Monday, February 22, 2010

அஜித் விஜயிடம் சொன்ன ரகசியம்-குகநாதனிடம் மல்லுக்கட்டிய விஜய்.


மீண்டும் ஒரு அஜித் பதிவை எழுதிக்கொண்டிருந்த இடையில் இன்னொரு அஜித் பதிவு. எனக்கும் அஜித்துக்கும் இடையில் இப்போ அப்பிடி ஒரு பொருத்தம் போல இருக்கு. சரி நேரே விசயத்துக்கே வாறன். ஏற்கனவே ஒரு பதிவை விஜய்-அஜித் நட்பு பற்றியும் விஜய் அஜித்திடம் பேசியது பற்றியும் இட்டிருந்தேன். அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

அந்த பதிவே இவர்கள் இரண்டுபேருக்கும் இடையிலான புரிந்துணர்வை காட்டி இருக்க. இப்போது இன்னொரு செய்தி வெளிவந்திருக்கின்றது. அஜித் பிரச்சனையில் அஜித்துக்கு ஆதரவாக நின்று கைதட்டியதும் பேசியதும் சூப்பர் ஸ்டார். அவருக்கே பெப்சி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவிட அவர் பக்கமும் சத்தம் இல்லை. என்ன நடந்ததோ என தெரியாமல் நின்ற நேரம் இதோ நான் இருக்கேன் நீ என் நண்பன்டா உன்னை விட்டுவேனா என வந்திருக்கின்றார் நம் தளபதி. தலைக்காக தன் தலைய நுழைத்து சமரசம் செய்ய முற்பட்டிருக்கின்றார் விஜய்.

தொழில் இருவரும் எதிரிகள் இவர்கள் சேரமாட்டார்கள். என எண்ணியவர்கள் மூஞ்சியில் கரி பூசி இருக்கின்றார் விஜய். இதில் பலருக்கு தெரியாத இன்னொரு விசயமும் வெளிவந்திருக்கின்றது. இருவரும் திரையில் மோதிக்கொண்டாலும்(அண்மையில் குறைவு.) கிறிஸ்மஸ்,புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒன்றாக ஒரே இடத்தில் கொண்டாடி வருவதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. (என்ன அதிசயம் இது.)

அப்படிப்பட்ட தன் உயிர் நண்பனுக்கு பிரச்சனை என்ற போது பார்த்துக்கொண்டிருப்பார தளபதி. உடனடியாக் வி.சி.குகநாதனை தொடர்புகொண்ட விஜய்"அஜித் ஒரு திறந்த புத்தகம் மாதிரி அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதை பெரிது படுத்தவேண்டாம். வீணாக அவரின் மன உளைச்சலை அதிகரிக்க வேண்டாம்" என கேட்டிருக்கின்றார்.

இதை விட இன்னொரு செய்தி திடுக்கிட வைத்திருக்கின்றது. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த இருவரும் பேசியபோது இன்னும் சில ஆண்டுகளில் நடிப்பை கைவிட இருப்பதாக அஜித் விஜயிடம் தெரிவித்திருக்கின்றார். அதனை குறிப்பிட்டு பேசிய விஜய்,அவர் இந்த துறையில் இருக்கும் வரை அவரை கஷ்டப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டாராம். ஆனால் விஜயின் பேச்சையும் கேட்டு கோபமடைந்த குகநாதன் அவரை யார் நடிக்க சொன்னார் விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என சொன்னாராம்.

இந்த குகநாதன் போன்றோர் திருந்தமாட்டார். தேவையான நேரத்தில் தேவையானதை செய்யாமல் இப்படி கண்கெட்ட பிறகு நமஸ்காரம் செய்கின்றனர். அஜித் தேவையான இடத்தில் சொல்ல வேண்டியவரிடம் தான் இதை சொல்லி இருக்கின்றார். அனால் அதன் பின் நடக்கும் பிரச்சனைகளை அவர் பார்ஹ்த்துக்கொண்டிருப்பதே கொடுமையிலும் கொடுமை.

ரசிக சிகாமணிகளே, விஜயை ரசித்து அஜித்தை கேவலப்படுத்துவோரே, தலைய கொண்டாடி தளபதிய இழிச்சவாயனாக்குபவர்களே இவர்கள் இரண்டுபேருக்கும் ரசிகனில்லாமல் இவர்களை பற்றி தெரியாமல் இருந்து உசுப்பி விடும் நல்லுள்ளங்களே இப்போதாவது புரிகின்றதா இந்த இருவரின் நட்பு. உங்கள் நட்பு வளரட்டும். தல இனி என்ன கவலை உன் எதிரி என எல்லோரும் நினைத்தவர் உன்னுடன் உற்ற தோழனாக உண்மையில் நமக்கு சந்தோசம்.
Share:

8 கருத்துரைகள்:

Subankan said...

//தல இனி என்ன கவலை உன் எதிரி என எல்லோரும் நினைத்தவர் உன்னுடன் உற்ற தோழனாக உண்மையில் நமக்கு சந்தோசம்.//

:))

Mahesh sunthar said...

yappa ippidi uruvuriye niyaayamaa?

http://tamilish.com/CinemaNews/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/

http://dinaithal.com/entertainment/12790-vijay-supports-ajith

haran said...

//அப்படிப்பட்ட தன் உயிர் நண்பனுக்கு பிரச்சனை என்ற போது பார்த்துக்கொண்டிருப்பார தளபதி//
உயிர் நண்பனுக்கு பிரச்சினை என்டா நேரடியா களத்தில இறங்கி பிரச்சினைய தீர்த்து வைக்கிறதுதான் முறை எங்கேயோ இடிக்குதே (இதில என்ன கொடுமை என்டா தளபதி குகனாதனோட என்ன கதைத்தார் எண்டு யாருக்கும் தெரியாது - தட்ஸ்தமிழ்.கம செய்திகளை நம்பி உங்கட பதிவுகளில் போடாதீர்கள் அதில் வரும் செய்திகளில் அரைவாசி பொய் அல்லது திரிபுபடுத்தப்பட்ட செய்திகள். வேட்டைக்காரன் படம் வெளியாகி மூன்றாம் நாளே படம் தோல்வி எண்டு போட்ட வெப்சைட். இப்ப கூட முதலுக்கு நஷ்டம் இல்லாம ஓடின படத்த தோல்வி எண்டுதான் போடுவாங்க. உண்மையான செய்திகள் பார்க்க behindwoods.com பாருங்க )

haran said...

இதையும் பாருங்கள்

http://www.envazhi.com/?p=16385

SShathiesh-சதீஷ். said...

@Mahesh sunthar

/வணக்கம் தலைவா. நீங்கள் சொன்னதுபோல அந்த தளங்களிலும் அந்த செய்திகள் உள்ளன. எனக்கு அஜித்தோ விஜயோ அழைப்பெடுத்து இதை சொல்லவில்லை நான் தளத்தில் பார்த்ததை மற்றவர்களுடன் பகிர்ந்தேன். இன்னொரு விடயம் இந்த இரண்டும் மட்டுமில்லை. இன்னும் நிறைய பதிவுகள் தமிளிஷில் உலாவுகின்றன. பார்க்கவில்லையா. இன்னொரு சந்தேகம் நீங்கள் எங்கே இருந்து உருவிநீர்கள் அல்லது உங்களுக்கு விஜய் போன் செய்து சொன்னாரா. இன்னொரு விடயம் உங்களின் கருப்பொருளும் என் கருப்பொருளும் ஒன்றே. ஆனால் நான் உங்கள் வசனத்தை அப்படியே கொப்பி செய்தா இட்டேன் என் வசன நடையில் நான் இட்டது தப்பா? அப்படி தப்பென்றால் அந்த தப்பை நான் செய்வேன். காரணம் இது செய்தி அந்த செய்தி எல்லோருக்கும் போது அதை நாம் எழுதும் ஸ்டைலில் மாற்றுகின்றோம். அதேபோல இந்தியா வெற்றி நேற்று பலர் எழுதினர் அப்போ எல்லாம் உருவியா. மன்னிக்கவேண்டும் உங்கள் கருத்துக்கு நான் உடன்படமுடியவில்லை.//

http://dinaithal.com/entertainment/12755-vijay-speaks-with-ajith

அப்படிப்பார்த்தால் இதை என்ன சொல்ல நீங்கள் செய்தது எப்பூடி இருக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சைலன்ஸ்..,

vijay 50 movies said...

wwww.superstarvijay.blogspot.com இவ் வழைப்பூவிற்க்குள் உள் நுழைந்து விஜய் இது வரை நடித்த 49 திரைப்படங்களில் சிறந்த, உங்களை கவர்ந்த திரைப்படங்களிற்க்கு வாக்களிக்கவும், இவ் முடிவுகள் விஜய் நடித்து வரும் 50வது திரைப்படத்தை முன்னிட்டு விஜயின் நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரையிலான மேல் பார்வைக்கு உங்களின் வாக்குகள் மிக உறுதுனையாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு: wwww.superstarvijay.blogspot.com

visit now to wwww.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies

vijay 50 movies said...

www.superstarvijay.blogspot.comஇவ் வழைப்பூவிற்க்குள் நுழைந்து விஜய் இது வரை நடித்த 49 திரைப்படங்களில் சிறந்த, கவர்ந்த திரைப்படங்களுக்கு வாக்களியுங்கள்,
இவ் முடிவுகள் விஜய் நடித்து வரும் 50வது படத்தை முன்னிட்டு, விஜயின் நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரையிலான மேல் பார்வை ஒன்று வெளியீட்டு நாள் அன்று பதிவிட உங்களின் வாக்குகள் மிக அவசியம்.

மேலதிக தகவல்களுக்கு :
http://superstarvijay.blogspot.com/2010/02/blog-post_20.html

visit now to www.superstarvijay.blogspot.com for vote vijay’s best 50 movies

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive