Thursday, July 30, 2009

விருது வாங்கலயோ விருது.

பதிவுலக நண்பர்களுக்கு!

திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html

பதிவர்கள் பதிவர்களுக்கு விருது வழங்கி உற்சாகப்படுத்தும் காலம் இது.ஒரு சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் எனக்கு கூட இதற்கு தகுதி உண்டா என எனக்குள்ளேயே பல கேள்விகள். இப்போது யார் மனதையும் காயப்படுத்தாமல் நானும் பதிவுலகில் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்ற ஆசை(சுயநலம் என நினைச்சிடாதிங்கப்பா). இதோ நண்பர் Shathru எனக்கு தந்த பட்டாம்பூச்சி விருது நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளங்களில் பறக்கப்போகின்றது.

நான் தெரிவு செய்தவர்கள் என்னவோ எனக்கு தெரிந்தவர்களே தான். ஏதோ ஒரு விதத்தில் என்னை கவர்ந்தவர்கள். சாதிக்க நினைப்பவர்கள் சாதித்துக்காட்டியவர்கள். எனவே நான் வழங்கும் இந்த விருதினை ஏற்று இந்த விருதுப்பணியை தொடருமாறு அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.(தயவுசெய்து அட நம்ம பெயர் இல்லையே என யாரும் கோவிக்காதீங்கோ. இன்னும் நிறைய விருது இருக்குங்கோ இப்பிடித்தான் நம்ம பிரபா எனக்கும் பின்னூட்டத்தில சொன்னார் )

உண்மையாக சொல்கின்றேன் இந்த ஐவரை தெரியும் போது நான் பட்ட பாடு இருக்கே இனிமேல் எனக்கு யாரும் விருது கொடுத்தால்(கொடுக்கிறிங்களா தெரியலப்பா?) சந்தோசப்படுவதைவிட சங்கடம் தான் அதிகம் வருமோ தெரியல, யாருக்கு விருதை நான் கொடுப்பதென்று. ஒருவாறு பட்டாம் பூச்சிக்கு ஐவர் சுவாரஷ்யபதிவர் அறுவர் என தெரிந்து விட்டேன். மறுபடி ஒரு விருதில் மற்றவர்களை கவனத்தில் கொள்கின்றேன்.(எஸ்கேப் ஆக வேற வழி தெரியலங்கோ) பட்டாம்பூச்சியை பிடித்துக்கொண்ட கீழ்வரும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

1.ஹிஷாம் - என் உணர்வுகள்.
என்னுடைய பதிவுலக பிரவேசத்துக்கு காரணமான ஒருவர். பல விடயங்களை மற்றவர்களோடு பகிரும் தீராத அவா கொண்ட இவர் இப்போது இடும் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தரமான நல்ல பதிவுகளை தந்த நீங்கள் மீண்டும் மீண்டு வரவேண்டும். தன் தளத்தில் எதற்கும் அஞ்சாமல் மனதில் உள்ளதை உள்ளபடி இடும் ஒருவர்.

2. கடலேறி-ஆதிரை.
இவரை முதலில் எனக்கு முகப்புத்தகம் அதாங்க Face book மூலம் தான் தெரியும். அதன்பின் இவரின் தளத்தில் மையம் கொண்டவன் நான். எல்லா விடயங்களையும் பஞ்சாமிர்தமாக தந்து ரசிக்க வைப்பார். எனக்கு சுவாரஸ்ய பதிவர் விருது தந்த பரந்த மனசுக்காரர். சரித்திரம் முதல் சகலதும் அலசும் சகலகலா வல்லவன்.

3.கலை-ராகலை.
பசுமைக்குள் ஒளிந்திருக்கும் ரணங்களையும் வேதனைகளையும் ரசைனையோடு சொல்லும் கலை தெரிந்தவர் இந்தக்கலை. நீண்ட நாட்களின் பின் மீண்டு வந்திருக்கின்றார். தொடர்ந்து கலை களைகட்ட வாழ்த்துக்கள்.

4.அருண்பிரசாத்.
இவருடய பதிவுலகம் என்னைப்பொறுத்தவரை வேறுபட்டது. நாங்கள் சிலர் மசாலா கலந்து எழுதிக்கொண்டிருக்க, இவரோ கமல் போல பல தரமான முயற்சிகளை எடுப்பவர்.மிகமுக்கியமாக நான் பதிவுலகில் கால்வைக்க எனக்கு பலவிடயங்களை சொல்லிக்கொடுத்தவர். வித்தியாசமான கோணங்களில் பல விடயங்கள் தரும் ஒருவர். தெரியாத பல விடயங்களை தேடி அலசி ஆராய்ந்து தரும் என் நண்பன்.
http://aprasadh.blogspot.com/

5.VSINTHU.

இவர் பதிவில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.(நான் சொல்வது ரசனையை அவர் பதிவின் தரத்தை அல்ல) கவித்துவமும் தன வாழ்வின் அனுபவங்களும் எழுத்தாக வரும் தளம் இவருடையது. இவர் பதிவுகளை படிக்கும் பொது ஏனோ நம் வாழ்வின் சில கட்டங்கள் வந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. நீங்கள் இன்னும் பல பதிவுகளை உங்கள் தளத்தில் சிந்தவேண்டும்(எழுதவேண்டும்)

விருது பெற்றோருக்கு மீண்டும் வாழ்த்துகள். இந்த சங்கிலியை அறுத்திடாமல் நீங்களும் கொடுங்களேன்.நான் விருது வழங்கிய சிலருக்கு ஏற்க்கனவே இந்த விருது கிடைத்திருந்தாலும் அன்பாக நான் வழங்கும் இந்த விருதையும் ஏற்ப்பார்கள் என நம்புகின்றேன். காரணம் எனக்கு தெரிந்த என்னைக் கவர்ந்தவர்களுக்கே நான் விருது கொடுக்க முடியும் நண்பர்களே. மீண்டும் சிந்திப்போம் சுவாரஸ்ய பதிவர் விருதுகளோடு.
Share:

10 கருத்துரைகள்:

Admin said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

கலையரசன் said...

ரைட்டு.. இன்னம் முடியலையா இந்த விருது வழங்கும் விழா?

உங்களுக்கும், விருதை பெற்றவர்களுக்கும் வாழத்துக்கள்!!

ஆதிரை said...

அடடா... எறிந்த பந்து திரும்பியும் இன்னொரு விதத்தில் என்னை நோக்கி...
மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், இவ்விருதை கொடுப்பதற்குத்தான் பதிவர்களை தேடிப்பிடிக்க வேண்டும். :P

நன்றி சதீஷன்

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். அப்பாடா ஒருமாதிரி நீங்கள் கொடுத்ததை என்னை கவர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டேன்.

SShathiesh-சதீஷ். said...

கலையரசன் கூறியது...
ரைட்டு.. இன்னம் முடியலையா இந்த விருது வழங்கும் விழா?

உங்களுக்கும், விருதை பெற்றவர்களுக்கும் வாழத்து

எதுக்கும் முடிவில்லை கலை. வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

ஆதிரை கூறியது...
அடடா... எறிந்த பந்து திரும்பியும் இன்னொரு விதத்தில் என்னை நோக்கி...
மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், இவ்விருதை கொடுப்பதற்குத்தான் பதிவர்களை தேடிப்பிடிக்க வேண்டும். :P
நன்றி சதீஷன்

இதுதான் நியூட்டனின் மூன்றாம் விதி வாழ்த்துக்கள்.

kuma36 said...

பட்டாம்பூச்சியை மீண்டும் எனக்கு பரிசளித்து உற்சாகம் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சதீஸ்.

Sinthu said...

Thanks Sathiesh..

SShathiesh-சதீஷ். said...

கலை - இராகலை கூறியது...
பட்டாம்பூச்சியை மீண்டும் எனக்கு பரிசளித்து உற்சாகம் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சதீஸ்.

உங்கள் வருகைக்கு நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

Sinthu கூறியது...
Thanks Sathiesh..

உங்கள் வருகைக்கு நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive