Sunday, April 26, 2009

தப்பிப் பிழைத்த தமிழன்.

நேற்று நடைபெற்ற இலங்கையின் மேல்மாகண சபை தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டிய ஒருவனாக நான் எங்கள் வானொலியில். நேற்று இரவு 9 மணிக்கு "நானாட நீயாட" நிகழ்ச்சியில் ஆரம்பித்து மறுநாள் காலை(இன்று) 6 மணிவரை தொடர்ச்சியாக தேர்தல் கடமையில் இருந்து தூக்கத்தோடு இருந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரும் என அதிகாலை வரை எதிர்பார்த்து சலித்துப்போய் நன்றாக தூங்கிவிட்டு வந்து எழுதும் பதிவு என்பதால் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் ஏதோ தோன்றியதை எழுதுகின்றேன்.

தமிழன் என்றாலே உயிருக்கு உத்தரவாதமில்லாதவன் என்றாகிவிட்ட நிலையில் இயற்கையும், சில விபத்துக்களும் கூட தமிழனை கொல்லாமல் விட மாட்டேன் என துரத்திக்கொண்டே இருக்கிறது.

உண்மையில் தமிழன் என்ற உணர்வோடு வாழ்ந்து வரும் தமிழக அரசியல்வாதி(சில சமயங்களில் இவரும் அந்த அணியில் சேர்ந்து கொள்கின்றார் எனும் பொது கவலையாகத்தான் இருக்கிறது.) பழ.நெடுமாறன் அவர்கள்(வயதுக்கும் அவர் செய்த நல்ல காரியங்களுக்கும் இந்த மரியாதை கொடுக்கின்றேன்.) நேற்று மாலை வேளை மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு செல்லும் வழியில் காஸ் நிரப்பி வந்த வாகனத்துடன் இவர் பயணம் செய்த கார் மோதி விபத்துக்குள்ளகியுள்ள நிலையில் காரின் முன்பகுதி முற்றாக சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் பயணம் செய்த ஓட்டுனர், பழ. நெடுமாறன் உட்பட யாருக்கும் எந்த வித ஆபத்துமின்றி பத்திரமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழனை துரத்தும் மரணம் இவரின் கார்க்கதவையும் தட்டி விட்டு சென்றிருக்கிறது. மரண பயம் என்றால் என்ன என்பதை பழ.நெடுமாறன் ஐயாவும் அறிந்து கொள்ள ஆண்டவன் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றார். இதை எல்லோரும் புரிந்து நடந்தால் எல்லாமே மாறிடுமே. நடப்பார்களா?
Share:

1 கருத்துரைகள்:

துஷா said...

"காலை(இன்று) 6 மணிவரை தொடர்ச்சியாக தேர்தல் கடமையில் இருந்து தூக்கத்தோடு இருந்தாலும் தேர்தல் முடிவு வரும் வரும் என அதிகாலை"

நல்ல தன் நித்திரை முழித்திங்க என்று எங்களுக்கு தெரியுமே அதன் அருண் அடிக்கடி breaking news-i facebookil வழங்கினர்ர் lolz...

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox