Tuesday, July 7, 2009

வெற்றி-தோல்வி-டோனி.

என் கையில் எல்லாமே இருக்குதடா!
இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். மிக்ச்சிறந்த விக்கெட் காப்பாளர் மட்டுமன்றி அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் நல்ல துடுப்பாட்ட வீரர், இவை எல்லாவற்றுக்கும் மேல் இந்திய அணிக்கு தொடர் வெற்றிகளையும் T20 உலகக்கின்னத்தையும் பெற்றுக்கொடுத்த சாதனைத்தலைவர். இதெல்லாம் கடந்த உலகக்கிண்ண தொடர் வரை தான். அதற்கு பிறகு எல்லா நிலைமையும் மாறி விட்டது.
இந்த நிலை வந்து சேருமோ?
ஷேவாக் என்னும் அதிரடி அசகாய சூரன் இல்லாமல் தாங்கள் ஜெயிப்போம் என உலகக்கிண்ணத்தில் காலடி எடுத்து வைத்தவர்களுக்கு ஷேவாக் பிரச்சனை ஏனோ தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. கூல் தலைவர் என பெயரெடுத்த டோனி சூட்டு தலைவர் ஆனார். ஒருவாறு உப்புசப்பு அணிகளை வென்று சூப்பர் எட்டுக்குள் போன அணி இங்கிலாந்து ,மேற்கிந்திய தீவுகள் அணிகளிடம் வெல்லவேண்டிய, வெல்லக்கூடிய போட்டிகளில் தோல்வி அடைந்தது. அதுவும் இங்கிலாந்துடனான போட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறி இருந்தது. காரணம் இல்லாமல் இல்லை, அந்தப்போட்டியில் டோனி என்னும் மிகச்ச்சிறந்த தலைவன் மிகத்தவறான பல முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றிலும் மிகப்பெரிய தவறாக சுட்டிக்காட்டப்பட்டது ரவீந்தர் ஜடேயாவை தங்களுக்கு முன்னர் அனுப்பி டெஸ்ட் போட்டிபோல அவர் விளையாட அதன் பின் தான் வந்து ஜெயிக்கலாம் என போட்ட கணக்கே விமர்சிக்கப்பட்டது.
நான் கணக்கில புலி ஒருக்கா எனக்கு ஒருக்கா உனக்கு சரியா?

அதன்படியே வந்த டோனி இறுதி ஓவரில் செய்தது நினைவிருக்கும் T20ஐ பொறுத்தவரை அது ஒரு பெரிய ஓட்ட எண்ணிக்கை அல்ல. அப்படி இருப்பினும் டோனி மந்தமாக விளையாடி அணியை தோல்வி அடையச் செய்தார். தோனியின் தனிப்பட்ட துடுப்பாட்டம் தப்பாக அமைந்தாலும் அந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தால் ஜடேயாவை முதலே அனுப்பியது சரியென எல்லோரும் புகழ்ந்த்திருப்பர். காரணம் அந்த நேரம் விக்கெட் ஒன்று இழக்கப்பட்டாலே போட்டி படுதோல்வியில் முடிந்திருக்கும். இதை பல பதிவர்கள் பதிவு இட்டு விட்டனர். ஆனால் நான் இதை மீண்டும் சொன்னதுக்கு காரணம் என் இந்த பதிவின் அடித்தளமே இதுதான். இவை எல்லாம் முடிந்து ஆறி அடங்க முன்னமே மேற்கிந்திய தீவுகள் உடனான தொடர்.
வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோற்கிறவன் ஜெயிப்பான் ஜெயிக்கிறவன் தோற்பான் ஆனால் இங்கே எல்லாமே என் கையில்

மீண்டும் ஷேவாக்,சச்சின்,சகீர்கான் போன்ற பெருந்தலைகள் இல்லாமல் பறந்தனர். முன்னமே சொல்லிவிட்டார் டோனி இந்தத்தொடரில் களங்கத்தை தீர்ப்போம் என. அதன்படியே முதல் போட்டியில் மலை என ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றனர். இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள். தொடரின் முன்னிலையை தீர்மானிக்கப்போகும் போட்டியில் இந்தியா தடுமாற தோணி போல மீட்டெடுத்தார் டோனி. இறுதிவரை தன கைகளிலேயே போட்டியை வைத்திருந்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அடுத்த போட்டியும் மழையால் கைவிடப்பட முதன் முறையாக மேற்கிந்திய மண்ணில் ஒருநாள் சரவதேச தொடர் வெற்றி ஒன்றை பதிந்தது இந்தியா. T20இல விட்ட கோட்டையை இங்கே சரி செய்தனர்.

இந்த படத்துக்கு கருத்து போட என்னால முடியல நீங்கள் முயற்சி செய்து பாருங்க.

இதெல்லாம் எங்களுக்கு தெரியும் தானே ஏண்டா இதையே சொல்லி கொல்லுறாய் என திட்டாதிங்க. இதுதாங்க விடயமே. இதே டோனி தானே T20 உலகக்கிண்ணத்தில் சொதப்போ சொதப்பென சொதப்பினார். அதுவும் மிக இலகுவாக வெல்லவேண்டிய போட்டியைக்கூட தன் கையாலேயே தாரை வார்த்த்துக்கொடுத்தார். ஒருவேளை இம்முறை பாகிஸ்தான் தான் சாம்பியன் ஆக வேண்டுமென இவரே கணக்குப்போட்டு விட்டாரா? ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டியில் இறுதி ஓவரில் அப்படி ஆடி வெற்றி பெற்றுக்கொடுத்த தோனியால் ஏன் T20 போட்டியில் அதுவும் அனல் பறக்கும் ஆட்டம் ஆடும் அந்தப்போட்டியில் முடியாமல் போனது.
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.

இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் இருக்கமுடியும். வழக்கமான இந்திய அணியின் நட்சத்திரங்களுக்கு வந்திருக்கும் கௌரவப் பிரச்சனையே என்பதே என் கருத்து.(இது என் கருத்து தாங்கோ மறுக்கிறவங்க பின்னூட்டத்தில் என்னை துவைத்தெடுங்கோ) அதாவது தான் நினைத்தால் இந்தியாவை வெல்ல வைக்கமுடியும் அதே நேரம் தோற்கவைக்கவும் முடியும் என்பதை டோனி யாருக்கோ சொல்லி இருக்கின்றார். தோனியை இப்படி சொல்ல வைத்தவர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் வீண் விளையாட்டு இம்முறை உலகக்கிண்ணத்தை எடுக்க தகுதியான அணியாக இருந்த ஒரு அணியை செத்த பாம்பாக்கி இருக்கின்றது. அதே நேரம் சச்சின், ஷேவாக் இல்லாமல் கூட இந்திய அணி வெல்லும் நான் திட்டம் போட்டால் என்பதோடு நான் இல்லாவிட்டால் வெல்லவே வெல்லாது என்பதைக்கூட கும்ப்ளே தலைவராக இருந்த போது நடைபெற்ற இலங்கைத்தொடரின் போது அதையும் நிரூபித்தார்.(என் டோனி ஒரு மந்திரவாதியா என்னும் பதிவை வாசித்து பாருங்கள் புரியும்http://sshathiesh.blogspot.com/2009/05/blog-post_10.html)

எதுவாக இருப்பினும் இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் டோனி ஒரு மந்திரவாதி மட்டுமல்ல இந்திய அணியின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கும் சக்தியும் அவரே என்பது தான் என் கருத்து. இதற்கு மாற்றுக்கருத்து இருப்பவர்களும் உங்கள் கருத்தை தாராளமாக சொல்லுங்கள். அதேநேரம் என் கருத்தோடு ஒத்துப்போனால் அதையும் சொல்லிவிட்டு போங்கள்.
Share:

3 கருத்துரைகள்:

Anonymous said...

இந்திய ரசிகர்கள் மனநிலை எந்த காரணம் கொண்டும் ஏற்க முடியாதது .வெற்றி தோல்வி சகஜம் .எப்பவுமே எவராலும் வெல்ல முடியா .தோக்கவும் முடியா. இதுதான் வாழ்கை .விளையாட்டை விளையாட்ட பார்க்கும் மனம் வேண்டும்

ஆதிரை said...

//அதாவது தான் நினைத்தால் இந்தியாவை வெல்ல வைக்கமுடியும் அதே நேரம் தோற்கவைக்கவும் முடியும் என்பதை டோனி யாருக்கோ சொல்லி இருக்கின்றார்.


உண்மையில் இந்த T20 போட்டியில் வெல்ல வேண்டிய தேவை டோனிக்கு இருந்திருக்கும். சேவாக் உடன் முரண்பாடு என அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சேவாக் இல்லாமல் இந்தப் போட்டியை வெல்லவேண்டிய தேவை டோனிக்கு இருந்திருக்கும் என்பதே என் கருத்து.

sshathiesh said...

பெயரில்லா கூறியது...
இந்திய ரசிகர்கள் மனநிலை எந்த காரணம் கொண்டும் ஏற்க முடியாதது .வெற்றி தோல்வி சகஜம் .எப்பவுமே எவராலும் வெல்ல முடியா .தோக்கவும் முடியா. இதுதான் வாழ்கை .விளையாட்டை விளையாட்ட பார்க்கும் மனம் வேண்டும்

உண்மைதான் நீங்கள் சொன்னது. இருப்பினும் எவராலும் தோல்வி கிடைக்கும் சந்தர்ப்பங்களை ஜீரணிக்க முடிவதில்லையே.

ஆதிரை கூறியது...
//அதாவது தான் நினைத்தால் இந்தியாவை வெல்ல வைக்கமுடியும் அதே நேரம் தோற்கவைக்கவும் முடியும் என்பதை டோனி யாருக்கோ சொல்லி இருக்கின்றார்.


உண்மையில் இந்த T20 போட்டியில் வெல்ல வேண்டிய தேவை டோனிக்கு இருந்திருக்கும். சேவாக் உடன் முரண்பாடு என அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சேவாக் இல்லாமல் இந்தப் போட்டியை வெல்லவேண்டிய தேவை டோனிக்கு இருந்திருக்கும் என்பதே என் கருத்து

ஆதிரை உங்கள் கருத்தும் சரியானதே ஒருவேளை ஷேவாக் பிரச்சனை என்பது பிரச்சனையே இல்லை என்பது தோனிக்கு தெரிந்திருக்கும் அதே நேரம் அதை விட ஒரு பெரிய அழுத்தம் ஏற்ப்பட்டிருக்கலாம். ஏனெனில் ஒரு போட்டியை வெல்ல வைக்கும் திறன் தோனிக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இரண்டு நண்பர்களுக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive