாய்த்து அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டுமென பலரின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு வழி திறந்து விடுவது போல உத்தேச அணியில் இடம்பெறாவிட்டாலும் இறுதியாக அறிவிக்கும் பதினைந்து பேர் கொண்ட அணியில் புதிதாக வீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சச்சின் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர் பார்க்கப்பட நிலையில் தான் சச்சின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்வதேச T20 போட்டிகளில் பங்குபற்றுவதில்லை என தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சச்சின் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்கட்டும். சச்சின் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்பது வெளிப்படை உண்மை எழுதமுடியாத விதியாகவே பேசப்பட்டு வருகின்றது. நம் கிரிக்கெட் தொடர் பதிவில் கூட சச்சினை வீரராக பிடித்தவர்கள் கூட ஒரு தலைவராக பிடிக்கவில்லை என்றனர். அதற்கு சர்வதேசப்போட்டிகளில் இந்தியாவை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய போது கிடைத்த பெறு பேறுகளே சான்று. ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரகாவும் ஆட்டத்திலும் கலக்குகின்றார். கடந்தமுறை கூட காயத்தில் இருந்து தலைவராக இவர் வந்த பின் சனத்தும் இவரும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் பெற்ற வெற்றிகளும் தெரியும். நட்சத்திர வீரர்கள் சர்வதேச வீரர்கள் திறமையான வீரர்கள் இருக்கும் இந்த மும்பை அணியை வெற்றிக்கொடி நாட்ட வைக்கும் சிறந்த அணித்தலைவராக பிரகாசிக்கும் சச்சினால் ஏன் அன்று ஜெயிக்கமுடியாமல் போனது. அன்று இருந்த அணி திறமையில் சளைத்ததல்ல வேண்டுமென்றே இப்படி ஆடினார்களா அல்லது என்னதான் காரணம் புரியாத புதிராகவே உள்ளது. என்னைக் கேட்டால் சச்சினும் இப்போது சிறந்த தலைவர்தான்.
Share:

Wednesday, February 24, 2010

சச்சின் மனிதனா?- ஒரு நியாயமான கேள்வி.


இன்று என் வாழ்வில் சாதித்த ஒரு திருப்தி ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை நமக்கு பிடித்தவர்கள் சாதித்தால் அது நாம் சாதித்தது போல என்பதை உணர்கின்றேன். காலை பத்துமணிக்கு கண் விளித்ததே இன்று மாலை மூன்று மணிக்கு வானொலியில் இடம்பெறும் கற்றது கையளவு என்ற நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க வேண்டும் என்ற ஹிஷாம் அண்ணாவின் தொலைபேசி அழைப்ப்பினூடு. மாலை மூன்று மணிக்கு கலையகத்துள் நான் நுழையும் போது எங்கள் தொலைக்காட்சி மக்கர் செய்துகொண்டிருந்தது. உடனடியாக தொழில் நுட்பவியலாளர்களின் உதவியை நாடினேன்.(மாற்றுவதாக இருந்தால் அவர்களின் பகுதியில் இருக்கும் தொலைக்காட்சியில் தான் முதலில் மாற்ற வேண்டும்.) வழக்கமா தாமதப்படுத்தும் நம்மவர்கள் இன்று உடனே சரி செய்து விட்டனர்.

பார்த்தேன் கொஞ்சம் கவலை நம்ம சேவாக் ஆட்டம் இழந்திருந்தார். அட இன்று தென் ஆபிரிக்கா நாளாக்கும் என நினைத்து ஒரு நிமிடம் சென்றிருக்காது சச்சின்.கார்த்திக் இரண்டுபேரின் துடுப்பாட்டத்தை பார்க்கும் போது ஒரு நம்பிக்கை வந்தது இந்தியா முன்னூறு அடிப்பது உறுதி என எண்ணினேன். மிக வேகமான சச்சின் அதிரடி ஆட்டத்தினால் நான் எழுந்து வெளியில் கூட செல்லவில்லை. அப்படியே கட்டுண்டு பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் மனதுக்குள் ஒரு பயம் நான் எப்போதெல்லாம் இந்தியா விளையாடும் போட்டியை பார்ப்போம் என இருந்து பார்த்தாலும் அன்று அவர்கள் சொதப்புவர். இன்றும் அந்த பயம் தொற்றிக்கொண்டது. இருப்பினும் சச்சினின் அந்த அதிரடியை மட்டுமாவது ரசிக்கலாமே என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தேன். முப்பத்தேழாவது பந்தை சந்தித்த சச்சின் தன் ஸ்டைலில் ஒரு நான்கு ஓட்டத்தை தட்டி விட்டு தன் அரைசதத்தை பூர்த்திசெய்தார். மறுமுனையில் கார்த்திக் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினார்.

மிக வேகமான புயல் வேக ஆட்டத்தில் இந்தியாவின் வேகம் அதிகரித்தது. களத்தடுப்பு புலிகள் என்னும் தென் ஆபிரிக்க அணியினர் களத்தடுப்பில் பல இடங்களில் சொதப்பினர். ஒருவாறு பதினைந்து ஓவரில் இந்தியா நூறு ஓட்டங்களை தொட்டது. நானும் சந்தோசமாக ஸ்கோர் விபரங்களை வானொலியில் வழங்கிக்கொண்டிருந்தேன். அதிகமான நான்கு ஓட்டங்கள் பெறப்பட்டுக்கொண்டே இருந்தன. சச்சின் எழுபதுகளை எட்டியவுடன் என்மனதோ சச்சினின் சதம் இன்று உறுதி என சொல்லிக்கொண்டது. அதேநேரம் ஒரு சில முட்டாள்கள் யோசிப்பது போல சச்சின் சதம் போட்டால் இந்தியா தோற்றுவிடுமோ என அஞ்சிக்கொண்டும் இருந்தேன். வழக்கமான தொன்னூறுகளில் மெதுவாக ஆடுவது போல எல்லாம் இன்று சச்சினின் தயக்கம் வெளிப்படவில்லை. சரவெடி தொடர்ந்து கொண்டே இருந்தது. தொன்னூறில் போயடுவாரோ என்ற பயம் என்னுள். எந்த தயக்கமும் இன்றி சச்சின் ஒவ்வொரு ஓட்டங்களாக சேர்த்து தன் 46வது சதத்தை பூர்த்து செய்தார். அப்போது அதிக சதம் பெற்றவர்கள் வரிசையை தொலைக்காட்சியில் காட்டியபோது அட நெருங்க முடியுமா நம்ம தலைவரை என்ற பெருமிதம் என்னுள்.

சதம் கடந்த பின் சச்சினின் வேகம் இன்னும் அதிகரித்தது. எனக்கும் ஒரே குஷி.அடடா இன்றைக்கு நம்மள இந்த நேரம் வேலை செய்யப்போட்டிட்டான்களே அதுவும் மேட்ச் பார்த்து ஸ்கோர் சொல்வது நம்ம வேலை. எப்பூடி?? ஆட்டம் தொடர கார்த்திக் போக பதான் வந்து தன் வேலையை செய்துவிட்டு போக வந்தார் தலைவர். ஒரு பக்கம் சச்சின் வெளுத்துக்கொண்டிருக்க மறுபுறம் தோனியின் தாண்டவம் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தோனியின் தாண்டவம் இன்று எரிச்சலை தான் ஏற்படுத்தியது. ஒவ்வொரு பந்தையும் சச்சின் அடித்து நொறுக்கமாட்டாரா என்ற அவாவை தந்தது. பல பதிவர்கள் இந்த சாடலை சொல்லி இருந்தனர். ஆனால் கடைசி ஓவரில் தான் நான் இதை நினைத்து பெருமைபட்டேன். தோனியின் தாண்டவத்துக்கு வழிவிட்டதே சச்சின் என தோன்றியது. காரணம் அணிக்கு ஓட்ட வேகம் தேவை அதே போல சச்சினும் சாதனை படைக்க வேண்டும் என்றால் அப்படி. ஒருவேளை அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கப்போய் சச்சின் பொல்லு போய்விட்டால் அதை தான் டோனி செய்ய சச்சின் மறுமுனையில் தன் பங்கை செய்துகொண்டிருக்கின்றார். இறுதிப்பந்துக்கு முதல் பந்தில் அடித்து விட்டு டோனி ஓட முற்பட சச்சின் தடுத்து விடுவார். அப்போதே உணர்ந்தேன் சச்சின் தோனியின் அடிகளை வரவேற்றுக்கொண்டுதான் தன் சாதனையை நெருங்கினார் என. அதேபோல சாதனைக்காக ஆடவில்லை என்பதையும் இதன் மூலம் நிரூபித்துவிட்டார்.

சச்சின் நூற்றியைம்பது தாண்டிய பின் தன் முன்னைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை கடக்கமாட்டார என சிந்தித்தேன். இதற்கிடையில் மாலை ஐந்து மணியுடன் என் நிகழ்ச்சி முடிய அடுத்த நிகழ்ச்சிக்காக சந்துரு அண்ணாவிடம் கலையகத்தை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டேன். இடையில் விமல் அண்ணாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. டேய் சச்சின் நூற்றி எழுபத்தொன்பது ரன்னடா இன்று எட்டுமணிக்கு விளையாட்டு திடல் நீதான் நான் சொல்றதையும் கணக்கில் எடு என்று சச்சின் இன்று கடந்த இன்னும் இரண்டு சாதனைகளை பகிர்ந்து கொண்டார்.(அவர் என்னுடன் பேசிய நேரம் மாலை ஐந்து முப்பது இருக்கும்.) இன்று சச்சின் தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ரிக்கி பாண்டிங் வைத்திருந்த மொத்த அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை முந்தி உள்ளார். அதேபோல தென் ஆபிரிக்காவிற்கு எதிராக ஒரு தனிநபர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். மீண்டும் சற்று நேரத்தில் இன்னொரு அழைப்பு சச்சின் உலகசாதனை படைப்பார் போல தெரிகின்றது எனவே சச்சின் ஸ்கோரை கொஞ்சம் அதிகம் சொல்லும்படி சந்துரு அண்ணாவிடம் சொல்ல நம் அலுவகத்தில் அந்த பரபரப்பை உண்டாக்கினோம். எல்லோரும் ஸ்கோர் பார்ப்பதில் குறியாக இருக்க எனக்கும் செய்தி வாசிப்பதற்கான நேரம் வந்தது. இதற்கிடையில் தன் முன்னைய அதிகூடிய ஓட்டத்தையு சனத்தின் சாதனையையும் சச்சின் கடக்க எங்கள் எல்லோர் மனதிலும் அடுத்தது சாத்தியமா? என்ற கேள்வி. செய்தி ஆரம்பிக்க நான்கு நிமிடங்கள் இருக்கவே நான் கலையகள் சென்றுவிட்டேன் சச்சின் அந்த சாதனையை முறியடிப்பதை பார்ப்பாதர்க்காக.

அங்கெ சந்துரு அண்ணா எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உடனடி ஸ்கோர் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த கணம் சச்சின் நீண்டகாலமாக சயீத் அன்வர் வசமும் அதன் பின் கவின்றியினால் சமப்படுத்தப்பட்ட அந்த சாதனையை கடக்க எங்கள் உடலும் ஒருக்கம் பூரித்தது. சற்று நேரத்தில் என்னிடம் ஒப்படைத்து விட்டு செல்ல ஆறு மணிக்கு முன் அடிக்கமாட்டார என நான் ஏங்கினேன். இதற்கககவே எங்கள் செய்திப்பிரிவை சேர்ந்தவர்கள் விளையாட்டு செய்தியடிப்பதை தாமதமாக செய்யும் படி கேட்டவன் நான். ஆனால் சச்சின் நூற்று தொண்ணூற்றாறு. செய்தியும் ஆரம்பமானது. என் ஒரு கண் செய்தித்தாளில் இன்னொரு கண் சச்சின் அடிக்கமாட்டார என அடிக்கடி தொலைக்காட்சியை பார்த்தபடி. இந்த நிலையில் விளையாட்டு செய்தியுடன் செய்திப்பிரிவை சேர்ந்த அருண் உள்ளே வந்து சச்சின் எப்போது இருநூறு என்னும் புதிய கணக்கை ஆரம்பிப்பார் என காத்திருக்க இந்த தோனிப்பயல் விடவே இல்லை. தன் பங்குக்கு அடித்து துவைத்துக்கொண்டிருந்தார். என்ன செய்வது நானும் செய்தியை வாசித்து விட்டு எங்கள் நிலைய குறியிசையை ஒலிபரப்பிக்கொண்டிருக்கும் அந்த தருணத்தில் (உலகெங்கும் வெற்றி என்ற வரி அதில் வந்த நேரம். என்ன பொருத்தம்) சச்சின் அந்த சாத்தியமற்ற செயலை செய்து முடித்தார், இது சாதனையா. வழக்கம் போல கடவுளுக்கு நன்றி சொன்னது இந்த கிரிக்கெட்டின் கடவுள் இப்போது சொல்லுங்கள் இந்த சாதனையை செய்த சச்சின் மனிதனா அல்லது கடவுளா?

சேவாக் தன் வாயாலேயே இந்த ஆசையை வெளியில் சொல்லி இருந்தாலும் அவர் குரு அதை முதலில் செய்ய அதை ரசித்து கைதட்டியது இந்த சீடன். உண்மையில் இந்த போட்டியை இன்று பார்த்த அத்தனை பேரும் சரித்திரத்தில் இடம்பெறுவர். சரித்திரம் ஆரம்பித்திருக்கின்றது. புதுப்பயணம் தொடங்கி இருக்கின்றது. இந்த பாதையில் பலர் பயணிக்கலாம் ஆனால் இப்போது சாத்தியமில்லை. அப்படி சாத்தியமானாலும் இந்த சாதனை நாயகனின் பின்னால் மற்றவர் வருவர். சாதனையின் பின் கடவுளின் பின் அவர் பக்தர்கள் இருப்பது. சாதனைக்கு சாதனை சொந்தமாகாமல் போய் இருந்தால் தான் தப்பு. சேர வேண்டியவரிடம் சேர வேண்டியது சேர்ந்திருக்கின்றது. அப்புறம் என்ன நானும் விளையாட்டு திடலில் சச்சின் புராணம் பாடிவிட்டேன்.

சச்சின் உங்களுக்கு ஒன்று சொல்லணும் நான் இலங்கையில் இருந்து இதை எழுதி இருக்கேன், நான் இந்தியன் இல்லை ஆனால் நாடு மொழி கடந்து உங்கள் ரசிகன். ஏதோ என்வீட்டு கொண்டாட்டமாக கொண்டாடுகின்றேன். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை என்பது தான் நீங்கள் சாதித்த சாதனைகளில் பெரியது. வாழ்த்துக்கள் தலைவா.
Share:

Saturday, February 20, 2010

ESPN-Cricinfo விருதுகள்-படங்களுடன் ஒரு பார்வை.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டுக்கான ESPN-Cricinfo விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளிலும் உள்ள சிறந்த வீரர்கள் இந்த களத்தில் மோதினர் சுவாரஸ்யமான இந்த போட்டியில் வெற்றியாளர்களை தீர்மானித்த நடுவர்கள் இவர்கள் தான்.

Jury

Sambit Bal Editor, Cricinfo

Harsha Bhogle Television presenter and writer

Geoff Boycott Former England batsman, commentator

Ian Chappell Former Australia captain, commentator, columnist

Daryll Cullinan Former South Africa batsman, commentator

Peter English Australasia editor, Cricinfo

Tony Greig Former England captain, commentator

David Lloyd Former England coach, commentator

Sanjay Manjrekar Former India batsman, commentator

Andrew Miller UK editor, Cricinfo

Dileep Premachandran Associate editor, Cricinfo

Ramiz Raja Former Pakistan batsman and captain, commentator

Peter Roebuck Former Somerset captain, writer

Osman Samiuddin Pakistan editor, Cricinfo


இந்த நடுவர்களினால் வீரர்களின் கடந்த ஆண்டு சாதனைகள் பெறுபேறுகள் கணக்கில் மகுடம் சூட்டப்பட்டுள்ளனர்.


வீரர்களின் செயற்பாட்டுக்கு அமைய நடுவர்களின் தெரிவுகள்.

டெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை இலங்கைக்கு எதிராக பெற்ற 293 ஓட்டங்களின் உதவியுடன் அன்று ஸ்டாஸ் மற்றும் கிரிஸ் கெயிலை வென்று இந்தியாவின் மினி சூறாவளி விரேந்தர் சேவாக் தனதாக்கிக்கொண்டார்.



மினி சூறாவளி கிளம்பியதே விரு தாண்டவம் தொடங்கியதே.....

ஜமைக்கா டெஸ்டில் பெற்ற எட்டு விக்கெட்டுக்கள் பெறுதியுடன் டெஸ்டில் சிறந்த பந்து வீச்சாளருக்குரிய விருதை தட்டி இருக்கின்றார் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டெயிலர்.

நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்.....

ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சந்தேகமே இன்றி சாதனை நாயகன் சச்சின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஓட ஓட விரட்டிய 175 ஓட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் இந்தியாவின் வசம் துடுப்பாட்ட விருது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ நான் ராஜ துடுப்பாட்டத்தில் எப்பவும் ராஜா.....

ஆனால் பந்துவீச்சில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானின் சகித் அப்ரிடி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தன் சிறந்த பெறுபேறான 6-38 இன் மூலம் இந்த விருதை தட்டிச்சென்றார்.

பந்தையும் கடிப்பேன் விக்கெட்டும் எடுப்பேன் எனக்குள்ளே ஏதோ நடந்துபோச்சு....

போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக T20உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியாவை துவைத்தெடுத்த மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கறுப்பு சிங்கமொன்று புறப்பட்டதே......


பந்துவீச்சில் ஆறு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த உமர் குல் தெரிவு செய்யப்பாட்டுள்ளார்.


தனியே தன்னந்தனியே நானும் சிலவேளை இப்படி எடுப்பேன்.....


டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த மேலும் சில விருதுகள்.

வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர். - கெளதம் கம்பீர்.

கம்பீரமான பல டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியவர்.

சிறந்த ஆரம்ப இணைப்பாட்ட ஜோடி.- அவுஸ்திரேலியாவின் சைமன் கடிச்-ஷேன் வட்சன்.

நாங்க புதுசா இணைந்து கொண்ட ஜோடிதானுங்க.


சிறந்த டெஸ்ட் இணை.-மஹேல-திலான் சமரவீர. (இலங்கை.)

நாங்கதான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு.


சிறந்த பந்துவீச்சாளர்.- மிட்சல் ஜான்சன்(அவுஸ்திரேலியா.)


எகிறி எறிந்தேன் விக்கெட் விழுந்தது.


ஒருநாள் போட்டி விருதுகள்.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்-விரேந்தர் சேவாக்(இந்தியா)


அங்கேயும் நானே இங்கேயும் நானே பந்தினை பஞ்சராய் தினம் அடிப்பேனே.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர்- ஜேம்ஸ் அன்டர்சன்(இங்கிலாந்து)

நான் போட்டா அடிக்கமாட்டாய்..

சிறந்த ஒழுக்கமான அணி-நியூசிலாந்து.

ரொம்ப நல்லவங்கையா....

டெஸ்ட் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி-இந்தியா.


நம்பர் 1க்கு வந்தது பெரிய விசயமப்பா.


ஒருநாள் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி- இந்தியா.


ஏறு முன்னேறு இங்கும் நம்பர் வன் அடையும் நாள் தொலைவில் இல்லை.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர். - ஸ்டுவர்ட் பிரவுட்.(இங்கிலாந்து)


எல்லாம் அவன் செயல் அப்பாடா இந்த முறை யுவராஜிட சிக்கல.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்.-கெளதம் கம்பீர்.(இந்தியா.)



எங்கேயும் போதும் நான் தாண்ட நம்பர் வன்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox