Saturday, June 6, 2009

யார்கையில் T20 உலகக்கிண்ணம்?- ஒரு அலசல்.

கடந்த T20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் Johinder Sharma வின் பந்து வீச்சில் ஸ்ரீசாந்த் பிடி எடுத்து தோனியின் கையில் உலகக்கிண்ணத்தை கொடுத்த காட்சியே இன்னும் கண்ணை விட்டு அகலாத நிலையில் அடுத்த இருபதுக்கு இருபது உலகக்கின்னமும் ஆரம்பமாகிவிட்டது.

ஆரம்ப நிகழ்வுகளை சிறப்பாக நடத்திய இங்கிலாந்தினால் ஆரம்பப்போட்டியிலேயே சாதிக்கமுடியாமல் போய்விட்டது துரதிஸ்டமே. எதிர்பாராத திருப்பங்களோடு ஆரம்பமாகி இருக்கும் உலகக்கிண்ணம் இன்னும் எத்தனை அதிர்வலைகளை தரப்போகின்றது என இந்த பதிவில் பார்ப்போம்.

பயிற்சிப்போட்டிகளில் சோதனை கொடுத்த, சொதப்பிய அணிகளை பார்த்துவிட்டு அவை என்னவெல்லாம் செய்யப்போகின்றன என பார்க்கலாம்.

நெதர்லாந்து.

தன்னுடைய பயிற்சிப்போட்டி ஒன்றில் சூப்பர் ஓவர் முறையில் அயர்லாந்திடம் தோல்விமுகத்துடன் ஆரம்பித்தாலும் துடுப்பாட்டம் பந்து வீச்சு என அணியின் பல வீரர்கள் சிறப்பாக ஆடி இருக்கின்றார்கள். இந்த நம்பிக்கையோடு ஸ்கொட்லாந்து அணியை சந்தித்தவர்கள் Edgar Schiferli மற்றும் Pieter Seelaar ஆகியோரின் சிறந்த பந்து வீச்சு ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த உத்வேகம் தந்த வீரமோ என்னவோ T20 உலகக்கிண்ண முதலாவதுபோட்டியில் இம்முறை கிண்ணத்தை வெல்லும் என பரவலாக எதிர்வுகூறப்படும் அணிகளில் ஒன்றான இங்கிலாந்தை மண்கவ்வ செய்துவிட்டது.

பந்துவீச்சாளர்கள் பெரிதாக பிரகாசிக்காவிட்டலும் துடுப்பாட்டத்தில் பொதுவாக அனைவரும் கைகொடுக்க கனவாக இருக்கும் என நினைத்த ஒன்றை நனவாக்கி நிற்கின்றார்கள் இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு இப்போது அவர்களுக்கு அதிகமாக இருக்கின்றது.

அயர்லாந்து.

நெதர்லாந்துடனான முதல் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பற்ற அணி, மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளால் படு தோல்வியை சந்தித்த நிலையில் இந்த உலகக்கிண்ண போட்டியில் காலடி வைத்திருக்கின்றது. பந்து வீச்சில் பலமிழந்து காணப்படுகின்றது. இருப்பினும் கடந்த உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து திருப்பத்தை ஏற்ப்படுத்திய அணி இது என்பது இம்முறை இந்த அணியிலும் மற்றவர்கள் ஒரு கண் வைக்க காரணமாக இருக்கின்றது.

ஸ்கொட்லாந்து.

இங்கிலாந்துடனான போட்டியோடு தோல்வி அடைந்த நிலையில் இந்த தொடரை சந்திக்கப்போகும் அணி பந்துவீச்சில் யாருமே கைகொடுக்கவில்லை என்ற ஆதங்கம் மட்டுமில்லாமல் மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிலையான ஆட்டம் இல்லாமல் தவிக்கின்றது. நெதர்லாந்துடனான போட்டியில் ஏழு விக்கெட்டால் தோல்வி அடைந்தது அணி இம்முறை எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை என்பதை சொல்கின்றது.

பங்களாதேஷ்.

சிறந்த அணி, திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றார்கள்.அவுஸ்ரேலியா அணியுடன் சொற்ப ஊடங்கள் வித்தியாசத்திலே தோற்றாலும் இலங்கையுடனான பயிற்சிப்போட்டியில் வெற்றியின் விளிம்புவரை வந்து கோட்டை விட்டது. ஆனால் அன்று ஆடிய ஆட்டத்தை பார்க்கும் பொது நிச்சயம் இம்முறை ஒரு மாற்றத்தை இவ்வணி ஏற்ப்படுத்தப்போகின்றது. காரணம் அது இடம்பெறும் பிரிவில் இருந்து இம்முறை அடுத்த சுற்றுக்கு போகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது எனவே இம்முறை ஒரு சில அணிகளை பங்களாதேஷ் நிச்சயமாக ஆட்டம் காண வைக்கும் கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள்.

மேற்கிந்திய தீவுகள்.

கிரிஸ் கையில் என்னும் தனி மனித ரன் குவிக்கும் இயந்திரம் இருக்கும் வரை கவலை இல்லை. எந்த போட்டியையும் மாற்றும் சக்தி இவருக்கு உண்டு இவருடன் சர்வான், சந்தர்போல்,ராம்டின், பிராவோ என மற்றவர்களும் அசத்தினால் இம்முறை கிண்ணத்தோடு திரும்பக்கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. ஆனால், கிரிஸ் கையில் இல்லாமல் ஆடி இங்கிலாந்திடம் தோற்றது சற்று பின்னடைவே. இருப்பினும் இவர்கள் இடம்பெறும் சி பிரிவில் பலம் வாய்ந்த அவுஸ்ரேலியா, இலங்கை அணிகள் இவ்வணியின் வெற்றியை தடுத்து நிறுத்த வாய்ப்புண்டு.

பாகிஸ்தான்.
கடந்த இறுதிப்போட்டி வரை வந்த அணியா இது என கேட்கவைக்கின்றது. ஆனால் அதன் பலமே அதுதான் எப்போதும் தடுமாறிக்கொண்டிருக்கும் அணி, திடீரென வீறு கொண்டு எழுது கிண்ணத்தோடு சென்றுவிடும். எப்போது எப்படி ஆடும் என கணிக்கவே முடியாது. தென் ஆபிரிக்காவுடன் தோல்வி மட்டுமன்றி இந்தியாவிடம் மரண அடி வாங்கி இருக்கும் அணி நிமிர்ந்து எழுமா என்பதே இப்போதைய கேள்வி. பொதுவாக அணியிலுள்ள எல்லோருமே சொதப்புகின்றனர். பந்து வீச்சையே தெரியாதவர்கள் போலாகிவிட்டனர். பிழைகளை திருத்தி இறங்கினால் கிண்ணம் கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை.

இங்கிலாந்து.
ஸ்கொட்லாந்தை ஆறு விக்கெட்டுகளால் வென்றதோடு மேற்கிந்திய தீவுகள் அணியை ஒன்பது விக்கெட்டுகளால் தோற்கடித்து அசுர பலத்தோடு முதல் போட்டியை ஆடியவர்கள் அடங்கிப்போய் நிற்கிறார்கள். தங்கள் நாட்டில் நடக்கும் போட்டிகள் என்னும் பலம் என பலர் எதிர்வு கூறியும் இப்போது இந்த அணியின் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது. லுக் ரைட், ரவி போபரா,பீடேர்சன் என துடுப்பாட்ட வீரர்கள் இருக்க கடந்தமுறை யுவராஜிடம் ஆறு சிக்ஸ்செர்கள் வாங்கிய Stuard Broad இம்முறையும் களம் கண்டிருக்கிறார். Flintof இல்லாதது பெரிய பலவீனமே. அத்துடன் பாகிஸ்தானுடனான போட்டியில் தோற்றால் அடுத்த சுற்றுக்கே முன்னேற முடியாமல் போய்விடும்.

அவுஸ்ரேலியா.
பங்களாதேசிடம் கொஞ்சம் தடுமாறினாலும் நியூசிலாந்துக்கு இடியை கொடுத்து இப்போது பலம் பொருந்திய அணி இம்முறை கிண்ணத்தை வெல்லக்கூடிய முதல் மூன்று அணிகளில் ஒன்றாக இருக்கின்றார்கள். பொண்டிங்கின் தலைமையில் இம்முறை பலமான நட்சத்திரங்கள் பல ஆடப்போகின்றன. முக்கியமான போட்டிகளில் அசத்தலாக ஆடி கிண்ணத்தை கைப்பற்றுவது இவர்கள் பிறவிக்குணம். இம்முறையும் நிச்சயம் கிண்ணத்தோடு போகும் வாய்ப்பு இவர்களுக்கு இருக்கின்றது.

இலங்கை.
மற்றொரு கணிக்க முடியாத அணி. ஆனால் நிச்சயமான அணி. பங்களாதேஷின் விஸ்வரூபத்தில் தப்பி பிழைத்து வென்று வந்த அணி தென் ஆபிரிக்காவிடம் ஆறு விக்கெட்டால் தோல்வி அடைந்து பரிதாபமாக நிற்கின்றது. புதிய தலைவரான சங்கக்காராவை பல பதிவர்களும் இணையதளங்களும் சரியான தேர்வு என சொன்னாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்து சங்ககாரவிற்கு தலைமை பொறுப்பை விட சாதாரண வீரராக ஆடுவதே சரி. இருந்தாலும் இம்முறை முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு வந்தால் வாய்ப்புள்ள அணிகளில் இதுவும் ஒன்று. ஆனால் முதல் சுற்றிலேயே பெரிய சவால் காத்திருக்கின்றது.

நியூசிலாந்து.
பலமான அணி, ஆனால் எப்போது சுருள்வார்கள் எப்போது வீறு கொண்டு எழுவார்கள் என தெரியாது. இம்முறை, சாம்பியன்கள் இந்தியாவை ஒன்பது ஓட்டங்களால் கலங்கடித்துவிட்டு நிற்கின்றது. மக்கலம் மற்றும் ரோஸ் டெயிலர் துடுப்பில் பலம் சேர்க்க வெட்டோரி பந்து வீச்சில் கலக்குவார். ஆனால் அவுஸ்ரேலியாவிடம் படு தோல்வியை சந்தித்து இருக்கும் இவர்கள் ஒன்றிணைந்து எழுந்தால் இம்முறை அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. நிச்சயமாக அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் இவர்கள் என்னென்ன செய்யபோகின்றார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால் முதல் சுற்றில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை வென்றால் தான் இதெல்லாமே.

தென் ஆபிரிக்கா.
பாகிஸ்தானிடம் வெற்றி, இலங்கையிடம் இமாலய வெற்றி இந்த பயணம் நன்றாகவே தொடங்கி இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு கட்டாயம் தெரிவாகும் அதேபோல் கிண்ணத்தை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ள அணிகளில் இதுவும் ஒன்று. இம்முறை அரை இறுதிவரை வாய்ப்புள்ள அணி. கலிஸ், சிமித்,கிப்ஸ், வில்லிஎர்ஸ் என அத்தனை பேரையும் சொல்லலாம்.

இந்தியா.
நடப்பு சாம்பியன்கள் இம்முறை கிண்ணம் இவர்களுக்குத்தான் என அத்தனைபேரும் சொல்கிறார்கள். தோனியின் தலைத்துவம் யுவராஜ், ரைனா, ரோஹித் ஷர்மா, யுஸுப் பதான் இவர்களோடு சேவாக் கம்பீரின் அதிரடி தொடக்கம் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, சகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் இம்முறையும் தோனியின் கையில் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க காத்திருக்கின்றது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது அசுர பலம் கொண்ட ஒரு பெரும் படையாக இன்று தோனியின் இளம்படை இம்முறை தொடரை எதிர்கொண்டிருக்கின்றது. அத்துடன் இம்முறை முதல் நிலை அணியாகாக களம் கண்டிருக்கின்றது.

இவைதான் இம்முறை அணிகள் பற்றி பார்வை. அத்துடன் குழு ஏ இலிருந்து இந்தியா, பங்களாதேஷ் அணிகளோடு குழு பி இலிருந்து நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்து உள்ளே வரவும் வாய்ப்புண்டு. ஆனால் பாகிஸ்தான் இலகுவில் இங்கிலாந்திடம் மண்டி இடாது எனவே வாய்ப்பு குறைவே. சி பிரிவில் யார் வருவார் என சொல்ல முடியாது அவுஸ்ரேலியா, இலங்கை அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் உண்டு இருப்பினும் இலங்கைக்கு பதில் மேற்கிந்திய தீவுகள் நுழைய வாய்ப்புண்டு. டி பிரிவில் நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.


இவை எல்லாம் கடந்தபின் அரை இறுதியில் விளையாட வாய்ப்புள்ள அணிகள் இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆபிரிக்காவிற்கு வாய்ப்புண்டு. (இதில் இலங்கைக்கு பதில் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானுக்கு பதில் இங்கிலாந்தும் இடம்பிடித்தாலும் ஆச்சரியமில்லை.) இதிலே அரை இறுதியில் இந்தியாவுடன் இலங்கை அல்லது பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து அல்லது மேற்கிந்திய தீவுகள் அணியில் ஏதாவது ஒன்று மோத வாய்ப்புண்டு.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவிற்கே வெற்றிக்கான வாய்ப்பு உண்டு. மறுபக்கம் தென் ஆபிரிக்கவுடன் அவுஸ்ரேலியா அல்லது நியூசிலாந்து அணியில் ஒன்று விளையாட வாய்ப்புண்டு. இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் என்னுடைய கணிப்பின் படி இந்தியா-தென் ஆபிரிக்க அணிகள் மோதவே அதிக வாய்ப்பிருக்கின்றது. ஆனால் கிரிக்கெட்டில் அதுவும் இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். ஆனால் இந்திய வீரர்களில் ஒருவர் தொடர் ஆட்டநாயகனாக வர வாய்ப்புண்டு. எல்லாவற்றுக்கும் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம். கிண்ணம் இந்தியா வசம் வந்தால் கொஞ்சம் என்னையும் நினைத்து பாருங்கள்.
Share:

5 கருத்துரைகள்:

துஷா said...

தளம் நல்ல இருக்கு
சுப்பர் அலசல் இருபதுக்கு இருபது உலக கிண்ணம் பற்றி

வெத்து வேட்டு said...

i like the last team

வந்தியத்தேவன் said...

மேற்கிந்திய தீவுகள் ஆஸிக்கு ஆப்படித்த நிலையில் ஆஸி எப்படியும் ஸ்ரீ லங்காவை வென்றாக வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் இலங்கை அரையிறுதிக்கு வரும் வாய்ப்புகள் குறைகின்றது. அரையிறுதியில் இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியதீவுகள், நியூசிலாந்து விளையாடும் வாய்ப்புகள் அதிகம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கடைசி அணி பத்தியும் நல்லாச் சொல்லுங்க தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கடைசி படத்தில் இருக்கும் அணியைப் பத்தியும் நல்லாச் சொல்லுங்க தல

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive