நானும் ஒரு வானொலி அறிவிப்பாளராக இருந்த காரணத்தால் இதை பற்றி பேச ஓரளவு தகுதி இருக்கும் என நினைக்கின்றேன். இன்று காலை ஒரு தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக நேயர்களை கலாய்க்கும் நிகழ்ச்சி ஒலி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. பொழுது போகணுமே என்பதற்காக அப்படியே இருந்தேன். அந்த நிகழ்ச்சியின் கடைசி பகுதி தான் அது. அந்தப்பகுதியில் நேயருடன் தொகுப்பாளர் பேசிறார் பேசிறார் பேசிறார் அவர் பேச்சில் so என்ற ஆங்கில வார்த்தை கிட்டத்தட்ட ஐம்பது தடவை வந்து தாண்டவமாடி இருக்கும். அது அவருக்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு வசனம் முடிந்து அடுத்த வசனத்துக்கு இடையில் வந்துவிடும். அந்த சொல்லின் அர்த்தம் வரக்கூடாத இடத்திலும் பேசினாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)
************************************************************************************************
இந்த கொடுமை இப்படி இருக்க. மதிய நேரம் இன்னொரு தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளினி சந்தோசமாக என்ற வார்த்தையை அதை கேட்டு நாங்கள் சந்தோசத்தை இழக்கும் வரை பாவித்தார். சந்தோசமாய் இணைந்து கொள்ளுங்கள், சந்தோசமா டயல் பண்ணுங்க,சந்தோசமா பேசுங்க,சந்தோசமா பாருங்க என்று சந்தோஷ கொடுமை. இப்போது வீட்டில் இருந்து அனுபவிக்கின்றேன். இதில் இன்னொரு விடயமும் சொல்லவேண்டும் என்ற Bodyguard திரைப்படத்தின் தழுவலில் சித்திக் இயக்கம் படத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருக்கின்றார். ஆனால் அந்த பெயரை பாடிகார்ட் பாடிகார்ட் என்றே சொல்லிக்கொண்டிருந்தார் அவர். இந்தியாவில் சில தளங்களில் இப்படி இடுகின்றார்கள். அது அவர்கள் வழக்கமாக இருக்கலாம். நம் நாட்டில் அது வழக்கம் இல்லை. அதே போல ஒரு பெயரை மாற்ற எங்களுக்கு உரிமை இல்லை. ஆரம்பத்தில் நான் இந்த பிழைகளை விட்டு அதன் பின் சரியான நெறிப்படுத்தலால் இதை தவிர்த்து வந்தவன் என்ற ரீதியில் இதை பகிர்கின்றேன்.
****************************************************************************************************
நீண்ட நாட்களின் பின் இன்று காலை கொழும்பில் சில பகுதிகளில் மழை பெய்து சூட்டை தணித்தது. இது இப்படியே இருக்கவேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்திருக்கும். ஆனால் கொளுத்துதே. காலையில் இங்கே நின்ற அந்த நல்லவர் இப்போ எங்கேயும் போய்விட்டாரோ? ஏனென்றால் காலையில் விடியலில் லோஷன் அண்ணா நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றாரே. அதுதான் சந்தேகம்....
************************************************************************************************************
*********************************************************************************************************
நானும் நேற்றும் இன்றும் சில பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். வழக்கமாக வருபவர்கள் கூட இந்தப்பக்கம் வருவதாக தெரியவில்லை. வாக்குகளும் இல்லை பின்னூட்டங்களும் இல்லை.ஏனையா எல்லோருக்கும் என் மேல் கோவம். ப்ளீஸ் கோபித்துக்கொள்ளாதீர்கள். ப்ளீஸ் எல்லோரும் வாங்கோ எல்லாத் தளத்துக்கும் போங்கோ. எந்த லாபமும் இன்றி பதிவெழுதும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் உங்கள் வாக்குகளும் பின்னூட்டங்களும் பாராட்டுக்களுமே.
10 கருத்துரைகள்:
//கலையில் விடியலில்//
எந்த கலையில்
சில பேரு அறிவிப்பு ரொம்ப கொடுமை சார். ஒரு நாள் கேட்டதுக்கே இப்படியா? இன்னும் தினமும் கேட்டா?
அட அட அட, என்னா வேகம், என்னா வேகம். இத்தனை பதிவும் ஒரே நாளா? எங்கட ஏழுமணி சதீஷா இது?
//(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)//
so
//சந்தோசமா பாருங்க என்று சந்தோஷ கொடுமை. இப்போது வீட்டில் இருந்து அனுபவிக்கின்றேன்//
சந்தோசமா இருக்கு
So - எங்கள் ஊரில் உள்ள ஒரு வானொலி நிலையம் இதுவரை தூயத் தமிழ் பயன்படுத்தியதே இல்லை. சிலர் இதனைப் பலமுறை கண்டித்துள்ளனர். இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனாலேயே, அந்த நிலையத்தை புறக்கணித்து விட்டேன். :(
கோபம் - சில சமயங்களில் இங்கே நான் எட்டிப் பார்ப்பதுண்டு. இனி அடிக்கடி வந்து பிண்ணூட்டமும் போட முயற்ச்சிக்கிறேன். முடிந்தால், என் பக்கமும் வந்து சிறப்பியுங்கள். :)
//
Atchu கூறியது...
//கலையில் விடியலில்//
எந்த கலையில்//
மன்னிக்கவும் திருத்திவிட்டேன்.
// கவிதை காதலன் கூறியது...
சில பேரு அறிவிப்பு ரொம்ப கொடுமை சார். ஒரு நாள் கேட்டதுக்கே இப்படியா? இன்னும் தினமும் கேட்டா?
//
ம்ம் திருந்த மாட்டார்கள் என்ன செய்ய.
// Subankan கூறியது...
அட அட அட, என்னா வேகம், என்னா வேகம். இத்தனை பதிவும் ஒரே நாளா? எங்கட ஏழுமணி சதீஷா இது?//
ஏழுமணிக்கு எழும்பினதால் இந்த வேகம்...லொள்
// எப்பூடி ... கூறியது...
//(நான் அவர் பேசியதை கவனிக்கவில்லை. soவைத்தான் கவனித்தேன்.)//
so
//சந்தோசமா பாருங்க என்று சந்தோஷ கொடுமை. இப்போது வீட்டில் இருந்து அனுபவிக்கின்றேன்//
சந்தோசமா இருக்கு
//
so சந்தோசமாய் இருக்கு உங்கள் பின்னூட்டம்.
// Yoganathan.N கூறியது...
So - எங்கள் ஊரில் உள்ள ஒரு வானொலி நிலையம் இதுவரை தூயத் தமிழ் பயன்படுத்தியதே இல்லை. சிலர் இதனைப் பலமுறை கண்டித்துள்ளனர். இவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனாலேயே, அந்த நிலையத்தை புறக்கணித்து விட்டேன். :(
கோபம் - சில சமயங்களில் இங்கே நான் எட்டிப் பார்ப்பதுண்டு. இனி அடிக்கடி வந்து பிண்ணூட்டமும் போட முயற்ச்சிக்கிறேன். முடிந்தால், என் பக்கமும் வந்து சிறப்பியுங்கள். :)//
என்ன செய்வது சிலர் திருந்த மாட்டேன் என்றே நிற்கின்றார்களே.
உங்கள் தொடர்ச்சியான வரவை எதிர்பார்க்கின்றேன். இதோ வருகின்றேன் உங்கள் பக்கம்.
Post a Comment