Saturday, February 20, 2010

ESPN-Cricinfo விருதுகள்-படங்களுடன் ஒரு பார்வை.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டுக்கான ESPN-Cricinfo விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளிலும் உள்ள சிறந்த வீரர்கள் இந்த களத்தில் மோதினர் சுவாரஸ்யமான இந்த போட்டியில் வெற்றியாளர்களை தீர்மானித்த நடுவர்கள் இவர்கள் தான்.

Jury

Sambit Bal Editor, Cricinfo

Harsha Bhogle Television presenter and writer

Geoff Boycott Former England batsman, commentator

Ian Chappell Former Australia captain, commentator, columnist

Daryll Cullinan Former South Africa batsman, commentator

Peter English Australasia editor, Cricinfo

Tony Greig Former England captain, commentator

David Lloyd Former England coach, commentator

Sanjay Manjrekar Former India batsman, commentator

Andrew Miller UK editor, Cricinfo

Dileep Premachandran Associate editor, Cricinfo

Ramiz Raja Former Pakistan batsman and captain, commentator

Peter Roebuck Former Somerset captain, writer

Osman Samiuddin Pakistan editor, Cricinfo


இந்த நடுவர்களினால் வீரர்களின் கடந்த ஆண்டு சாதனைகள் பெறுபேறுகள் கணக்கில் மகுடம் சூட்டப்பட்டுள்ளனர்.


வீரர்களின் செயற்பாட்டுக்கு அமைய நடுவர்களின் தெரிவுகள்.

டெஸ்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை இலங்கைக்கு எதிராக பெற்ற 293 ஓட்டங்களின் உதவியுடன் அன்று ஸ்டாஸ் மற்றும் கிரிஸ் கெயிலை வென்று இந்தியாவின் மினி சூறாவளி விரேந்தர் சேவாக் தனதாக்கிக்கொண்டார்.



மினி சூறாவளி கிளம்பியதே விரு தாண்டவம் தொடங்கியதே.....

ஜமைக்கா டெஸ்டில் பெற்ற எட்டு விக்கெட்டுக்கள் பெறுதியுடன் டெஸ்டில் சிறந்த பந்து வீச்சாளருக்குரிய விருதை தட்டி இருக்கின்றார் மேற்கிந்திய தீவுகளின் ஜெரோம் டெயிலர்.

நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்.....

ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக சந்தேகமே இன்றி சாதனை நாயகன் சச்சின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஓட ஓட விரட்டிய 175 ஓட்டங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் இந்தியாவின் வசம் துடுப்பாட்ட விருது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ நான் ராஜ துடுப்பாட்டத்தில் எப்பவும் ராஜா.....

ஆனால் பந்துவீச்சில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானின் சகித் அப்ரிடி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தன் சிறந்த பெறுபேறான 6-38 இன் மூலம் இந்த விருதை தட்டிச்சென்றார்.

பந்தையும் கடிப்பேன் விக்கெட்டும் எடுப்பேன் எனக்குள்ளே ஏதோ நடந்துபோச்சு....

போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக T20உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியாவை துவைத்தெடுத்த மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கறுப்பு சிங்கமொன்று புறப்பட்டதே......


பந்துவீச்சில் ஆறு ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த உமர் குல் தெரிவு செய்யப்பாட்டுள்ளார்.


தனியே தன்னந்தனியே நானும் சிலவேளை இப்படி எடுப்பேன்.....


டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த மேலும் சில விருதுகள்.

வருடத்தின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர். - கெளதம் கம்பீர்.

கம்பீரமான பல டெஸ்ட் ஆட்டங்கள் ஆடியவர்.

சிறந்த ஆரம்ப இணைப்பாட்ட ஜோடி.- அவுஸ்திரேலியாவின் சைமன் கடிச்-ஷேன் வட்சன்.

நாங்க புதுசா இணைந்து கொண்ட ஜோடிதானுங்க.


சிறந்த டெஸ்ட் இணை.-மஹேல-திலான் சமரவீர. (இலங்கை.)

நாங்கதான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு.


சிறந்த பந்துவீச்சாளர்.- மிட்சல் ஜான்சன்(அவுஸ்திரேலியா.)


எகிறி எறிந்தேன் விக்கெட் விழுந்தது.


ஒருநாள் போட்டி விருதுகள்.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்-விரேந்தர் சேவாக்(இந்தியா)


அங்கேயும் நானே இங்கேயும் நானே பந்தினை பஞ்சராய் தினம் அடிப்பேனே.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர்- ஜேம்ஸ் அன்டர்சன்(இங்கிலாந்து)

நான் போட்டா அடிக்கமாட்டாய்..

சிறந்த ஒழுக்கமான அணி-நியூசிலாந்து.

ரொம்ப நல்லவங்கையா....

டெஸ்ட் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி-இந்தியா.


நம்பர் 1க்கு வந்தது பெரிய விசயமப்பா.


ஒருநாள் போட்டிகளில் செல்வாக்கு செலுத்திய அணி- இந்தியா.


ஏறு முன்னேறு இங்கும் நம்பர் வன் அடையும் நாள் தொலைவில் இல்லை.


வருடத்தின் சிறந்த பந்துவீச்சாளர். - ஸ்டுவர்ட் பிரவுட்.(இங்கிலாந்து)


எல்லாம் அவன் செயல் அப்பாடா இந்த முறை யுவராஜிட சிக்கல.

வருடத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்.-கெளதம் கம்பீர்.(இந்தியா.)



எங்கேயும் போதும் நான் தாண்ட நம்பர் வன்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

Share:

2 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

எல்லாம் சரி, ஆனா

//சிறந்த ஒழுக்கமான அணி-நியூசிலாந்து
நியூசிலாந்து.சர்ச்சைகளில் சிக்காமல் கிரிக்கெட்டின் கண்ணியத்தை பேணியமைக்காக வழங்கப்படுவது. முன்பு நம்ம இலங்கை பசங்க வாங்கினாங்க சங்கா அண்ணா தலையான பிறகு தறுதலயாகிட்டர்.//

Disciplined team என்று போட்டிகளில் குறைந்த உதிரி ஓட்டங்களை விட்டுக் கொடுத்தமைக்காகவே வழங்கியிருந்தார்கள்.
ஒரு போட்டியில் 8.46 ஓட்டங்களை மட்டும் உதிரியாக வழங்கியமைக்காக வழங்கியிருந்தார்கள்.

இது spirit of the game அல்ல...

SShathiesh-சதீஷ். said...

கன்கொன் || Kangon கூறியது...
எல்லாம் சரி, ஆனா

//சிறந்த ஒழுக்கமான அணி-நியூசிலாந்து
நியூசிலாந்து.சர்ச்சைகளில் சிக்காமல் கிரிக்கெட்டின் கண்ணியத்தை பேணியமைக்காக வழங்கப்படுவது. முன்பு நம்ம இலங்கை பசங்க வாங்கினாங்க சங்கா அண்ணா தலையான பிறகு தறுதலயாகிட்டர்.//

Disciplined team என்று போட்டிகளில் குறைந்த உதிரி ஓட்டங்களை விட்டுக் கொடுத்தமைக்காகவே வழங்கியிருந்தார்கள்.
ஒரு போட்டியில் 8.46 ஓட்டங்களை மட்டும் உதிரியாக வழங்கியமைக்காக வழங்கியிருந்தார்கள்.

இது spirit of the game அல்ல.

//என் தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். தவறாக புரிந்துகொண்ட நான் அப்படி பதிந்துவிட்டேன். இப்போ திருத்திவிட்டேனே. நன்றிகள்.//

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive