Sunday, July 19, 2009

விஜயின் ஜோடியாக அஜித்தின் குடும்பத்தில் இருந்து ஒருவர்.

விஜய்-அஜித் இந்த இரண்டு பேரும் வெளி உலகிற்கு என்ன நட்பு பாராட்டினாலும் உள்ளுக்குள் குமுறல் இருப்பது என்னவோ உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த இரண்டுபேரும் சேர்ந்து ராஜாவின் பார்வை திரைப்படத்தை கொடுத்திருந்தனர். படத்தின் படுதோல்வி இந்த இணையை மீண்டும் இணையவிடாமல் செய்து விட்டது. அதன் பிறகு பேபி ஷாலினியாக கலக்கி எடுத்தவர் குமாரியாக அறிமுகமானது என்னவோ அறிமுகமானது விஜயோடு. அறிமுகப்படத்திலேயே காதலுக்கு மரியாதை செய்த இவர்களின் படம் மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றதோடு தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது.

அதற்கு பிறகு இரண்டு பேரும் மீண்டும் ஜோடி சேர்ந்த படம் கண்ணுக்குள் நிலவு. படம் என்னவோ வெற்றி பெறாவிட்டாலும் வியாபார ரீதியான படமே நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த விஜய், வித்தியாசமான கதைக்களத்தோடு வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்த படம். இந்த ஜோடியை தமிழ் நாடே கொண்டாடியது. காதல் ஜோடி என்றால் இப்படி எல்லா இருக்கவேண்டும் என்று ஏங்கியோர் பலர்.(இது திரையில் மட்டும் சொல்கின்றேன்.) காலம் ஓட அஜித்தோடு ஜோடியானார் ஷாலினி.அது அஜித்தை பற்றி ஒரு சில கிசுகிசுக்கள் உலாவந்தநேரம்.(ஹீராவுடன் படு நெருக்கம் என்பதே அது.) இந்த நேரத்தில் தான் ஷாலினி அஜித்தோடு ஜோடி சேர பதறிய ஷாலினியின் தந்தை, நேராக அஜித்திடமே சென்று என் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதே விட்டுவிடு என சொன்னதாக கூட ஒரு சில தகவல்கள் வெளியானது. அதையும் மீறி காதல் என்னும் கடவுள் இரண்டுபேர் மனதிலும் குடி ஏற இன்று அத்தனை பேரும் மெச்சும் நிஜ ஜோடியாக (அஜித்தும் நல்ல மனிதராகிவிட்டார்.) வாழ்ந்துவருகின்றனர். ஷாலினி எப்படி சிறு வயது முதல் கலக்கினாரோ அதேபோல அவர் தங்கள் ஷாமிலியும் புறப்பட்டார்.

அதுவும் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமான பெருமை கொண்ட ஷாமிலி ஓய் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் கதாநாயகி என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் இவரின் பிரவேசம் ஆரம்பமாகவேண்டும் என எத்தனையோ பேர் ஏங்க இப்படி ஒரு அறிமுகம் அவருக்கு. அறிமுகப்படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் அறிமுகமானவரிடம் நம்மவர்கள் அப்போ கவர்ச்சியா நடிக்க மாட்டிங்களா என்று கேட்க எதற்கும் தான் தயார் என்று தமிழ் சினிமாவிற்கு ஏற்றவர்தான் தான் என்பதை நிரூபித்து விட்டார்.
இதெல்லாம் இருக்கட்டும் தமிழுக்கு வரணுமே. எப்படி அக்காவின் கணவரோடு ஜோடி சேர்ந்து கொஞ்சி குலாவலாமா? முடியாதே.(ஒரு சிலர் தங்கள் மகளை விட குறைந்தவயது நடிகைகள் அல்லது தன்னுடன் நடித்த நடிகையின் மகள் நடிகைகளை ஜோடியாக்கியது வேறு கதை) தமிழில் நடிக்க வைக்கவேண்டுமென பல முன்னணி நிறுவனங்கள் நடிகர்கள் முயற்சிக்க இவர் ஜோடியாகப்போவது யாருடன்?

வேறுயார் தன் அக்காவின் கணவரின் போட்டியாளரும் அக்காவின் முதல் ஹீரோவுமான தளபதியோடு தான்.(ஷாமிலிக்கும் நல்ல எதிர்காலம் இருக்குங்கோ) விஜயின் 51வது படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் அந்த படத்தை சித்திக் அல்லது ஜெயம் ராஜா இயக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.(இது தான் குடும்ப ராசியோ என்பது தெரியவில்லை) வாங்கோ ஷாமிலி தளபதியோட கலக்குங்கோ. முடிஞ்சா உங்க மச்சான் தலையோடையும் ஜோடி சேருங்க.(அரசியல்ல இதெல்லாம் சகயமுங்க. ஆஹா இது அரசியல் இல்லை சினிமா என்ன இருந்தாலும் இரண்டும் ஒன்றுதாங்க.)
Share:

0 கருத்துரைகள்:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive