நடிகை கனிகா, அழகும் திறமையும் ஒருங்கே கொண்ட நடிகை. சுசி கணேசன் இயக்கிய இவரின் முதல் படம். அறிமுகமே அட்டகாசமாய் கனமான பாத்திரமாய் அமைந்தது. அதிலேயே அசத்தியவரை ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறில் கானம் உடிந்தாலும் ஏனோ அவரை முன்னணி நடிகையாக ஏற்கவில்லை தமிழ் சினிமாக்காரர்கள்.
நீங்கள் இல்லாவிட்டால் என்ன மலையாளம் இருக்கின்றது என அங்கெ ஒதுன்கியவரை செங்கம்பளம் விரித்து வரவேற்றது மலையாள திரை உலகம். அங்கிருந்து கொண்டே தெலுங்கு, கன்னடத்திலும் அசத்துகிறார். அவரின் நடிப்பின் மணி மகுடம் பாக்கிய தேவதை படம் மூலம் கிடைத்தது. திருமணம் அனால் ஒதுக்கும் கலாசாரம் தழிலில் இருக்க அதை எல்லாம் பொருட்டாக எண்ணாமல் மலையாளத்தில் அவர் நடிப்பில் வந்த இந்த திரைப்படத்துக்கு கடந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருதை எட்டுத்தடவை பெற்றுள்ளார் கனிகா.
கவர்ச்சி வேண்டும் முன்னணி கதாநாயகர்களை கட்டிப்பிடித்து நடிக்கவேண்டும் என ஏங்கிக்கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் தன் நடிப்பில் நம்பிக்கை வைத்து விருதை குவிக்கும் கணிகாவிற்கு வாழ்த்துக்கள். எப்போதுதான் திருந்தும் நம் தமிழ் திரை உலகம்??????????????????.
5 கருத்துரைகள்:
\\\அவரின் நடிப்பின் மணி மகுடம் பாக்கிய தேவதை படம் மூலம் கிடைத்தது. \\\\
அப்படத்தில் அவ்வளவு விசேடமான நடிப்பு என்று எல்லாம் சொல்ல இயலாது.
நடிப்பு என்றால் என்ன என்று இவர்கள் எல்லாம் நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. கண்களில் படி படியாக கண்ணீரும், காம உணர்ச்சிகளின் பிடியில் தவிக்கும் தவிப்புகளும் மட்டுமே நடிப்பு என்றால், மற்றவைகளை என்ன என்று சொல்வது.
பாக்கிய தேவதா படத்தில், ஒரு பொருப்புள்ள குடும்ப தலைவியின் பாத்திரம். அதுவும் பழி வாங்கப்பட்ட புதுமணப்பெண் பாத்திரம்.
நிச்சயக்கப்பட்ட நாட்களில் இருந்து திருமணம் வரை செயராமன் தன்னையே சுற்றி சுற்றி வரும் காட்சிகளில் வரும் பாடலில் மிகையில்லாமல் முக அசைவுகளிலே அழகாக நடித்து இருப்பார்.
பழி வாங்கப்பட்ட புதுமணப்பெண்ணாக இருந்தாலும் அதை வெளியில் தெரியாமல் இருக்க, புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருடனும் வித்தியாசம் காட்டாமலும், தன்னையும் வெளிப்படுத்திக்கொள்ளாமலும் அழகாக நடித்து இருப்பார். குறிப்பாக அந்ததந்த இடங்களில் செயராமன் கவனிக்கும் இடங்களில் நடப்பதற்கும் எனக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று அழகாக கண்களில் பேசவைத்திருப்பார் இயக்குனர்.
உச்சகட்ட காட்சியில், உதவ ஆளில்லாமல் இருக்கும் கணவனின் குடும்பத்திற்கு உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் செயலுக்கு நன்றி சொல்ல செயராமன் தடுமாறும் காட்சிகளில் மிகையே இல்லாமல் இயல்பாக பெண்கள் ஒதுங்கும் செயல்களை மிகவும் அருமையாக செய்து இருப்பார். கடைசியில் மன்னிப்பு என்று கேட்க்கும் போது பேசவே விடாமல் செயராமனோடு அனைப்பில் திணித்துக்கொள்வார்.
இவைகள் எல்லாம் பெண் பாத்திரங்கள் மென்னையாக கையாள வேண்டிய பாத்திரம். அதை கனிகா அழகாக கையாண்டுள்ளார். இவைகள் எல்லாம் நடிப்பு இல்லை, படி படியாக கண்ணீரும், பாலியல் தாக்கங்களையும் தான் நடிப்பு என்று எதிர்பார்த்தால் இந்த படத்தில் அவர் நடிக்க இல்லை தான்.
இதை போலவே பழசி இராசாவிற்கு ஒருவர் விமர்சனம் எழுதி இருந்தார், அந்த நடிப்பு என்ன என்று வெள்ளி திரையில் காணுக என்று நக்கலாக. மலையாள படத்தில், மலையாள மக்களின் நடை உடை பாவனைகள் தான் இருக்கும். அங்கே இருக்கும் உடையை அணிந்து வந்தால் அதை வக்கிரமாக விமர்சித்தால் நீங்கள் எல்லாம் மலையாளப்படம் எதற்கு பார்கிறீர்கள் என்று தான் கேட்க்கத்தோன்றும்.
என்னை பொருத்த வரை இயற்கையான அழகு, இயற்கையான நடிப்பு கனிகா. வாழ்த்துகள் கனிகா.....
பனிமலர்.
உண்மைதான்...
எதோ அவங்களால முடிஞ்ச அளவுக்கு நடிக்கட்டும் ஐயா விடுங்க
yen pa romba peeling uh????
Post a Comment