உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்
உங்கள்
சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
எம்
சமூக கருத்துக்கள்
சதீஷ் தொகுத்த
பொது நிகழ்வுகள்
ஒரே தளத்தில்
இன்னும் பல
Sunday, June 27, 2010
எழுந்திட்டேன்! இதோ வர்றன்
Saturday, June 19, 2010
சிங் is கிங் - இறுதிப்போட்டியில் இந்தியா.
Friday, June 18, 2010
வாக்களிப்பு நிறைவடைய இன்னும் இருப்பது ஒரு சில நிமிடங்கள்.
ராவணன்- ஒரு சந்தேகம்.
ராவணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் எனக்கு ஒரு சந்தேகம் இந்த ரவாணன் மேலே. இது படத்தை பற்றியோ படத்தின் மையக்கருத்து பற்றியோ அல்லது இசை பற்றியோ இல்லை நடிப்பு பற்றியோ நான் பேசப்போவதும் இல்லை. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே.
Thursday, June 17, 2010
நடிகைகளுடன் பிரபல பதிவருக்கு தொடர்பு. - ஒப்புதல் வாக்கு மூலம்.
Wednesday, June 16, 2010
2012 திரைப்படம் உண்மையா? 2010 சொல்லும் சேதி இது.
Tuesday, June 15, 2010
டாலர்! டாலர்! டாலர்! - வினோத கலையம்சம்.
Monday, June 14, 2010
சிம்பு,அஞ்சலி,பிரகாஷ்ராஜ்,சந்தானம், அஜித் முன்னணியில்- வாக்களித்து முடிவுகளை மாற்றுங்கள்.
Friday, June 11, 2010
பொலிகண்டி கந்தவனக்கடவை- நம்மூர் திருவிழா.
இவ்வாலயம் அநாதியானது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆலயம் இருக்கின்ற தலம் ஓர் வெள்ளரித் தோட்டமாக இருந்தது என்றும் அத் தோட்டத்திலேயே ஒளிப்பிளம்பாக வேல் தோன்றி காட்சியளித்தது. அன்றிலிருந்து அதனை ஊர் மக்கள் வணங்க ஆரம்பித்தனர். அந்த வேல்தான் இன்றும் ஆலயத்தின் வடக்கு வீதியில் உள்ள வேலவர் ஆலயமாக உள்ளது. இவ் ஆலயத்தின் தல விருட்ச்சமாக வன்னிமரமும் தோன்றியது. அவை இன்றும் ஆலயத்தின் வடக்கு திசையில் கம்பீரமாக அழகூட்டி அருள் பாலித்துக்கொண்டிருக்கின்றன. அருளும்,அழகும்,அநாதியுமாகிய கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானம் மிகவும் வளர்ச்சியடைந்து மகோற்சவ ஆலயமாக அருட்கடாட்சத்தினை வழங்கி கொண்டடிருக்கின்றது. இவ் ஆலயத்தில பலநூறு ஆண்டுகள் வரை காஞ்சி மாமரம்ஒன்று நின்றது அது ஒவ்வொரு காலப் புசைக்கும் ஒரு மாம்பழம் வீதம் ஒரு பழத்தைதந்து கொண்டிருந்ததாம். ஆனால் மரத்தில் மாம்பழம் இருப்பது யாருடைய கண்ணுக்கும் புலப்பட மாட்டாதாம். அக்காலப்பகுதியிலே திருக்குளத்தில் விளைவு கற்புரம் விளைந்து கொண்டிருந்தது என்றும் ஆலய புசைக்கு இக் கற்புரத்தையே பயன்படுத்தி வந்தனர். அதனை விற்பனை செய்ய ஆரம்பித்தபோது கல்லாக மற்றமடைந்து இன்றும் திருக்குளத்தின் நடுவிலே காணப்படுகின்றது.
போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் ஆகிய அந்நியரின் படையெடுப்புக் காலங்களில் சைவம் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆலயங்களை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானத்தையும் அழிப்பதற்கு வந்த கூலிப்படையினர் வன்னிமரம்காணப்படும் வடதிசையில் அழகான நறுமணம் கமழும் புக்களைக் கண்டு அவற்றை கொய்து முகர்ந்போது கண்கள் பார்வையை இழக்க கோயிலை உடைக்க முடியாது திரும்பிச் சென்றார்கள்.
பழையவர் என அழைக்கப்படும் சண்முகப் பெருமான் அன்னியரின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கப்படடுக் கொண்டிருந்த வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் குமரபுரம் எனும் ஆலயத்தில் இருந்து கடலினுாடாக வாணிபம் செய்பவா்களின் மரக்கலத்தினுாடாக மறைத்துக்கொண்டுவந்து இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டது
மஹா மண்டபத்தில் வீற்றிருந்து அருளாட்சி கொண்டிருக்கும் சண்முகப்பெருமான்ஆலயத்திலேயே கருவுட்டப்பட்டு மிகவும் அழகானவாராக வார்த்தெடுக்கப்பட்டது. இதற்காக முருகனடியார்கள் தங்க நகைகளை தாமாக முன் வந்து ஈகை செய்தார்கள். எம் பெருமானின் தெய்வீகவருளால் ஆறுமுகங்களும் வேறுபாடின்றி ஒரேமாதிரி அழகாக காட்ச்சியளிக்கிறார். அவரைப் பார்க்கும் அடியார்களைப் பார்த்து புன்முறுவல்செய்வது போல காட்சி கொடுத்து அடியாாகளின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்துஅருளாட்சிசெய்கின்றார்.
அருநகிரிநாதர் கந்தவன சுப்பிரமணியர் மீது ''உறவு சிங்கிகள்'' எனும் அடியுடன் தொடங்கும் திருப்புகழைப் பாடியுள்ளார்.
முன்னொரு காலத்தில் தேர் உற்சவத்தின் போதுதேர் வடக்கு வீதியை அடைந்தபோது தேர் நகராது நின்றுபோனது வடக்கில வீற்றிருக்கும் சல்லியம்பதிப் விநாயகப் பெருமான் ஆலயம் சென்று அவருக்குக் காணிக்கை கொடுத்து வேண்டியபோது தேர் நகரத் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வெரு வருடமும் தேர் உற்சவத்தின் போது சண்முகர் தோில ஆரோகணம் செய்ய முன்னர் சல்லியம்பதிப் விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியம் எடுத்துச் சென்று வழிபடும் மரபு முறையுள்ளது.
திருவாமகரூர் தேரழகு கந்தவனத்து வீதியழகு என்று அன்று தொட்டு இன்றும் கூறப்படுகிறது. இவ்வாறு கந்தவனத்து வீதியழகை எடுத்துக் கூறுகிறார்கள்
உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் கண்பார்வையற்ற ஒரு தமிழ்ப் புலவர் சண்முகப் பெருமான் மீது நான்மணிமாலை எனும் பதிகத்தைப் படி தவமிருந்து கண்பார்வையைப் பெற்றதாக அவர் பாடிய பதிகத்தில் கூறப்படுகிறது. நவாலியுர் சோமசுந்தரப் புலவரும் கந்தவனம் மீது பேரன்பு கொண்டு பக்தியுடன் நான்மணிமாலை பதிகத்தையும் திருப்பள்ளியெழுச்சி போன்றவற்றையும் பாடியுள்ளார்.
மகப்பேறு வேண்டி கந்தவனம் மீது தவமிருந்து இங்கு கிடைக்கும் மாங்கனியை உண்டு மகப்பேறு பெற்றுள்ளார்கள்.இன்னும் மகப்பேற்றை வேண்டி அடியார்கள் அம் மாங்கனியை பெறுவதற்காக ஆலய தரிசனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கந்தவன சண்முகப் பெருமானை கரியான வேலவர், கந்தவனக்கடவை, கந்தாரணியம், நயினார்,ஆறுமுகன் எனனும் பல நாமங்கள் கொண்டு அழைக்கின்றனர்.
கந்தவனப் பெருமானின் மகோற்சவங்களை ஊர்மக்களும் அயலுார்மக்களும் பங்கேற்று சிறப்பாக விழாவெடுத்து அவரின் அருளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
வருடாந்த மகோற்சவம் ஒவ்வொரு வருடமும் ஆனித் திங்கள் புாரணை திதியை தீர்த்தோற்சவமாக கொண்டு முதல் பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும்.
கந்த சஷ்டி உற்சவமும் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து சட்டி முடிவுறும் வரை உற்சவம் நடைபெறும்.