Sunday, May 16, 2010கடந்த சில நாட்களாக எந்த பிசியான மனிதரையும் கட்டிப்போட்டு வைத்திருந்த T20உலககிண்ணம் ஒருவாறு இன்று மேற்கிந்தியாவின் சென் லூசியா மைதானத்தில் இடம் பெற்ற போட்டியுடன் நிறைவுக்கு வந்திருக்கின்றது. கிரிக்கெட்டின் இரு பெரும் வல்லரசுகள் இந்த போட்டியில் மோதி நீண்டகாலத்தின் பின் கிரிக்கெட்டுக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

இந்த போட்டித்தொடரில் இவர்களின் இறுதிக்கான பயணம் பற்றி என் கடந்த பதிவில் இட்டிருந்தேன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்குங்கள்.(என் இந்தப் பதிவிற்கு இன்னும் ஒரு வாக்கு மட்டுமே தேவைப்படுகின்றது என் முந்தைய பதிவு ஒன்று பெற்ற கூடிய வாக்குகள் என்ற மைகல்லை கடப்பதற்கு. ) புதுப்பொலிவுடன் புது பலத்துடன் பல இளம் வீரர்களை உள்ளடக்கிய கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்தும், கிரிக்கெட்டின் சர்வாதிகாரி(நான் இப்படி சொல்ல காரணம் எந்த வகைப் போட்டியிலும் எப்பிடியாவது வென்றுவிடுவது. மற்ற அணிகளை அடித்து நொறுக்குவது.) அவுஸ்திரேலியா தன நீண்ட நாள் தலைவரை விட்டு தீராத விளையாட்டுப் பிள்ளை கிளார்க்(அன்னார காதலியின் குழப்படியால் போட்டித் தொடர் ஒன்றின் இடையில் எஸ் ஆனவர் தானே. ) தலைமையில் நல்ல சிறந்த வீரர்களை கொண்ட அணியாக மோதின.

சுவாரஷ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் போல் கோலிங்வூட் அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார். வரலாற்றை புதுப்பித்த இந்த போட்டியில் வட்சன் மற்றும் வார்னர் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க முதலாவது ஓவரை இங்கிலாந்தின் நம்பிக்கை தரும் பந்து வீச்சாளர் சைட் போட்டம் வீசினார். முதல் பந்திலேயே இரண்டு ஓட்டம் பெறப்பட்டது.

மூன்றாவது பந்துவீச்சிலேயே அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தொடரில் ஆஸி அணியின் மிகப்பெரிய பலமாக இருந்த வட்சன் இரண்டு ஓட்டங்களை பெற்ற நிலையில் சைட் பொட்டம் பந்தில் நடையை கட்டினார். ஆனால் இந்த ஆட்டமிழப்பு நடக்குமா நடக்காதா என ஒரு கணம் டென்சனாக்க ஸ்வான் அற்புதமாக பிடி எடுத்தார். துடுப்பில் பட்ட பந்து விக்கெட் காப்பாளரை நெருங்க பந்து அவர் கையில் பட்டு ஸ்லீபில் நின்ற ஸ்வானின் கையில் தஞ்சமானது. வாட்சனை தொடர்ந்து அணித் தலைவர் கிளார்க் வந்தும் துடுப்பில் இருந்து வந்த ஓட்டத்தை விட சைட் பொட்டம் கொடுத்த உதிரி ஆஸிக்கு இரண்டு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.

இரண்டாவது ஓவரை ப்ரேன்சன் வீசினாலும் ஓட்டங்களை பெறுவது ஆஸிக்கு கடினமாகவே இருந்தது. இந்த நிலையில் அந்த ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சை தட்டி விட்டு ஓடிய வேளை லம்பின் அற்புதமான களத்தடுப்பின் மூலம் ஆஸியின் இன்னொரு அதிரடி நாயகன் வார்னர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த அடி ஆஸியின் ஆரம்பத்தை ஆட்டம் காண வைத்தது. அந்த அடியில் இருந்து மீள்வதற்குள் சைட் பொட்டம் மீண்டும் இன்னொரு இடியைக் கொடுத்தார். அவர் வீசிய பந்து துடுப்பாட்ட வீரரின் துடுப்புக்கு மறு பக்கத்தை நோக்கி போக அந்த பந்தை ஹாட்டின் தொட பாய்ந்து சென்ற விக்கெட் காப்பாளர் கீத் வெஸ்டேர் அதை அமுக்க. அடுத்த விக்கெட்டும் வீழ்ந்து ஆச்சியை அசைக்கத் தொடங்கியது. இதை தொடர்ந்து தன ஆதிக்கத்தை கடுமையாக இங்கிலாந்து செலுத்த தொடங்கியது. குறிப்பால இரண்டு பந்து வீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீசி களத்தடுப்பாளர்களுக்கு வேலை வைக்கவே இல்லை.
அனேகமாக எதிர்கொண்டு ஆடிய பந்துகளை துவசம் செய்ய முடியாமல் தடுமாறிய ஆஸி தட்டிவிட்டு விரைவாக ஓடி ஒவ்வொரு ஓட்டமாக சேர்க்க தொடங்கியது. இந்த நேரத்தில் பல ரன் அவுட் வாய்ப்புகளை இங்கிலாந்து தவற விட்டது. நான்கு ஓவர்கள் நிறைவடைந்து ஐந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே ஆஸி தன முதலாவது பவுண்டரியை பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் தொடர்ந்து வந்த ஒரு சில ஓவர்களில் எந்த வித பர பரப்பும் இன்றி ஆஸி துடுப்பெடுத்தாடினாலும் என்ன தான் அதிரடியாய் ஆட முற்பட்டாலும் ஓட்டங்களை பெறுவது கடினமாக இருந்தது.

அநேகமான பந்துகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே அடிக்கப்படாமல் இருக்க இடையிடையே நான்கு ஓட்டங்களும் பெறப்பட மெது மெதுவாய் ஒரு ஓட்ட இலக்கை நோக்கி கிளார்க்கும் டேவிட் ஹசியும் கொண்டு செல்ல முற்பட்ட வேளை. ஸ்வான் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்த கிளார்க் எதிரணியின் தலைவரின் அற்புதாமான பிடி எடுப்பின் மூலம் (வர்ணிக்க முடியாதளவுக்கு அற்புதமான பிடிஎடுப்பு அது) இருபத்தேழு ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து ஆஸியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான வைட் வந்தாலும் அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் பல்லுக் கழன்று போய் இருந்த ஆஸி பத்து ஓவர்களில் வெறும் நாற்பத்தேழு ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பதின்மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்துவீச்சை மைதானத்தை விட்டு வெளியேற்றி இறுதிப்போட்டியின் முதலாவது ஆறு ஓட்டத்தை பெற்றுக்கொடுத்தார் ஹசி, அதே ஓவரின் நான்காவாது பந்து வீச்சில் ஒரு நான்கு ஓட்டத்தையும் அடுத்த பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தையும் அடுத்த பந்தில் மீண்டும் ஒரு நான்கு ஓட்டத்தையும் வைட் பெற்றுக்கொடுக்க ஆஸியின் வேகம் அதிகரித்தது.

அந்த ஓவர்கள் தந்த உற்சாகத்தில் ஆஸி மெதுவாக எழுந்து தன் அசுர பலத்தை காட்ட முற்பட்டது. ஆறும் நான்கும் கிடைப்பது அரிதாக இருந்த நேரம் ஆறும் நான்கும் அடுத்தடுத்து அடிப்பதே கொள்கை போல ஆட தொடங்கினர் வைட்டும் டேவிட் ஹசியும். தொடர்ந்து சுழல் பந்துகளை இவர்கள் துவசம் செய்ய கோலிங் வூட், லுக் ரைட்டை அழைத்தார் அதற்க்கு பலன் தரும் வகையில் மூன்று வீர்கள் ஓடிச் சென்றாலும் கடந்த முறை பிடி எடுப்பை தவற விட்ட அதே பிராட் அபாரமான பிடி எடுப்பை எடுக்க சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வைட் முப்பது ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டம் இழக்க களத்தில் தன் சகோதரருடன் மைக் ஹசியும் இணைந்தார். கடந்தமுறை கிட்டத்தட்ட இதே நிலையில் துடுப்பெடுத்தாட வந்த மைக் ஹசி பாகிஸ்தானுக்கு எதிராக சூறாளி ஆட்டம் ஆடி இறுதிக்குள் கொண்டு வந்தவர் என்பது நினைவு கொள்ளத் தக்கது. (இதை மறக்க முடியுமா என்பது கேட்கின்றது.)இறுதி மூன்று ஓவர்களிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிப்பதற்கு ஆஸி முயற்ச்சித்தாலும் இங்கிலாந்தும் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தாலும் அதையும் மீறி ஹசி சகோதர்கள் தங்களால் முடியுமான பந்துகளை அடித்து ஓட்டங்களை அதிகரித்தனர். இறுதிக் கட்டத்தில் தன் மூன்றாவது அரை சதத்தை பூர்த்தி செய்த டேவிட் ஹசி, கடின முயற்சியின் பின் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக்கொடுக்க இறுதி ஓவரில் இரண்டாவது பந்தை தட்டி விட்டு ஓடிக்கொண்டிருந்த வேளை மிக அபாரமான களத்தடுப்பின் மூலம் சிறப்பான பங்களிப்பை வழங்கிய டேவிட் ஹசியை வெளியேற்றி ஆஸியின் ஓட்ட வேகத்தை பெருமளவில் கட்டுப்படுத்தினர். கடந்த போட்டியை போல இறுதிப் பந்துகளில் இம்முறை பெரிதாக ஹசியினால் சாதிக்க முடியாமல் போக இறுதியில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்று தங்கள் இன்னிங்க்சை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.

இந்த ஓட்ட எண்ணிக்கையை பொறுத்தவரை ஆஸிக்கு நல்ல ஒரு ஓட்டமாக இருக்கின்றது. ஆஸியின் பந்து வீச்சாளர்கள் இந்த ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திறன் இருந்தாலும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்ற கேள்வியே இருந்தது.
இம்முறை என்ன நடக்கப்போகின்றது. இங்கிலாந்து சாதிக்குமா? நீண்டகால சாபம் மாறுமா அல்லது மீண்டும் தங்கள் பலத்தை ஆஸி காட்டுமா? என்ற கேள்வியோடு நான் காத்திருந்தேன். அத்துடன் ஆஸி வழக்கமாக தங்கள் ஆயுதமாக எடுக்கும் பவுன்சரை இம்முறை எடுப்பார்களா? என்ற கேள்வியோடு கொஞ்சநேரம் நான் காத்திருந்தேன். காரணம் பந்துக்கு பந்து போட்டியை பார்த்து இடும் பதிவல்லவா இது. என்னதான் இருந்தாலும் ஒரு சுவாரஸ்யமான விடயங்களையும் தவற விடாமல் இருக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். கடந்தமுறை இரவு முழித்திருந்து இட்ட இடுகைக்கு அமோக ஆதரவு கிடைத்துக்கொண்டிருக்கின்றது(இன்னும் வாக்கு கிடக்குதுங்கோ) அந்த ஆதரவு உற்சாகம் தான் இந்த பதிவையும் இட வைக்கின்றது. எனவே இந்த பதிவை இட்டுக்கொண்டிருக்கின்றேன்.

நானும் களைத்துப் போனேன் நீங்களும் கொஞ்சம்ஆறி அமர இந்த படத்தை பாருங்கள் அடுத்த துடுப்பாட்டம் பற்றி நான் எழுத முன்.


இதோ ஆரம்பமாகிவிட்டது இங்கிலாந்தின் துடுப்பாட்டம் முதலாவது ஓவரில் ஆஸியினால் கட்டுப்படுத்தப்பட கடந்த போட்டிகளில் நல்ல அடித்தளம் இட்டுக் கொடுத்த இங்கிலாந்தின் அதே ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமான வெற்றிக்கான ஓட்டத்தை சேர்க்க தொடங்கினர். ஆனால் இரண்டாவது ஓவரில் டைட் தன் வேகத்தைக் காட்ட டேவிட் ஹசியிடம் பிடிகொடுத்து லம்ப் ஆடமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்தின் அடித்தளம் ஆட்டம் கண்டாலும் தொடர்ந்து வருபவர் கெவின் பீட்டர்சன் என்ற காரணத்தினால் இன்னும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

மூன்றாவது ஓவரிலியே தங்களுடைய முதலாவது நான்கு ஓட்டத்தை பதிவு செய்து ஓட்ட வேட்டையை ஆரம்பித்தனர் இங்கிலாந்து வீரர்கள். ஆனால் மைதானத்தில் இருந்த ஸ்க்ரீனில் ஏற்பட்ட கோளறு காரணமாக சிறிது நேரம் தடைப்பட்ட போட்டி மீண்டும் ஆரம்பித்த வேளை அடுத்த பந்தில் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்து நம்பிக்கை அளித்தார் கீத் வெஸ்டேர். இந்த நம்பிக்கையோ என்னவோ தொடர்ந்து அதிரடியை தொடர்ந்தார் அவர். பீட்டர்சன் எதிர்கொண்ட பந்து விக்கெட் காப்பாளரையும் தாண்டி நான்கு ஓட்டங்களை பெற அணியும் தன் பலத்தை அதிகரித்துக்கொண்டது. மெது மெதுவாய் தங்கள் வெற்றியை நோக்கி இங்கிலாந்து தன் பலத்தைக் காட்டிக் கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கின்றது.

பவர் பிளே நிறைவடைந்ததன் பின் பீட்டேர்சனுக்கும் சாமி வந்தது போல அடித்தாட மெது மெதுவாய் ஆஸியின் உலக கிண்ண கனவை தகர்க்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து சுழல் பந்து வீச்சாளர் சிமித் பந்துவீச வர இதற்க்கு தானே காத்திருந்தோம் என்பது போல இரண்டு பெரும் அடித்தாட முனைந்தாலும் ஓரளவுக்கு சிமித் கட்டுப்படுத்தினார். ஆனால் பந்துவீச வாட்சனை கிளார்க் அழைக்க கீத் வெஸ்டேர் தன் கோபத்தைக் காட்டும் விதமாக அதிரடியாக ஆடி ஆஸியை நிலை குலைய வைத்தார். பந்து வீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் அடித்து துவைத்தாலும் எல்லைக் கோட்டுக்கருகே வைத்து பந்தினை தடுத்து ஓட்ட வேகத்தை குறைத்தனர் ஆஸி வீரர்கள்.

வட்சன் வீசிய ஒன்பதாவது ஓவர் இங்கிலாந்துக்கு மிக சாதகமான ஓவராக அமைய இம்முறை இங்கிலாந்துக்கு தான் உலக கிண்ணம் என்பதை உறுதியாக என்னால் சொல்லக் கூடியதாக இருந்தது. அடுத்து வந்த ஓவரில் கூட இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நானா நீயா என்ற கணக்கில் அதிரடியாய் ஆட கிளார்க்கு நிச்சயம் கலக்கி இருக்கும்.பத்து ஓவர்கள் நிறைவில் எழுபத்து மூன்று ஓட்டங்கள் பெற்று இங்கிலாந்து பலமான நிலையில் இருந்த நிலையில் அடுத்த ஓவரை வட்சன் வீசிய வேளை லாங் ஆன் திசையில் பீட்டர்சன் வழங்கிய மிச்சல் ஜோன்சன் பிடிஎடுப்பை தவற விட இங்கிலாந்து இன்னுமொரு விக்கெட் இழப்பை தடுத்துக்கொண்டது. இதன் பின் வீறு கொண்டெழுந்த கீஸ் வெஸ்டேர் இமாலயமான ஒரு ஆறு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார். அதை தொடர்ந்து அதே ஓவரில் இன்னுமொரு நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்து தன் முதல் இறுதிப் போட்டியில் ஆடும் கீஸ் வெஸ்டேர் இந்த போட்டியின் வெற்றியில் தன் பொன்னான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்தார். இப்படியே தொடர்ந்த இவரின் பொறுப்பான அதிரடி காரணமாக இவர் அரை சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் மறு பக்கம் தன் விஸ்வரூபத்தை காட்டி ஒரு நான்கு ஓட்டம் இன்னொரு ஆறு ஓட்டத்தை பெற்று வெற்றியை மேலும் இலகுவாக்கினார். அதை தொடர்ந்து கீஸ் வெஸ்டேர் தன் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

அரை சதத்தை தொடர்ந்து அதிரடியின் கணத்துக்கு மாறிய கீஸ் வெஸ்டேர் ஒற்றைக் கையால் இமாலய சிக்ஸ் ஒன்றை பெற போட்டி முற்று முழுதாக இங்கிலாந்தின் கையில் மாறிவிட்டது. எந்தவிதமான இலகுவான ஆட்டமிழப்பு வாய்ப்புகளையும் வழங்காமல் இந்த இரண்டு வீரர்களும் மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தனர்.

பதின் நான்காவது ஓவரில் இன்னும் முப்பது ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் தான் எதிர் கொண்ட பந்தை மிக உயரமாக தூக்கி அடிக்க மேலிருந்த பந்து எல்லைக்கோட்டுக்கருகே நின்ற வார்னரின் கையில் தஞ்சம் புக சிமித்தின் பந்து வீச்சில் மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பீட்டர்சன் நாற்பத்தேழு ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழக்க இந்த உலக கிண்ணத்தை கையில் ஏந்தப்போகும் வீரர் என்று எண்ணப்பட்ட போல் கோலிங்வூட் களமிறங்கினார். இந்த நிலையில் மிக மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த கீஸ் வெஸ்டேர் ஜான்சன் வீசிய பந்தை முன்னோக்கி வந்து அடிக்க முற்பட்ட வேளையில் பந்தை எட்டவே முடியாமல் போக அந்த பந்து விக்கெட்டை தகர்த்தெறிந்து போட்டியின் போக்கில் மிக மிக சுவாரஸ்யமான ஒரு திருப்பத்தை ஏற்ப்படுத்தியது. இந்த ஆட்டமிழப்பு இங்கிலாந்துக்கு பின்னடைவாக இருக்குமா? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.விக்கெட் வீழ்த்தப்பட்டதன் பின் ஜான்சனில் ஓவரில் எந்த விதமான ஓட்டமும் பெறப்படாமல் போகும் என எதிர்பார்த்த வேளை அகலப்பந்து ஒன்று வீசப்பட அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது.
போட்டி பரபரப்பை நோக்கி சென்ற நிலையில் ஒரு ஆறு ஓட்டம் ஒன்றை பெற்றுக்கொடுத்து மோர்கன் வெற்றியை நோக்கி மிக வேகமாக நகர இங்கிலாந்தின் கனவு வரலாறு பொன் எழுத்துக்களால் பறிக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் கிரிக்கெட் சரித்திரத்தில் முதலாவது உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த தலைவர் என்ற பெருமையை இன்னும் சற்று நேரத்தில் உங்களுக்கு தருவேன் என்பது போல மோர்கனின் ஆட்டம் அமைந்தது. தூக்கி அடிக்கப்பட்ட பந்து ஓடிச் சென்ற களத் தடுப்பாளரால் கூட பிடி எடுக்க முடியாமல் போக இங்கிலாந்து அணித்தலைவர் இனியும் தன்னால் பொறுக்க முடியாது என்ற நிலையில் தன் பங்குக்கு ஒரு ஆறு ஓட்டத்தை பெற்று வெற்றிக்கு இன்னும் ஐந்து ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தார் கோலிங்வூட்.

அடுத்ததடவை தன் துடுப்பினாலேயே நான்கு ஓட்டம் ஒன்றை பெற்று ஓட்டத்தை சமர்பிக்க அதற்க்கு அடுத்த பந்திலும் நான்கு ஓட்டம் ஒன்றைக் பெற்று முதல் முறையாக உலக கிண்ணம் ஒன்றை வென்று சாதனை படைத்திருகின்றது. இங்கிலாந்து.

இந்த போட்டித்தொடரின் நாயகனாக பீட்டர்சன் தெரிவாகும் வாய்ப்பு இருக்கின்றது. வேறு யாரும் தெரிவு செய்யப்பட்டால் உடனே மாற்றிவிடுவோம். உடனடி பதிவை தர வேண்டும் என்ற காரணத்தால் இதோ உங்களுக்கான என் பதிவு.

தொடர் நாயகனாக பீடேர்சனே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். எனவே போட்டியின் இறுதிப்பந்து வீசப்பட்ட நிலையில் நான் இட்ட பதிவு எனக்கும் வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. எனவே பதிவில் எந்தவித மாற்றமும் செய்ய வண்டிய அவசியமில்லை. இங்கிலாந்துக்கு என் வாழ்த்துக்கள்.

24 கருத்துரைகள்:

அத்திரி said...

super fast pathivu

Atchu said...

என்ன வேகமான பதிவு,வாழ்த்துக்கள்.

றமேஸ்-Ramesh said...

நல்ல பதிவு.. வுவுவுவுவுவுவுவுவுவுவுவுவு இவ்வளவு வேகமா... வெற்றியில இருந்தவராச்சே.. ரொம்ப ஓவர் தான் வாழ்த்துக்கள். இங்கிலாந்து நண்பரே....

Subankan said...

அப்பாடா, ஒரு படியா சதீஷ் சப்போட் பண்ணின டீம் ஜெயிச்சாச்சுப்பா

shan shafrin said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்..... நல்லாயிருக்குண்ணா....... :)

soundar said...

சதீஷ் இன் பதிவை பார்த்து இங்கிலாந்து
அணி வெற்றி பெற்று விட்டது

Anonymous said...

ஏய் சத்தியமூத்தி நீ science centerல படிச்சநிதாநே?

கமல் said...

இதைத் தான் சொல்லுவதோ? பந்துக்குப் பந்து வர்ணணை என்று?
உங்களின் அபாரத் திறமைக்கு வாழ்த்துக்கள்.

Sri said...

Big big Congrats to England...Big achievement.

Riyas said...

சதீஸ் உங்க பதிவை படிச்சாச்சு நல்லாயிருக்கு.. தொடருங்கள்

Giri said...

@ Sathish,

excellent live relay...!! I missed it yesterday!

UFO said...

England INVENTED cricket in 18th century......

....but.....

it just has DISCOVERED the world cup in 21st century...!

well-done... congrats...

SShathiesh-சதீஷ். said...

@அத்திரி

Fast Comment நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Atchu

வாழ்த்துக்கு நன்றி என்ன வேகம் என சொல்ல முடியவில்லை காரணம் நான் கணக்கிடவில்லை. லொள்

SShathiesh-சதீஷ். said...

@றமேஸ்-Ramesh

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் சந்தோசம்.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

அதுதான் என்னாலும் நம்ப முடியல. எப்பிடி இது நடந்தது.

SShathiesh-சதீஷ். said...

@shan shafrin

வாழ்த்துக்கு நன்றிண்ணா

SShathiesh-சதீஷ். said...

@soundar

ஒரு சின்ன திருத்தம். அவங்க வென்றதன் பின் தான் நான் பதிவை இட்டேன். வருகைக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@Anonymous

அண்ணா வாங்கோ வாங்கோ இந்தியா சென்னை எப்படி இருக்கு. அப்புறம் மதிய இரண்டு ஐந்துக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்காமல் பதிவெல்லாம் படிக்கிறிங்க. ஒன்பது நிமிஷன் என் வலைப்பூவில் செலவளிச்சிருக்கிங்க. நல்ல விஷயம் சந்தோசம். நல்லாய் இருக்கிங்களா?

SShathiesh-சதீஷ். said...

@கமல்

உங்கள் அருமையான வாழ்த்துக்கு அன்பான நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

@Sri

உங்கள் கருத்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@Riyas

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் ஆதரவுடன் தொடர்வேன்.

SShathiesh-சதீஷ். said...

@Giri

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பதிவை படித்து ஓரளவிற்காவது உங்களுக்கு போட்டியை பார்த்த அனுபவம் கிடைத்திருந்தால் சந்தோசம்.

SShathiesh-சதீஷ். said...

@UFO

உங்கள் கருத்துக்கு நன்றி.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive