Friday, July 31, 2009

நான் விருது கொடுத்த சுவாரஸ்யபதிவர்கள்.

பட்டாம்பூச்சியை பறக்க விட்டாச்சு. அடுத்து சுவாரஷ்யபதிவர் விருதை அறுவரிடம் ஒப்படைத்து விட்டால் என் கடமையும் கொஞ்சம் முடிந்து விடும். இந்த விருதை எனக்கு கொடுத்த கடலேறி ஆதிரைக்கு என் நன்றிகள். இப்போது நான் விருதளிக்கபோபவர்கள் நான் பார்த்து ரசித்து மகிழ்பவர்கள். பதிவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென தனி அடையாளம் கொண்டவர்கள். நான் தெரிவு செய்தவர்கள் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றிருந்தாலும் நான் அவர்களுக்கு தான் இந்த விருதை அளிக்கப்போகின்றேன். காரணம், நான் படித்து சுவைத்தவர்களுக்கு தானே நான் கொடுக்க முடியும். இந்த சின்னைப்பையன் கொடுப்பதை அந்த பெரியவர்கள் ஏற்பார்கள் என நம்புகின்றேன். அத்தோடு இந்த சங்கிலியை உடையாமல் தொடருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இதோ என்னைக்கவர்ந்த அந்த சுவாரஸ்ய பதிவர்கள் அறுவர்.

1.லோஷன்-களம்.
இவருக்கு விருது வழங்கும் அளவிற்கு உண்மையில் நான் ஒன்றும் பெரிய பதிவர் அல்ல. ஆனால் என்னை பல வழிகளில் ஆளாக்கிக்கொண்டிருக்கும் இவருக்கு விருது வழங்கி என் மனதை மகிழ்த்தவே வழங்குகின்றேன்.(என் வானொலி அறிவிப்பாளர் பயணத்தில் மட்டுமல்ல பதிவுலகிலும் எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து இப்போதும் என்னை வளப்படுத்திக்கொண்டிருக்கும் என் மதிப்பிற்குரிய அண்ணா.) இவரின் பதிவுகள் பல்சுவை வாய்ந்தவை. அப்பப்போ பரபரப்பாக சில விடயங்களை எழுவது இவரின் துணிச்சல்.என்ன நிறைய எதிர்பார்ப்பை தந்து விட்டு கடைசியில் மொக்கைபோடும் சிங்கபூர் பற்றிய தொடர் பதிவை படிக்கும் போது சிரிப்போடும் அழுகை வருகிறது. அடப்பாவி இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று.நான் கொடுக்கும் இந்த விருதை ஏற்பீர்கள் என நம்புகின்றேன்.

2.சந்ரு-சந்ருவின் பக்கம்.
எனக்கு அண்மையில் பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர். நல்ல தேடல்களும் சமுக அக்கறையுள்ள தேவையான கருத்துகளோடு மசாலா கலந்து ரசிக்கும் படி கொடுக்கும் வல்லவர். எனக்கு பட்டாம்பூத்ச்சி விருது கொடுத்த புண்ணியவான்.(இப்போ அவருக்கே கொடுத்து அந்த இன்ப அவஸ்தையை அவரையும் அனுபவிக்க வைப்பதில் ஒரு சந்தோசம்.)அபாரமான வளர்ச்சி கண்டு வரும் ஒரு நல்ல பதிவர்.

3.பிரபா-விழியும் செவியும்.
எல்லா மட்டத்துக்கும் போய் விழியோடு விழியும் செவியோடு செவியும் வைத்து நாசூக்காக அலசுவது மட்டுமில்லாமல் தன தளத்துக்கு வருவோரை சந்தோசமாகவும் சிந்தனையோடும் திரும்பிப்போக வைக்கும் ஒருவர்.(எனக்கு விருது தருவன் என்றிட்டு இன்னும் தரல நான் முந்திட்டனுன்னா.) எல்லாவகை பதிவிற்கும் சொந்தக்காரர் இந்த பிரபா.

4.Dr.எம்.கே.முருகானந்தன்-மறந்து போகாத சில.
இவர் ஒரு Doctor தான். ஆனால் எழுத்தில் வருவதே நமக்கு மருந்தாகிப்போவதுண்டு. மருத்துவ விடயங்களோடு படித்தவை,பார்த்தவை,ரசித்தவை,கேட்டவையை தரும் சகலதும் அறிந்த ஒரு டாக்டர். இவருக்கு விருது கொடுக்க எனக்கு வயதோ அனுபவமோ போதாமல் இருப்பினும் என் சந்தோசத்துக்காக தருகின்றேன் வாங்கிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.(எத்தனை தடவிய நீங்கள் என் சுகவீனத்துக்கு மருந்து தரும் போது வாங்கி இருக்கேன் ஒரு தடவை நீங்கள் என்னிடம் திருப்பி இந்த கனியை வாங்கக்கூடாதா.?)

5.என் எழுத்து இகழேல்-SUMAZLA
பிளாக்கிலேயே பிளாக் பற்றி எழுதும் அசகாய சூரர். நிறைய விடயங்களை இவர் தளத்தில் படிக்கலாம். தமிளிஷில் இவர் தளத்தை பார்த்து பார்த்தே கவரபட்டவன் நான். வித்தியாசத்துக்கு மறுபெயராக இவரை சொல்லலாம்.

6.வண்ணத்துபூச்சியார்
எனக்கு பின்னூட்டம் போடவந்த இந்த பிரபுவை உடனே பின் தொடர்ந்து பார்த்தேன். அசந்து போய்விட்டேன் இவர் பதிவை பார்த்து. தேடலுடன் பல பயன்மிக்க செய்திகளை தரும் இவர் தளம். இன்னும் அதிகம் படிக்க வேண்டும் இன்னும் அதிகம் நானும் எழுத வேண்டுமென ஒரு அவாவை இப்போது எனக்குள் தந்திருக்கின்றார்.

அப்பாடா...............பெரிய வேலை ஒன்று முடிஞ்சிது. விருத்களை கொடுத்து முடிச்சாச்சு அடுத்தது என் ஐம்பதுதான்....... சரி விஜய் அஜித்தும் நானும் என்னும் 50வது பதிவில் என்னைப் பற்றிய பலர் அறியாத உண்மைகளை சொல்லப்போகின்றேன். விஜய் அஜித்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு.....? அதன் பிறகுதான் சூப்பர் சிங்கர்ஸ் மற்றும் லோஷன் அண்ணாவின் மனம் திறந்த பதில்கள். இன்னும் கொஞ்சம் காத்திருக்கவா மாட்டீர்கள் நண்பர்களே.
Share:

16 கருத்துரைகள்:

Anonymous said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

சிலோன்காரங்கள் இப்படி ஜால்ரா அடிக்ககூடாது. உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா?

Anonymous said...

நல்லா திரும்பி திரும்பி கொடுக்கிறீங்க.. அப்படியே வெச்சிகங்க.. உங்க உலகம் எவ்வளவு சின்னது.. எவ்வளவு காக்காய் பிடிப்புகள் உள்ளது என்று வெளிச்சமாகுது..

இப்படியானவங்க கையிலயா ஊடகம் இருக்குது?

Anonymous said...

உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.

செய்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்.. திருப்பி திருப்பி கொடுக்கேக்கயும் பெருசா censor

Admin said...

நன்றி சதீஸ் உங்கள் அன்புக்கும் விருதுக்கும்

Admin said...

//பெயரில்லா கூறியது...
சிலோன்காரங்கள் இப்படி ஜால்ரா அடிக்ககூடாது. உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா?//மேலதிகாரிதான் ஆனாலும் எல்லோரையும் சமமாக மதிப்பவருக்கு எங்களால் இதைத் தவிர என்ன கொடுக்க முடியும்..
விருது என்பதைவிட அவருக்கு நாம் கொடுக்கும் அன்பு பரிசு என்று சொல்லலாம்.

Anonymous said...

ஜால்ராவுக்கு அடுத்த ஜால்ரா ஆதரவு.. ஒரு பின்னூட்டத்தையே பத்து பின்னூட்டமா இடுற ஆள் எல்லாம் வக்காலத்தா.. சின்ன காக்காய்.. பெரிய காக்காய்.. ஒன்றுக்கு கல்லிறிந்தால் மொத்தமாக கரையுது..

Anonymous said...

சமாக மதித்து அவர் பெருந்தன்மை காட்டிகிறார்.. காக்காய் பிடித்து நீங்கள் சிறுமைப்படுகிறீர்கள்..

SShathiesh-சதீஷ். said...

சின்ன அம்மிணி கூறியது...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
நன்றி சதீஸ் உங்கள் அன்புக்கும் விருதுக்கும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

SShathiesh-சதீஷ். said...

சந்ரு கூறியது...
//பெயரில்லா கூறியது...
சிலோன்காரங்கள் இப்படி ஜால்ரா அடிக்ககூடாது. உங்கள் மேலதிகாரி லோஷனுக்கு நீங்களே விருது கொடுப்பதா?//மேலதிகாரிதான் ஆனாலும் எல்லோரையும் சமமாக மதிப்பவருக்கு எங்களால் இதைத் தவிர என்ன கொடுக்க முடியும்..
விருது என்பதைவிட அவருக்கு நாம் கொடுக்கும் அன்பு பரிசு என்று சொல்லலாம்.

சில விடயங்களை சிலர் புரிவதில்லை ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லிவிட்டு போவர். இருப்பினும் அந்த பெயரில்லா நண்பருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு அவருக்காகவே எழுதுகின்றேன் என் ஐம்பத்தோராவது பதிவை.

Anonymous said...

நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.. உங்கள் மனச்சாட்சி அறியும் காக்காயா இல்லயா என்று.. எதுக்கு 51 ஆவது பதிவு.. சுத்த வேஸ்ட்..

ஊக்கப்படுத்துவதாக இருந்தால் எத்தனையோ பதிவருக்கு கொடுக்கலாம்.. சுத்தி சுத்தி லோசனுக்கு குடுத்து என்னத்த கண்டீங்களோ.. மரியாதை காட்ட ஆயிரம் வழி இருக்கு.. ஒரு வண்ணாத்து பூச்சி படம் குடுத்து என்ன கண்டனீங்க?

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி சதீஷ்! இவ்விருதுகளால் எந்த பயனும் இல்லை என்று பலரும் சொன்னாலும், இது நம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம் தான். நான் தாங்கள் உவந்தளித்த விருதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

SShathiesh-சதீஷ். said...

SUMAZLA/சுமஜ்லா கூறியது...
நன்றி சதீஷ்! இவ்விருதுகளால் எந்த பயனும் இல்லை என்று பலரும் சொன்னாலும், இது நம் அன்பை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம் தான். நான் தாங்கள் உவந்தளித்த விருதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்.


நன்றி நண்பரே மீண்டும் வாழ்த்துக்கள்.கலக்குங்கள்.

butterfly Surya said...

உங்கள் அன்புக்கும் விருதுக்க்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

மற்ற அனைவருக்கும் என் மனதார வாழ்த்துகள்.


இன்று நட்புதினம். எல்லா நாட்களும் நமது வலையுலகில் எனக்கு நட்பு நாளாகவே தோன்றுகிறது. இது போன்று முகம் தெரியாத உள்ளங்களின் அன்பு என்னை சிறகடிக்க செய்கிறது.


வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.


நேரம் கிடைப்பின் மற்ற உலக சினிமா பதிவுகளை படித்து நிறை / குறை சொல்லுங்கள். இன்னும் மகிழ்வேன்.

SShathiesh-சதீஷ். said...

வண்ணத்துபூச்சியார் சொன்னது…
August 2, 2009 12:01 PM
உங்கள் அன்புக்கும் விருதுக்க்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.

மற்ற அனைவருக்கும் என் மனதார வாழ்த்துகள்.


இன்று நட்புதினம். எல்லா நாட்களும் நமது வலையுலகில் எனக்கு நட்பு நாளாகவே தோன்றுகிறது. இது போன்று முகம் தெரியாத உள்ளங்களின் அன்பு என்னை சிறகடிக்க செய்கிறது.


வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.


நேரம் கிடைப்பின் மற்ற உலக சினிமா பதிவுகளை படித்து நிறை / குறை சொல்லுங்கள். இன்னும் மகிழ்வேன்.

கண்டிப்பாக வன்னத்துப்பூச்சியாரே உங்கள் பக்கம் என் வருகை இருக்கும் உங்கள் வருகை தொடரட்டும்..........

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive