உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label IPL. Show all posts
Showing posts with label IPL. Show all posts

Friday, April 2, 2010

யுவராஜ் என்னும் பருப்பு.-ஐ.பி.எல்.



முதலில் நிகழ்வுகளில் வெளியான இந்த பதிவை படித்து விடுங்கள் காரணம் இந்த பதிவுதான் நான் எழுதி இருக்கும் இந்தப்பதிவிற்கு மூல காரணம்....

http://nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=3159:2010-04-02-01-40-34&catid=5:cricket&Itemid=13


20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து அதிரடி சாதனை நிகழ்த்தியவர் இந்திய அணியின் யுவராஜ் சிங். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள அவரது ஆட்டம் மிகவும் மோசமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பஞ்சாப் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு எதிரான அந்தப் போட்டியிலும் பஞ்சாப் அணி Nப்பர் ஓவர் அடிப்படையில்தான் வெற்றியை பெற முடிந்தது.

பஞ்சாப் அணியின் ஆட்டம்தான் இந்தளவு மோசமாக இருக்கிறது என்றால் அந்த அணியில் இடம்பெற்றுள்ள யுவராஜ் சிங்கின் ஆட்டம் அதைவிட மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்துள்ள 7 போட்டிகளிலும் சேர்த்து யுவராஜ் எடுத்துள்ள மொத்த ரன்களின் எண்ணிக்கை 101 மட்டுமே. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக அவர் 43 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ் சிங்கின் இந்த மோசமான ஆட்டத்திற்கு அவருக்கும் அணியின் கேப்டன் சங்ககாராவுக்கும் இடையே உள்ள உரசல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் பஞ்சாப் அணியிலிருந்து விலக யுவராஜ் விரும்பியதும், அதை அணி நிர்வாகம் ஏற்க மறுத்ததும் தான் யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பாகவே அணி நிர்வாகம் யுவராஜ் சிங்கிக்கு பதிலாக சங்ககாராவை கேப்டனாக நியமித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் தாம் அணியிலிருந்து விலககி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.

பஞ்சாப் அணியிலிருந்து விலகி யுவராஜ் சிங் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போதே அணி நர்வாகம் பிசிசிஐ யிடம் யுவராஜ் விலகுவதாக கூறியதையும் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டதையும் தெரிவித்ததோடு, இதன் காரணமாக யுவராஜ் வேண்டுமென்றே மோசமாக ஆடினால் என்ன செய்வது என்றும் சந்தேகம் எழுப்பியது.

அந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் தற்போது யுவராஜ் சிங் மோசமாக ஆடி வருகிறார்.

சங்ககாராவுடன் மோதல் என்றும் அதனால் தான் சரியாவி விளையாடவில்லை என்று கூறப்படுவதை யுவராஜ் மறுத்துள்ளார். இது போன்று எழுதுவது தவறானது என்றும் கூறினார். யுவராஜ் சிங்கிற்கு ஆதரவாகவே சங்ககாராவும் கருத்து தெரிவித்துள்ளார்

இனி என் பதிவு.....

இந்த செய்தி மட்டும் அல்ல இன்னும் சில செய்திகளை பார்க்கும் போது இம்முறை நம் ப்ரீத்தி ஜிந்தாவின் கிங்க்ஸ் அணி தோல்விக்கு முழு காரணம் முதல் காரணம் யுவராஜ் தான் என்பது போல உள்ளது. அப்படி என்றால் கிரிக்கெட் ஒருவரின் ஆட்டம் என்ற கருத்துக்கு வந்துவிட்டதா? முன்பு சச்சின் ஆடாவிட்டால் இந்தியா தோல்வி என கடிந்து கொண்டது தான் நினைவுக்கு வருகின்றது. உலகின் நட்சத்திர வீரர்கள் பலர் இருக்கும் அணிதான் இது. அப்படி இருக்கையில் யுவராஜ் வேண்டுமென்றே ஆடவில்லை என்பதால் தோற்கின்றார்கள் என்பது நகைப்பாக இருக்கின்றது. யுவராஜ் நல்ல வீரர் அதிலும் T20இல் சிறந்த வீரர். அதற்காக இப்படி சொன்னால் அந்த அணியில்விளையாடும் மற்ற உலக வீரர்கள் என்ன வெறும் பொம்மைகளா?


இவ்வளவு நாளும் இந்த அணி யுவராஜின் கையில் தான் இருந்ததா? யுவராஜ் வென்று விட்டாரா? இதேபோல தோணி அதிச்டக்கார தலைவர் என்றனர் இந்திய அணிக்காக ஆடும் போது அப்படி என்றால் ஐ.பி.எல்லிலும் சாதிக்க வேண்டுமே? இவ்வளவு நாளும் ஒன்றும் வேகவில்லையே? அப்படி பார்க்கும் போது இர்பான் பதான், ஸ்ரீசாந்த் போன்ற உள்நாட்டு நட்சத்திரங்களும் Brett Lee, James Hopes, Shaun Marsh, Simon Katich, Kumar Sangakkara (Captain), Mahela Jayawardene, Ravi Bopara, Jerome Everton Taylor போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இருக்கையில் யுவராஜ் தான் பெரிய பருப்பு என சொல்லிக்கொண்டு சொதப்புவது சரியா? அவர் சொதப்பினாலும் மிகுதி பத்து பேரும் என்ன பருப்பு எண்ணிக்கொண்டா இருக்கின்றார்கள். இது என் நியாயமான கேள்வியே.

Share:

Wednesday, March 24, 2010

உலககிண்ணப் போட்டிகளில் ஆடமாடேன்- சச்சின்.


இந்த வருடத்தில் பங்குபற்றிய டெஸ்ட் போட்டிகளில் தொடர் சதங்கள் போதாக்குறைக்கு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கில்லியும் சில பல்லிகளும் எட்டிப்பார்த்தும் எட்டாக்கனியாகிப்போன 200 அதுவும் குறைந்தளவு பந்துகளில். போதாக்குறைக்கு இப்போது ஐ.பி.எல்லில் முதல் போட்டியில் 11 பந்துகளில் மூன்று 4 ஓட்டங்கள் அடங்கலாக 17 ஓட்டங்கள் அடுத்தபோட்டியில் மரண அடி வெறும் 32 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்கள்(கண்குளிர கண்டேன் இந்த தாண்டவத்தை.) அடுத்த போட்டியில் கொஞ்சம் மந்தமாக ஆடினாலும் இருபத்தைந்து ஓட்டங்கள் இறுதியாக கங்குலியின் அணிக்கெதிராக நாற்பத்தெட்டு பந்துகளில் ஆட்டமிழக்காமல் எழுபத்தொரு ஓட்டங்கள். இந்த தொடர் சிறப்பான ஆட்டத்துக்கு சொந்தக்காரர் தான் இப்போது உலகக்கிண்ண போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இளையவர்களின் ஆட்டம் என சொல்லப்பட்ட அதிரடி T20இல் சூறாவளியாக ஆடிக்கொண்டிருக்கின்றார். அப்படி இருக்கையில் பலரின் பேச்சும் வரும் உலகக்கிண்ண போட்டிகளில் ஆடி மீண்டும் ஒரு தடவை இந்தியாவை வெல்லவைக்க வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் இதற்க்கு சச்சின் மறுத்து விட்டார். அறிவிக்கப்பட்ட முப்பது பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் சச்சின் இடம்பெறவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டிலேயே சச்சின் T20 போட்டிகளில் இருந்து விலகியதே இதற்கு காரணம். இருப்பினும் அசத்தலாட்டம் ஆடும் இவரை நிச்சயம் சேர்க்கவேண்டுமென ஒலிக்கும் பலரின் குரலுக்கு செவிசாய்த்து அணியில் சேர்த்துக்கொள்ளவேண்டுமென பலரின் கோரிக்கையாக இருந்தது. இதற்கு வழி திறந்து விடுவது போல உத்தேச அணியில் இடம்பெறாவிட்டாலும் இறுதியாக அறிவிக்கும் பதினைந்து பேர் கொண்ட அணியில் புதிதாக வீரர்களை இணைத்துக்கொள்ளலாம் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சச்சின் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர் பார்க்கப்பட நிலையில் தான் சச்சின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்வதேச T20 போட்டிகளில் பங்குபற்றுவதில்லை என தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என சச்சின் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்கட்டும். சச்சின் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்பது வெளிப்படை உண்மை எழுதமுடியாத விதியாகவே பேசப்பட்டு வருகின்றது. நம் கிரிக்கெட் தொடர் பதிவில் கூட சச்சினை வீரராக பிடித்தவர்கள் கூட ஒரு தலைவராக பிடிக்கவில்லை என்றனர். அதற்கு சர்வதேசப்போட்டிகளில் இந்தியாவை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய போது கிடைத்த பெறு பேறுகளே சான்று. ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரகாவும் ஆட்டத்திலும் கலக்குகின்றார். கடந்தமுறை கூட காயத்தில் இருந்து தலைவராக இவர் வந்த பின் சனத்தும் இவரும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் பெற்ற வெற்றிகளும் தெரியும். நட்சத்திர வீரர்கள் சர்வதேச வீரர்கள் திறமையான வீரர்கள் இருக்கும் இந்த மும்பை அணியை வெற்றிக்கொடி நாட்ட வைக்கும் சிறந்த அணித்தலைவராக பிரகாசிக்கும் சச்சினால் ஏன் அன்று ஜெயிக்கமுடியாமல் போனது. அன்று இருந்த அணி திறமையில் சளைத்ததல்ல வேண்டுமென்றே இப்படி ஆடினார்களா அல்லது என்னதான் காரணம் புரியாத புதிராகவே உள்ளது. என்னைக் கேட்டால் சச்சினும் இப்போது சிறந்த தலைவர்தான்.
Share:

Friday, March 12, 2010

IPL திருவிழா காண இங்கே வாருங்கள்.


Share:

Sunday, May 24, 2009

Kolkatta Knight Riders அணியை வாங்க நடிகர் அஜித் முடிவு.

கடந்த நாட்களில் எத்தனையோ சம்பவங்கள். பதிவு எழுதலாம் என்றால் எல்லோரும் ஒரே விடயத்தை எழுதும் போது எனக்கு அதை தவிர்த்து வேறு விடயத்தை எழுத மனமும் இல்லை மானமில்லாதவனுமில்லை. அத்துடன் அதை பற்றி எழுத வலிமையும் இல்லை. அதனால் சில நாட்கள் பதிவை தவிர்த்து வந்தேன். இதோ மீண்டும் வந்துவிட்டேன்.இருப்பினும் இந்த காலத்திலும் என்னிடம் பதிவை எதிர்பார்த்து வந்து போன பிரியமானவர்களுக்கு நன்றிகள்.


திருவிழாவாக நடைபெற்றும் வரும் ஐ.பி.எல் தொடரும் இன்றைய Bangalorre Royal Challengers மற்றும் டெக்கான் சார்கேர்ஸ் அணிகளுடனான போட்டியோடு ஒரு முடிவிற்கு வரபோகின்றது. சற்றும் எதிர்பார்க்காமல் கடந்த முறை சொதப்பிய இரண்டு அணிகளும் இம்முறை இறுதியில். அதுவும் நேற்று Chennai Super Kings அணிக்கு பெங்களூர் கொடுத்த அடியை மறக்க முடியாது. (அந்த ரணத்தை மனதுக்குள் போட்டுக்கொண்டு பெங்களூர் அணியை பாராட்டி ஸ்கோர் கொடுத்தது தான் கொடுமை. இருந்தாலும் என்ன எத்தனை வலிகளை தாங்கிவிட்டோம் இது எம்மாத்திரம்.)
இம்முறை தொடரில் கடைசி இடம் Kolkatta Knight Riders அணிக்கே. அதன் உரிமையாளர் ஷாருக்கானும் அணியை விற்க முடிவெடுத்துவிட்டார். அதன் பின் அணி இரண்டு வெற்றிகளை பெற்று இறுதி நேர ஆறுதலோடு வெளி ஏறி இருக்கின்றது. விளையாடிய சில வீரர்கள் பயிற்றுவிப்பாளர்களை சாடியதோடு கங்குலியை தலைவராக போட்டிருந்தால் இன்னும் நன்றாக விளையாடி இருப்போம் என வெளிப்படையாக தெரிவித்து வருகின்றார்கள்.


இது வரைக்கும் நான் சொன்னவை எல்லாம் உண்மை. இனி சொல்லப்போவது எல்லாம் பொய் ஆனால் அதுதான் விடயமே..............(கவனிக்க இது ஒரு மொக்கை பதிவு.)


அல்டிமேட் ஸ்டார் அஜித், தமிழ் சினிமாவில் பார்க்காத தோல்விகளும் இல்லை ஏறாத வெற்றிப் பாதைகளும் இல்லை. தொடர்ந்து தோல்விப் படங்களே கொடுப்பார் திடீரென மிகப் பெரிய வெற்றிப் படம் கொடுத்து எல்லோரையும் பேச வைப்பார். அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் இப்போதைய Kolkatta Knight Riders அணி. அவர்களுக்கும் அஜித் போல ஒரு திடீர் வெற்றி தேவைப்படுகின்றது.


இதை எல்லாம் விட அஜித் ஷாருக்கானின் சில ரீமேக் படங்களில் நடித்திருக்கும் போது ஏன் அணியையும் ரீமேக் செய்யமுடியாது. இதை அஜித் Style இல சொல்லிப் பாருங்க "அது ஒரு கறுப்பு சரித்திரம். அதனால்தான் அவங்க கறுப்பு உடுப்பு போட்டிருக்காங்க.Kolkatta Knight Riders என்று ஒரு அணி இருந்தது யாருக்காவது தெரியுமா? நான் தனி ஆளில்லைம்மா எனக்கு பின்னால ஒரு தோற்றுப்போன கூட்டமே இருக்கு. ஆனால் நான் தோற்கமாட்டேன். என்னையும் கங்குலியையும் பார்த்தா ஒரே மாதிரி இருக்கு என்னைப் போல அவரும் தோல்விகளையும் சர்ச்சைகளையும் பார்த்தவர். அதேபோல பல வெற்றிகளையும் தந்திருக்கிறோம். அவர் தாதா, நான் தல இரண்டுபேரும் சேர்ந்தா ஜெயிச்சிட்டே இருப்போம். நான் போறது நேர் கோட்டில எனக்கு வாழ்க்கை வட்டமோ சதுரமோ இல்லை. மழை நிக்கிறதுக்குள்ள நான் Kolkatta Knight Riders அணியை வாங்கிறன் அது!"


"ஏன் என்னால ஷாருக் மாதிரி மைதானத்தில flying kiss குடுக்க முடியாதா? அல்லது அவரைப்போல் தோற்க வைக்க முடியாதா. ப்ரீத்தி ஜிந்தா போல நானும் கட்டிப்பிடிப்பன். இப்ப சொல்லுங்க நான் எடுப்பது தப்பா?" அது! (யாரது எக்கோ போடுங்கப்பா இல்லாட்டி விஜய் வந்து silence சொல்லிட்டு அணியை வாங்கிடுவார். இப்பெல்லாம் அவரும் என்னை போல தோல்வி கொடுக்கிராரெல்ல. வரட்டா எல ஏலத்தில சந்திப்பம்!
Share:

Tuesday, March 24, 2009

சற்று முன் கிடைத்த செய்தி: தென் ஆபிரிக்காவில் IPL

இங்கே அங்கே என பூச்சாண்டி காட்டிய IPL விவகாரம் ஒரு வாறாக முடிவுக்கு வந்திருக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி IPL போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடைபெற உள்ளதாக IPL நிர்வாகி லலித் மோடி அறிவித்துள்ளார். இன்று தென் ஆபிரிக்க மற்றும் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த இவர் இப்போது இந்த முடிவை அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்திய நேரப்படி மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கே போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்பாட்டு வேலைகள் மேற்கொள்ள உள்ளதால் ஏப்ரல் 16ம் திகதிக்கு போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். சந்தோசமான விடயம் தானே!
Share:

Monday, March 23, 2009

கிரிக்கெட்டை எதிர்க்கிறாரா சச்சின்?


இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்ச்சத்திரம், உலக கிரிக்கெட்டின் மேதையும் ஆகிய சச்சின், கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். சச்சின் ஏன் இப்படி மாறிவிட்டார்? கிரிக்கெட் மீதான அவர்காதல் செத்துவிட்டதா?

ICLக்கு போட்டியாக தொடங்கப்பட்ட IPL கடந்த வருடம் மிகவும் வெற்றிகரமாக நடந்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆனால் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலேயே சில அசம்பாவிதங்கள் நடந்தேறின. பல வீரர்கள் தொடர்ந்து போட்டியில் ஆடமாட்டோம் என கூறி பின்னர் ஒருவாறாக நல்ல படியாக நடந்து முடிந்தது. அதன் மூலம் கிடைத்ததோ எத்தனை கோடிகள், எத்தனை முத்தான வீரர்கள் நல்ல புரிந்துணர்வு.

இப்போது அந்தக் களியாட்ட திருவிழாவின் இரண்டாம் பருவகாலம். ஆனால் அதை தொடங்க முன்னரே இம்முறை பல பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டன. ஏப்ரல் மாதம் இந்தியாவின் லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியிலேயே IPLதொடரும் களம் காண இருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களால் போட்டியை பிற்போடுமாறு இந்தியாவின் உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டிருந்தார்.ஆனால் லலித் மோடி எந்த மாற்றமும் இன்றி IPL நடந்தே தீரும் என ஒற்றைக்காலில் நின்றார்.
அப்படியாயின் தேர்தல் நடைபெறும் தினங்களிலும் இடங்களிலும் போட்டியை தவிர்க்குமாறு ப.சிதம்பரம் கேட்டும் லலித் மோடி சம்மதிக்கவில்லை. அதன் பின் இந்தப்போட்டிகளை நடத்த வேண்டாம் எங்கள் பேச்சை கேட்காமல் நடத்தினால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல என அரசாங்கம் கைவிரித்ததோடு கடுமையாக சாடியுமிருந்தது. வீரர்களின் பாதுகாப்பே முக்கியமாக கொள்ள வேண்டிய இந்தத் தொடரில் எத்தனையோ முன்னணி வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

என்ன நடந்ததோ தெரியாது அண்மையில் கூடிய IPLபோட்டி ஏற்ப்பாட்டுக்குழு இப்போது ஒரு சவாலான முடிவை எடுத்திருக்கிறது.
SPL அல்லது EPL ஆகுமா IPL?

இந்தியாவில் நடக்கும் IPL போட்டிகள் அதே திகதிகளில் தென் ஆபிரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ நடக்கும் என இப்போது அறிவித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். அப்படி நடை பெற்றால் இதனை IPL என்றா அல்லது தென் ஆபிரிக்காவில் நடை பெற்றால் S(outh Affica)PL அல்லது இங்கிலாந்தில் நடைபெற்றால் E(ngland)PL என்றா அழைக்கமுடியும்?

கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது ஆசிய ரசிகர்களையும் பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த கோடை கால விடுமுறையை சந்தோசமாக கழிக்க திட்டம் தீட்டிய இந்திய மற்றும் அயல் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தலையில் இது மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் சச்சின் இந்தப்போட்டிகள் வெளிநாட்டில் நடத்துவதற்கு தன் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார். "IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டிகளை இந்தியாவில்தான் நடத்த வேண்டும். அதுவே நியாயமானதும்கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் அதுவே பெருமையளிக்கும். என்னைப் போன்ற வீரர்களின் கருத்தும் இதுவே" என்று கூறியுள்ளார். நிச்சயமாக சச்சினின் கருத்தும் ஒரு வகையில் ஏற்கக்கூடியதே.

அதேபோலத்தான் இந்தியாவிற்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ஜாம்பவானும் ICL இல் அங்கம் வகிக்கும் கபில் தேவும் தன் அதிர்ப்தியை தெரிவித்திருக்கின்றார். என்னதான் தன் போட்டி அமைப்பாக இருந்தாலும் அதன் போட்டிகளை வேறு இடத்துக்கொண்டு செல்லாமல் தங்கள் நாட்டிலேயே நடத்தவேண்டும் என்ற கபிலின் எண்ணமும் பாராட்டத்தக்கதே.
இது இவ்வாறு இருக்க இந்திய ரசிகர்களையும் அயல் நாட்டு ரசிகர்களையும் கருத்தி கொண்டு இப்போது அந்த போட்டிகள் இந்திய நேரப்படி மாலை வேளைகளில் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி மாறும் இந்த முடிவுகளால் நான் எழுதும்போது உள்ள இந்த நிலைமை, நீங்கள் வாசிக்கும் பொது எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். .
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox