Sunday, June 27, 2010வணக்கம் மக்கள்ஸ்,

இப்படி ஆரம்பித்து திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகளுக்கான இறுதி முடிவுகளை தந்திருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவன் ஆனால் காலம் செய்த கோலம கடந்த சனி தொடக்கம் என்னை அதை செய்யவிடாமல் செய்துவிட்டது. இதனால் சூடானா சில பதிவுகள் எழுதமுடியாமல் போய்விட்டது. முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு. பெரிதாய் ஒரு காரணமும் இல்லை. காய்ச்சல் தாங்க ஆனால் ரொம்ப மோசமாய் வந்திட்டிது. என்ன என்ன எல்லாம் இருக்கா என டாக்டர் கேட்கும்போது இல்லை என்று சொன்னேனா ஆனால் அவை எல்லாம் அதன் பின் வந்து இறுதியில் இன்று எழும்பி இருக்கின்றேன்.

கடந்த சனி இரவே என் உடல் நிலை மோசமாகின்றது என புரிந்து கொண்டு விட்டேன். இருப்பினும் அடுத்த நாள் மாலை இடம்பெறும் குட்டி பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என கூரியிருந்த நான் மதியமளவில் பதிவர் கான்கொனுக்கு அலைபேசி இன்று வரமாட்டேன் என சொல்லிவிட்டு. இரவு சகல வேலைகளையும் முடித்து முடிவுகளை சொன்ன நேரத்துக்கு அறிவித்து விடுங்கள் என சொல்லி விட்டேன். குளிர் நடுக்கம், காய்ச்சல் தலைவலிக்கு நடுவே இடையிடையே நண்பர்களுடன் தொலைபேசியில் பேச முயன்றும் முடியாமல போக என் இணைய தளத்தை இயங்க செய்து மெயிலையும் திறந்து விட்டு முடிவுகளை அறிவித்தவுடன் எனக்கு சொல்லவும் என சொல்லிவிட்டு படுத்திருந்தேன். இரவு ஒன்பது முப்பது அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக வந்த தொலை பேசி அழைப்பை தொடர்ந்து பெரிய ஒரு வேலை முடிந்தது என்ற நம்பிக்கையில் படுத்தவன் இன்றுதான் மீண்டும் இன்னொரு பதிவுடன் சந்திக்கின்றேன்.

ஆரம்பத்தில் இந்த முயற்ச்சியை நான் ஆரம்பித்த வேலை என்னுடன் கரம கோர்த்த கோபி,பவன் இரண்டுபேரின் பங்கும் இதில் முக்கியமானது. அதன் பின்னர் பலர் எங்களுடன் இணைந்தனர். அவர்கள் எல்லோரிடமும் நாங்கள் தெரிவுகளை விசாரிக்கும் நேரம் நான் கோபமாக பேசியது சில விதண்டாவாதன்களை பேசியதற்கு மன்னிப்பு கேட்கின்றேன். தொழில் நுட்ப விடயங்களில் புகுந்து விளையாடி வாக்களிப்பு படைகளை உருவாக்கிய கோபி, வலைப்பூ விருது லோகோ,வலைபூ லோகோ என பல உருவாக்கி உழைத்த பவன் இதற்கான விளம்பரப்படுத்தலில் ஈடுபட்ட அனுதிணன் என எல்லோரும் என் நன்றிக்குரியவர்கள். இதை விடுத்து சுபாங்கன் அண்ணா,மது அண்ணா, வந்தி மாமா, லோஷன் அண்ணா, ஆதிரை அண்ணா, இந்தியாவின் சவுந்தர், தமிழ் மதுரம் மெல்பேர்ன் கமல், அகசியம் வரோ, பங்குச்சந்தை அச்சுதன், மருதமூரான் அண்ணா, மதுரகன் அண்ணா என நேரடியாய் எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தொருக்கும் இன்னும் எமக்கே தெரியாமல் தம நல்ல மனதால் ஆதரவளித்த எல்லோருக்கும் என் நன்றிகள்.

ஒரு கை ஓசை கடந்தமுறை பெரிதாய் கேட்கவில்லை. இம்முறை பல கை சேர்ந்த போது அது பாரெல்லாம் ஒலித்தது சந்தோசம். இதற்க்கு இலங்கை பதிவர்கள் மட்டுமன்றி சில இந்திய பதிவர்களும் தனிப்பட்ட ரீதியில் என்னுடன் தொடர்பு கொண்டு ஆதரவளித்தனர்.(அங்கே நடந்த பதிவுலக சாக்கடையால் தம பெயர் இதற்குள் அடிபட்டு இந்த நல்ல முயற்ச்சிக்கு சேறு பூச விரும்பாமால் அவர்கள் நேரடியாய் பதிவுகளை இடவில்லை) அவர்களுக்கும் என் நன்றிகள. கடந்தமுறை ஒரு வாக்காளார் நூறு வாக்குகளை பெற்றதே பெருமையாய் எண்ணிய நிலையில் இம்முறை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது எந்தளவு பிரமாண்டத்தை கண்டிருக்கின்றது என உங்களுக்கே தெரியும்.

முக புத்தகம்,டுவிட்டர் மற்றும் தங்கள் வலைத்தளம் என தங்கள் ஆதரவை தனிப்பட்டோர் வழங்க தமிலிஷ்,யாழ்தேவி,தலைவன் திரட்டிகள் தங்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளன. எல்லோருக்கும் நன்றி சொல்லும் அதே நேரம் இதுவரை முடிவுகளை அறியாதவர்கள் கீழுள்ள லிங்கை சொடுக்கி பார்க்கவும்.....


நன்றி என்னும் ஒரு வார்த்தை மட்டுமே என்னால் தரமுடியும் நண்பர்களே. நான் படுக்கையில் கிடக்கும் போதே வெற்றிகரமாய் ஒரு முடிவுகளை அறிவித்த என் அன்புத்தம்பிகளுக்கும் என் நன்றிகள். இன்னும் பெயர் சொல்ல மறந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.

12 கருத்துரைகள்:

Anuthinan said...

// காலம் செய்த கோலம கடந்த சனி தொடக்கம் என்னை அதை செய்யவிடாமல் செய்துவிட்டது. இதனால் சூடானா சில பதிவுகள் எழுதமுடியாமல் போய்விட்டது. முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு.//

யப்பாடி பதிவுலகம் தப்பி விட்டது!!!! ஒரு துன்பத்திலும் ஒரு நல்லது நடக்கும் என்பது இதுதானா!!


//விளம்பரப்படுத்தலில் ஈடுபட்ட அனுதிணன் என எல்லோரும் என் நன்றிக்குரியவர்கள்//

குருவே! நன்றிகள் மட்டுமல்ல ட்ரீட்டும் எங்களுக்கு முக்கியம்!!!

எனது பங்குக்கு இதை நானும் REPEAT செய்கிறேன்!!
//நன்றி என்னும் ஒரு வார்த்தை மட்டுமே என்னால் தரமுடியும் நண்பர்களே. நான் படுக்கையில் கிடக்கும் போதே வெற்றிகரமாய் ஒரு முடிவுகளை அறிவித்த என் அன்புத்தம்பிகளுக்கும் என் நன்றிகள். இன்னும் பெயர் சொல்ல மறந்த எல்லோருக்கும் என் நன்றிகள்//குரு மீளவும் பதிவுலக பக்கம் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள்! தொடரவும் உங்கள் சேவையை!!!

தமிழ் மதுரம் said...

வருக..! வருக...! இலங்கையின் இளம் புயல் சதீஷ்.! வாழ்த்துக்கள் தோழா! உங்கள் எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்து, வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றிகள்.

shan shafrin said...

எழுந்திட்டீன்களா ????? வாங்க.... வாங்க...

// காலம் செய்த கோலம கடந்த சனி தொடக்கம் என்னை அதை செய்யவிடாமல் செய்துவிட்டது. இதனால் சூடானா சில பதிவுகள் எழுதமுடியாமல் போய்விட்டது. முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு.//

யப்பாடி பதிவுலகம் தப்பி விட்டது!!!! ஒரு துன்பத்திலும் ஒரு நல்லது நடக்கும் என்பது இதுதானா!!

ரிப்பீட்டு........

அத்திரி said...

//முக்கியமாக விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு.//

உங்களிடம் எதிர்பார்த்து ஏமாந்தேன்

சௌந்தர் said...

உங்கள் எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்து, வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றிகள். விருது பெற்ற அனனவருக்கும் வாழ்த்துகள்

Bavan said...

அட வாங்க வாங்க.. நலம் வாழ எந்நாளும் என்வாழ்த்துக்கள்..:P

//நான் கோபமாக பேசியது சில விதண்டாவாதன்களை பேசியதற்கு மன்னிப்பு கேட்கின்றேன்.//

ROFL..:P:P:P
ச்சும்மா காமடி பண்ணக்கூடாது...:P

//தொழில் நுட்ப விடயங்களில் புகுந்து விளையாடி வாக்களிப்பு படைகளை உருவாக்கிய கோபி, வலைப்பூ விருது லோகோ,வலைபூ லோகோ என பல உருவாக்கி உழைத்த பவன் இதற்கான விளம்பரப்படுத்தலில் ஈடுபட்ட அனுதிணன்//

இக்கி இக்கி இக்கி...;)))

KANA VARO said...

besh Weshes..

AGASIYAM said...

முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html

AGASIYAM said...

முகத்திரை கிழிக்கிறோம்.
இதை வாசியுங்கோ.
http://agasiyam.blogspot.com/2010/06/blog-post.html

யோ வொய்ஸ் (யோகா) said...

முழுவதுமாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

Jeyamaran said...

The result is gd most of the winners were expected by myself so its gr8 end..................

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்திய பிரார்த்தித்த உறவை இருந்த அத்தனை நண்பரளுக்கும் நன்றிகள்

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive