Tuesday, August 25, 2009

பதிவர் சந்திப்பே ஒருவாறு நடந்து முடிந்துவிட்டது. ஆனால் என்னால் இன்று வரை அங்கே நடந்த உண்மைகளை போட்டு உடைக்கமுடியாமல் போய்விட்டது வருத்தமே.காரணம் சந்திப்பு நடந்த அன்று மாலையே எனக்கு வேலை ஆரம்பமாகி இரவு பன்னிரண்டு வரை அதுதொடர, நேற்று வீடு மாற்றம்,இன்று போலீஸ் பதிவுகள் என எல்லாம் முடித்து விட்டு வந்துதான் இப்போது உண்மைகளை சொல்லப்போகின்றேன். யாராவது ஆரம்பிக்கணும் என்ற ஒன்றுக்காக நான்கு சிங்கங்கள்(வந்தி அண்ணா அப்படித்தான் சொன்னார்) ஒன்றாகிய இடம் ஒன்றான விபரங்கள் அடங்கிய பதிவு மிக விரைவில் வந்தி அண்ணாவினால்அல்லது லோஷன் அண்ணாவினால்
பதியப்படும். அப்போது இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

புல்லட்டின் கைவண்ணம்.

அந்த நால்வரும் நாங்கள் தொடக்கி வைப்போம் என துணிந்து எடுத்த முடிவினால் கடந்த அன்று இலங்கை பதிவர்களின் இனிய முதலாவது ஒன்று கூடல் நிகழ்வு ஆரம்பமானது. நல்லதோ கெட்டதோ ஆரம்பித்து வைப்பது என்பது எல்லாராலும் முடியாது. ஆனால் அதை ஆரம்பித்து வைத்தவர்களுக்கு நன்றிகள். காலை எட்டு மணிக்கு என்னையும் வர சொல்லிவிட்டார்கள். தொகுத்து வழங்கும் விடயம் தொடர்பாக என்னுடன் பேச. நானும் எட்டு பத்தளவில் வர அங்கே இருந்தது ஆதிரை மட்டுமே. அதன் பின் ஒரு உலக மகா காரியம் செய்ய நான் மீண்டும் வீடு சென்று வர ஓரளவிற்கு பலர் வந்திருந்தனர். ஒன்பது மணி ஆகியதும் தொடங்கலாமென்று பார்த்தால் ஒரு சில இருக்கைகள் காலியாக இருந்தன. தொடர்ச்சியாக வந்த பதிவர்களின் வருகையை பார்த்து இன்னும் சற்று நேரத்தில் அதுவும் நிரம்பிவிடும் என காத்திருக்க அந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை.

அறிவிப்பில் நான்.

9 .15 அளவில் நிகழ்ச்சியை தொகுக்க ஆரம்பித்தேன்.(வானொலியிலும் இவன் தொல்லை இங்கேயுமா என எத்ததனை பேர் திட்டினார்களோ? வானொலி அறிவிப்பில் நாலு சுவருக்குள் யாரும் இருக்கமாட்டார் இங்கே எத்தனை பேர்.) புல்லட்டின் அறிமுக உரை எல்லாவற்றுக்கும் அச்சாரம் போட்டது. சிரிப்பு வெடி வரவைத்தது புல்லட்டின் Gun(அதுதாங்க வாய்).

பேர கேட்டாலே அதிருதெல்ல. புல்லட்

அதன் பின்னர் bloggerன் பத்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக புல்லட்டின் யோசனையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.கடலேறி ஆதிரையின் விளக்க உரையுடன் நிகழ்விற்கு வந்த நல்லுள்ளங்களில் எழுந்தமான அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மெழுகுதிரி ஏற்றிவைக்க எழில் அண்ணா உட்பட்ட குழுவினர் கேக் வெட்டி சிறப்பித்தனர்.(கடைசிவரை கேக் கிடைக்கலையே.) சுபானுவின் சட்டம்

இந்த சந்திப்பின் மூலம் அறிமுகமான சுபானுவின் வலைப்பதிவும் சட்டமும் சட்டப்படி இருந்தது. சிலருக்கு இவை தெரிந்தாலும் வந்திருந்த பலருக்கு உதவியாக இருந்தது. ஊஞ்சலில் ஆடுபவர் இங்கே பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். திரட்டிகள் பற்றி விளக்க வந்த மருதமூரான் தனது யாழ்தேவியை மட்டும் முன் நிலை படுத்தியது உறுத்தலாக இருந்தது. பரந்து பட்டு அவரின் பேச்சு இருந்திருந்தால் கலந்துரையாடலில் அவ்வளவு கேள்விக்கணைகளை அவர் சந்தித்திருக்க முடியாமல் போய் இருக்கும் என்பது என் கருத்து. அதே நேரம் யாழ் தேவி என்ற பெயர் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டது.

யாழ் தேவியின் சொந்தக்காரர்.

யாழ் தேவி என்னும் பெயர் சூட்டும் உரிமை அதை நடத்துபவர்களுக்கே உரியது. வீணாக நாங்களே எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி பதிவர்களை ஊக்குவிக்கும் திரட்டிகளை அழித்துவிடாமல் இருப்பதே சிறந்தது. சிலர் சொல்வது போல யாழ்தேவியில்(திரட்டியைதான் சொல்கின்றேன்) பிரச்சனைகள் இருந்தால் அதை கவனத்தில் கொள்வது திரட்டியின் எதிர்காலத்துக்கு நல்லது.

கோபி,மது நேரடி ஒலி,ஒளிபரப்பில்.

கௌ போய் மதுவதனன் முயற்சியில் யாழில் இருந்து வந்த ஊரோடி பகியும் இணைந்து நிகழ்வை நேரடி ஒலி ஒளி பரப்புச் செய்தமைக்கு என் சார்பாக நன்றிகள்.இதன் மூலம் நேரடியாக வர முடியாதவர்கள் கூட அங்கே இருந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி. தொடர்ந்து சேரன் கிரிஷின் தொழில்நுட்ப விளக்க உரை மிகப்பிரியோசனமாக இருந்தது. என்னைப்போன்ற வளர்ந்து வரும் பதிவர்களுக்கு இது நிச்சயம் மிகப்பெரிய அறிவை கொடுத்திருக்கும். வந்த பதிவர்கள் யாரென தெரியாமலே கூட்டம் முடிந்து விடுமோ என யாரும் குறைப்பட்டு கொள்ளாமல் இருக்க பதிவர் அறிமுகம் இடம்பெற்றது. இளம் பதிவர்.

பத்துவயது சிறுவன் முதல் பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் வரை தங்களை அறிமுகம் செய்த போது அடடா அவனா நீ என்னும் வடிவேல் வசனம் தான் எனக்குள். காரணம் எழுத்தால் சாதித்துக்கொண்டிருக்கும் அந்த பதிவர்களை நேரே பார்க்கும் போது என்னால் என்னையே நம்பமுடியவில்லை.சில பெண் பதிவர்களும் கலந்து கொண்டது நிகழ்வின் முழுமைத்தன்மையை பறைசாற்றியது. உணவு நேரம்

இடையில் புல்லட்டின் வடைதானம் பற்றிச் தானம் கோப்பிதானம் என்பவற்றோடு கேக் தானம் இடம்பெற்றது. வயிற்றுப்பசிக்கு உண்டவர்கள் சூடும் சுவாரஸ்யமும் மிக்க கலந்துரையாடலுக்கு செல்ல முன்,சிறப்புரை ஆற்றிய எழில் அண்ணாவின் உரை முத்தாய்ப்பாய் அமைந்தது. அதன் பின்னர் கலந்திரையாடலுக்கு அழைத்து செல்லும் வண்ணம் லோஷன் அண்ணாவின் உரை அமைந்தது. இது பதிவர்களுக்கான படையல் லோஷன் அண்ணாவினால் .

கலந்துரையாடலில் அனானிகள் பிரச்சனை பிரதான இடமாக வரும் நானும் பேசலாம் என்று பார்த்தால் விசைப்பலகை யாழ்தேவி என்னும் சுப்பரின் கொல்லையிலே கலந்துரையாடலின் பல நிமிடங்கள் கரைக்கப்பட்டன. இந்த இடத்தில் சகல பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் முக்கியமான விடயங்களை பேச வேண்டும் தான் அதற்காக இப்படி ஒரே விடயத்தை நாலு பேர் மாறி மாறி பேசுவதை விட எல்லோரும் வேறு பல நல்ல விடயங்களை பேசி இருக்கலாம் அல்லவா.எனவே அடுத்த சந்திப்பில் இதை கவனத்தில் கொண்டால் நல்லது. கலந்துரையாடல் சூடு பிடிக்கும் போதெல்லாம் புல்லட்டிடம் ஒலிவாங்கியை கொடுத்து விட்டு நான் எஸ்கேப். ஆனால் என்னதான் சூடாக விவாதித்தாலும் எல்லோரும் புன்னகையுடன் நண்பர்களாய் விடைபெற்றது. இந்த பதிவர் சந்திப்பின் வெற்றியே. இடையில் என்னுடன் சேர்ந்து தொகுத்தளிக்க இருந்த அறிவிப்பாளினி டயானா அக்கா தாமதமாக வந்து தன்னை காப்பாற்றி கொண்டார். இல்லாவிட்டால் என்னுடன் சேர்த்து இன்ப அவஸ்தைக்குள் அவரும் தள்ளப்பட்டிருப்பார். பின்னூட்டி பிளந்து கட்டிய வந்தி அண்ணா

பின்னூட்டத்துக்கு பின்னூட்டமிட்டு கலக்கும் வந்தி அண்ணா நிகழ்வின் நிறைவாக நன்றி கலந்த பல உண்மைகளுடன் பின்னூட்டம் வழங்கினார். எந்த வித தீர்மானங்களும் இன்றி அனைத்து பதிவர்களின் விபரங்கள் திரட்டளுடன் இனிய சந்திப்பு இதமாக நிறைவடைந்தது. நான் விட்ட குறை தொட்ட குறைகளை சரிவர செய்து இதைப்பற்றி எழுதிய பதிவர்களின் பதிவுகள்.....


வந்தியத்தேவரின் : நாம் சாதித்துவிட்டோம்

கௌபாயின் இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்

கடலேறியின் பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்

கிருத்தியின் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு

வசந்தனின் இலங்கை பதிவர் சந்திப்புக்கு ஒரு எதிர்ப்பாட்டு

ஈழவனின் பார்வையில் இலங்கை பதிவர் சந்திப்பு

சந்ருவின்,ஒளிபரப்பினூடான பார்வையில்

மயூரேசனின் இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

சயந்தனின் சந்திப்பு ஒரு இசைப்பாட்டு

விகிபீடியாவில் முதல் சந்திப்பு பற்றி

லோசன் பார்வையில் பதிவர் சந்திப்பு

கோபியின் படங்களுடனான ஒரு பதிவு

சுபானுவின் வரலாற்றின் பக்கங்களில் முதலாவது பதிவர் சந்திப்பு

ஹரனின் பதிவர் சந்திப்பில நயன்தாரா பரபரப்பு

மருதமூரானின் அன்புள்ள காதலுக்கு

அமுதனின் இலங்கை பதிவர் ஒன்றுகூடல்

இலங்கனின் பதிவர் சந்திப்பும் பற்றீசும்

இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது


நன்றி ம். பட உதவி: ஆதிரை,வந்தி அண்ணா,சுபானு, புல்லெட்,லோஷன் அண்ணா.

16 கருத்துரைகள்:

jerry eshananda. said...

என்னங்கப்பா "தலைப்பிலேயே பீதிய கெளப்பறீங்க"

சுபானு said...

வாங்கோ.. எங்கே போய்விட்டீர்கள்.. உங்களைத்தான் எதிர்பார்த்தோம்.. லேட்டா வந்தாலும் லேட்டஸாதான் வந்திருக்கீங்க.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
உங்களது நிகழ்ச்சித் தொகுப்பு அருமை..

சந்ரு said...

நானும் அனானிகள் தொடர்பாக பேசப்படும் என்று எதிர் பார்த்தேன். இன்று அனானிகளின் தொல்லை அதிகரித்து விட்டது.

யாழ்தேவி பற்றிய சர்ச்சை தேவையற்ற விடயமே.

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

யோ வாய்ஸ் said...

நல்லா எழுதியிருக்கிறீங்க. தலைப்ப பார்த்து அடிச்சி பிடிச்சி வந்தால், திடுக்கிடும் உண்மை எல்லாம் நாங்க பார்த்ததுதான். நான் 2 பதிவு இது சம்பந்தமா போட்டிருக்கேன் வந்து பாருங்க. உங்களுக்கு கேக் கிடைக்காத விஷயம் இப்பதான் தெரிஞ்சது. பதிவு போட முன்னால தெரிஞ்சிருந்தா அத ஒரு படமாவே போட்டிருக்கலாம். எப்படியும் என் படபதிவில் உங்களதான் ரொம்ப கலாய்ச்சதா சொல்லுறாங்க..

Nimalesh said...

thx for the infor............

ஈழவன் said...

தங்களின் பதிவர் சம்பந்தமான பதிவு பிந்தினாலும் கூட தலைப்பு வாசகர்களை வாசிக்கத் தூண்டுகின்றது, பாராட்டுக்கள்.

நிகழ்வின் உங்களின் தொகுத்தளிப்பு பிரமாதம் அதற்காக பிரத்தியேக பாராட்டு தெரிவித்தாக வேண்டும், "நிறைவெய்திய இலங்கைப் பதிவர் சந்திப்பு! - இணையவழி ஒளிபரப்பினூடான தேடல்" எனும் எனது பதிவில் உங்களது முக்கியத்துவத்தைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.

மீண்டும் பாராட்டுக்கள் சதீஸ்.

கனககோபி said...

நான் ஒரே ஒரு முடிவு எடுத்திற்றன்.
அடுத்த முறை, புகைப்படம் எடுக்கும் போது வடிவாக தெரியக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும். படுபாவிப் பசங்க, நானும் தேடுறன் தேடுறன் என் படத்த காணவே இல்ல...
ம்...
நீங்கள் தான் பெயரில்லா நபர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட அப்பாவியோ...
ம்.. ம்...
// jerry eshananda. கூறியது...
என்னங்கப்பா "தலைப்பிலேயே பீதிய கெளப்பறீங்க"//
வழிமொழிகிறேன்...

மருதமூரான். said...

சதிஷ்.......

யாழ்தேவி திரட்டி என்னுடையது அல்ல. அந்த திரட்டி உருவாக்கத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன் அவ்வளவே... யாழ்தேவி திரட்டியின் பெயர், இலச்சினை குறித்து திறந்த விவாதம் நடத்தவுள்ளதாக அதன் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சதிஷ்.... தாங்கள் பதிவர் சந்திப்பை திறம்பட தொகுத்து வழங்கியிருந்தீர்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு தமிழ் ஒலிபரப்பாளர் தமிழை கொலை செய்யாமல் பேசியதைக்கேட்டு எனக்கு மிகுந்த சந்தோஷம். ஏனென்றால், பல நாராசங்களையே (இதில் தமிழ் கொலைகளை குறிப்பிடுகிறேன்) வானொலிகளில் கேட்க முடிகிறது. வாழ்த்துக்கள் தங்கள் பணிக்கு.

SShathiesh said...

jerry eshananda. கூறியது...
என்னங்கப்பா "தலைப்பிலேயே பீதிய கெளப்பறீங்க

:=))என்ன பண்றது சில விஷயங்களுக்கு இப்படி வைத்தால் தானே பலரை சென்றடைகின்றது. உங்கள் வருகைக்கு நன்றிகள்.

SShathiesh said...

சுபானு கூறியது...
வாங்கோ.. எங்கே போய்விட்டீர்கள்.. உங்களைத்தான் எதிர்பார்த்தோம்.. லேட்டா வந்தாலும் லேட்டஸாதான் வந்திருக்கீங்க.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
உங்களது நிகழ்ச்சித் தொகுப்பு அருமை.

:==))வந்திட்டோமிள்ளே உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். வேலைப்பளு காரணமாக தாமதம்....

SShathiesh said...

சந்ரு கூறியது...
நானும் அனானிகள் தொடர்பாக பேசப்படும் என்று எதிர் பார்த்தேன். இன்று அனானிகளின் தொல்லை அதிகரித்து விட்டது.

யாழ்தேவி பற்றிய சர்ச்சை தேவையற்ற விடயமே.

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

:=))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

SShathiesh said...

யோ வாய்ஸ் கூறியது...
நல்லா எழுதியிருக்கிறீங்க. தலைப்ப பார்த்து அடிச்சி பிடிச்சி வந்தால், திடுக்கிடும் உண்மை எல்லாம் நாங்க பார்த்ததுதான். நான் 2 பதிவு இது சம்பந்தமா போட்டிருக்கேன் வந்து பாருங்க. உங்களுக்கு கேக் கிடைக்காத விஷயம் இப்பதான் தெரிஞ்சது. பதிவு போட முன்னால தெரிஞ்சிருந்தா அத ஒரு படமாவே போட்டிருக்கலாம். எப்படியும் என் படபதிவில் உங்களதான் ரொம்ப கலாய்ச்சதா சொல்லுறாங்க.

:==)0நல்லா போய்ட்டிருந்த என் ட்ரக்கில ஏனையா இப்படி ஒரு வெடிகுண்டு. உங்கள் பதிவு பார்த்தேன் நன்றாக உள்ளது.

SShathiesh said...

Nimalesh கூறியது...
thx for the infor...........

:==))வருகைக்கு நன்றிகள்.

SShathiesh said...

ஈழவன் கூறியது...
தங்களின் பதிவர் சம்பந்தமான பதிவு பிந்தினாலும் கூட தலைப்பு வாசகர்களை வாசிக்கத் தூண்டுகின்றது, பாராட்டுக்கள்.

நிகழ்வின் உங்களின் தொகுத்தளிப்பு பிரமாதம் அதற்காக பிரத்தியேக பாராட்டு தெரிவித்தாக வேண்டும், "நிறைவெய்திய இலங்கைப் பதிவர் சந்திப்பு! - இணையவழி ஒளிபரப்பினூடான தேடல்" எனும் எனது பதிவில் உங்களது முக்கியத்துவத்தைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.

மீண்டும் பாராட்டுக்கள் சதீஸ்

:==))
உங்கள் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் உங்கள் அந்த பதிவை வாசித்தேன். பதிவர் சந்திப்பில் என் பங்கு ஒரு சிறியதே.

SShathiesh said...

கனககோபி கூறியது...
நான் ஒரே ஒரு முடிவு எடுத்திற்றன்.
அடுத்த முறை, புகைப்படம் எடுக்கும் போது வடிவாக தெரியக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும். படுபாவிப் பசங்க, நானும் தேடுறன் தேடுறன் என் படத்த காணவே இல்ல...
ம்...
நீங்கள் தான் பெயரில்லா நபர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட அப்பாவியோ...
ம்.. ம்...
// jerry eshananda. கூறியது...
என்னங்கப்பா "தலைப்பிலேயே பீதிய கெளப்பறீங்க"//
வழிமொழிகிறேன்..

:+=))நீங்கள் சொல்லி இருந்தா நம்ம புல்லெட் அல்லது லோஷன் அண்ணா உங்களை அழகா வீடியோவோ எடுத்திருப்பார்களே என்ன செய்வது அடுத்தமுறை உங்கள் படத்தை பெரிதாக எடுப்பு. நன்றிகள் வருகைக்கு

SShathiesh said...

மருதமூரான். கூறியது...
சதிஷ்.......

யாழ்தேவி திரட்டி என்னுடையது அல்ல. அந்த திரட்டி உருவாக்கத்தில் நானும் பங்கெடுத்திருக்கிறேன் அவ்வளவே... யாழ்தேவி திரட்டியின் பெயர், இலச்சினை குறித்து திறந்த விவாதம் நடத்தவுள்ளதாக அதன் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சதிஷ்.... தாங்கள் பதிவர் சந்திப்பை திறம்பட தொகுத்து வழங்கியிருந்தீர்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு தமிழ் ஒலிபரப்பாளர் தமிழை கொலை செய்யாமல் பேசியதைக்கேட்டு எனக்கு மிகுந்த சந்தோஷம். ஏனென்றால், பல நாராசங்களையே (இதில் தமிழ் கொலைகளை குறிப்பிடுகிறேன்) வானொலிகளில் கேட்க முடிகிறது. வாழ்த்துக்கள் தங்கள் பணிக்கு

:==))தப்பாக நினைக்காதீர்கள் எனக்கென்னவோ திரட்டி அறிமுகக்த்தில் நீங்கள் யாழ்தேவிக்கு அதிக முக்கியம் கொடுத்ததுதான் இவ்வளவிற்கும் காரணமோ என தோன்றுகின்றது. மீண்டும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive