நம்மில் பலர் பயன்படுத்தும் நண்பர்களை இணைக்கும் Facebook தளத்தினால் முன் பின் அறியாதவர்களோடு கூட ஏற்படும் தொடர்பால் செக்ஸ் தொடர்புகள் ஏற்படுவதால் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக இணையதளங்களில் இணைந்து கொள்ளும் இளைஞர் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வகையில் ஏற்படும் தொடர்பின் மூலம் லண்டனின் சந்தர்லாந்த், துர்காம், டிசைட், போன்ற பகுதிகளில் பலருக்கு சைபில்ஸ் என்ற பாலியல் நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தப் பகுதிகளில் பிரபல்யமாக உள்ளது. இதன் மூலம் சந்திக்கும் புதியவர்கள் கூட செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக சொல்லப்படுகின்றது.
இதை பற்றி கருத்து தெரிவித்த டிசைட் பொது சுகாதார இயக்குனர் பீட்டர் கெல்லி, சைபில்ஸ் போன்ற பால்வினை நோயாளிகளிடம் நடத்திய விசாரணையில் இது போன்ற சமூக இணைய தளங்களின் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. இது போல பாதுகாப்பற்ற உறவு கொள்பபவர்களுக்கு பால்வினை நோய் மட்டுமன்றி எச்.ஐ.வி நோய் ஏற்ப்படும் அபாயம் அதிகம் என்கின்றார்.
4 கருத்துரைகள்:
Buddy,
What is the point of copy and paste
Thatstamil article in your blog with out giving any credit to original source.I hope that you will understand.
மன்னிக்கவேண்டும் சுஜேன்...நான் இன்னும் தட்ஸ் தமிழில் அந்த செய்தியை படிக்கவில்லை. நீங்கள் சொன்னதன் பின் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. நான் இந்த செய்தியை படித்தது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில். முடிந்தால் நீங்கள் தட்ஸ் தமிழ் லிங்க் எனக்கு அனுப்பி விடுங்கள்
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/study-blames-facebook-rise-sex-dise.html
சுஜேன் லிங்க் உதவிக்கு நன்றி. உங்களுக்கு என் பதிவிற்கும் தட்ஸ் தமிழில் வந்த செய்திக்கும் இடையிலான வசன நடை வித்தியாசம் புரிந்திருக்கும் என நம்புகின்றேன். நான் அதையே காப்பி செய்யவில்லை என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். இப்படி பட்ட சில செய்திகள் எல்லாதளத்திலும் வரும்தான். இன்றைய போட்டியில் ஒரு அணி வெற்றி பெறுகின்றது என்பது செய்தி அதை எங்கள் வசன அமைப்பில் கொடுப்பதுதான் பதிவு. புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
Post a Comment