Saturday, March 13, 2010

கில்லியை தொடரும் கிரிக்கெட்.


கிரிக்கெட், விளையாட்டுகளில் எனக்கு ஓரளவு தெரிந்த விளையாட்டு எனக்கு பெரிதாக விளையாட தெரியாவிட்டாலும் அதை பற்றிய ஓரளவு அறிவை வளர்த்து வைத்துள்ளேன். 1999 பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து தான் கிரிக்கெட் பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே என்னை கவர்ந்த வீரர்கள் அதன் பின் வந்த வீரர்களாக தான் இருக்கும். பெரியவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பிக்கலாமா.

அழைத்தவர்: எப்பூடி.

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.


2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்

(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள் மற்றும் T20

(2) பிடிக்காத போட்டிவகை :சில டெஸ்ட் போட்டிகள். முடிவே இல்லாமல் முடிவதனால்.

(3) பிடித்த அணி : இந்தியா அதன் பின் இலங்கை,நியூசிலாந்து,இங்கிலாந்து .

(4) பிடிக்காத அணி : அவுஸ்திரேலியா. காரணம் மற்ற அணிகளில் என்ன தரமான வீரர்கள் இருந்தாலும் தாங்கள் தான் மன்னர் என ஒரு சில வீரர்கள் நினைப்பது. தங்களை மற்றவர்கள் வென்றால் அதிஷ்டம் என சொல்லி சமாளிப்பது.

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : சச்சின்(காரணம் சொல்லவேணுமா?) ,கங்குலி(அவர் போல நானும் இடக்கை.),சேவாக்(எதற்கும் அஞ்சா அதிரடி பார்க்கும் நேரம் முழுக்க வெறுப்பு வராத ஆட்டம்.),யுவராஜ்(மண்டியிட்டு சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல்.) ,கம்பீர்(கங்குலியின் வாரிசு.),விராட் கோலி(அதிரடி.), தோணி(தல ஆச்சே.),சங்கா(முன்னர் பிடிக்கும் இப்போ வெறுப்பு.) அர்ஜுன(ஒரு ரன்னை கூட நடந்து எடுக்கும் தைரியசாலி) ஸ்டீபன் பிளமின்க்,அடம் கில்கிறிஸ்ட்(அந்த அணியில் இருக்கும் ஒரே நல்லவர்.)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் :பலர் உண்டு. ஆனால் பிரபலங்களை மட்டுமே சொல்கின்றேன். அத்தப்பத்து, டில்ஷான்(இப்போ அடி அடி என அடிப்பது ஆனாலும் ஸ்டைல் இல்லா மலட்டடி.) இன்சமாம்(மனிதன் அவுட்டே ஆகமாட்டார்.) லாரா(காரணமே இல்லை.) பொண்டின்க் (திறமை இருந்தும் வாயால் அலட்டுவதால்.) மைக்கல் கிளார்க் .(குட்டி பொண்டின்க்.) சமரவீர, சல்மான் பட்(இந்தியாவை தாக்குவதனால்.)


(7) பிடித்த விக்கட் காப்பாளர் : தோணி(நம்ம அணிக்காக ஆடுவதால்.) திராவிட்(யார்மே இல்லாத நேரம் அணியின் நலனுக்காக அந்த சுமையையும் ஏற்றதால்.) சங்கா,மார்க் பவ்ச்சர், கில்கிறிஸ்ட்.

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : பார்த்திவ் பட்டேல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : எப்போதும் யுவராஜ் சிங்(பாயும் புலி.) கைப்(ஓடி எடுப்பார்.) சச்சின்(இந்த வயதிலும் ஓடி ஓடி பிடிப்பதால்.) பாண்டிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி(பந்து போக பார்த்துக்கொண்டிருப்பது.) அர்ஜுன(சொல்லவா வேணும்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் :வசீம் அக்ரம், சோயிப் அக்தர்(என்ன தான் குழப்படி பயலா இருந்தாலும் வேகம் எண்டால் வேகம்.) லீ( என் தங்கைக்கு பிடித்ததால் எனக்கும் பிடித்து விட்டது.)

(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : டில்ஹார பெர்னாண்டோ, மொகமத் சாமி, கிலேச்பி, ஷேன் பாண்ட் (இந்தியரை பாழாய் படுத்தியதால்.)

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி(தமிழன் என்னும் பாசம்.) கும்ப்ளே(விடா முயற்சி) ஷேன் வாரன்(சாதனைகளை படைத்ததால். பின்னாளில் திருந்தியதால்)

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ்(வெட்டி பந்தா.)

(17) பிடித்த ஆடுகளங்கள் : இந்தியாவின் சென்னை, கொல்கத்தாவின் ஈடன் காடன், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன்,அடிலெயிட்,சிட்னி,இலங்கையின் காலி, பாகிஸ்தான் லாகூர், இங்கிலாந்தின் ஓவல், தென் ஆபிரிக்காவின் ஜோகனச்பெர்க்.

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : இலங்கையின் தம்புள்ள(இலங்கை வெல்ல வேண்டுமென தயாரிக்கும் மைதானம்.)

(19) பிடித்த சகலதுறை வீரர் : யுவராஜ் சிங், சச்சின், இர்பான் பதான், சனத், கலிஸ், அப்பிரிடி, டானியல் வெட்டோரி.


என்ன ஒரு சகல துறை வீரர் பாருங்க.

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்றூ சைமன்ஸ்.(குழப்படிக்கார பயல்).

(21)பிடித்த அணித் தலைவர் : கங்குலி(இந்தியாவுக்கு வெற்றி என்று ஒன்று இருக்கென சொல்லிக் கொடுத்தவர் தைரியத்தை கொடுத்தவர்) தோணி(அதிஷ்டக்கார தல) மஹேல(பொறுமை சாலி) அர்ஜுன, ஸ்டீவ் வாவ், ஸ்டீபன் பிளமின்க்(நீண்டகாலம் அணியை வெற்றிப்பாதையில் கொண்டுவந்தவர்.)

(22) பிடிக்காத அணித்தலைவர் : சச்சின்,சனத்(துடுப்பால் சாதித்தவர்கள் ஆனால் தலைமையில் சாதிக்கவில்லை.) பாண்டிங்(திமிர்.)

(23) கனவான் வீரர்கள் : சச்சின்,முரளி.

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்,ரவி சாஸ்திரி,கவாஸ்கர்

(25) பிடிக்காத வர்ணனையாளர் :ஹர்ஷா போக்லே

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : டேவ் வட்மோர்(கத்துக்குட்டி அணியை பாயும் புலி ஆக்கியவர்) பாப் வூல்மர் (பயிற்ச்சியில் பல தொழில் நுட்பம் புகுத்தியவர்.) இப்போது கேரி கேச்டன்(இந்தியாவின் வெற்றிகளின் பங்காளன்.)


(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல்(கோச்சர் என்ற பெயரில் வந்து நாசமாக்கியது. )

(28) பிடித்த போட்டி : இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும்.

(29) பிடித்த வளரும் வீரர் : விராட் கோலி.(என்ன பொறுப்பு என்ன அதிரடி. வருங்கால இந்தியா என சொல்லலாம்.)

(30) பிடிக்காத வளரும் வீரர் : ரியான் ஜேம்ஸ் ஹரிஷ்(அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடுகின்றாரே.)


பதிவெழுத நான் அழைப்பது.

1. அகசியம் வரோ ( என்னதான் எழுதிறார் பார்ப்போமே.)
2. சாளரம் கார்க்கி(உறவுக்காக)
4. க.கோபி கிருஷ்ணா( நீண்டகாலம் வேறு ஆணிகள் புடுங்குவதால்.)

வானொலியில் என் இறுதிநாள் பற்றி விரைவில் என் பதிவு வரும். சில பல தனி வேலைகள் உறவினர்களுடன் என் நேரத்தை செலவளிப்பதர்க்காக இந்த சில நாட்களை ஒதுக்கினேன். அத்துடன் வானொலியில் இருந்து விலகிய கவலை இன்னும் மாறவில்லை. எனவே நேரம் வரும் போது என் பதிவையும் எதிர்பாருங்கள்.

பல்டி: கன்கொன் || Kangon அழைச்சதுக்கு நன்றிங்ணா....
ஆனா ஏற்கனவே பதிவிட்டுவிட்டதால் பதிவிடாத ஆதிரை அண்ணாவை (:ப) இந்தப் பதிவிட அழைக்கவும்.....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html கான்கொனின் கோரிக்கையை ஏற்று ஆதிரையை இதை தொடர அழைக்கின்றேன்.
Share:

8 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

அழைச்சதுக்கு நன்றிங்ணா....
ஆனா ஏற்கனவே பதிவிட்டுவிட்டதால் பதிவிடாத ஆதிரை அண்ணாவை (:ப) இந்தப் பதிவிட அழைக்கவும்.....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html

கார்க்கிபவா said...

அழைத்தமைக்கு நன்றி..
ஆனால் கன்கொன்னுக்கு ரிப்பீட்டூ போட்டுக்கிறேன்

http://www.karkibava.com/2010/02/blog-post_24.html

ஏற்கனவே ஆடியாச்சு சகா :))

அ.ஜீவதர்ஷன் said...

ரசனை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் , உங்கள் நாயகர்கள் எதிர்வரும் காலங்களில் ஜொலித்திட வாழ்த்துக்கள்.

ஆதிரை said...

//கான்கொனின் கோரிக்கையை ஏற்று ஆதிரையை இதை தொடர அழைக்கின்றேன்//

கன்கொனின் சதி முயற்சியினால், தங்களுக்கு வாழ்நாள் கடனாளி ஆகிவிடுவேனா என்ற பயம் உறுத்துகின்றது.

அழைப்பிற்கு நன்றி... முயல்கின்றேன்.

KANA VARO said...

sshathiesh said...
உங்களை கிரிக்கெட் ஆட அழைத்துள்ளேன். வந்து ஆடித்தான் பாருங்களேன்.
http://sshathiesh.blogspot.com/2010/03/blog-post_13.html///

பதிவெழுத நான் அழைப்பது.

1. அகசியம் வரோ ( என்னதான் எழுதிறார் பார்ப்போமே.)///

பார்த்திவோங்கண்ணா…
அழைப்புக்கு நன்றி சதீஸ்… பட் நிறைய வித்தியாசம் வரும்…. நீங்க இந்தியா… நான் இலங்கை… சபாஷ் சரியான போட்டி…

EKSAAR said...

R u a Sri Lankan?

priyamudanprabu said...

who will win ipl come and vote here
http://priyamudan-prabu.blogspot.com/

SShathiesh-சதீஷ். said...

@என்ன கொடும சார்

இலங்கையனாக இருந்து கொண்டு இந்திய விளையாட்டு வீரர்களை ரசிப்பது தப்பா? நாட்டுப்பற்றாளன் என்று காட்ட வேறு விடயங்கள் இருக்கின்றன.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive