உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்று வரும் ஆசிய கிண்ண போட்டிகளை கணக்கெடுக்க மறுத்த பலரையும் இன்று மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பிய போட்டி ஒன்று இப்போதுதான் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை பார்த்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூட 50 ஓவர் போட்டி பற்றிய தங்கள் கருத்தை மீள் பரிசீலனை செய்வர் என சொல்கின்றது கிரிக இன்போ.
அப்படி என்ன தான் நடந்தது? என்று கேட்கிறீர்களா? வேறு என்ன கிரிக்கெட்டில் இரு துருவங்கள் மோதிய போட்டிதான். இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வழமை போல விறு விறுப்பாக நடை பெற்று முடிந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் அப்ரிடி முதலில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் என முடிவெடுத்தார். அதற்கமைய ஆரம்பத்தை அமர்க்களமாக தான் ஆரம்பித்தனர் சல்மான் பட்டும் பர்ஹத்தும். நீண்ட போராட்டத்தின் பின் ஹர்பஜன் சிங் இந்த இணையை பிரிக்க அடுத்ததாய் ஜோடி சேர்ந்த சானியாவின் நாயகன் மாலிக்கும் பட்டும் இணைந்து மீள கட்டி எழுப்ப மீண்டும் அதை காண தகர்க்க அடுத்தடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழ ஒரு கட்டத்தில் உமர அக்மலும் அப்பிரிடியும் இணைந்து அதிரடிக்கு மாற அப்ரிடி ஆட்டம் இழக்க மீண்டும் சோர்ந்தது பாகிஸ்தான். இருப்பினும் கம்ரன் அக்மாலின் தாண்டவத்தின் மூலம் 267 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி.
பந்துவீச்சில் இந்தியாவின் பிரவீன் குமார் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி மிரட்ட பஜ்ஜி தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மறுமுனையில் பாரிய இலக்கொன்றை துரத்த ஆரம்பித்த இந்தியாவுக்கு அமைதியான ஒரு தொடக்கம் கொடுக்க முனைந்தனர் ஷேவாக்கும் கம்பீரும். இடையில் சேவாக் ஓட முடியாமல் அவதிப்பட்டு ரைனாவை ஓட பயன்படுத்தினாலும் சேவாக் இன்னும் போரிமில் இல்லை என்பதை இன்றைய போட்டி காட்டியது. மறுமுனையில் கடந்த போட்டி போல தொடர்கிறது காம்பீரின் அட்டகாசம்.இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அடுத்த டிராவிட், விராட் கோலி, கம்பீருக்கு பக்க பலமாக இருக்க ஓட்ட வேகம் அதிகரித்தது. பாகிஸ்தான் பந்துகள் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்க கோலி ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து இணைந்த டோனி, கம்பீருடன் சேர்ந்து மிகப்பெரிய இணைப்பாட்டம் ஒன்றை வழங்க இந்தியா வெற்றியை நோக்கி நகர தொடங்கியது.
இம்முறையும் சதத்தை நெருங்கி அதை பெற முடியாமல் தவற விட்டு கம்பீர் ஆட்டமிழக்க சிறிது நேரம் ஷர்மா, தோனிக்கு கைகொடுத்தார். ஆனால் ஷர்மா வெளியேறிய உடன் தோனியும் வெளியேற இந்தியா ஆட்டம் காண தொடங்கியது. மறுமுனையில் ரைனாவும் ஜடேயாவும் போராடினாலும் ஓட்ட வேகம் மந்தமானதுடன் ஜடேயா வழக்கம் போல தேவையான நேரத்தில் சொதப்பினார். ஆனால் அவர் போனது நல்லது போல வந்த பஜ்ஜி அக்தர் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து தன் கணக்கை ஆரம்பித்தார். இவர் தான் கணக்கை முடிக்கப்போகின்றார் என்று அப்போது தெரியவில்லை. வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டிருந்த அணிக்கு பந்துகள் குறைய தொடங்க பதற்றமும் தொற்றிக்கொண்டது. இந்த பதற்றத்தில் ரைனா ரன அவுட் ஆக இந்தியா தோற்று விடும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்த பிரவீன் குமார் கைகொடுக்க. பஜ்ஜி சில பந்துகளை முகம் கொடுக்க தடுமாறினார். இடையில் அக்தர், பஜ்ஜி வாக்குவாதம் சூடாக கம்ரன் அக்மல் அவர்களை பிரித்து அழைத்து சென்றதும் சூடு. அக்தர் இன்று விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.
இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருக்க மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது ஓட்டத்தை ஓட வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய பஜ்ஜி அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சிக்ஸ் பறந்து கொண்டிருக்கும் போதே சிங்கம் கர்ஜிப்பது போல அக்தரை பார்த்து கர்ஜிக்க அதற்க்கு அக்தரும் கையில் V காட்டி விட்டு போடா போடா என்பது போல கையால் காட்டியதும் செம ஹாட் மச்சி. ஆனால் என்னதான் அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ தெரியல.
மொத்தத்தில் இறுதி நேரத்தில் ஹீரோவாகி இந்தியாவை காப்பாற்றிய சிங் தான் இன்றைய கிங்.
சில சுவாரஸ்யங்கள்.
இடையில் பந்து மாற்றும் நேரம் வரும் போது பந்தை மாற்ற வேண்டாம் என அப்ரிடி சின்ன பிள்ளை போல அடம பிடித்தார்.
அக்தர்-பஜ்ஜி சண்டை...
போட்டி நிறைவடைந்த பின் இதை பற்றி கூறிய அப்ரிடி இது ஒரு நல்ல போட்டி என்றும் தாங்கள் நன்றாக ஆடியதாகவும் அதை விட இந்திய வீர்கள் ஆட்டம் சிறப்பு என்றும் பெருந்தன்மையோடு பாராட்டினார்.
அதே நேரம் இந்த வெற்றி கூல் கப்டன் என ரவி சாஸ்திரி தொனியை அழைக்க தான் இன்று கூல் இல்லை என்றும் இந்தியா பாகிஸ்தான் ஆடும் போது எப்படி கூழை இருக்க முடியும் என கெட்ட தோணி பஜ்ஜி தன்னை காப்பாற்றிவிட்டார் என்றும் சொன்னார். அதேநேரம் இனி சிங்கை ஒரு ஆல்ரவுண்டர் என சொல்லலாம் எனவும் கூறினார். இன்று மட்டுமன்றி கம்பீருடன் இந்திய ஏ அணியில் ஆடும் போதே மின்னொளியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை தான் வழங்கியதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.
எது எப்படியோ மீண்டும் ஒரு தடவை ஐம்பது ஓவர் போட்டி ஒன்று உயிர் பெற்றிருக்கின்றது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகி உள்ளன. இதில் இறுதி லீக் போட்டியில் மொத இருக்கும் அணிகளே இறுதிப்போட்டியில் மோத உள்ளதால் ஆட்டம் சூடு பறக்கும் எனபதில் சந்தேகமில்லை.
பி.கு: எல்லோரும் ராவணன் படம் பார்த்து விட்டீர்கள் போல. விமர்சனங்கள் சூடாக வருகின்றன. படித்துள்ளேன். ஆனால் பலருக்கு பின்னூட்டம் இடவில்லை. காரணம் படம் பார்க்காமல் எப்பிடி....விரைவில் பார்ப்பேன் என நம்புகின்றேன்.
10 கருத்துரைகள்:
நண்பரே.. சுட சுட விமர்சனம் போட்டுட்டீங்க.. சுட சுட ஓட்டும் போட்டாச்சு
ரைனாவையும் குறை சொல்ல முடியாது. ஏற்கனவே அக்மலுக்கும் கம்பீருக்கும் கூட மோதல் வந்தது. பாகிஸ்தானின் பாடாவதி பவுலிங்கும், கேவலமான பீல்டிங்கும் பெரிய காரணம்
//அக்தரும் கையில் V காட்டி விட்டு போடா போடா என்பது போல கையால் காட்டியதும்
உண்மையில் அக்தர் தன் அணியினரை பார்த்துதான் சொல்லி இருக்க வேண்டும். அவர்கள்தான் தொடரில் இருந்து நடையை கட்டி விட்டனரே?
எல்லோரும் ராவணன் படம் பார்த்து விட்டீர்கள் போல. விமர்சனங்கள் சூடாக வருகின்றன. படித்துள்ளேன். ஆனால் பலருக்கு பின்னூட்டம் இடவில்லை. காரணம் படம் பார்க்காமல் எப்பிடி....விரைவில் பார்ப்பேன் என நம்புகின்றேன்
நான் வேண்டும் என்றால் டவுன்லோடு லிங்க் தரேன் பாருங்கோ பாஸ்
ஹா ஹா ஹா இப்படி பாக்கலாமா கேக்ககூடாது
அக்தர் காட்டிய V சமாதானக் குறியீடுங்கோ
பாக்காத கிரிகெட்டை பார்க்க வைத்துவிட்டீர்கள்...
@Bala
நன்றி நண்பா
@Bala
கருத்துக்கு நன்றி
@soundar
சில படங்கள் திரையில் பார்க்கவேண்டும் அப்படி ஒரு படம் ராவணன்
@Kiruthikan Kumarasamy
பார்த்தால் அப்படி தெரியலங்கோ. தகவலுக்கு நன்றி. V க்கும் சமாதானத்துக்கும் என்ன சம்பந்தமுங்கோ
@ராசராசசோழன்
சந்தோசம்.
Post a Comment