Wednesday, June 9, 2010

200+ பதிவு. சாக்கடைகளுக்கு ஒரு சாட்டையடி!வணக்கம் பதிவுலக நண்பர்களே, எதிரிகளே, முதுகெலும்பில்லாத நரிகளே!

ஏன் இப்படி ஒன்று என பார்க்கின்றீர்களா. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த காலத்தில் நான் ஓய்வாக இருப்பதால் தினமும் ஒரு இடுகையை இட்டு வந்துள்ளேன் என் மனதுக்கே இப்போதுதான் நான் ஓரளவு நல்ல இடுகைகளை தருகின்றேன் என கடந்த முப்பது நாப்பது பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தான் இப்படி ஒரு சூழ்ச்சி, நயவஞ்சகம், முதுகெலும்பில்லாத நரிகள் செய்த ஒரு வலையில் மாட்டாமல் வெளிவந்திருக்கின்றது இந்த சுறா.(சும்மா பில்ட் அப்புக்குதான் சுறா.)

நேற்று காலை நான் கண்விளித்ததே ஒரு சக பதிவரின் தொலைபேசி அழைப்பில் எனக்கு கிடைத்த தகவல் எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. அந்த தகவல் என்னவென்றால் என் தளத்துக்கு செல்ல முடியவில்லை. காரணம் இரண்டு ஒன்று சில தவறான தகவலை நான் பரப்ப முற்பட்டதற்காய் தளம் முடக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லை சில நய வஞ்சகர்களால்(கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டணும் என்றாலும் நாகரிகம் கருதி தவிர்க்கின்றேன்.) என் தளம் களவாடப்பட்டிருக்கணும். என்ன நடந்தது என தெரியாமல் இருக்கவே என் மினஞ்சல் இயக்க முற்பட்ட போது அதுவும் முடக்கப்பட்டது. உடனடியாய் ஒரு சக பதிவருடன் தொடர்பை ஏற்படுத்தி என் தளத்தையும் மினஞ்சலையும் ஒரு நிமிடத்தில் மீளப்பெற்றேன்.

இது நடக்க முதல் நாள் இரவு அதிகாலை மூன்று மணிவரை நான் என் மினஞ்சல் மற்றும் தளத்தை பாவித்துக்கொண்டே இருந்தேன். அதன் பின் காலை ஏழு மணிக்குள் இது நடந்தேறியுள்ளது. ஆனால் அவரின் துரதிஷ்டம் களவாட முற்பட்ட நிலையில் தானியங்கி முறையில் என் கணக்குகள் முடக்கப்பட்டு களவாடுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருந்த போதும் கூட என் தளத்தை களவாடப்பட்டு இருப்பதைக் கண்டு அவரை இனம்காண உதவிய என் சக பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள். அந்த முட்டாளுக்கு வெறுத்துப்போயிருக்கும். இன்னும் ஒரு சிலரிடமும் கைவைத்து தோல்வியில் முடிந்திருக்கின்றது அவர் முயற்சி.


என் தளம் களவாட காரணம் என்ன? பதிவுலகை பொறுத்தவரை எனக்கு எதிரிஎன்று யாரும் இல்லை. சரி நான் ஒரு பிரபல பதிவர் என்றாலும் பரவாயில்லை. வளர்ந்து வரும் ஒரு பதிவரான என் வலைப்பூவை முடக்கி என்ன இலாபம். ஆனால் முடக்க முயற்சித்த அந்த முடவனுக்கு ஒரு நன்றி. நீங்கள் முடக்க முயற்சித்த அன்று நான் ஒரு பதிவும் இடாமலே என் தளத்துக்கு பல நண்பர்கள் வந்து போய் உள்ளனர். வழக்கமாய் பதிவு போடாவிட்டால் வருவோர் எண்ணிக்கை குறையும் ஆனால் இங்கே மாறி நடந்தது.

தொலைபேசி வாயிலாக,மூஞ்சிப்புத்தக வாயிலாக என பல வகையிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த சகல பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள். உங்கள் உதவியால் தான் மீண்டும் வந்துள்ளேன். இந்த தடையால் என் பதிவுகள் தளராது. தொடர்ந்து நான் எழுதிக்கொண்டிருப்பேன். எந்த இலாபமும் இன்றி நண்பர்களை மட்டும் கொடுத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு நான் ஒதுங்க மாட்டேன்.

தளத்தை முடக்க முற்பட்ட முட்டாளே,
ஒரு தடவை ஹக பண்ண முயலும் முன் நூறு தடவை யோசிச்சிட்டு செய் அப்புறம் யோசிக்கவே முடியாது. இப்போது கூட உன் நிலை அதுதான். பதிவுலகில் கருத்து மோதல் வரலாம் எழுத்தை எழுத்தால் மோதுங்கள். அதை விடுத்து முதுகெலும்பு இல்லாமல் ஒருவனை முடக்கி அதில் வெற்றி காண்பது அழகா? உனக்கு எழுத தெரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. நாங்கள் எழுதுகின்றோம் பிடித்தால் படி இல்லாவிட்டால் போய் ப.... பதிவுகள் பலர் எழுதுகின்றனர் எல்லோரின் எல்லாப்பதிவும் ஹிட் ஆவதில்லை இதில் யாழ் தேவியில் நான் இணைக்கும் பதிவுகளுக்கு வாக்குகள் விழுவதே அபூர்வம் இப்போது பல வாக்குகள் விழுகின்றன. ஆனால் மறை வாக்குகள். இதை பற்றி யாழ்தேவியுடன் பேசி அந்த நயவஞ்சகர்களையும் இனம் கண்டாயிற்று. இப்படி எல்லா இடமும் அடிக்கப்போய் கடைசியில் அடி வாங்கிடாதிங்க. உங்களை போல நான் அடிச்சால் தாங்க மாட்டிங்க. எழுத வந்த இடத்தில் எழுதுவம் பிடிச்சிருந்தா வாக்குப்போடுவம் இதுதான் எனக்கு தெரிந்த பதிவுலக அரசியல். அதை விட்டிட்டு சாக்கடையை இங்கேயும் கொண்டுவந்தால் நான் பேசமாட்டேன். ஏனென்றால் நாங்கள் சாக்கடை முன்னால் பேச மாட்டோம்.(உபயம் வேட்டைக்காரன்)

அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்திட்டன். இது என் 203வது பதிவு. இத்தனை நாள் எனக்கு ஆதரவளித்த வாசகர்கள்,சக பதிவர்கள்,வாக்காளர்கள்,பின்னூட்ட நண்பர்கள்,அனானிகள்,திரட்டிகள் என எல்லோருக்கும் என் நன்றிகள்.

இருநூறாவது பதிவில் இதை குறிப்பிடலாம் என எண்ணி இருந்தேன் இருந்தும் மறந்து விட்டேன். பரவாயில்லை. நம் நண்பர்கள் தானே இதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றேன். நம்பிக்கையை கேடுப்பீர்களா என்ன.

என் பதிவுலக பயணம் தொடரும்............தடைகளை படிக்கற்களாக மாற்றி.
Share:

48 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

முதலில் 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

SShathiesh-சதீஷ். said...

@கன்கொ
ன் || Kangon


அதென்ன முதலில் வாழ்த்து என்று அதை மட்டும் சொல்லி இருக்கிங்க அப்போ மீண்டும் வரப்போரின்களோ

anuthinan said...

குருவே இது எல்லாம் இப்போது அரசியலில் சகஜமாக போய்விட்டாது என்று நினைக்கிறேன்!

நேற்று நான் கூட ஒரு கணம் அதிர்ந்து போய்விட்டேன். என்னை போல உங்களுக்கு பாதிப்போ என்று! பரவாயில்லை அண்ணா! எல்லாம் நல்லபடியாகவே நடந்து இருக்கிறது.எனக்கு என்னவோ எங்களுக்கு எல்லாம் இலவச விளம்பரம் நடக்கிறது போல இருக்கிறது


ஆனால் ஒன்று, பஞ்ச் எல்லாமே நச்

கன்கொன் || Kangon said...

முதுகெலும்பில்லாதவர்கள் இப்படித்தான்...

ஆத்திரம் வந்தாலும், மறைவாக்குகள் போடப்படும்போதே இப்படியான கேவலமான நடவடிக்கைகளை எதிர்பார்த்தது தானே...

பலருக்கு பரிச்சயமான வார்த்தைகள்,
'என்ன பிடுங்க முடியுமோ பிடிங்கிக் கொள்ளுங்கள்...'

Bavan said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சின்ன குரு..:P

குழந்தை பிறந்து, தவிழ்ந்து, நடைபழகி நடக்கப்பழகும் போது நிலத்தில் கிடக்கும் குப்பைகள் தடக்கி விழுத்தத்தான் பார்க்கும்.. அதற்காக குழந்தை நடப்பதில்லையா.. உங்களுக்கு கிடைத்த வெற்றி இது தொடருங்கள். தடக்கி விழும் நேரத்தில் தோள்கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.

இப்படிக்கு
இனன்னொரு நடைபழகும் குழந்தை..:P

Bavan said...

ஆ... சொல்ல மறந்திட்டன்... 10000, 20000 என்று மேலும் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் தல.. சாரி... தளபதி..;)

maruthamooran said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் Bro

யோ வொய்ஸ் (யோகா) said...

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சதீஷ், தொடர்ந்து எழுதுங்கள், என் வலைப்பக்கம் திருட்டு போனது இன்னும் கிடைக்கவில்லை ஆகவே கவனமாக இருங்கள் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். எப்படியே உங்கள் பதிவு மீள கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

shan shafrin said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..... ( நான் ஒரு பதிவரில்லையே [ ஆனால் பதிவுலக ரசிகன்]... அதனால் [அந்த] அரசியல் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.... ஆனால் பஞ்ச் எல்லாம் கலக்கல் )..

பனையூரான் said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
காய்க்கிற மரம்தான் கல்லெறி விழும் நீங்கள் போய்க்கொண்டே இருங்கோ சதீஷ்

Atchuthan Srirangan said...

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சதீஷ்

சௌந்தர் said...

உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கவலை படதீர்கள்.
வாழ்த்துக்கள் 200 பதிவுக்கு

நிரூஜா said...

வாழ்த்துக்கள் அண்ணா...

அ.ஜீவதர்ஷன் said...

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து கலக்குங்கள்.

Admin said...

200க்கு வாழ்த்த்துக்கள்


இன்று சிலர் இப்படியான வேலை செய்வது ஏனோ தெரியவில்லை. அதிலும் ஒரு சில இலங்கை வலைப்பதிவர்கள் செய்வது வெட்கித் தலை குனியவேண்டிய விடயம்.

எனது வலைப்பதிவுக்கும் இரண்டுமுறை இந்த வேலை செய்திருக்கின்றார்கள். சில வெளிநாட்டு நண்பர்களின் உதவியோடு மீட்டு எடுத்ததோடு யார் இந்த வேலையை செய்பவர்கள் என்பதை ஆதார பூர்வமாக நிருபிக்கப் பட்டிருக்கின்றது. அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிடுவேன். கவலைக்குரிய விடயம் இதனை செய்த ஒருவர் என்னோடு மிகவும் நட்புடன் பழகும் ஒருவர். அனானியாக வருபவர்களும் இவர்களேதான்.

வேண்டுமென்றே பதிவுலகத்தை சீரழிக்க நினைக்கின்றவர்கள் இவர்கள். யார் என்ன செய்தாலும் நாம் நம் வேலையே செய்வோம்.

தோழி said...

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

வந்தியத்தேவன் said...

200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ரொம்ப குமுறியிருக்கிறீர்கள். காய்க்கின்ற மரம் தான் கல்லடி படும். எல்லாம் சுயவிளம்பரம் தேடிக்கொள்கின்ற சிலரால் வந்த வினை. நாங்கள் பாட்டுக்கு நம்ம வேலையைப் பார்ப்போம்.

balavasakan said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தளபதி..தளபதிய யாராலும் அடிக்க முடியுமா என்ன....?? தொடர்ந்து உங்கள் பதிவுலக பயணம் சி்றக்க வாழ்த்துக்கள் !!

ஆதிரை said...

வாழ்த்துக்கள் சதீஸ்

Subankan said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

தமிழ் மதுரம் said...

சதிஷீஸ்! இத்தகைய இழிவானவர்களை என்ன வார்த்தையில் சிறப்பிப்பது என்றென்றே தெரியவில்லை!


தடைக்கற்கள் தான் படிக்கற்கள் என்பது போல தொடர்ந்தும் முன்னேறுங்கள்! இன்னும் நிறையப் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

Vathees Varunan said...

வாழ்த்துக்கள் சதீஷ்...
முட்டாள்கள் சிலர் இப்படி அடுத்தவர்களை முடக்க முயற்சி செய்துகொண்டுதான் இருப்பார்கள்.அதைப்பற்றி நாங்கள் பெரிதாக அலட்டி கொள்ள தேவையில்லை. ஆனாலும் சுயஎச்சரிக்கை எங்களுக்குள் இருந்தால் நல்லது.

ARV Loshan said...

இரட்டைச் சத வாழ்த்துக்கள் சதீஸ்.
இதெல்லாம் இப்போ சகஜம்.
ஆனால் தளத்தை உடனே மீட்டது மகிழ்ச்சி & நிம்மதி தானே?
இப்படியான கீழ்த்தர வேலைகளையும் அதை செய்வோரையும் நல்லவராக நடிக்கும் நயவஞ்சகரையும் புறந்தள்ளி விட்டு தொடர்ந்து போய்க் கொண்டே இருங்கள்.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

நடப்பது நடக்கட்டும் நாம் செல்வோம் நம் பாதையில் நெக்ஸ்ட் பன்ச்

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

மறை வாக்கு போடுவது புடுங்கப்பட்டு விட்டது ஹீ ஹீ ஹீ

SShathiesh-சதீஷ். said...

@Bavan

குழந்தாய் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Bavan

இந்த கணக்கு ரொம்ப ஓவர் தான் காதல் இலவரசா

SShathiesh-சதீஷ். said...

@மருதமூரான்.

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கு ஒரு விஷயம் என் கடைசி பின்நூடத்தில் இருக்கு.

SShathiesh-சதீஷ். said...

@யோ வொய்ஸ் (யோகா)

உங்கள் அக்கறையான கருத்துக்கு நன்றி. நீங்கள் மீண்டு வந்தது சந்தோசம். பல் அரசியலுக்கான முற்றுப்புள்ளி அது.

SShathiesh-சதீஷ். said...

@shan shafrin

வாழ்த்துக்கு நன்றி. ஒரு வாசகனாய் தொடர்வதற்கு மிக்க நன்றி

SShathiesh-சதீஷ். said...

@பனையூரான்

ம் அப்படித்தான் விட வேண்டும்.வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் ஒரு பதில் கடைசி பின்னூட்டத்தில் இருக்கு.

SShathiesh-சதீஷ். said...

@Atchu

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் ஒரு விஷயம் பின்னூட்டத்தில் இருக்கு கடையி பின்னூட்டம் பாருங்கோ

SShathiesh-சதீஷ். said...

@soundar

உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்களுக்கும் கடைசி பின்னூட்டத்தில் ஒரு விடயம் இருக்கு...

SShathiesh-சதீஷ். said...

@நிரூஜா

நன்றி தம்பி ஹீ ஹீ

SShathiesh-சதீஷ். said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி

SShathiesh-சதீஷ். said...

@ஜீவதர்ஷன்

வாழ்த்துக்கு நன்றி. ஆனால் உங்களுக்கும் என் கடைசி பின்னூட்டத்தில் ஒரு விடயம் உண்டு

SShathiesh-சதீஷ். said...

@சந்ரு

முதலில் வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் சொன்ன பல விடயங்களுக்கு நன்றி. உங்களுக்கும் என் கடைசி பின்னூட்டம் சமர்ப்பணம்.

SShathiesh-சதீஷ். said...

@தோழி

வாழ்த்துக்கு நன்றி...ஆனால் உங்களுக்கும் கடைசி பின்னூட்டம் இருக்கு....

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

வாழ்த்துக்கு நன்றி மாமா. நீங்களும் தப்பு பண்ணிட்டின்களே....பரவாயில்லை உங்களுக்கும் என் கடைசி பின்னூட்டம் சமர்ப்பணம்.

SShathiesh-சதீஷ். said...

@Balavasakan

வாழ்த்துக்கு நன்றி. தளபதி என்று உசுப்பேத்தி விட்டு பார்க்கிற மாதிரி இருக்கா..ஹீ ஹீ

SShathiesh-சதீஷ். said...

@ஆதிரை

நன்றி சித்தப்பு

SShathiesh-சதீஷ். said...

@Subankan

கணக்கில நீங்களும் வீக்கா? சோ கடைசி பின்னூட்டம் போங்க. வாழ்த்துக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@தமிழ் மதுரம்

பதிவு என்பதால் தான் சிலவற்றை தவிர்ஹ்தேன். இதுவே நேரடியாய் என்றால் அவங்களுக்கு புரியும். கை வச்சிட்டாங்க இனி ஹீ ஹீ டான்ட் வாரி கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்-Vathees

நன்றி வாழ்த்துக்கு. உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலம்.

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

யூ டூ அண்ணா. சோ கம் லாஸ்ட் கொமென்ட்.

வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் ஆதரவு இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை.

SShathiesh-சதீஷ். said...

நண்பர்களே உங்கள் எல்லோரின் வாழ்த்துக்கும் நன்றி. ஆனால் இது என் இருநூறாவது பதிவல்ல அதில் மறந்ததால் இங்கே போட்டேன். ஆனால் இதை இருநூறாவது பதிவாக பாவித்து வாழ்த்திய உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள். ஹீ ஹீ ஹீ

Bavan said...

நீங்க அப்ப ஏன் 200 எண்டு படம் போட்டீங்களாம்..:P:P:P

SShathiesh-சதீஷ். said...

@Bavan

அப்போ நீங்கள் படம் பார்த்து தான் கொமென்ட் போடுவின்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive