Wednesday, March 24, 2010

மிருகங்கள் மனிதனானால்-ஒரு உண்மை பதிவு.


ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாவாம்(அது உழுந்து வடையா பருப்பு வடையா என்று இன்றுவரை யாரும் என் சந்தேகத்தை தீர்க்கவில்லை.) அந்தவழியால் வந்த காக்கை ........அடேய் நிறுத்தடா இதுதான் காலம் காலமாய் தெரியுமே என்று யாரப்பா சவுண்ட் விடிறது.....சரி சரி இந்த கதை தெரியுமா நான் இன்னொரு கதை சொல்றன்.

ஒரு கிராமத்தில் இருந்த பத்து பசுக்கள் ஒன்றாக காடுப்பகுதிக்கு அண்மையில் இருந்த புல்வெளிக்கு மேயப்போவது வழக்கம். எப்போதும் ஒன்றாகவே போகும் இவை ஒரு முறை பிரச்சனை பட்டு.......டாங்.........அடேய் என்னடா கதை சொல்றாய்......அடடா இதுவும் தெரியுமா. சரி இந்தக்கதைகள் தெரியும் தானே நேரடியா விசயத்துக்கே வந்திவிடுகின்றேன்.

முதல் கதையில் பாட்டியிடம் வடையை திருடியது காகம் அதே காகத்தை ஏமாற்றியது நரி இப்படி காலம் காலமாக நம் பிஞ்சு மனங்களிலேயே விதை விதைத்து விட்டனர் நம் பாட்டா பாட்டி தொடக்கம் ஆசிரியர் வரை. என் கோபம் என்னவென்றால் அதென்ன எதற்கெடுத்தாலும் மிருகங்களை வைத்தே கதை சொல்வது அவற்றை தப்பாக காட்டுவது. ஏன் நம் முன்னோர்கள் சமகாலத்தவரை வைத்தது கதை சொன்னால் என்ன?ஒருவேளை அந்த மிருகங்களுக்கு இது தெரிந்தால் அவை நம்மை என்ன செய்யும்.

முதலில் மனிதர்கள் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. மனிதரில் நாம் எப்படி ஆண் பெண் என இரண்டு இனம் இருக்கின்றோம அதேபோல மற்ற மிருகங்களிலும் இருக்கின்றன. இதற்கடுத்து பேசும் மொழி வேறுபடுகின்றது இனம் மதம் குலம் கோத்திரம் இன்னும் என்னவென்னவோ எல்லாம் சொல்லி மனிதரில் பல வகை சொல்கின்றனர் சிலர். ஏன் இந்த பாகுபாடு மிருகங்கள் குலம் கோத்திரம் பார்க்கின்றனவா? மதத்துக்காக நாட்டுக்காக இனத்துக்காக என்று வேண்டுமென்றே சண்டை பிடிக்கின்றனவா?

ஆறாவது அறிவென்ற ஒன்று மற்ற மிருகங்களை விட இருக்கின்றது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு செய்வது சரியான காரியமா? ஒரு தடவையாவது சிந்தித்திருக்கின்றோமா நாங்கள் மிருகங்கள் எங்களை பற்றி என்ன நினைக்குமென்று. நாய் போல மாடு போல என்று பேசுகின்றோம். அவை நிச்சயம் தங்களில் கெட்டவர்களை நீ அந்த மனிதன் போல இந்த மனிதன் போல என திட்டி கேவலமாக பேசாதென்பதற்கு என்ன நிச்சயம்.. அதேபோல எங்களை விட தங்களுக்கு அறிவு கூட என நினைத்துக்கொண்டு அவை செயற்படவில்லை என்பதற்கு என்ன நிச்சயம். ஏதாவது ஆராய்ச்சிகள் செய்து பார்ப்பதென்றால் முதலில் மற்ற மிருகங்களுக்கு செய்து பார்க்கின்றோம். அதே போல மிருகங்கள் செய்து பார்த்தால் இந்த உலகில் நாம் யாருமே இருக்க முடியாது.

காரணம் மிருகங்களுடன் போட்டி போட நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் முடியாது. ஒரு நாயை அடிக்கவே கல்லை தேடுகின்றோம் அப்படி இருக்கையில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு ஆராச்சி செய்வதேன்றாலோ அல்லது ஒரு சின்ன வேலையை செய்வதேன்றாலோ கருவி இல்லாமல் செய்ய மனிதனால் முடியாமல் போய்விட்டது. இதே உலகத்தில் தங்களுக்கான உலகத்தில் மிருகங்கள் என்ன நேர்த்தியாக வாழ்கின்றன. எனக்கு ஒரு ஆசை மிருகங்கள் மனிதர்கள் ஆகிய எங்களை பற்றி என்ன நினைக்கின்றன அவர்களின் உலகில் இந்த மனிதன் என்பவன் எப்படி? ஒரு தாவரமா அல்லது வேற்றுக்கிரக வாசியா? நம் சினிமா ஹீரோக்கள் கூட இதுவரை பஞ்ச டயலாக்குகளில் மிருகங்களுடன் தான் தங்களை ஒப்பிடுகின்றனர் அப்படியானால் அவர்கள் மனிதனை விட மிருகங்கள் சிறந்தவை என ஒப்புக்கொள்கின்றனரா? மிருகங்கள் பலவற்றை நாம் கட்டிப்போட்டு வைக்கின்றோம் நம் பாதுகாப்புக்கென்று. அதே மிருகங்கள் இவன்களால் நாங்கள் அளிக்கின்றோம் இவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நம்மை கட்டிப்போட ஆரம்பித்தால்.

மனிதர்கள் உன்னதமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் கொஞ்சமாவது படித்துக்கொள்ளலாம் மிருகங்களிடம். மிருகங்கள் மனிதரானால் இந்த உலகம் தாங்காது அவற்றை அவர்கள் வாழ்வியலிலேயே விட்டு விடுவோம். மிருகங்களை அடைத்து வைத்து காட்சிப்படுத்த மிருகக்காட்சி சாலை அதே மிருகங்கள் மாறி விட்டால் மனிதக்காட்சி சாலை எப்படி இருக்கும்?

இன்று இந்தப்பதிவிட காரணம். லோஷன் அண்ணாதான். ஏனோ இன்று காலையில் (நீண்ட நாட்களுக்கு பின்) எழுந்து விடியல் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது குறு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற திப்பு பாடிய நடிக்கிறான் என்ற பாடலை கேட்கும் போதுதான் இந்த கோபம், இந்த சிந்தனை வந்தது. இந்த பதிவிட தூண்டிய லோஷன் அண்ணாவிற்கும் வெற்றியின் விடியலுக்கும் நன்றிகள்.
Share:

7 கருத்துரைகள்:

shan shafrin said...

ஆகா...... என்ன ஒரு அற்புதமான பதிவு சதீஷ் அண்ணா...... உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ ??? இப்பதான் எழும்பினேன்.... இப்பவே கண்ணை கட்டுதே !!!!!!!!

SShathiesh-சதீஷ். said...

//shan shafrin கூறியது...
ஆகா...... என்ன ஒரு அற்புதமான பதிவு சதீஷ் அண்ணா...... உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ ??? இப்பதான் எழும்பினேன்.... இப்பவே கண்ணை கட்டுதே !!!!!!!//

வழக்கமாய் நான் இப்பவும் எழும்ப மாட்டேன் இன்று சில பல வேலைகள் காரணமா எழுந்துவிட்டேன் .நீங்களும் நம்மை போன்ற பலக்கவாதியா? நன்றி நன்று நாடு உருப்படும்...வாழ்த்துக்கு நன்றிகள்.

Bavan said...

ஏழுமணிசதீஸ் அண்ணா சிங்கமே..::p

பதிவு சூப்பர்....;)

SShathiesh-சதீஷ். said...

//Bavan கூறியது...
ஏழுமணிசதீஸ் அண்ணா சிங்கமே..::p

பதிவு சூப்பர்....;)//

பதிவை படித்த பின்னும் என்னை சிங்கம் என சொன்ன பவனை கண்டிக்கின்றேன். வாழ்த்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

//shan shafrin கூறியது...
ஆகா...... என்ன ஒரு அற்புதமான பதிவு சதீஷ் அண்ணா...... உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியெல்லாம் தோணுதோ ??? இப்பதான் எழும்பினேன்.... இப்பவே கண்ணை கட்டுதே !!!!!!!//

எழும்பினவுடன் கண்ணை கட்டினால் உடனே திருப்பி தூங்கிடுங்க கட்டாது..ஆமா எண்ணத்தால் கண்ணை கட்டியது நைலான் நூலா இல்லை வேறு ஏதுமா?

Prapa said...

தம்பி........................நல்ல இருக்கு ராசா நல்ல இருக்கு ...தொடரட்டும் உங்கள் பனி.... இல்ல பணி.

SShathiesh-சதீஷ். said...

@பிரபா

அண்ணே ரொம்பதான் கலாய்க்கிறிங்க வருகைக்கு நன்றி

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive