உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

Monday, June 6, 2011

கிரிக்கெட் - போட்டோ கொமென்ட்ஸ்.

இலங்கை வீரர் டில்ஷான்






இலங்கை வீரர் சுரங்க ரக்மால்





இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தி பட்டேல்,விராத் கோலி மற்றும் சர்வான்





இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் தில்ஷன் மற்றும் இயன் பெல்








இந்திய மேற்கிந்திய நிகளுக்கிடையிலான போட்டியில் Danza Hyatt and Marlon Samuels








எனக்கு எதுவுமே தோணல நீங்களே கொமென்ட் போடுங்களேன்...



NO COMMENTS


Share:

Saturday, April 2, 2011

உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்



உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....

இந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்?

இந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ? எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.

இதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என்னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.
Share:

Saturday, January 15, 2011

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!




பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

Friday, November 5, 2010

தூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து!

ஹாய்! எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்க? நானும் ஒரு பதிவரா என்று கேட்கப்படாது. என்ன செய்வது நம் நாட்டை விட்டு வெளிநாடு வந்து நடுவாற்றில் நிற்கும் நமக்கு இப்படி ஆடிக்கொரு அமாவாசைக்கு ஒரு பதிவு தான் இடமுடியும். நம்மவர்களை மறக்கலாமா என்ன. இதோ நாடு இரவிலும் உங்கள் எல்லோரையும் மறக்காமல் என் உள்லாம் வால்த்துக்கின்றது ஏற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். மிக விரைவில் சந்திப்போம். அதுவரை என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Share:

Friday, July 23, 2010

முரளி - போட்டோ கொமன்ஸ்








































இந்த பதிவிட படங்களை தந்துதவிய பவன்,கான்கொன்,மற்றும் யோ வாய்ஸ் யோகா அண்ணாவிற்கு என் நன்றிகள்.

Share:

Thursday, July 22, 2010

முரளியை வாழ்த்தும் உலக நாயகனின் பாடல்!



முத்தையா முரளிதரன், இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாயெல்லாம் முணுமுணுக்கும் உன்னிப்பாக பார்க்கும் ஒரு பெயர். பல தடைகள் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி இன்று சிகரம் தொட இருக்கும் நிஜ ஹீரோ முரளிக்கு, திரை உலக உலக நாயகன் ஹீரோவுக்காய் எழுதிய பாடலை கொஞ்சம் மாற்றி போட்டு வாழ்த்து ஒன்றை படிக்கின்றேன் ஒரு சாதாரண ரசிகனாய்.

உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?
உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இலங்கை நாடு.
உலக நாயகனே எங்கள் தங்க தமிழனே
கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்.

நீ ஒரு தீரன் நிரந்தர இளைஞன் வேட்கை மிகுந்த விக்கெட் டேக்கர்
ஒரு பந்து கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் விக்கெட் கடந்தாய்
உன் வாழ்வில் எண்ணூறு டேஸ்ட் விக்கெட்டும் காண்பாய்.
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சாதனை முயற்சி சோர்ந்திடவில்லை.
இருபது முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை
உன் சாதனைகளை முறியடிக்க இனி எவரும் இல்லை.

உலகுக்கு நீ ஒரு பந்து வீச்சாளன் வீரர்கள் எதிரில் நூறு மடங்கு பலவான்
எதிர்ப்பினை ஜெயித்து மனங்களை வென்று பாரிய சாதனை படைத்தாய்.
உன் திறனை எதிரியும் புரிந்து கொண்டார்.
உன் விரல்களுக்குள்ளே பந்து மாயாஜாலம் செய்யும்
உன் ஒருவனுக்குள்ளே சாதனை அடங்கும்
தமிழனாய் பிறந்து இலங்கைக்காய் ஆடி இன மத மொழி கடந்தாய்
இப்போது சரித்திரம் ஆகிவிட்டாய்


Share:

Monday, June 7, 2010

சீறி வரும் சிங்கம் சிம்பாவே.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிம்பாவே-இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை எவை என தெரிவும் ஆகிவிட்டன. ஆனால் இந்த தொடர் தொடங்கும் போது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் ஆரம்பித்தது வழக்கம் போல சிம்பாவேயை ஓரம் கட்டிவிட்டு இந்திய இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடந்தது என்ன. வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென நினைத்தார்களோ இல்லை சிம்பாவே தானே என இளக்காரமாய் நினைத்தார்களோ தெரியாது இரண்டாம் தர இந்திய அணியை தெரிவு செய்ததாக கூறி அனுப்பி வைத்தனர் இந்திய தெரிவுக்குழுவினர். கெளரவம் பார்த்து இலங்கையும் தன் வழக்கமான அணியை விடுத்து இரண்டாம் தர அணி ஒன்றை அனுப்பி வைத்தது.

போட்டிகளை பார்க்க முதல் அனுப்பி வைக்கப்பட்ட அணிகள் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் வழக்கமான மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. சச்சின் மகா போர்மில் இருக்கின்றார் இவர் இல்லாதது நட்டம் சேவாக்கும் இல்லை. இவர் காயம் காரணமாக இழந்த போர்மை மீட்க ஒரு வாய்ப்பு அதுவும் வழங்கவில்லை. அடுத்து கம்பீர் அண்மைக்காலமாக பெரிதாக இவர் பிரகாசிக்கவில்லை. அடுத்து தல தோணி இல்லை யுவராஜ் இல்லை பந்து வீச்சிலும் முக்கியமானவர்கள் இல்லைதான் ஆனால் இந்தியாவின் வருங்கால அணி என எதிர்பார்க்கப்படும் இளைய வீரர்களை கொண்ட ஒரு அணிதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. வீரர்கள் அனைவரும் இளையவர்கள் ஆனால் ஓரளவு அனுபவம் உள்ளவர்கள் தான். இப்படியான ஒரு அணியாக வந்த அவுஸ்திரேலியா தான் T20 இறுதி போட்டி வரை தோல்வி இல்லாமல் வீறு நடை போட்ட அணி. அப்படி இருக்கையில் ஐ.பி.எல்லால் வளர்க்கப்பட்ட வீரர்கள் என்னத்தை பெரிதாய் கிழித்தனர் இப்படி சொதப்ப தான் ஐ.பி.எல் என்னும் களியாட்டமா?


இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் இதில் கார்த்திக்கின் விக்கெட் காப்பு படு மோசம் அப்படி இருந்தவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கினார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் விஜய் ஐ.பி.எல்லில் முதலில் பிரகாசித்தாலும் உலக கிண்ண போட்டியில் அவர் போட்ட மொக்கை எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் இது தேவையா? தினேஷ் கார்த்திக்கு பதில் விக்கெட் காப்பில் ஈடுபடுவதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ராபின் உத்தப்பாவை அனுப்பி இருக்கலாமே? நமன் ஒஜாவை எதற்காக பயன்படுத்தாமல் விட்டார்கள் என தெரியவில்லை. அந்த வீரருக்கு விஜயை தவிர்த்து வாய்ப்பு வழங்கி இருந்தால் சிலவேளை அவர் நம்பிக்கை அளித்திருக்கக்கூடும். கார்த்திக் சொதப்பிய நேரம் அவரை விட ஓஜா சிறப்பாகவே விக்கெட் காப்பும் செய்தார். விராத் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா போன்றோர் ஓரளவு திருப்திப்படுத்தினர்.

அடுத்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்று சின்னப்பிள்ளை ஆட்டம் ஆடிய ரைனா. தன் பாட்டுக்கு துடுப்பாட்டத்தில் கலக்கிய அவருக்கு இந்த தொடர் எல்லாவகையிலும் கறுப்பாகிப்போனது. ஒரு தலைவருக்கு உரிய பண்புகள் இன்னும் அவருக்கு போதியளவு இல்லை என்பதுடன் கிரிக்கெட் விதிகளே தெரியாமல் ஒருவர் அணிக கப்டனாக ஆடிய அவமானமும் கிடைத்தது. அவ்வளவுக்கு அறிவில்லாமல் ஆடுகின்றாரா இவர்? ஆனால் இலங்கை தெரிவாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய தெரிவாளர்கள் செய்தது ஒரு விதத்தில் நல்ல விடயம். இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு இப்போது ஓரளவுக்கு அவர்களுக்கு விடை கிடைத்திருக்கும். ரைனாவின் தலைமைப் பண்பின் வள்ளலும் விளங்கி இருக்கும். எனக்கென்னவோ இந்தியாவிற்கு பத்தொன்பது வயதுக்குட்பட்ட போட்டியில் உலக கிண்ணம் வென்று கொடுத்த கோலி பொருத்தமாக இருப்பார் என தோன்றுகின்றது. இப்போதைக்கு துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அவருக்கு தலைமைப் பொறுப்பு பெரிய சுமையாக இருக்காது என நம்புகின்றேன்.

அடுத்தவர் ஜடேயா, ஒருவேளை நம் இலங்கையில் சனத்தை வைத்திருப்பது போல இவரை வைத்திருக்க வேண்டும் என்ற மரியாதை இருக்கின்றதோ? கிரிக்கெட்டின் எல்லா துறையையும் மறந்து விட்டார். தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு முற்று முழுதாக அதை வீணாக்கி விட்டார். இனியும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தெரிவுக் குழுவும் தோனியும் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றார்கள் என்றே சொல்லலாம். கொஞ்ச காலத்துக்கு இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.

தன் பெயர் சொல்ல ஒரு வீரர் வேண்டும் என்பதற்காய் தோணி இவரை வளர்க்கின்றார் என நினைத்தாலும் இது அவர் பெயரை கெடுக்கும் பிள்ளையாய் இருக்கின்றது. இவரைவிட இன்னும் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சகலதுறை வீரர் தான் வேண்டும் என்கிறார் தோணி இந்த தொடரை பொருத்தவரை அஷ்வின் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை கொடுத்தால் அது பலனளிக்கும். மறு பக்கம் ரைனா,யூசுப்,யூவி என மற்ற வீரர்களையும் தோணி பயன்படுத்தலாமே. வரும் தொடர்களிலாவது சிந்திப்பாரா பார்ப்போம். ஐ.பி.எல்லில் சென்னைக்காய் அஷ்வினை நம்பியவர் நாட்டுக்காய் நம்பினால் எல்லோருக்கும் அது நல்லது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அஷ்வின் மட்டுமே ஆறுதல் ஆனால் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பை வழங்கி அவர்களின் பலம் பலவீனத்தை தெரிவாளர்கள் அறிந்திருப்பர்.


கார்த்திக்,விஜய்,ரைனா,கோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான், ஜடேயா போன்றோர் சர்வதேசப்போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்களே. எனவே இந்தியாவின் இரண்டாம் தர அணி என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சிம்பாவேயையும் இலங்கையையும் சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு நாடு சார்பாக அனுப்பப்பட்ட அணியே இது இதில் முதல் தரம் இரண்டாம் தரம் என்று சொல்ல முடியாது. அணி அணி தான் வெற்றி வெற்றி தான் தோல்வி தோல்விதான். இது இலங்கைக்கும் பொருந்தும். தில்ஷான் தலைமையில் களம இறங்கிய இலங்கையும் இன்று சிம்பாவேயிடம் தோல்விகண்டு இறுதிப்போட்டிக்கு காத்திருக்கின்றது. சங்கா,மகேல,முரளி,சனத் என முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் அணித்தலைவராக பிரகாசிக்காத தில்ஷான் தலைமையில் அணி அனுப்பப்பட்டது.

ஆரம்ப போட்டியில் தானே விக்கெட் காப்பாளராக ஆடிய தில்ஷான் தொடர்ந்து வந்த போட்டிகளில் சந்திமல் என்னும் அற்புதமான இளைய வீரர் ஒருவரை இனம்காண வைத்திருக்கின்றார். இலங்கையை பொறுத்தவரை தில்ஷான்,தரங்க, சமரவீர, அஞ்சலோ மத்தியூஸ், கபுகேதர, குலசேகர,டில்ஹார போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் மிக்கவர்கள் அப்படி இருக்கையில் இவர்களும் இரண்டாம் தர அணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இலங்கை தெரிவாளர்கள் ஒரு அற்புதமான தலைவரை தெரிவு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன். தில்ஷான் ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்து டில்ஷானை தலைமைப்பொறுப்பில் வளர்க்க வேண்டிய எந்த ஒரு காரணமும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இல்லை. காரணம் சங்கா ஓய்வு பெற முன் தில்ஷான் போய்விடுவார். அப்படி இருக்கையில் அடுத்த தலைவர் என கருதப்பட்ட கபுகேதரவுக்கு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து.


மொத்தத்தில் இரண்டாம் தர அணி என்ற பெயரில் சென்ற இரண்டு அணிகளுக்கும் உண்மையில் அனுபவம் குன்றிய சிம்பாவே நல்ல பாடம் புகட்டியுள்ளது. அவர்களின் கூட்டு முயற்சிக்கும்,விளையாட்டின் மேல் உள்ள ஈடுபாட்டுக்கும் கிடைத்த வெற்றி தான் இது. இரண்டு கிரிக்கெட் வல்லரசுகள் பங்கு பற்றிய தொடரில் அவர்களை தோற்கடித்து அவர்கள் இருவரையும் விட அதிக போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளை பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது சீறிப்பாயும் சிம்பாவே. டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்பட்டு கிரிக்கெட்டில் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த சிம்பாவேக்கு இது நிச்சயம் மிகப்பெரிய மருந்து. முதல் போட்டியில் சிம்பாவே வென்றபோது ஏதோ வென்றுவிட்டார்கள் என நினைத்தாலும். அந்த போட்டியில் சிம்பாவேயின் பலம் அபாரமாக வெளிப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற்றாலும் அபார துடுப்பாட்ட உதவியுடன் ஓட்ட எண்ணிக்கையை துரத்தி மலைக்க வைத்தது. தொடரை பொறுத்தவரை சிம்பாவேயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மிகப்பெரிய அரணாக இருந்து சிம்பாவேயின் வெற்றியில் பெரும் பங்காற்றினர். இருவரும் விக்கெட் விழுவதை தவிர்த்ததுடன் மிக சிறப்பாக ஓட்டங்களை குவித்து பின்னர் வரும் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மற்றவர்கள் வெற்றிகரமாய் அதை முடித்து வைத்தனர். மசகட்சா,டெயிலர் என்ற அந்த இரண்டு வீரர்களும் எல்லா வீரர்களையும் விட சிறப்பாக ஆடினார் என்றால் அது மிகை இல்லை.

இப்படி துடுப்பாட்டத்தில் எல்லோரும் கை கொடுக்க மறு புறம பந்து வீச்சாளர்களும் சில போட்டிகளில் அசத்தினர். அனுபவம் மற்றும் இளம் ரத்தம் வெறி என்பன சேர்ந்து சிம்பாவே கிரிக்கெட்டில் ஒரு மணி மகுடத்தை கொடுத்திருக்கின்றது. மற்ற இரண்டு அணிகளையும் விட சிம்பாவேயின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது உண்மை. பெருமளவான ஓட்ட எண்ணிக்கையை கடுப்படுத்தியது இந்த படை. இது மற்ற இரண்டு அணி வீரர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்தது.

கத்துக்குட்டி அணி, இரண்டாம் தர அணி என விமர்சிக்கப்பட்ட அணி இப்போது தங்கள் விளையாட்டின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் மற்ற இரண்டு அணிகளையும் விட கிண்ணம் வெல்ல சகல தகுதியும் இந்த அணிக்கு உண்டு. சிம்பாவே, நட்சத்திரங்கள் என்பனவற்றை தவிர்த்து ஒரு கிரிக்கெட் அணியாக பார்த்தால் அசுர வளர்ச்சியைக் காட்டும் சிக்கும்புராவின் இந்த புத்துப்படைக்கு என் வாழ்த்துக்கள். உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சொல்கின்றேன். இலங்கை,இந்திய ரசிகர்கள் கோபிக்கபடாது. இந்த முறை கிண்ணத்தை சிம்பாவே வெல்ல வேண்டும் அதுதான் அவர்களின் கடுமையான உழைப்புக்கும் விளையாட்டின் மீதான ஈடுபாட்டுக்கும் கிடைக்கும் பரிசு. சிங்க சீற ஆரம்பித்திருக்கிறது. மிக விரைவில் பல ராஜ்ஜியங்கள் விழும் என நம்புகின்றேன். மீண்டும் ஒருதடவை சிம்பாவே கிரிக்கெட்டுக்கு என் வாழ்த்துக்கள்.
Share:

Thursday, May 13, 2010

நாடு திரும்பியதும் இதை காட்டுவோம் - தோனி பெருமிதம்.


கடந்த பதிவில் வாக்குப்போட்டு உற்சாகம் தாருங்கள் என்று கேட்டதற்க் கிணங்க நீண்ட நாட்களின் பின் இருபது வாக்குகளை தொட வைத்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். ஐ.சி.சி T20 உலகக்கிண்ண போட்டிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கும் நிலையில் நடை பற்ற நிகழ்வுகளை வைத்துக்கொண்டு போட்டோ கொமண்ட்ஸ் போட்டிருக்கேன். இந்தப் பதிவிற்கும் வாக்குப் போட்டு ஊக்கம் தந்தால் நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப்போறேன்.

இது யார் மனதையும் புண்படுத்த அல்ல ரசிக்க மட்டுமே. ரசியுங்க இதை விட நல்ல கொமண்ட்ஸ் போடா உங்களால் முடியும் பார்க்கும் போது யாருக்காவது ஏதும் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.





























Share:

Thursday, December 24, 2009

வேட்டைக்காரனையே வேட்டை ஆடிய விஜய் ரசிகன்.



விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் எதிர்ப்பு வாதிகளாலும் எதிர்பார்க்கப்பட்ட(உங்களுக்கு மட்டும் தானுண்ணா இந்த சிறப்பு.) வேட்டைக்காரன் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்துவிட்டான். இலங்கையில் வியாழன் இரவே ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டதால் வெள்ளி காலையில் இருந்து விமர்சனப்பதிவுகள் வர ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்தது போலவே வேட்டைக்கரனை வேட்டையாடிய பதிவுகள். நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. பதிவர்களின் வேட்டை அதிகைத்தது. உண்மையில் ஒரு விஜய் ரசிகனாக வெட்கிப்போனேன். அதுமட்டுமில்லாமல் கவலையும் பட்டேன். இந்தமுறையும் கவித்திட்டாரா என்ற கவலையுடன் எதுவா இருப்பினும் ஒருதடவை படத்தை பார்த்து விடனும் என்ற முடிவில் சனிக்கிழமை காலை படம்பார்க்க சென்றேன்.


டிக்கெட் கிடைக்கவில்லை சினிசிட்டிக்கு. இங்கே ஓசியாக பார்க்கும் வாய்ப்பும் கிடைக்க இங்கேயே பார்க்கலாம் என நானும் அலுவலக நண்பன் ஒருவரும் சென்றோம்(அவரும் விஜய் ரசிகருங்கோ.). காலை பத்து பதினைந்துக்கு காட்சி என்றனர் நாங்கள் 9.45க்கே சென்றுவிட்டோம். எல்லா ஆர்வக்கோளாறு தான்.சென்றால் கூட்டம் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அந்த வெயிலிலும் கூட்டம்.(இந்த திரை அரங்கிலேயே இப்படி என்றால் இதை விட நல்ல திரை அரங்குகளில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என சிந்தித்தேன்.) ஒருவாறு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றால் ஹவுஸ் புல் என்பதை அறியக்கூடியதாக இருந்தது.


சரி படம் பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்க்க சண் pictures தொடக்கம் விஜய் சண் வரும் வரை விசிலடித்தான். எனக்குள் சந்தோசம் அட நம்ம தளபதி ஜெயிச்சிட்டார் என்று. குருவி, வில்லு போன்ற ஓவர் பில்ட் அப்புகள் இல்லாமல் தளபதியின் அறிமுகம் எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான ஒபிநிங் பாடல் விஜயின் வழக்கமான நடனம் இல்லாமல் போனது ஏனோ? கொஞ்சம் அடக்கி வாசித்தார். மகனுடன் ஆடும் பொது விஜய் கொஞ்சம் மெதுவாக ஆட ஜூனியர் தளபதி ஐயப்பன் ஆசியுடன் அறிமுகமாகி அப்பாவுடம் அமர்க்களம் பண்ணினார். மகன் ஆட விஜய் பார்த்து ரசித்ததை நானும் ரசித்தேன்.மூன்று முறை பரீட்சையில் தோற்று நான்காவதில் வெல்வதை அப்பட்டமாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள் தளபதியின் இன்றைய நிலையை.


வழக்கமான படம் போல ஆரம்பித்து விட்டது இனியாவது களை கட்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எனக்கு பட்டாம் பூச்சி பறந்தது அதுதான் நம்ம ஸ்வீட்டி அறிமுகமான நேரம் நான் வழியல அனுஷ்கா நிஜ பெயரை சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது நன்றாகத்தான் இருந்தா அக்கா.(எஸ்கேப்) வழக்கமான படங்களில் ஹீரோ ஹீரோயின் அறிமுகம் போல இங்கும் ரசிக்க முடியவில்லை. ஆனால் விஜயின் அந்த குறும்புத்தனத்தை மட்டுமே அதில் ரசித்தேன். வாரணம் ஆயிரம் போல தளபதிக்கும் ரயில் பயணமோ என நினைக்க இல்லை இல்லை என அனுஷ்கா சொன்னபோது கவலைப்பட்டது விஜய் மட்டுமல்ல நானும் தான். அதற்க்கு முன் தன குடும்பம் பற்றி விஜய் கற்பனை காதல் கவிதை.ஆனால் அதன் பின் ரயிலில் என்ன நடந்தது என்பது தெரிய முன்னமே காலேஜில் சேரும் விஜய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனுஷ்கா வருவார் என நினைக்க ஒரு சோடாபுட்டி போட்டா பெண் அறிமுகமாகிறார். என்னடா இது என நினைக்க அந்த வகுப்பிலேயே தனக்கு படிப்பிக்க வரும் ஆசியருக்கு படிப்பிக்கின்றார் நம் விஜய். டாக்டர் பட்டம் இதுக்கு தானோ.(சத்தியமா ரசிக்க முடியல இது ரொம்ப ஓவருங்க.) அதற்க்கு பின் செல்லா அறிமுகம் அட நம்ம ஆதி வில்லன் சாய்குமார். ஆளே மாறிப்போனார். அதேபோல அந்த நடிப்பிலும் ஏதோ மிஸ்ஸிங். அவரின் பாத்திர படைப்பை காட்டவே காமுகனாக காட்டி இருக்கின்றார்கள். வழக்கமான விஜய் படம் போலவே எதிர்பாராத (வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கும் மாணிக்கவிநாயகம் அண்ட் மகள் ) திருப்பத்தால் விஜய்-வில்லன் மோதல் உருவாகிறது. இதற்கிடையே அனுஷ்கா வருகின்றார் போகின்றார். கரிகாலன் பாட்டு பரவாயில்லை ஆனால் ஏனோ விஜயின் நடனம் மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளிலும் புதுமை இல்லை. பார்த்துப் புளிச்சு போன காட்சிகள்.


போலீஸ் பிடித்துப்போகும் விஜயை காப்பாற்ற அனுஷ்கா எடுக்கும் முயற்சி சராசரி கதாநாயகிக்கு உரியது. ஆனால் இறுதியில் விஜய் போலிசிடம் இருந்து தப்புவது. அருவியில் குதி ப்பதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இங்கே இடைவேளை விட கொஞ்சம் அயர்ந்து தூங்கப்போன என்னுடன் வந்த நண்பரை எழுப்பினேன். அடப்பாவி இங்கே இப்படி விஜயின் தாண்டவம் நடக்க நீ தூங்கிறாயா? இடைவேளைக்கு பிறகு நான் எதிர்பார்த்த புலி உருமுது பாடல் வானொலியில் நான் ஒலிபரப்பும் போது கிடைத்த அந்த புத்துணர்ச்சியை தரவில்லை. இன்னும் நன்றாக படமாக்கி இருக்கலாம். அடுத்து சின்ன தாமரை இதில் தான் விஜய் வித்தியாசம் காட்ட முயற்சித்து இருக்கின்றார். இப்படி பாடல்களில் வித்தியாசம் காட்டும் நீங்கள் ஏன் ஒரு படம் அப்படி நடித்து முயற்சி செய்யக்கூடாது என நானும் யோசித்தேன். ஆனால் அதற்கும் காரணம் இருந்தது நிறைவில் சொல்கின்றேன்.என் உச்சி மண்டையில் மட்டுமே விஜயின் அசுர நடனத்தை காணக்கூடியதாக இருந்தது.


இரண்டாம்பாதி ஒரு சிவகாசி,திருப்பாச்சியில் இருந்த விறு விறுப்பு இருக்கும் என்றால் விஜயின் நடை உடை எல்லாம் அவரின் பகவதி படத்தை அச்சு அசலாக கொப்பி பண்ணி இருந்தது. சில காட்சிகள் எனக்கு அலுப்பு தட்டியது உண்மை. ஒரு சில Punch டயலக்குகள் இருந்தது Punch டயலாக் ரசிகரான எனக்கு கவலயே. செல்லாவின் தந்தையாக வருபவர் அசால்டாக வில்லத்தனம் அனால் அதுவே கொஞ்சம் ஓவர். விஜயும் அவரும் மோதும் காட்சிகளை இன்னும் சுவாரஷ்யமாக்கி இருக்கலாம். இறுதியில் விஜய் வில்லனை அழிக்காமல் தேவராஜை வைத்து அழிப்பது விஜய் படங்களுக்கு புதுசு. இதைவிட இடை இடையே சத்தியன் குழு உட்பட வரும் காட்சிகள் எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு புதிதல்ல. மொத்தத்தில் விஜயின் திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி(ஒரு சில காட்சி) பகவதி, பாட்ஷா படங்களில் இருந்து உருவியது மட்டுமில்லாமல் வரப்போகும் சிங்கம் பட காட்சிகளையும் வைத்து வந்து வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றான் வேட்டைக்காரன்.


இந்த விமர்சனம் வானொலியில் நான் வேலைக்கு சேர்ந்த பின் வரும் விமர்சனம், காரணம் ஒரு விமர்சனம் செய்யும் நாடு நிலையில் இருந்து இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயமாக இது ஒரு சிறந்த படம் அல்ல. விஜய் படம் அப்படி தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் மூன்று தோல்விகளுக்கு பின் மீள்வருகை கொடுக்கும் ஒரு படமாக இது அமையவில்லை என்பதே என் கருத்து. கொஞ்சமேனும் கதையில் வித்தியாசம் காட்டி இருந்தால் இமாலய வெற்றி கிடைத்திருக்குமே. ஆனால் நிச்சயம் இது வழக்கமான விஜய் ரசிகர்களை முழுதாக திருப்திப்படுத்திய படமே. இதற்க்கு சாட்சி இன்று வரை குழந்தைகள், பெண்கள்,இளைஞர்கள் உட்பட எல்லோரும் குடும்பம் குடும்பமாக சென்று ஹவுஸ்புல்லாக இருக்கும் இந்த படத்தை பார்ப்பது. இன்றுவரை இலங்கையில் ஹவுஸ் புல்லாகவும் டிக்கெட் எடுப்பதில் கடினமாக இருப்பது போன்றவை வேடைக்காரனின் எழுச்சிக்கு உதாரணங்கள். என்னதான் சண் Pictures படத்தை வெளியிட்டாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோல இன்றைய திகதியில் ஒரு திரைப்படம் நூறு நாள் ஓடுவதை வைத்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை. வெளியாகும் போது அதிக திரை அரங்குகளில் அதிக காட்சிகள் என ஓடும் போது குறிப்பிட்ட சில நாடகளிலேயே வசூல் சாதனை படைத்து விடும் அண்மையில் இதற்க்கு கண்டேன் காதலை உதாரணம் ஐம்பது நாளில் கந்தசாமி வசூலை முறியடித்து விட்டது. பரத்தின் படமே அப்படி எண்டால் விஜய் படம்? சொல்லவா வேண்டும்.


இதெல்லாம் இருக்கட்டும் படம் வெற்றியா இல்லையா என கேக்கிறிங்களா? நிச்சயமாக இது விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று ஐம்பது அடிக்கமுன் ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை நெருங்குகின்றார் விஜய். இந்த பெருமையில் பெரும் பங்கு நம்மை போன்ற பதிவர்களையே சாரும். தன வாழ்நாளில் விஜய் படம் திரை அரங்கில் பார்க்காதவர்கள் என சொல்லிக்கொண்டே இந்த படத்தை பார்த்தோம் என சொல்லி விமர்சனம் எழுதிய பதிவர்கள் உட்பட பலரின் பங்களிப்பில் வேட்டைக்காரன் வெற்றிக்காரனாகி விட்டான். எஸ்.எம்.எஸ்கள், எதிர் பதிவுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று வேட்டைக்காரன் வெற்றி பெற்று விட்டான். வேட்டைக்காரன் தோல்வியடையும் என படம் வர முன்னர் கணித்த நம் தீர்கதரிசன பதிவர்களே என்ன சொல்லப்போகின்றீர்கள். ஒரு விஜய் ரசிகனாக எனக்கு இந்த வெற்றி சந்தோசமே. ஆரம்பத்தில் சொன்னேனேனே விஜய் இப்படி வித்தியாசமான வேடம் செய்யக்கூடாதென ஆனால் விஜய் நிச்சயமாக உங்களை அப்படி ஒரு நிலையில் பார்க்கும் தன்மை ரசிகர்களுக்கு இல்லை. விஜயை விஜயாக திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பதற்கு இந்த கதையில்ல வேட்டைக்காரனே உதாரணம். இது ஒரு சில நாயகர்களுக்கு மட்டுமே உண்டான வரம். அது உங்களுக்கு உண்டு.எனக்கு வேட்டைக்காரன் இன்னொரு திருமலை, கானரணம் தோல்வியில் இருந்து விஜய் வெற்றிப்படியில் ஏற தொடக்கி இருக்கும் படம்........
Share:

Wednesday, October 7, 2009

சுடுகாட்டில் சாப்பிடலாம் வாறிங்களா?



சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதுவே சிலருக்கு மூட நம்பிக்கை. கடவுளை நினைத்து கொண்டாடும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு மூட நம்பிக்கையை உடைக்கும் ஒரு செயற்பாட்டை குஜராத் மாநில மக்கள் அரங்கேற்றப்போகின்றார்களாம். இன்று எனது வானொலி நிகழ்ச்சிக்காக சுவையான விடயங்களை தேடியபோது என் கண்ணில் இதுவும் தட்டுப்பட்டது.
வழக்கமாக விவேக்கின் நகைச்சுவை பார்த்து இதுவும் ஏதும் நகைச்சுவையோ என நினைத்தது முழுதாக படித்த எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. குஜராத் மக்கள் தீபாவளிக்கு முதல் நாளை கலி சதுர்த்தசி என அழைப்பார்களாம். அந்த வகையில் மூடநம்பிக்கையை உடைக்கும் முகமாக பாரத் ஜன விஞ்ஞான் சாதா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுடுகாட்டில் தேநீரும் வடையும் சாப்பிட போவதாக சொல்லி இருக்கின்றார்கள். நாடு முழுவதும் நானூற்று ஐம்பது இடங்களில் இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றதாம். வடையும் தேநீரும் வேண்டுமா சுடுகாட்டுக்கு போங்கோ இந்திய நண்பர்களே. என்னால் வரமுடியாது முடிந்தால் இலங்கையிலும் இதை செய்வோம் வாருங்களேன்... இலங்கையில் எங்கே சுடுகாடு தேடுவதென்ற கவலை குறைவு....
Share:

Monday, September 21, 2009

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு- ஒரு அலசல்.



இலங்கை தொடர், அவுஸ்திரேலியா -இங்கிலாந்து தொடர்களை தொடர்ந்து இப்போது கிரிக்கெட் புயல் தென் ஆபிரிக்காவில் மையம் கொள்ளப்போகின்றது. இன்னும் சில நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் முழு வேலையும் தொலைக்காட்சிக்கு முன் இருப்பதுதானாக இருக்கும். எட்டு அணிகள் எப்படியாவது இம்முறை கிண்ணத்தை வெல்லவேண்டும் என்னும் நோக்கில் களம் கண்டிருக்கின்றன. இரண்டு குழுக்களிலும் இருக்கும் அணிகள் முட்டி மோதப்போகின்றன. கிண்ணத்தை வெல்லும் என கணிக்கப்படும் இந்திய, இலங்கை அணிகள் பயிற்சிப் போட்டிகளிலேயே பல்லு போய் இருக்கின்றன. அண்மையில் சறுக்கிய அவுஸ்திரேலியா அணியோ அசுர பலத்தோடு எழுந்து நிற்கிறது. இதுதான் கிரிக்கெட் என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது. எட்டு அணிகளின் பலம் பலவீனத்தை கொஞ்சம் அலசலாமா

குழு A

அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்.

குழு B

தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து.

குழுவை பார்க்கும் போது எட்டும் எகிறி அடிக்கும் அணிகள் தான். எந்தெந்த அணிக்கு வாய்ப்புக்கள் குறைவோ அவற்றை பற்றி முதல் அலசி விட்டு இறுதிக்கு வரும் அணிகளை இறுதியாக அலசலாம்.

மேற்கிந்திய தீவுகள்.

நாங்கள் இல்லாமல் சாதிக்க முடியுமா?

உள்ளே இருக்கும் பிரச்சனையால் இரண்டாந்தர அணியாக வந்திருப்பவர்கள். பெரிதாக அறிமுகமான வீரர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று யாரும் இல்லை. அதேநேரம் ஒரு போட்டியில் வென்றாலே அது இவர்களுக்கு பெரிய விடயம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாததே இவர்களின் மிகப்பெரிய பலம். இவர்களின் குழுவில் இடம்பெற்றிருக்கும் மூன்று அணிகளுமே கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்பதால் இவர்கள் சிக்கி சின்னா பின்னம் ஆகப்போவது உறுதி.

இங்கிலாந்து.

ஏதோ இம்முறையும் வாறம் பாத்து அடியுங்க அவுஸ்திரேலியா காரன் போல அடிக்காதிங்க வலிக்கிறது.

ஆஷசை வென்று பலமாக காட்டியவர்கள் தலை குப்பற விழுந்து நிற்கின்றார்கள். இந்த அடி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டுமா என கேட்டுக்கேட்டு கொடுத்தது அவுஸ்திரேலியா. இருப்பினும் இறுதி போட்டியில் வென்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள். பீட்டர்சன், பிளின்டோப் இல்லாத அணி பிரகாசிக்கும் வாய்ப்பு குறைவு. இலங்கை அல்லது நியூசிலாந்தை வீழ்த்திவிட்டால் சாதித்துவிடலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில் அது கடினமே.

பாகிஸ்தான்.


சொல்லாமல் அடிக்கிறதுதான் எங்க ஸ்டைல். இந்த முறை இந்தியாவிற்கு சொல்லிட்டம் அடிப்பமா?

டுவன்டி டுவண்டி உலக கிண்ணத்தில் கணக்கெடுக்கப்படாமல் உலக சாம்பியன் ஆகி புருவங்களை உயர்த்தியவர்கள். இப்போதும் அதே எதிர்பார்ப்பு இல்லாமல் போகின்றார்கள். போப் வூல்மருக்கு சமர்ப்பணமாக கிண்ணத்தை வெல்வோம், காலகாலமாக முக்கியமான போட்டிகளில் இந்தியாவை வெல்வதில்லை என்ற வடுவை துடைப்போம் என்னும் சூளுரையோடு களம் கண்டிருக்கின்றார்கள். எப்போதும் அடிப்பார் எப்போது சுருள்வார் என தெரியாத அபிரிடி இம்முறையும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றார். முழுதாக பார்த்தால் பலமான அணி ஆனால் வெளித்தோற்றத்துக்கு பலவீனமான அணி. மேற்கிந்திய தீவை இலகுவாக வென்று இந்திய அல்லது அவுஸ்திரேலியாவை தோற்கடித்தால் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் அடித்து நொறுக்கும் பலத்தோடு இருக்கும் இந்திய, அவுஸ்திரேலிய அணிகளிடம் இது பலிக்குமா என்பதே கேள்வி.

நியூசிலாந்து.


கறுப்பு உடையை போட்டு போட்டு கறுப்பு சரித்திரமே எங்களுக்கு பின்னால்.

இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் படு தோல்வியோடு வந்தவர்கள் இந்தியாவை பயிற்சியில் பழிக்கு பழி தீர்த்தனர். தரமான வீரர்கள் இருந்தும் சொதப்பும் அணியாக இருக்கின்றது. அதிஷ்டம் இன்மை முக்கியமான நேரங்களில் சொதப்பல் மட்டுமன்றி இப்போது மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது பலவீனமான அணியாக இருக்கின்றது. ஆனால் முக்கியமான தொடர்களில் வீறு கொண்டெழுவது இவர்களின் பலம். இலங்கையை பழி தீர்த்துவிட்டால் அரை இறுதி கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

இலங்கை.


எங்கள் ராசி நல்ல ராசி. அதுவும் இப்போ எல்லா விடயத்திலும் காற்று எங்க பக்கம்.

வழக்கம் போலவே வென்றாலும் வெல்வார்கள் என்னும் எதிர்பார்ப்போடும் எதிர்பார்ப்பு இல்லாமலும் களம் இறங்கி இருப்பதே பலமும் பலவீனமும். ஜெயசூரியாவின் தொடர்ச்சியற்ற துடுப்பாட்ட பார்ம், டில்சானின் வீழ்ச்சி, ஜெயவர்தேனவின் வீழ்சியை தொடர்ந்து வந்த எழுச்சி மற்றும் நடுவரிசை துடுப்பட்டவீரர்களின் பலம் முரளி உட்பட வேகப்பந்து வீச்சாளர்களின் சிறந்த பந்து வீச்சு என சகலதும் நிறைந்திருந்தாலும் இவர்களை விட மற்ற மூன்று அணிகளும் பலமாக தோன்றுகின்றன. ஆனால் இம்முறையும் அதிசயிக்க வைத்து கிண்ணத்துடன் வரும் வாய்ப்பு இருக்கின்றது. இந்தியாவிடம் பொல்லுக்கொடுத்து அடிவாங்கி வந்திருக்கும் இலங்கை சூடு கண்டு எழுந்தால் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம் தான்.

இந்தியா.


வெற்றி நிச்சயம்....ஆனால் எப்போது தோற்போம் என எங்களுக்கே தெரியாது...

ஷேவாக் என்னும் அதிரடி நாயகன் இல்லாதது பெரிய குறை. பந்து வீச்சாளர்களும் சோடை போய் இருந்தாலும் துடுப்பாட்டம் தான் மிகப்பெரிய பலம். ஆரம்ப துடுப்பாட்டத்த்டை சச்சினும் கம்பீரும் கவனித்தால் திராவிட்,ரெய்னா,யுவராஜ்,டோனி,யுஸுப் என தொடர்ந்து கொண்டு செல்ல துடுப்பாட்ட பிசாசுகள் நிறைய இருக்கின்றன. பந்து வீச்சுதான் கேள்வியாக இருந்தாலும் திடீரென பலமான பந்துவீச்சாக மாறி எதிரியை கலக்கும் திறமை கொண்டவர்கள் இருக்கின்றார்கள். களத்தடுப்பு வழமையை விட சிறப்பாக இருப்பது. அத்தனை அணிகளையும் அசைத்து பார்த்த வீரமும் இருப்பதால் இம்முறை கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கின்றது. அரை இறுதிக்கு முன்னேறுவது நிச்சயமான நிலையில் இறுதியும் இன்னமும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டி உள்ளது அவுஸ்திரேலியாவின் திடீர் அசுர பலத்தினால்.

தென் ஆபிரிக்கா.


கனவெல்லாம் பலிக்குமா..?

சொந்த நாட்டில் போட்டிகள், சகலதுறை வீர்கள் தலைமைத்துவம் இருந்தும் இன்னும் பெரிய கிண்ணங்கள் எடுக்க அணி என்னும் பெயர் இப்போது இருக்கும் அணி. வழக்கம் போல இம்முறை அந்த துயரை துடைப்பார்கள் என்னும் நம்பிக்கையும் சாத்தியமும் உள்ள அணி. கலிஸ்,கிப்ஸ்,ஸ்மித் என அனுபவமும் திறமையும் கைகோர்க்க பந்து வீச்சிலும் வேதாளங்கள் கை கொடுத்தல் வெகுநாள் கனவு வெகு தொலைவில் இல்லை.

அவுஸ்திரேலியா.


நம்ம நடை வெற்றி நடை...

நேற்றுவரை சாத்தியமே இல்லை. இம்முறை எட்டில் ஒன்று என இருந்தவர்கள் எழுந்தார்கள் அடித்தார்கள் நாங்களும் இருக்கின்றோம் என பறை சாற்றி இருக்கின்றார்கள். இங்கிலாந்திடம் பலித்த இவர்களின் பாட்சா இந்தியாவிடமும் தென் ஆபிரிக்கவிடமும் பலிக்குமா என்பது சொல்லமுடியாது. இருப்பினும் தென் ஆபிரிக்காவின் துரதிஷ்டம் இந்தியாவின் வழக்கமான அவுஸ்திரேலியா பய மேனியா வந்து விட்டல் இம்முறையும் பொண்டிங்க் கையில் பூமாலை மன்னிக்கவும் கிண்ணம். ஆனால் பலமும் பலவீனமும் கலந்தே இருப்பதே இவர்களின் பலம். பலவீனம் இருப்பினும் பலமாக காட்டிக்கொண்டு ஒன்றாகி விளையாடும் அணி இம்முறை சாதித்தாலும் ஆச்சரியமில்லை.

போட்டிகளின் அடிப்படையில் என் கணிப்பு கிண்ணம் யாருக்கென.

தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை => தென் ஆபிரிக்கா.
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்திய தீவுகள் => பாகிஸ்தான்.
தென் ஆபிரிக்க எதிர் நியூசிலாந்து =>தென் ஆபிரிக்கா
இங்கிலாந்து எதிர் இலங்கை => இலங்கை
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் => அவுஸ்திரேலியா
இந்தியா எதிர் பாகிஸ்தான் => இந்தியா
நியூசிலாந்து எதிர் இலங்கை => இலங்கை
தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து => தென் ஆபிரிக்கா
அவுஸ்திரேலியா எதிர் இந்தியா => இந்தியா/அவுஸ்திரேலியா ( ரொம்ப கஷ்டமுண்ணா நம்பி சொன்னா வைச்சிடுவாங்க நம்மாளுங்க ஆப்பு.)
இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து => நியூசிலாந்து.
அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் => அவுஸ்திரேலியா
இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் => இந்தியா

அரை இறுதி.
இந்தியா/அவுஸ்திரேலியா எதிர் இலங்கை => இந்தியா/ அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா/இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா => இந்தியா/அவுஸ்திரேலியா/தென் ஆபிரிக்கா.(ரொம்ப குழப்பிறாங்க அண்ணே)

மொத்தத்தில் இறுதியில் மோதப்போவது.
இந்தியா எதிர் அவுஸ்திரேலியா => ??????
இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா => ?????
அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா => ?????

பொறுத்திருந்து பார்ப்போம் தோனியா? பொன்டிங்க? சிமித்தா?
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox