அண்மையில் ஒரு சஞ்சிகையை படிக்கும் போது இந்தியாவின் பெண்ணாடம் என்னும் இடத்தில் இருந்து என்.மதியழகன் எழுதிய ஒரு கவிதை என்னை இன்னொரு விதமாக சிந்திக்க வைத்தது. சில கவிதைகளை வாசிக்கும் போது எமக்கு வேறு விதமான அர்த்தங்கள் வந்துவிடும். கவி எழுதியவரின் கருத்துக்கு நாங்கள் வேறு ஒரு விதையை நினைக்க அவரோ அதை இன்னொரு விதையை வைத்து எழுதி இருப்பார். இங்கே மதியழகன் கவிக்கு எனக்கு தெரிந்த இரு விளக்கங்களை பகிர்கின்றேன்.
கடிகார முள்.
உனக்காக நான் காத்திருக்கும் தருணங்களில் என்னை விட அதிகமாய் துடிக்கிறது எனது கையில் இருக்கும் கடிகார முள்.
மிக சிறிதாக சுருக்கமாக இருக்கும் இக்கவியில் ஒரு காதலனின் ஏக்கம் தவிப்பு காதலிக்காக தவமிருப்பது என்பது வெளிப்படையாக சொல்லப்பட்டாலும் வாழ்வில் ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லி போயிருக்கின்றார்.(பதிவு எழுத தொடங்கிய நாளில் இருந்து எங்கே என்ன பாத்தாலும் அதில் ஒரு மொக்கை தேடி பிடிப்பது நமக்கு பழகிடிச்சு. காதலிக்காக காத்திருக்கும் ஒரு காதலன் அந்த காதலி வருவாள் வருவாள் என எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என அவனுக்கு ஏன் அவளுக்கே தெரியாது. பெண்கள் எப்போதான் சொன்ன நேரத்துக்கு வந்திருக்காங்க. பல மணிநேரம் செல்லும் என்பதற்கு என்னங்க காரணம் குளிக்க போனால் குற்றாலம் போனது போல மணிக்கணக்கு எந்த உடை போடுவது என முடிவெடுக்க முக்கால் மணிநேரம் மேக்கப் போட மேலும் நான்கு மணிநேரம் என அவங்க வெளிக்கிட்டு வந்து சேர ஒரு யுகம் முடிஞ்சிடும். இதை அவர் சொல்ல விளைந்திருக்கலாம் இருப்பினும் அவர் இன்னுமொரு முக்கியமான கருப்பொருளை சொல்லாமல் சொல்லி போயிருப்பாரோ என எனக்கு ஒரு சந்தேகம்.
எப்படியும் காதலி வந்த பின்னர் பேச்சு கொடுத்தோ அல்லது அடி உதை வாங்கியோ காதலன் துடிக்கப்போவது நிச்சயம். எதற்கும் முன்னெச்சரிக்கையாய் தான் துடித்துக்கொண்டே இருக்கின்றேன் என சொல்வதுடன் இப்பவே இப்படி துடிக்கிறான் நீ வந்த பின் உன் அடி மற்றும் கொடுமையில் இந்த கடிகார முல்லை விட துடிக்கப்போரேனே என்று சொல்ல வந்திருப்பாரோ என்று சந்தேகம்.
முக்கிய குறிப்பு: இந்த சிந்தனை எல்லாம் என் அனுபவோ என நீங்கள் கேட்கப்படாது, சந்தேகப்படக்கூடாது, ஏன் கொஞ்சம் கூட நீங்கள் அப்படி நினைக்கவே கூடாது என்பதற்காய் நான் ஒரு உண்மையை சொல்லுறேன். யாருக்கும் சொல்லாதிங்க. அடுத்தவங்களுக்கே ஆப்படிக்கும் இளவரசியின் இதயம் கவர் நாயகன் வந்தியத்தேவன் அவர்களின் வாழ்க்கை படிப்பில் இருந்து கிரியேட்டிவிட்டி செய்தது. நம்புங்க. ஆனால் இது என் மாமா பச்சிளம் பாலகன் நாடுகடந்த பதிவுலக செயலாளர் கோபியரின் கண்ணன் காதல் நாயகன்(வெட்டியா தோல்வியா என கேட்டு அவரை அசிங்கப்படுத்தப்படாது) வந்தியத்தேவன் இல்லை என்றால் நம்பவா போறிங்க.
0 கருத்துரைகள்:
Post a Comment