Wednesday, July 1, 2009

நயன்தாராவிற்காய் ஏங்கிய மைக்கல் ஜாக்சன்.

எல்லோருமே "கிங் ஒப் போப்" மைக்கல் ஜாக்சனைப் பற்றி எழுதும்போது நான் அதை வாசிப்பதோடு மட்டுமே நிறுத்திவிடுவேன். அதற்கு இரண்டு காரணம், ஒன்று எனக்கு மைக்கல் ஜாக்சன் பற்றி பதிவிடும் அளவிற்கு அவர் பற்றிய அறிவு போதாது. இன்னொன்று எங்கேயும் அவர் பற்றிய பதிவுகளை பார்த்த சலிப்பு. (ஆனால் அவர் பற்றி நான் தெரியாத பல விடயங்களை தெரிய உதவிய நம் பதிவர்களுக்கு நன்றி.)

நீங்கள் எல்லாம் உலகை கலக்கிய மைக்கல் ஜாக்சனைப் பற்றி எழுதும்போது, நான் ஏதோ எனக்கு தெரிந்த நம் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் அதுதாங்க பிரபுதேவா பற்றி எழுதுகின்றேன். (அதற்கு முன் எனக்கு ஒரு நண்பன் இருக்கின்றான். அவன் என் வலைப்பதிவு பக்கம் வரவே மாட்டான், ஒருமுறை பேசும் போது சொன்னான் நீ என் செல்லம் நயனைப் பற்றி எழுது நான் வருகின்றேன் என்று. அவன் ஆசையையும் இப்போது நிறைவேற்றுகின்றேன்.)

03.04.1973 கர்நாடகாவில் பிறந்த நம் பிரபுதேவா, தமிழ் சினிமாவின் முக்கியமான நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன். ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் இந்த இரண்டுபேரும் இவரின் சகோதரர்கள் மட்டுமல்ல பிரபல நடன இயக்குனர்கள். இப்படி இருக்கும் போது பிரபுதேவா மட்டும் என்ன செய்வார்? நடனம் அவர் ரத்தத்தில் கலந்திருக்காதா அதையே தன் தொழிலாக்கிக்கொண்டு வெற்றிவிழா படத்தில் தன் வெள்ளோட்டத்தை ஆரம்பித்தார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் அதற்க்கு இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? அக்கினி நட்சத்திரம் படத்தில் முதல் முறையாக நடனக்குழுவில் ஆடும் ஒருவராக திரையில் தோன்றினார். அதன் பின் காதலன் படம் மூலம் கதாநாயகனாக முழு அவதாரம் எடுத்தவருக்கு அது பெரிதாக கைகொடுக்கவில்லை. இருப்பினும் அந்தந்த கால முன்னணி கனவுக்கன்னிகள் அத்தனை பேருடனும் நடித்துவிட்டார். தன் சகோதரர்களுடன் படத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படியே போன இவரின் வாழ்க்கையில் பல கிசுகிசுக்கள் பலருடன். ஆனால் அத்தனையையும் கடந்துவந்துவிட்டார் இன்றுவரை. பல விருதுகளை நடன கலைஞராக குவித்தவருக்கு நடிப்பு காலை வாரிவிடவே, சற்று நாள் இடைவேளையின் பின் இயக்குனராக பரினமித்து வெற்றியும் பெற்றார். அதுவும் தமிழில் முதல் திரைப்படமே விஜயை வைத்து. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அது மாற இந்த கூட்டணிதான் இன்று அத்தனைக்கும் வித்திட்டு இருக்கின்றது.

மறுபக்கம் நம் கதையின் நாயகியும் வில்லியுமான நயன்தாரா. ஹரியின் ஐயா படம் மூலம் குடும்பகுத்துவிளக்காக அறிமுகமான இவர். சிம்புவினால் கசக்கிப்பிளியப்பட்டு சிக்கி சின்னா பின்னமாகி தமிழ் சினிமாவே வேண்டாமென போய்விட்டு மீண்டும் அஜித்தின் பில்லாவில் வந்து கிறங்கடித்து இன்று கலக்கி வருகின்றார். ஆரம்பத்திலேயே ரஜினியின் ஆஸ்தான நாயகியாக வலம் வந்த இவர் மேல் விஜய்க்கு ஒரு கண். அதற்கு ஏற்றால்போல வில்லு திரைப்படம் அமைய நாயகியாக ஒப்பந்தமாகி வந்தார். வந்தவர் விஜய்க்கு நாயகியாகவும் பிரபுதேவாவின் மனைவிக்கு வில்லியாகவும் வந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை நல்ல மனைவி என வாழ்ந்த பிரபுதேவாவும் ஆடிப்போய்விட்டார். பட கலந்துரையாடல் நன்றாகவே செய்து படமும் வந்தது. இதற்கிடையில் பிரபுதேவாவின் மகன் இறந்துவிட நயன் ரொம்ப அக்கறையோடு நம் மைக்கல் ஜாக்சனை கவனித்திருக்கின்றார். அதன் பின் நடந்த பல விடயங்கள் பி.பி.சியில் வராத குறையே.(விஜய் உங்கள் வில்லு ஊத்திக்கிட்டதுக்கு இதை ஒரு காரணமா சொல்லுங்கப்பா! படம் எடுக்கிறான் எண்டிட்டு இரண்டு பேரும் எதைஎதையோ எடுத்திட்டாங்க என.)

துபாயில் ஒன்றாக கூடிகும்மியடித்த இந்த ஜோடி மக்களிடம் மாட்டிய மறுநாளே விஜய் T.Vயின் யார் அடுத்த பிரபுதேவா? என்னும் நிகழ்ச்சியில் மைக்கல் ஜாக்சன் பங்கு பற்றவேண்டும். வருவாரா எனப்பார்த்தால் மனிதர் பக்காவா தயார்.(நயனுடன்தான்) எப்படியோ கை காலில் விழுந்து அந்த நிகழ்ச்சிக்கு நயனையும் விருந்தினராக அழைத்துவிட்டார் நம் மைக். இது எப்படியோ ஐயாவின் அம்மணிக்கு தெரிந்துவிடவே தன் மாமனாருடன் இணைந்து திட்டம் தீட்டி மைக்கை கவிழ்க்க தயாரானார்.

நிகழ்ச்சி அன்று மைக் நன்றாக உடுத்தி தயாராக தானும் அவருடன் வருவதாக் கூறி மனைவியும் கிளம்ப நிஜமாவே ஆடிவிட்டார் மைக்.(வாழ்க்கையில் அப்படி ஒரு ஆட்டம் ஆடி இருக்கமாட்டார் எந்த மேடையிலும்.) மனிதருக்கு என்னசெய்வதென்றே தெரிந்திருக்காது. காரணம் தொலைபேசி அழைப்புக்கூட எடுக்க முடியாதபடி பக்கத்தில் மானைவி. என்ன செய்வது அப்போது அவருக்கு கடவுள் எஸ்.எம்.எஸ் தான். ஒருவாறு நயனின் வருகையை நிறுத்திய நிம்மதியோடு ஒருகிளி தனியே சென்று வந்ததாம் அந்த நிகழ்விற்கு.

நிஜமான மைக்கல் ஜாக்சன் வாழ்வில் எவ்வளவு சர்ச்சைகள் சோதனைகள் இருந்ததோ(பெண்கள் விடயத்தில் மட்டுமே. அவர் போல இவர்மேல் யாரும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்ததாக சொல்லவில்லை.) அதேபோல தன் வாழ்விலும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காது வாழும் பிரபுதேவா நிஜமாகவே இந்தியாவின் மைக்கல் ஜாக்சனே.

Share:

10 கருத்துரைகள்:

Joe said...

தயவு செய்து மைக்கேல் ஜாக்சன்-ஐ கேவலப்படுத்தாதீர்கள்.

Nimalesh said...

wow.... thx nanba anna wedding poto potuirunthaa nalla irunthirukum.... paravaila....one side love pochi thola... yenna seiya......lolz

Sinthu said...

2 விடயத்தை சேர்த்துக் கட்டுவதில் நீங்க கில்லாடி போல இருக்கே.. உண்மையா?

Sinthu said...

Hey Shathiesh, if u take out verification, it is really helpful to comment... If u can, take it off?

SShathiesh-சதீஷ். said...

நண்பரேJoe. மைக்கல் ஜாக்சனை கேவலப்படுத்தும் நோக்கில் நான் இந்தப்பதிவை இடவில்லை. உங்களை அது காயப்படுத்தி இருந்தால் வருந்துகின்றேன். இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் பிரபுதேவாதானே அதைத்தானே நான் தெளிவாக எழுதினேன். எனவே நீங்கள் புரிவீர்கள் என நம்புகின்றேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். சிந்து நீங்கள் சொன்ன கருத்துக்கு நன்றி. நிமலேஷின் வருகைக்கும் நன்றிகள் கோடி.

CrazyBugger said...

டேய் வெண்ணை புதுசா ஏதாவது சொல்லு டா.. சும்மா அரச்ச மாவே அரச்சகிட்டு.. நாதரி நாயே

sshathiesh said...

மதுரைமல்லி அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி. உங்களுக்கு என்மேல் தோன்றிய அதிர்ப்தியான கருத்தை நான் கருத்தில்கொண்டு என் பதிவுகளை செம்மைப்படுத்துகின்றேன். உங்கள் விமர்சனத்தை மனமார ஏற்றுக்கொள்கின்றேன்.

Anonymous said...

மதுரைமல்லி இந்த நாத்தம் நாறுது!!!

Mic jeen said...

மைக்கல் என்பது நடன கலைஞர் வாழ்வின் ஒரு மைல் கல் .
பிரபு தேவா நயனின் வாழ்வில் மைல் கல் அவர் மனைவிக்கோ துயில்கள்.

Micheal jackson said...

அடி செருப்பால!!!!

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive