சிலருக்கு கடவுள் நம்பிக்கை அதுவே சிலருக்கு மூட நம்பிக்கை. கடவுளை நினைத்து கொண்டாடும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு மூட நம்பிக்கையை உடைக்கும் ஒரு செயற்பாட்டை குஜராத் மாநில மக்கள் அரங்கேற்றப்போகின்றார்களாம். இன்று எனது வானொலி நிகழ்ச்சிக்காக சுவையான விடயங்களை தேடியபோது என் கண்ணில் இதுவும் தட்டுப்பட்டது.
வழக்கமாக விவேக்கின் நகைச்சுவை பார்த்து இதுவும் ஏதும் நகைச்சுவையோ என நினைத்தது முழுதாக படித்த எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. குஜராத் மக்கள் தீபாவளிக்கு முதல் நாளை கலி சதுர்த்தசி என அழைப்பார்களாம். அந்த வகையில் மூடநம்பிக்கையை உடைக்கும் முகமாக பாரத் ஜன விஞ்ஞான் சாதா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுடுகாட்டில் தேநீரும் வடையும் சாப்பிட போவதாக சொல்லி இருக்கின்றார்கள். நாடு முழுவதும் நானூற்று ஐம்பது இடங்களில் இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றதாம். வடையும் தேநீரும் வேண்டுமா சுடுகாட்டுக்கு போங்கோ இந்திய நண்பர்களே. என்னால் வரமுடியாது முடிந்தால் இலங்கையிலும் இதை செய்வோம் வாருங்களேன்... இலங்கையில் எங்கே சுடுகாடு தேடுவதென்ற கவலை குறைவு....
6 கருத்துரைகள்:
நான் வரவில்லை? வெற்றியில் ஒரு பேய் உலாவியதாக தகவல். அப்படியென்றால் அங்கே நீங்கள் கொண்டாடுங்கள்.
நாங்கெல்லாம் டீ வாங்கிதர்றோம் சொன்னாலே நரகம் வரைக்கும் வருவோம்..
வடைக்கு சுடுகாடு வரமாட்டோமா?
இந்த ஒரு வடைக்காக நான் பணம் கொடுத்து வர முடியாது.................
hey naa varan i dont want miss any free foods..... he he he eh he he lol
சாப்பிடட்டும்.. சாப்பிடட்டும்.. பக்கத்திலிருக்கும் எலும்புகளை எடுத்து கடிக்காமல் விட்டால் சரி சுடுகாட்டில் ( நீங்களும் ).
defiantly im coming fix the cemetry
Post a Comment