பூனைக்கண் புவனேஷ்வரி..... பேரைக் கேட்டாலே அதிருதெல்லா. இந்தியா மட்டுமல்ல நாடு கடந்தும் இன்று இந்த பெயர் அறிமுகம். காரணம் என்ன விபச்சாரம். நாட்டில் எத்தனையோ பேர் இதை செய்தாலும் பெரும் புள்ளிகள் செய்துவிட்டால் வெளிச்சத்துக்கு வருவது இயற்கையே. இப்படி இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக நடந்து வருகிறது. இது புவனேஷ்வரி முறை.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் மட்டுமல்ல நம் பதிவர்கள் பலர் பதறி அடித்துக்கொண்டு பதிவிட்ட விடயம் கூட. அதை தொடர்ந்து நடிக நடிகையர் நடத்திய கூட்டம் பெரிய பரபரப்பை கிளறியது. நடிகர்கள் ரஜினி,சத்யராஜ்,விவேக் பேச்சுகளோடு நடிகைகள் பேசிய பேச்சுக்களும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் சூர்யாவின் பேச்சுதான் இவற்றுக்கு அடித்தளம் என்னும் பேச்சும் இடம்பெற்றுள்ளது. பத்திரிக்கையாளர்களை ஈனப்பிறவிகள் அது இது என சில தகாத வார்த்தை பிரயோகங்களை உதிர்த்து திட்டிய மார்க்கண்டேயரின் மகன் அதன் பின் பல்டி அடித்துள்ளார். இதையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் அவரின் தந்தை. இந்த விடயத்தோடு அவரை அனுகியவர்களுக்கு மூஞ்சியில் கரி பூசி அனுப்பி இருக்கின்றார்.
இவ்வளவு காலமும் திரை உலகில் இருக்கும் ஒரு ஒழுக்க சீலரான சிவகுமார் இன்று தன மகனால் இப்படி நடக்கவேண்டி ஏற்பட்டதோ? எதுவாக இருப்பினும் சூர்யா சரி அவர் குடும்பம் சரி ஈழ மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவிய நல்லுள்ளம் கொண்ட குடும்பம். அந்த நல்லமனதுக்கு சொந்தக்காரர் தான் சூர்யாவும். ஆனால் என்ன காரணத்துக்காக அன்று அப்படி பொங்கிவிட்டார். பொங்கியவர் அடுத்தடுத்த நாட்களிலேயே மறுப்பறிக்கையும் விட்டார் காரணம் வந்தி அண்ணா பதிவில் சொன்னது போல ஆதவன். ஊடகங்களை பகைத்தால் எல்லாமே பொசுங்கிவிடும் எனதெரியாத நடிகரா அவர். திரையில் அழகாக நடிக்கும் சூர்யா நிஜமாக நடித்தார். இது நிஜாயமா? உங்கள் கருத்து என்ன என சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் அன்று பத்திரிகையாளரை கண்டித்தீர்கள். அதை தொடர்ந்திருக்கவேண்டும். காரணம் அன்று உங்களுக்கு நியாயமாக பட்டது என்றும் பட வேண்டும். இந்த விடயத்தில் விவேக் சொன்னது சரியோ தப்போ என்பதை விட பத்திரியாளர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து நிற்கின்றார். ஒரு காமெடியனுக்கு இருக்கும் துணிவு ஹீரோ உங்களுக்கு எங்கே போய் விட்டது.
அடுத்து நான் சொல்ல போகும் விஷயத்துக்கு எனக்கு எல்லோரும் சேர்ந்து கும்மப் போகின்றீர்கள் என தெரியும். அதற்க்கு சான்று இப்படி ஒரு பதிவிட போகின்றேன் என வந்தி அண்ணருடன் பேசும்போது சொன்னேன். பதிவிட்டு விட்டு சொல் வந்து கும்முகின்றோம் என்றார். பரவாயில்லை சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய நேரம் சொல்லாவிட்டால் அது மனதுக்குள்ளேயே அழிந்து போய்விடும். அதனால் சொல்ல தான் போகின்றேன். ஈனப்பிறவிகள்...... என பேசிய சூர்யாவை அண்மைக்காலமாக (வேட்டைக்காரன் ஆதவன் போட்டி இருக்கும் நேரம்)கொண்டாடிய பல பதிவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயை சொன்ன சைலன்ஸ் என்னும் சொல்லுக்கு வியாக்கியானம் எழுதிய யாரும் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் ஒரு சிலர் மாத்திரமே இதை எழுதியுள்ளனர். ஆதவன் வரப்போகும் நேரத்தில் சூர்யா அடித்த பல்டிக்கு இவர்களும் பலியாகிவிட்டனரா?
என் முன்னைய ஒரு பதிவில் யார் தப்பு செய்தாலும் பதிவர்கள் நாங்கள் கிளிப்போம் என்றவர்கள் இன்று எங்கே போய்விட்டனர். இது ஒரு விஜய் ரசிகனாக என் ஆதங்கமே. அதற்காக எனக்கு ஏதோ சூர்யாமேல் வெறுப்பு என்று நினைக்க வேண்டாம்.
விஜய்-சூர்யா இருவரும் நடிகர்கள் இருவரும் சமூக சேவையும் செய்துள்ளனர். அப்படி இருக்கும் போது பாரபட்சம் காட்டுவது ஏனோ? சூர்யா என்னதான் பெரிய வெற்றியைக் கொடுத்தாலும் விஜய் அளவிற்கு இன்னும் மாஸ் கிடைக்கவில்லை என்பது உண்மையே. அப்படி இருக்கையில் பதிவர்களின் சில நடவடிக்கைகள் எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றன. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் மற்றவர்கள் கும்முங்கள் என்ன செய்வது இப்போது உங்கள் பார்வையில் விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே.
24 கருத்துரைகள்:
இப்போ உங்கடை பிரச்சனை என்ன விஜயைக் கிழித்தவர்கள் சூர்யாவைக் கிழிக்கவில்லை என்பதுதானே. அல்லது ஆதவனுக்கு பயத்தில் தளபதி வேட்டைக்காரனை வெளியிடவில்லை என்ற பிரச்சனையா?
எதுவாக இருந்தாலும் சூர்யாவுடன் விஜயை ஒப்பிடக்கூடாது. சூர்யா என்ன சொன்னார்? விஜய் என்ன செய்தார்? பத்திரிகையாளர்களை மிரட்டுவதும் குற்றம் தான்.
இவனுங்களை எல்லாம் யார் கணக்கேடுக்கிரா..
திருமாவாக இருந்து வெறுமா கோமாளியாகிப் போகிறார்.. அவங்களைப் பற்றியே நாம் கணக்கெடுக்கவில்லை..
விபசாரியையும் 'கலை சேவை' செய்வோரையும் அவர்களுக்காக பரிந்து பேசுபவர்களையுமா கணக்கெடுக்கப் போகிறோம்..
கோமாளிகளை எட்டியும் பாரோம்..
கேவலமான கோமாளிகள்..
தமிழர்களின் தனிப்[பெரும் தலைவர் மூத்த பத்திரிக்கையாளர் முதல்வர் இது பற்றி பேசாதபோது
இதுக்கெல்லாம் பொங்கி ஏன் பெயரைக் கெடுக்கிறீங்க சதீஸ்?
நல்லகாலம் கமல்,விஜய்,அஜித் போன்றவர்கள் அதில் சம்பந்தப்படவில்லை..
// விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே.
//
நீங்களே சொன்ன பிறகு நாம் அதை மறுக்க முடியுமா? ;)
வேறு விஷயம் எழுதுங்கள் தம்பி..
கமல், சூர்யாவின் என்ன படம் வந்தாலும் அதை சிறந்ததாகவும் விஜய் யின் என்ன படம் வந்தாலும் அதை
கூடாதெனவும் விமர்சிப்பது தான் வலைப்பதிவாளர் பலரின் இப்போதைய ரென்ட்டாக மாறிவிட்டது.
இதற்கான காரணங்களாக நான் நினைப்பது,
1. தங்களை உயர்ந்த மட்ட ரசனை உடையவர்களாக காட்டிக்கொள்ளலாம்
( கொமெர்சியல் படங்களெல்லாம் இவங்க பார்க்க மாட்டங்க )
2. விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை எதிர்ப்பதன் மூலம் அதிக ஹிட் வாங்கிக்கொள்ளலாம்.
(படம் வர முதலே விமர்சனம் எழுதி வைத்துக்கொண்டு வந்தவுடன் சிறிய எடிட்டிங் செய்து விட்டு சுடச்சுட puplish
பண்ணலாம்)
கும்மிக்கு வந்தால் யாரையுமே காணவில்லையே? வந்தி, லோஷன் எங்கே போய்டீங்க? கும்ம வந்த வழியில வேறு எங்கயும் போய்டீங்களா?
விஜய் ரசிகர்களின் தொல்லை தாங்கமுடியல்லை. நான் நடிச்சா தாங்கமாட்டா என விஜயே பாடியும் திருந்துறாங்கள் இல்லை. தலைபோல வருமா?
முதலில் விஜயை சூரியாபோல் வித்தியாசமான வேடங்களில் நடிக்கச் சொல்லுங்கள் அதன் பின்னர் அரசியலுக்கோ இல்லை வேறு எந்த கருமத்துக்கோ போகலாம்.
//sanjeevan கூறியது...
கமல், சூர்யாவின் என்ன படம் வந்தாலும் அதை சிறந்ததாகவும் விஜய் யின் என்ன படம் வந்தாலும் அதை கூடாதெனவும் விமர்சிப்பது தான் வலைப்பதிவாளர் பலரின் இப்போதைய ரென்ட்டாக மாறிவிட்டது. //
உன்னைப்போல் ஒருவன் வலையில் வாங்கிய அடி மறந்துபோனீர்களோ. விஜய நடித்த படங்களில் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக தவிர நல்ல படங்கள் சொல்லுங்கள்.
//(படம் வர முதலே விமர்சனம் எழுதி வைத்துக்கொண்டு வந்தவுடன் சிறிய எடிட்டிங் செய்து விட்டு சுடச்சுட pupலிஷ்//
ஐயோ ஐயோ இதையெல்லாம் சதீஸ் போன்றவர்கள் தான் செய்வார்கள். நல்ல விமர்சகர்கள் செய்யமாட்டார்கள். விஜய் ரசிகர்கள் முட்டாள் என்று தெரியும் ஆனால் வடிகட்டிய முட்டாள் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன்.
கழுதை எப்போதுமே கழுதைதான் - புலியாக மாற முடியாது!
//தமிழர்களின் தனிப்[பெரும் தலைவர் //
லோஷன் அண்ணா -
இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இறக்குவானை நிர்ஷன் கூறியது...
//தமிழர்களின் தனிப்[பெரும் தலைவர் //
லோஷன் அண்ணா -
இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
//
நிர்ஷா, தங்கள் கண்டனத்துக்கு காரணம் யாதோ? கலைஞரை அவ்வாறு தானே தமிழ் கூறு நல்லுலகம் அழைக்கிறது.. ;)
//ttpian கூறியது...
கழுதை எப்போதுமே கழுதைதான் - புலியாக மாற முடியாது!
//
கழுதைப்புலியாயாக மாறலாமா? ;)
//கமல், சூர்யாவின் என்ன படம் வந்தாலும் அதை சிறந்ததாகவும் விஜய் யின் என்ன படம் வந்தாலும் அதை
கூடாதெனவும் விமர்சிப்பது தான் வலைப்பதிவாளர் பலரின் இப்போதைய ரென்ட்டாக மாறிவிட்டது.//
வலையுலகம் பல்வேறு எண்ணப் பாங்குககள் ,நோக்குகளைக் கொண்டது.. இங்கே அநேகமாநோரால் புகழப்பட்ட உன்னைப் போல் ஒருவனையே கிழித்த அறிவுஜீவிகளும் உள்ளார்கள்..
அப்படி இருக்கும்போது விஜய் படங்கள் என்ன ஒஸ்கார் தரமா? இல்லை உலக தரமா?
//2. விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை எதிர்ப்பதன் மூலம் அதிக ஹிட் வாங்கிக்கொள்ளலாம்.//
நமீதா,நயன் என் புவநேஷ்வரியின் படத்தைப் போட்டால் கூட இங்கே ஹிட்ஸ் எடுக்கலாம். விஜய் பற்றி கிழித்து தான் ஹிட்ஸ் தேடவேண்டும் என்ற தேவை யாருக்கும் இருக்குமோ எனக்கு தெரியாது..
குறிச் சொல்லாக வீரத்தளபதி ரித்தீஷ் இருந்தால் கூட இங்கே ஹிட்ஸ் வரும் தெரியுமா?
எங்க சான்ஸ் கிடைக்கும் என்டு பாத்திட்டிருந்த லோஷன் அண்ணா சந்துல சிந்து பாடிட்டார்.. வீர மீச வெச்சிருந்த திருமா பூன முழி முழிக்கேக்கயே நான் நெனச்சேன். லோஷன் பொங்கி வெடிப்பார் எண்டு.. என்ன; extraவாக முதல்வரையும் சேத்து தாக்கிட்டார்.. ITS REALLY VALUE FOR READING.. :D
மற்றப்படி புவனேஸ்வரி விஷயத்தில் ஊடகங்கள் நியாயமாக நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. சரி என்றோ பிழை என்றோ கண்டித்தோ ஆதரித்தோ புவனேஸ்வரி விடையத்தை சூடாக வைத்திருந்தால்தான் போணியாகும் என்றுதான் அவர்களும் இருக்கிறார்கள். ITS KIND OF NEGATIVE MARKETTING..
டிவிட்டரில கும்மின்னு பாத்துட்டு என்னமோ, ஏதோன்னு பாத்துட்டுப் போகலாமெண்டு வந்தா இது வெறும் டம்மியாஇல்ல கிடக்கு.
//விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை எதிர்ப்பதன் மூலம் அதிக ஹிட் வாங்கிக்கொள்ளலாம்//
நீங்கதான் சொல்லிக்கொள்ளலாம்.
// விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே.
//
இந்தக் கருத்தோடு உடன்படுகிறேன். LOL
பலர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னாலும் சதீஷ் கேள்வியிலும் ஓர் நியாயம் இருக்கிறது தானே?
நான் சினிமா பற்றி எழுதிறத இல்ல எண்டதால விஜய் சைலன்ஸ் சொன்னாலும் கணக்கெடுக்கமாட்டன், சூர்யா பொங்கிற்று அடங்கினாலும் கணக்கெடுக்க மாட்டன்....
சினிமா சம்பந்தமாக பதிவிடுவோர் எல்லோரும் வந்து பதிலிடுங்கள்....
சும்மா கலக்குறீங்க பாஸ்...
தொடந்து கலக்குங்க..:)
விஜயப்ற்றி எழுதுற அன்பு மக்காவுக்கு ஒரு பழமொழி சொல்ல ஆசைப்படுறன்
“சந்திரப்பாத்து நாய் குலைச்சா சந்திரனுக்கு ஒண்டும் நடக்காது நாய்தான் களைச்சுப்போகும்”
Buy Vijay Fan,A.C,Tubelight
Diwali Offer
LOSHAN கூறியது...
இறக்குவானை நிர்ஷன் கூறியது...
//தமிழர்களின் தனிப்[பெரும் தலைவர் //
லோஷன் அண்ணா -
இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
//
நிர்ஷா, தங்கள் கண்டனத்துக்கு காரணம் யாதோ? கலைஞரை அவ்வாறு தானே தமிழ் கூறு நல்லுலகம் அழைக்கிறது.. ;) //
அப்படியொன்றும் இல்லை. உலகத் தமிழர்களுக்கு பொருத்தமான ஒரு தலைவர் இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. நம்மவர்கள் விடயத்தில் முதலமைச்சர் கருணாநிதி கையாண்ட அரசியல் சாணக்கியமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
நன்றி
//இப்போது உங்கள் பார்வையில் விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே //
Unmai...
வந்தியத்தேவன் கூறியது...
இப்போ உங்கடை பிரச்சனை என்ன விஜயைக் கிழித்தவர்கள் சூர்யாவைக் கிழிக்கவில்லை என்பதுதானே. அல்லது ஆதவனுக்கு பயத்தில் தளபதி வேட்டைக்காரனை வெளியிடவில்லை என்ற பிரச்சனையா?
எதுவாக இருந்தாலும் சூர்யாவுடன் விஜயை ஒப்பிடக்கூடாது. சூர்யா என்ன சொன்னார்? விஜய் என்ன செய்தார்? பத்திரிகையாளர்களை மிரட்டுவதும் குற்றம் தான்.
=>>
வேட்டைக்காரன் பதுங்கியது வேட்டை ஆடவே. விஜய் செய்தது தப்பென்றால் சூர்யா செய்ததும் தப்புதான். ஏன் அதை உங்களில் பலர் புரியவில்லை.
LOSHAN கூறியது...
இவனுங்களை எல்லாம் யார் கணக்கேடுக்கிரா..
திருமாவாக இருந்து வெறுமா கோமாளியாகிப் போகிறார்.. அவங்களைப் பற்றியே நாம் கணக்கெடுக்கவில்லை..
விபசாரியையும் 'கலை சேவை' செய்வோரையும் அவர்களுக்காக பரிந்து பேசுபவர்களையுமா கணக்கெடுக்கப் போகிறோம்..
கோமாளிகளை எட்டியும் பாரோம்..
கேவலமான கோமாளிகள்.
=>>
பரவாயில்லை அண்ணா இப்போ விஜய் மேலான உங்கள் பாசம் சூர்யாமேலும் ஆரபித்துள்ளது போல .
//தமிழர்களின் தனிப்[பெரும் தலைவர் மூத்த பத்திரிக்கையாளர் முதல்வர் இது பற்றி பேசாதபோது
இதுக்கெல்லாம் பொங்கி ஏன் பெயரைக் கெடுக்கிறீங்க சதீஸ்//
=>>
அவர் வெட்டு பிரச்சனைக்கு மட்டும் தான் பொங்குவார். எப்போது பொதுப் பிரச்சனைக்கு பொங்கி இருக்கார்.
//
// விஜயும் விஜய் ரசிகர்களும் இழிச்சவாயர்களே.
//
நீங்களே சொன்ன பிறகு நாம் அதை மறுக்க முடியுமா? ;)//
=>>
இன்னும் சற்று நாளில் சூர்யாவின் ரசிகர்களும் இப்படி பாட வேண்டும் என கண்கனமோ நடக்கட்டும் நடக்கட்டும்..
sanjeevan கூறியது...
கமல், சூர்யாவின் என்ன படம் வந்தாலும் அதை சிறந்ததாகவும் விஜய் யின் என்ன படம் வந்தாலும் அதை
கூடாதெனவும் விமர்சிப்பது தான் வலைப்பதிவாளர் பலரின் இப்போதைய ரென்ட்டாக மாறிவிட்டது.
இதற்கான காரணங்களாக நான் நினைப்பது,
1. தங்களை உயர்ந்த மட்ட ரசனை உடையவர்களாக காட்டிக்கொள்ளலாம்
( கொமெர்சியல் படங்களெல்லாம் இவங்க பார்க்க மாட்டங்க )
2. விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை எதிர்ப்பதன் மூலம் அதிக ஹிட் வாங்கிக்கொள்ளலாம்.
(படம் வர முதலே விமர்சனம் எழுதி வைத்துக்கொண்டு வந்தவுடன் சிறிய எடிட்டிங் செய்து விட்டு சுடச்சுட puplish
=>>
உங்கள் கருத்தில் பல உண்மைகள் உண்டு.
யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
கும்மிக்கு வந்தால் யாரையுமே காணவில்லையே? வந்தி, லோஷன் எங்கே போய்டீங்க? கும்ம வந்த வழியில வேறு எங்கயும் போய்டீங்களா?
=>>
ஒரு கூட்டமாதான் வந்திங்களா நடக்கட்டும் நடக்கட்டும்.
பெயரில்லா கூறியது...
விஜய் ரசிகர்களின் தொல்லை தாங்கமுடியல்லை. நான் நடிச்சா தாங்கமாட்டா என விஜயே பாடியும் திருந்துறாங்கள் இல்லை. தலைபோல வருமா?
=>>
இந்த தல ரசிகர்களுக்கு இது நாள் வரை தலைக்குள் தான் ஒன்றும் இல்லை என்று பார்த்தால் இப்போ காதும் கேட்காத? நான் நடிச்சாவிர்க்கும் நான் அடிச்சாவிர்க்கும் வித்தியாசம் தெரியாலையா?
Post a Comment