Friday, June 12, 2009

இந்திய அணிக்குள் உண்மையில் என்ன நடக்கின்றது. தோணி-சேவாக் உறவில் விரிசலா?

சாம்பியன்கள் நாங்கள் சண்டை இட மாட்டோம்.
T20 உலக சாம்பியன் என்ற பெருமையோடு களமிறங்கி இருக்கும் இந்திய அணி அதன் அதிரடி நாயகன் சேவாக் இல்லாமலேயே இந்த தொடரை எதிர்கொண்டு வருகின்றது. இதற்கு என்ன காரணம்? ஒரு முன்னணி அதிரடி துட்ப்பாட்டவீரர் இல்லாமல் விளையாட இந்திய அணி பலம் பெற்றுவிட்டதா? அல்லது உண்மையிலேயே தோனிக்கும் ஷேவாக்குக்கும் இடையில் விரிசல் ஏற்ப்பட்டு இருக்கின்றதா? எதுவும் தெரியாமல் முழிக்கின்றான் ஒரு சராசரி ரசிகன்.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே.
ஒரு விதத்தில் இந்திய அணி இப்போது ஷேவாக்க்கும் இல்லாமல் விளையாட பழகிவிட்டது என்றே சொல்லலாம். அவுஸ்ரேலிய அணிபோல மூத்த வீரர்கள் ஓய்வு பெற்றதும் தடுமாறாமல் வெற்றிநடை போடுகின்றது. சச்சின், திராவிட் போன்றோர் இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்பதை தோணி படை நிரூபித்து வருகின்றது.அதிலும் T20 போட்டிகள் இந்தியாவை பொறுத்தவரை அல்வா சாப்பிடுவதுபோல.(நான் இந்த பதிவை எழுதும்போது இந்திய அணி தன் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்திய தீவுகளிடம் தடுமாறுவது வேறுகதை.)
இது வெற்றிக் கூட்டணி.
இப்படிப்பட்ட நிலையில் தான் பயிற்சிப்போட்டிகளில் சேவாக் பங்குபற்றாமல் விட, ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்ட ரோஹித் ஷர்மா பிரகாசிக்க, தோணி அவரையே ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் இறக்கலாம் என தீர்மானித்து விட்டார். இதை தொடர்ந்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் நிருபர் ஒருவர் ஷேவாக் பற்றி தோனியிடம் கேட்கபோக அதற்க்கு தோணி வீராப்பு காட்ட என சில சம்பவங்கள் அரங்கேறி இந்த விடயம் ஒரு பூதாகரமாக வெடிக்க காரணமாகி விட்டது.
நான் ரொம்ப சின்னப் பையனுங்க. என்ன விட்டிடுங்க.
இதன் பின் ஷேவாக் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கு பற்றாமல் நாடு திரும்புகிறார் என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. (ஷேவாக்கும் எந்த பிரச்சனையும் கொடுக்காமல் நல்ல பிள்ளையாக நாடுதிரும்பிவிட்டார்.) இந்த நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் இந்த தொடரில் பங்குபற்ற முடியவில்லை என ஷேவாக் தெரிவித்து இருக்கின்றார். ஐ.பி.எல் தொடரிலேயே Deccan Chargers அணிக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் தன் தோள் மூட்டுபகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் ஆனால் அதற்கு சிகிச்சை எடுக்க இப்போது தென் ஆபிரிக்க செல்லாமல் லண்டனில் உள்ள வைத்தியர்களிடம் சிகிச்சை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
ஆடிய ஆட்டம் என்ன அடக்கிடுவான்களோ?
ஆரம்பத்தில் தன் காயத்தை மறுத்து மறைத்து வந்த ஷேவாக் இந்திய அணி இங்கிலாந்தில் கால் வைக்கும் வரை தன் காயம் பற்றி வாய் திறக்கவில்லையாம்.(எப்படி உடல்தகுதி சோதனையில் தப்பித்தாரோ?) இருப்பினும் அணிக்குள் இருந்த ஒரு வீரர் மூலமே இந்த உண்மை வெளிவந்திருக்கின்றது. இந்த காயத்திற்கு கண்டிப்பாக இரண்டு மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் ஷேவாக்கினால் பயிற்ச்சிகளில் பங்கு பற்ற முடியாமல் போய் இருக்கின்றது.
எங்களுக்குள் பிரச்சனை இல்லை நம்புங்கப்பா.
இது தான் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி இட்டிருக்கின்றது. அணியின் தலைவர் என்ற முறையில் ஷேவாக் தன்னிடம் அவரின் காயம் பற்றி சொல்லி இருக்கலாமே என பொறுமையின் நாயகன் cool கப்டன் தோணி கோபப்பட்டு இருக்கின்றார். காயத்தை மறைத்தது இப்போது பி.சி.சி.ஐயையும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது.

ஷேவாக் பற்றி எந்த விடயத்தையும் தோணி தெரிவிக்காத தருணத்தில் எல்லோரும் அவரை சீண்டியதே அவர் ஷேவாக் பற்றிய கேள்விகளை தவிர்க்க காரணம். அதேபோல் பயிற்றுனர் கேரி கேஷ்டன் மற்றும் தோணி உட்பட சகல வீரர்களும் அணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்து இருக்கின்றார்கள். அதேபோல் ரோகித்தை தோணி ஷேவாக்கு எதிராக வளர்க்கின்றார் என்பதெல்லாம் பொய்க்கதையே. ஏனெனில் ஷேவாக் போல ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு ரோஹித் இன்னும் வளரவில்லை.

நான் யாருக்கும் எதிரி இல்லை.
இதெல்லாம் இப்படி இருக்க இந்திய அணி வெற்றிநடை போட்டு வருகின்றது.(இன்று மேற்க்கிந்தியாவிடம் தடுமாறுகின்றது.) எனவே இந்த தொடர் முடிந்த பின் ஷேவாக் தன் வாய் திறந்து இந்த பிரச்சனை பற்றி ஏது பேசினால் இந்த பிரச்சனை இந்திய அணியின் வழக்கமான் தலைவர்-உபதலைவர் கோஷ்டி பூசலாக மாறி விடும். ஆனால் அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்பதே ஒவ்வொரு ரசிகனின் பிரார்த்தனையும். ஏனெனில், தோணி ஒரு நல்ல தலைவர் ஷேவாக் ஒரு நல்ல வீரர், இவர்களின் அரண் இந்திய அணிக்கு கட்டாயம் வேண்டும்.

இந்திய அணி கிண்ணத்தோடு சென்றால் இந்த பிரச்சனைகள் எல்லாம் மூடி மறைந்து விடும் ஒரு வேலை கிண்ணத்தை தவற விட்டு ஷேவாக்க்கும் தன் வாயை திறந்து குட்டையை கிளப்பினால் என்னென்ன நாற்றங்கள் வெளி வருமோ?
இன்றைய போட்டியில் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய அணி, மேற்கிந்திய அணியை விட பலம் குறைந்தது அல்ல. ஆனால், அவர்களை ஆட்டிப்படைக்கும் பய உணர்வே இப்போது இவர்களை தள்ளாட வைத்திருக்கின்றது. அவர்களின் மிகப்பெரிய நம்பிக்கையான சச்சின் அரங்கில் இருந்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கின்றார். நிச்சயம் இது இந்தியாவிற்கு பெரிய பலமே. எனவே இன்றைய போட்டியிலும் இந்தியா வெல்லும் வாய்ப்பு இன்னும் கைனளுவவில்லை என்றே எனக்கு தோன்றுகின்றது.
Share:

2 கருத்துரைகள்:

EKSaar said...

நன்றி வருகைக்கு..

கிடுகுவேலி said...

இந்த நேரம் இந்திய அணி வீரர்கள் சிறு சிறு குழுவாக (வழமை போல) நாடு திரும்புகிறது என கேள்வி. தோனி நல்லவர். ஷேவாக் நல்ல அதிரடி வீரர் ஒத்துக்கொள்கிறோம். இவை எல்லாம் முக்கியமான போட்டிகளில் வெளிப்பட வேண்டும். இல்லாட்டி என்னைப் போன்றவர்கள் எல்லாம் மொக்கைப்பதிவு எழுத நேரிடும்.

அருமையான பதிவு. நன்றி...!

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive