உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label முரளி. Show all posts
Showing posts with label முரளி. Show all posts

Saturday, April 2, 2011

உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்



உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. முரளி நாளை விளையாடுவார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கும் நிலையில் அவர் எத்தனை ஓவர்கள் வீசுவார் என்பது கேள்வியே....

இந்தியாவில் நடப்பது இந்தியாக்கு பலம் எனிலும் இலங்கை இந்திய இதயங்களை ஓடித்தாலும் ஆச்சரியமில்லை. சச்சின்-முரளி ஜெயிக்கப்போவது யார்?

இந்தியாவில் பிறந்து லண்டனில் வாழும் ஒரு நபரை இன்று என்னால் சந்திக்க முடிந்தது. பிறப்பால் இந்தியாவின் சிங் (உடனே நம்ம மன்மோகன் சிங் என நினைக்கப்படாது) அவரிடம் இறுதிப்போட்டி பற்றி விசாரித்த போது இரண்டில் யார் வென்றாலும் சரியாம் இருந்தாலும் இலங்கை வென்றால் தனக்கு மிகப்பெரிய சந்தோசம் என்றும் சொன்னார். நான் ஏன் என கேட்டேன் I like to see Sri Lankan as a Champion என்றார். இதுதான் சிங்கின் பாசமோ? எல்லா சிங்கும் நல்லா சிங்கி அடிக்கிரான்கப்பா.

இதை நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது. ஆனால் விளையாட்டில் இந்த நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும் என்ற கொள்கையில் பண்ண முடியாது. யாரை பிடிக்கிறதோ அவர்களை சப்போர்ட் பண்ணுவதில் என்ன தவறு. சூ மேக்கரை பிடித்தால் அவர் இலங்கையில் பிறக்க கூடாதோ. அல்லது சானியாவின் ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர் ரசிக்கக்கூடாதோ. விளையாட்டில் விளையாடாமல் ரசிப்போம். நாளை நிச்சயம் இரண்டு அணிகளும் ரசனைக்கு விருந்தளிக்கும். ஆனால் என்னங்க அண்ணனும் தம்பியும் அடிக்கடி மோதியதை பார்த்து சலித்துப்போச்சுதுங்க.
Share:

Friday, July 23, 2010

முரளி - போட்டோ கொமன்ஸ்








































இந்த பதிவிட படங்களை தந்துதவிய பவன்,கான்கொன்,மற்றும் யோ வாய்ஸ் யோகா அண்ணாவிற்கு என் நன்றிகள்.

Share:

Thursday, July 22, 2010

முரளியை வாழ்த்தும் உலக நாயகனின் பாடல்!



முத்தையா முரளிதரன், இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் வாயெல்லாம் முணுமுணுக்கும் உன்னிப்பாக பார்க்கும் ஒரு பெயர். பல தடைகள் தாண்டி வெற்றிப்படிகளில் ஏறி இன்று சிகரம் தொட இருக்கும் நிஜ ஹீரோ முரளிக்கு, திரை உலக உலக நாயகன் ஹீரோவுக்காய் எழுதிய பாடலை கொஞ்சம் மாற்றி போட்டு வாழ்த்து ஒன்றை படிக்கின்றேன் ஒரு சாதாரண ரசிகனாய்.

உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு?
உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இலங்கை நாடு.
உலக நாயகனே எங்கள் தங்க தமிழனே
கண்டங்கள் கண்டு வியக்கும் இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்.

நீ ஒரு தீரன் நிரந்தர இளைஞன் வேட்கை மிகுந்த விக்கெட் டேக்கர்
ஒரு பந்து கொண்டு உலகத்தில் இன்று ஆயிரம் விக்கெட் கடந்தாய்
உன் வாழ்வில் எண்ணூறு டேஸ்ட் விக்கெட்டும் காண்பாய்.
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சாதனை முயற்சி சோர்ந்திடவில்லை.
இருபது முதல் நீ ஆடிவந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை
உன் சாதனைகளை முறியடிக்க இனி எவரும் இல்லை.

உலகுக்கு நீ ஒரு பந்து வீச்சாளன் வீரர்கள் எதிரில் நூறு மடங்கு பலவான்
எதிர்ப்பினை ஜெயித்து மனங்களை வென்று பாரிய சாதனை படைத்தாய்.
உன் திறனை எதிரியும் புரிந்து கொண்டார்.
உன் விரல்களுக்குள்ளே பந்து மாயாஜாலம் செய்யும்
உன் ஒருவனுக்குள்ளே சாதனை அடங்கும்
தமிழனாய் பிறந்து இலங்கைக்காய் ஆடி இன மத மொழி கடந்தாய்
இப்போது சரித்திரம் ஆகிவிட்டாய்


Share:

Saturday, April 17, 2010

முரளிதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



இலங்கை மண்ணின் இதய பூமியான கண்டியில் 1972ஆம் ஆண்டு அவதரித்தவர் தான் முத்தையா முரளிதரன். நான் அவதாரம் என சொல்ல காரணம் கிரிக்கெட் என்னும் வரலாற்றில் சாதித்த ஒருவரை அதற்காக அவதரித்த அவதாரம் என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கின்றேன். சின்னசாமி முத்தையா என்ற பிஸ்கட் வாணிபம் செய்யும் ஒரு தொழில் அதிபரின் மகனாக பிறந்த முரளியின் குடும்பத்தில் அவருடன் சேர்த்து நால்வரும் ஆண் பிள்ளைகள். தன் ஒன்பதாவது வயதிலேயே சென் அன்டனீஸ் கல்லூரியிலே படிக்க வைக்கப்பட்டார். கூட்டுக்குடும்பமாக இருந்த வீட்டில் பெண்கள் தான் அதிகம் என்பதால் தங்கள் சிறுவயது விளையாட்டே பெண்கள் சார்ந்ததாக இருந்தது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதுமட்டுமன்றி தன் பள்ளிக் காலத்தில் பெருமபாலான காலப்பகுதியில் ஹாஸ்டலிலேயே தன்கிப்படித்திருக்கின்றார் இன்று சாதித்திருக்கும் இந்த வீரத்தமிழன்.

தன் பள்ளி ஆரம்பகாலத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக ஆரம்பித்த முரளி தன் பாடசாலை பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைப்படி தன் பதின்னான்காவது வயதில் சுழல் பந்து வீச்சாளராக மாற்றப்பட்டார்.(அப்போது யாருக்குத் தெரியும் இவர் தான் பின்னாளில் கலக்கப்போகும் சுழல் மன்னன் என்று.) அடுத்த நான்கு வருடங்களில் தன் பாடசாலை அணிக்காக களமிறங்கிய முரளி மிடில் ஆர்டரில் சகலதுறை வீரராக களம் கண்டார். பாடசாலைக் காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றிய முரளி 1990 மற்றும் 1991 ஆண்டுகளில்
இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரராக" தெரிவானார்.

பாடசாலைக் காலத்தை முடித்துவிட்டு தமிழ் யூனியன் கழகத்துடன் இணைந்த முரளி 1992ஆம் ஆண்டி இலங்கை ஏ அணிக்காக தெரிவானார். அந்த தொடரில் முரளி பெரிதாக பிரகாசிக்கவில்லை. அதன் பின் சர்வதேச அணியில் இணைந்து முரளி படைத்த சாதனைகளும் சவால்களும் இன்று சரித்திரமாகி இருக்கின்றது. தமிழ் நாட்டு பெண்ணை மணம் முடித்து அவர்களின் மருமகனாகி இன்று நரேன் என்னும் பையனுக்குத் தந்தையாகவும் வாழ்ந்து காட்டுகின்றார். ஒருநாள் டெஸ்ட் என முரளியின் சாதனைகள் அளப்பரியன ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலைகளும் ஏராளம். இவை எல்லாம் சொல்ல எனக்கு பத்துப்பதிவிர்க்கு மேல் சென்றுவிடும். முரளி-வார்னே டிராபி என்று ஒன்றை ஆரம்பித்து இவரை கௌரவித்திருக்கின்றன இரண்டு கிரிக்கெட் சபைகளும். ஆனால் இந்த டிராபி முரளிதரனின் பெயரையே மாற்றியதும் சுவாரஷ்யமானது. MURALITHARAN என்று எழுதிவரப்பட்ட பெயரை MURALIDARAN இப்படி மாற்றிய பெருமையும் உண்டு.

இதே அவுஸ்திரேலியர்களால் பலமுறை பந்தை எறிகின்றார் என்று அவமானப்படுத்தப்பட்டும் அதை எல்லாம் தாண்டி தமிழன் ஒருவனின் பெயரை கிரிக்கெட்டிலும் படைத்த பெருமைக்காரன். உலக அரங்கில் பல சாதனைகளால் எதிரியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முரளி இன்னும் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கு காரணம் அவர் தமிழன் என்பதே. எத்தனையோ சாதனை படைத்த முரளியால் தலைமை தாங்கமுடியாதென எண்ணி விட்டார்களோ என்னவோ இலங்கை அணியின் தலைமை பதவிக்கு ஒருபோதும் இவர் தெரிவு செய்யப்படவில்லை. அதிகபட்சமாக உதவித் தலைவராக மட்டுமே கடமையாற்றினாலும் எனக்கென்னவோ பல தடவை அணியில் முரளிதான் தலைவராக கடமையாற்றினார் என்றே எண்ணத்தோன்றுகின்றது. சனத்,மாவன்,மஹேல,சங்கா போன்றவர்கள் அணித்தலைவராக இருந்த காலத்தில் பல தடவை முரளியின் ஆலோசனை பெறப்பட்டது களத்திலே நாங்கள் கண்ட உண்மை. உண்மையில் முரளிக்குள் தலைத்துவப்பண்பு இல்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஒருமுறையேனும் வாய்ப்பைக் கொடுக்காமல் இல்லை என்று சொல்வது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதனால் தான் என்னவோ சில காலங்களின் பின் தனக்கு தலைமைப் பதவியே வேண்டாம் என முரளியே சொல்லிவிட்டார்.

தன் நாடே கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் பண முதலைகளின் ஆட்டம் என்று சொல்லப்படும் ஐ.பி.எல்லில் மட்டும் வாய்ப்புக் கிடைத்துவிடுமா? தோணி இல்லாத நேரம் கூட ரைனா அணித்தலைவராகப்பட்டாரே தவிர முரளியின் பெயர் அடிபடவில்லை. இதை விட கொடுமை அஜந்தா மென்டிஸ் என்னும் மாயையில் கட்டுண்ட இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக முரளியை ஒதுக்கியது. ஓரம் கட்டிவிடுவார்களோ என்று பயந்த நேரம் அந்த மாயை விலகிப்போக மீண்டும் முரளியிடம் தஞ்சம். இதையே தான் இப்போது தோனியும் செய்கின்றார். அண்மைக்காலமாக முரளியின் பந்து வீச்சில் அதிக ஓட்டங்கள் குவிக்கப்படுகின்றது என்பது உண்மை. அனால் விக்கெட் வேட்கை குறைந்ததேன்றில்லை. அப்படி இருக்கையில் சென்னை போன்ற ஆடுகளங்களில் முரளியை ஒதுக்கியது முட்டாள்தனம். காரணம் உலகில் இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் மற்ற சுழல்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியும் என்றால் முரளியால் விளையாட முடியாதா என்ன?

கிரிக்கெட்டில் இரண்டு பிரதான பகுதியிலும் ஆசிய வீர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்னும் போது பெருமையாக உள்ளது. துடுப்பாட்டம் என்றால் சச்சின். பந்துவீச்சென்றால் என்னை பொறுத்தவரை முரளிதான். அந்த அற்புதமான கிரிக்கெட் வீரனுக்கு ஒரு தமிழனாக பெருமைப்பட்ட என் வாழ்த்துக்கள். நீங்களும் பின்னூட்டத்தில் உங்கள் வாழ்த்தை சொல்லுங்கள்.....
Share:

Saturday, March 20, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ்- சாப்பாட்டு ராமர்களாக.


சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் உள்ள கப்புசினோ காஃபி ஷாப்பில் தான் உணவு தயார் செய்யப்பட உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சர்வதேச வீரர்கள் ஒவ்வொரும் தங்கள் விரும்பமான உணவுகளை தெரிவித்திருப்பதால், கிளப் சாண்ட்விச் முதல் வீச்சு புரோட்டா வரை உலகளாவிய உணவு வகைகள் தயாரிக்கப்பட உள்ளன.சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களின் பிடித்தமான ஐட்டங்கள் குறித்து 'செப்' பர்வீன் ஆனந்திடம் கூறியுள்ளனர்.

தோனிக்கு பட்டர் சற்று தூக்கலாக பட்டர் சிக்கன், மாத்யூ ஹெய்டனுக்கு கல் தோசையுடன் பிரான் கறி விருப்பமாம்.முரளிதரனுக்கு சாபா புலுசு எனப்படும் மீன் உணவு, சுரேஷ் ரெய்னாவுக்கு சிக்கன் சாண்ட்விச்சும் தேவையாம்.அல்பி மார்க்கெல்லுக்கு கிளம் சாண்ட்விச் மற்றும் பனானா மில்க்ஷேக், பாலாஜிக்கு பெப்பர் சிக்கன் கிரேவியுடன் வீச்சு புரோட்டா சாப்பிட ஆசை.

ஆனால் பார்திவ் பட்டேலுக்கு வேக வைத்த சாதத்துடன் பருப்பு மற்றும் ஜீரா ஆலு என்ற சைவ உணவு தான் விருப்பம் என தெரிவித்துள்ளார்.மேலும் ஜொகிந்தர் ஷர்மாவுக்கு கொண்டை கடலையுடன் பாதுராவும், சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கு மட்டன் பிரியாணியும் தயாரித்து தர பார்க் ஷெரட்டன் தயாராகி வருகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்.

Share:

Friday, July 17, 2009

மீண்டும் வாஸ்.

பதிவுலக நண்பர்களுக்கு!

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

என்னுடைய கடந்த பதிவுகளில் ஒன்றில் சமிந்த வாஸ் என்னும் ஒரு அற்புதமான வீரரை இலங்கை தெரிவாளர்கள் அண்மைக்காலங்களில் புறக்கணித்து வருகின்றனர் என இட்டிருந்தேன். இது நம்ம தெரிவாளர்களின் காதுக்கு கேட்டு விட்டதோ என்னவோ?(அவர்களுக்கு தமிழ் தெரியுமா என கேட்கக்கூடாது) இப்போது வாசினை மீண்டும் அழைத்திருக்கின்றார்கள்.

பாகிஸ்தான் அணியுடன் மிக அபாரமான ஆட்டத்தால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வீறுகொண்டு எழுந்திருக்கும். இலங்கை அணியில் பந்து வீச்சு ஜாம்பவான்கள் முரளி மற்றும் வாஸ் இல்லாமலே வெற்றி தேடி வந்தது. இப்போது பாகிஸ்தானுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த இரண்டு பெரும் விளையாடும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. முரளியின் இடம் நிரந்தரமாகி இருக்கும் நிலையில் வாஸ் இப்போது பதினாறாவது வீரராக சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றார்.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கும் இலங்கை அணி இந்த இருவர் கூட்டணி நீண்ட காலத்துக்கு பிறகு மிரட்டினால் பாகிஸ்தானை இலகுவில் சுருட்டி சரித்திர வெற்றியை பதிவு செய்யும். வாசுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. பல இளைய வீரர்கள் சாதித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் வாஸ் தனக்கு கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அவருக்கு இன்னுமொரு முறை சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடும்.

அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் சோபிப்பதோடு தொடர்ந்து வரும் போட்டிகளில் அசத்தினாலே தொடர்ந்து விளையாடும் விருப்பம் இருந்தால் வாஸ் தன்னை நிலை நிறுத்த முடியும். அப்படி இல்லாவிட்டால் இந்த போட்டியில் அபாரமாக செயற்பட்டு அணியை வெற்றிபெற வைப்பதோடு தன் கிரிக்கெட் பயணத்தையும் வெற்றியோடு நிறைவு செய்வதே வாஸ் என்னும் சாதனை வீரனுக்கு அழகு.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox