Saturday, May 15, 2010

23 வருடங்களின் பின் இறுதியில் மோதும் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா.மேற்கிந்தியாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் T20உலக கிண்ண போட்டிகள் நிறைவுக்கு வரும் நாளில் மோதப்போகும் அணிகள் தெரிவாகிவிட்டன. பல கிரிக்கெட் மேதாவிகள் விமர்சகர்கள் எங்களைப் போன்ற எறும்பு பிடித்து விட்டு கணித்த சாமியார்கள் என எல்லோரையும் ஏமாற்றி முதல் முறையாக உலக கிண்ணத்தில் ஆசிய நாடு தவிர்ந்த இரண்டு நாடுகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.

மீண்டும் இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து கிண்ணத்தை பறிக்கும் என்று ஒரு சாராரும் இல்லை இல்லை மீண்டும் பாகிஸ்தானே வைத்துக்கொள்ளும் என்று இன்னொரு தரப்பும், இன்னொரு ஆசிய நாடு இலங்கை இம்முறை அதை பார்த்துக்கொள்ளும் என்று மற்றொரு சாராரும் நீங்கள் என்ன தான் சொல்லுங்க இந்த முறை ராசி இல்லை என்பதை எல்லாம் உடைத்து தென் ஆபிரிக்கா அல்லது நியூசிலாந்து எடுக்கும் என்றும் எட்டாக்கனிய இம்முறை அவுஸ்திரேலியாவே பறிக்கும் என சொன்ன பலரில் இப்போது ஒன்றே ஒன்றுக்கு மாத்திரமே வாய்ப்பைக் கொடுத்துவிட்டு இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது சென் லூசியா மைதானம். மேற்கிந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு எந்தளவு ஒத்துழைக்கும் என்ற கேள்வியையும் தாண்டி இந்த திருவிழா நிறைவடையப்போகின்றது. லீக் ஆட்டங்கள் எந்த பரபரப்பும் இன்றி மழையுடன் சேர்ந்து ஆடப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட அணிகள் சூப்பர் எட்டு ஆட்டத்துக்குள் வந்தன. முதலிலே வெளியேறப் போகிறது என அதன் ஆட்டத்தை வைத்து கணிக்கப்பட்ட பாகிஸ்தான் இன்றைய போட்டியின் இறுதி மூன்று பந்துகள் வரை இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணியாக மாறியது. ஆனால் இது பெரும்பாலும் அவர்களுக்கு இருந்த அதிஸ்டமே. காரணம் சாம்பியன்கள் போல அவர்கள் ஆட்டம் இருக்கவில்லை. இறுதிக்கு வர என்னை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு இந்த முறை தகுதி இல்லை. அடுத்தவன் போட்ட பிச்சையில் உள்ளே நுழைந்து கிண்ணத்தை எடுத்தால் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடும் அணிகள் என்ன செய்வது. எனவே அரை இறுதியில் பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலியா கொடுத்த அடி மகா அடியே.


பெரிதும் எதிர்பார்க்கப்பட தென் ஆபிரிக்கா அடிமேல் அடி வாங்கி வெளியேறி விட்டது. ஆரம்பத்தில் அசுர ஆட்டம் ஆடினாலும் பின்னைய இவர்களின் ஆட்டம் உப்பு சப்பு இல்லாமல் போய்விட்டது. புது இரத்தம் கொஞ்சம் பாய்ச்சுவது நல்லது. மறு புறம் கறுப்புக் குதிரைகளின் சோகம் தொடர, அவர்களும் வெளியேறினர். சிங்கங்கள் விண்ணர்கள் என சொல்லப்பட்ட இந்தியாவோ மரண அடியும் அவமானமும் சேர ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டது. இந்தமுறை கிண்ணம் வெல்ல ஒரு தகுதியான ஆட்டம் கூட வரவில்லை இவர்களிடம் இருந்து. மறுபக்கம் இந்தியா இலங்கை பிச்சை போட்டால் தாங்கள் கோடீஸ்வரர் என்ற நிலையில் ஆடிய மேற்கிந்தியா சொந்த நாட்டிலேயே பல்லுக்கற்றப்பட்ட ஒரு போட்டியாக சூப்பர் எட்டு ஆட்டங்களின் இறுதிப்போட்டியை ஆடி வெளியேறினர்.


இவை எல்லாம் இப்படி சொதப்பல் மேல் சொதப்பி வெளியேற உள்ளே வந்தஅணிகள் எப்படி வந்தன என்றால் பாகிஸ்தானின் வண்டவாளத்தை பற்றி சொல்லி விட்டேன். அடுத்து நம் இலங்கையர்கள் சனத் ஜெயசூரிய என்ற அற்புத வீரர் இப்போது செத்த பாம்பாக ஆட ஒட்டு மொத்தமாக மகெலவை நம்பி ஆடிய இவர்களுக்கு மற்ற வீரர்கள் சில நேரங்களில் கைகொடுத்தாலும் இம்முறை அணியை தாங்கியது மகேலதான் லீக்கில் தாடுத்தடுமாரி ஆடி சூப்பர் எட்டில் நுழைந்தவர்கள் வீறு கொண்டு எழுவார்கள் என்றால் அவர்கள் செய்ததை பார்த்தல் எரிச்சல் தான் வந்தது. சூப்பர் எட்டில் மேற்கிந்தியாவை வென்று நம்பிக்கையோடு காத்திருந்தவர்களை சுருட்டிப்போட்டது அவுஸ்திரேலியா. இந்த போட்டியில் முதலில் இலங்கையால் கட்டுப்படுத்தப் பட்ட அவுஸ்திரேலியா ஹசியின் அற்புத ஆட்டத்தால் மீள எழுந்து மடக்கியது. இதனால் இந்தியாவுடன் ஆடும் போட்டியில் வென்றால் தான் வாழ்வு என்ற நிலையில் வேங்கைகள் போல ஆடி அந்த போட்டியில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்தார்கள். அந்தப் போட்டியில் பெற்ற வெற்றி அற்புதமானது அபாரமானது. ஆனால் போட்டியின் பின் சங்ககார சொன்னதை நினைக்கும்போது அந்த வெற்றி அசிங்கமானதாக எனக்கு தோன்றியது. அதாவது தாங்கள் முதலில் குறிப்பிட்ட அந்த ஓட்டங்களை எடுத்து இந்தியாவை வெளியேற்றுவதே குறிக்கோளாக ஆடினோம் என்றார். முன்னணி வீரர்கள் ஏமாற்ற இளைய மத்தியூஸ்,கபுகேதரவின் அபார ஆட்டத்தில் வென்ற அந்த போட்டியை இப்படி சொல்லி கேவலப்படுத்தியதாக எண்ணுகின்றேன். அணியின் தலைவராக வேறு ஒருவர் மாரப்போகின்றார் என்று பேச்சு இருக்கின்றது. உண்மையில் நல்ல விடயம் சங்கா தலைமையில் சில போட்டிகளில் அணி நன்றாக ஆடினாலும் ஏனோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கின்றது. சங்கா என்னும் நல்ல வீரரும் காணாமல் போய் அனாகரிகமாகிவிட்டார்.
மறுபக்கம் எந்த தடுமாற்றமும் இல்லை. எந்த தடங்களும் இன்றி தாங்கள் ஆடிய போட்டிகளில் அபார வெற்றிகளை அசுர பலத்துடன் பெற்று இங்கிலாந்தும்(லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியவுடன் டக்வேர்த் லூயிஸ் முறையில் தோற்றாலும் அந்த போட்டியில் குவித்த ஓட்டங்களை மறக்ககூடாது.) அவுஸ்திரேலியாவும் அரை இறுதியை எட்டின. இதில் இங்கிலாந்தின் வெற்றி ஆர்பாட்டம் இல்லாமல் பெறப்பட அவுஸ்திரேலியா தன வழக்கமான ஸ்டைலில் அடக்கி ஒடுக்கி
வென்று வந்தது.


இந்த நிலையில் தான் நடை பெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் இம்முறை கிண்ணம் வெல்ல தமக்கு எந்த தகுதியும் இல்லை. தாங்கள் வேறு அணிகள் உள்ளே வர முடியாத நிலையில் உள்ளே வந்துவிட்டோம் என சொல்லாமல் சொன்னனர் இலங்கை வீரர்கள். வழக்கம் போல சனத் சாக்கடை அட்டம் ஆட மஹேல ஏமாற்றிவிட்டார். இனி அதோ கதிதான் என்று வீரர்கள் அணிவகுப்பு நடத்த மத்தியூசின் காப்பாற்றல் ஆட்டம் காரணமாக ஓரளவு ஓட்டங்களை பெற முடிந்தது. இல்லையேல் நூறு ஓட்டங்களை கூட பெற்றிருக்க முடியாது. இந்த நிலையில் தன முதலாவது குழந்தை மண்ணில் பிறந்ததை பார்த்துவிட்டு வந்த பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கும் தான் ஒரு தந்தை என்பது போல ஒழுங்காக துடுப்பாட்டத்தில் வழிநடத்தி வெற்றி பெற்றுக்கொடுத்தார்.


இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக இறுதிப்போட்டி ஒன்றில் இங்கிலாந்து ஆட இருக்கின்றது. அதேநேரம் கடந்த ஆறு வருடங்களில் இங்கிலாந்து ஐ.சி.சி நடத்தும் ஒரு பெரிய தொடரின் இறுதிப்போட்டியில் ஆடுவது இதுதான் முதல் முறை. இதுவரை எந்த ஒரு பெரிய கிண்ணமும் பெறவில்லை என்ற வெறியோடு இங்கிலாந்து வீரர்கள் நேர்த்தியாக ஆடிவருகின்றனர். பதற்றம் இன்றி அவர்கள் ஆடும் அழகுதான் வெற்றியை தேடிக் கொடுக்கின்றது. நீண்ட காலத்தின் பின் இறுதிப் போட்டி ஒன்றில் ஆடும் இவர்கள் கிண்ணம் வென்று தங்கள் கறுப்பு சரித்திரத்தைஅழிப்பதோடு புது சரித்திரம் படைக்க காத்திருக்கின்றார்கள்.மறு பக்கம் இரண்டாவது அரை இறுதியில் மோதிய பாகிஸ்தான் இறுதி ஓவர் வரை வெற்றியை தன கையில் வைத்திருந்து தாரை வார்த்து விமோசனம் தேடிக்கொண்டது. மறு புறம் அவுஸ்திரேலியாவோ மன்னிக்கவும் இதில் ஹசியை தனியே குறிப்பிடுவது பொருத்தம் ஹசி என்னும் அற்புத கிரிக்கெட்டரால் முதன் முறையாக இருபது ஓவர் போட்டிகளின் உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் நுழைந்துள்ளது. இறுதியில் இவர்கள் வென்றாலும் அது புது சரித்திரம் தான். காரணம் ஐ.சி.சி. நடத்திய அத்தனை பெரும் தொடர்களிலும் சாம்பியன் ஆனா அணி இங்கே விட்ட குறையை தீர்த்துக் கொள்ளும். மீண்டும் இறுதிப்போட்டியில் நுழைந்து பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என எண்ணிய நிலையில் அவர்கள் வாயில் மண்ணை போட்டுள்ளது ஆஸி. ஆரம்பத்தில் அதிரடியாய் ஆட்டி அற்புதமாக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் பந்துவீச்சிலும் அசத்தி அவுஸ்திரேலியாவுக்கு சாவு மணி அடித்துக்கொண்டிருக்க தனி மனிதனாக ஹசியின் ஆட்டம் எல்லாவற்றையும் மாற்றியது. ஹசி தன வாழ் நாளில் மறக்க முடியாத இன்னிங்க்ஸ் அது. கனவான்களின் ஆட்டம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட்டில் நிச்சயம் நான் பார்த்த ஒரு கனவான துடுப்பாட்டம் அது. இறுதி பதினாறு பந்துகளில் ஐம்பத்தாறு ரன்கள் .வெறும் இருபத்திநான்கு பந்துகளில் ஆட்டமிழக்காமல் அறுபது ஓட்டங்கள். இதில் ஆறு ஆறு ஓட்டங்கள் வேறு. இறுதி ஓவரில் பதினெட்டு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை எதிர்கொண்டது மிச்சல் ஜோன்சன் எனவே பாகிதானுக்கு தோல்வி இல்லை என எல்லோரும் நம்பியவேளை முதல் பந்தில் ஜோன்சன் ஒரு ஓட்டத்தை தட்டி விட்ட ஹசி விஸ்வரூபம் ஆரம்பமானது. இரண்டாவது பந்தில் இமாலயமான ஒரு ஆறு ஓட்டம் அடுத்த பந்திலும் அதே அதிரடி, அடுத்த பந்தில் நான்கு ஓட்டங்கள் பெறப்பட இதய வேகம் அதிகரித்தது. மீண்டும் ஒரு இமாலயமான சிக்ஸ்சருடன் பாகிஸ்தானுக்கு சங்கை ஊதினார் ஹசி.

இதுவரை மூன்று தடவி ஐம்பது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு வந்தும் கிண்ணத்தை வெல்லாத இங்கிலாந்து மீண்டும் ஒரு இறுதிப்போட்டிக்கு வந்திருக்கின்றது. சரியாக இருபத்து மூன்று வருடங்கள் கழித்து இந்த இரு அணிகளும் மீண்டும் உலக கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் மோத இருக்கின்றன. 2004ஆம் ஆண்டு மினி உலக கின்னப்போட்டிகளில் இறுதிவரை வந்து மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து இன்றுவரை பெரிய கிண்ணங்களை கைப்பற்றாத இங்கிலாந்து இம்முறை அந்த பழியை துடைக்குமா? அல்லது எல்லாவகை கிரிக்கெட்டிலும் சாதித்தும் இந்த வகை தனக்கு சரிவராது என ரிக்கி பாண்டிங் ஒதுங்கிக்கொள்ள கிளார்க் தலைமையில் வீறுநடை போடும் அவுஸ்திரேலியா வரலாறை புதுப்பிக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். பலம் என்று பார்த்தால் இந்த தொடரில் இரண்டு அணியும் அசுர பலத்துடன் இருக்கின்றது. ஆனால் சிக்கலான நேரத்தில் சிறப்பாக ஆடுவது அவுஸ்திரேலியாவின் பலம் ஆனால் இதை எல்லாம் தாண்டி இம்முறை சாதனை படைக்குமா இங்கிலாந்து என்பதே அனைவரின் கேள்வியும்.


முக்கிய குறிப்பு: நடு இரவிலும் முழித்திருந்து இந்த இடுகையை இட்டுள்ளேன். எனவே உங்கள் பொன்னான வாக்கை இட்டு அந்த விழிந்திருந்து இட்ட இடுகைக்கு ஒரு அர்த்தம் தந்தால்என்ன?
Share:

26 கருத்துரைகள்:

Elanthi said...

போட்டாச்சு போட்டாச்சு

Bavan said...

ஆமாம் அண்ணு இந்த தொடரில் எதிர்பார்த்தமாதிரி ஒண்ணுமே நடக்கல.. அவுஸ்திரேலிள வெற்றியைத்தவிர... இம்முறை அவுஸ்திரேலியா சம்பியனாகும் கட்டாயம்...:)))

shan shafrin said...

அண்ணா...... சங்கா கூறியது - ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விரைவாக சரிந்த பொது , குறைந்தபட்சம் 144 ஓட்டங்களை பெற்று தமது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது தமது நோக்கமாக இருந்ததாக கூறினார்...... அந்த நிலையில் எந்த ஒரு அணியும் இந்த முடிவை தான் எடுப்பார்கள்....... அதை சங்கா வெளிப்படையாகச் சொல்லிவிட்டான்....... அவ்வளவுதான்........மற்ற படி அது அசிங்கமான வெற்றி இல்லை....... T20 போட்டிகளில் பிரதான ஆட்டம் ஆடும் அதிஷ்டம் தான் அதுக்கு காரணம்..... இந்திய அணியை வெளியேற்றியதால் , உங்களுக்கு அது அசிங்கம் போல தோன்றியிருக்கலாம்......... :(

சௌந்தர் said...

vote போடச்சி நீங்க vote போடுரிங்க்ளா

Subankan said...

டண்!

பாலா said...

நன்கு ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதாக இருக்கிறது. இரவு கண்விழித்து எழுதுவதாலோ என்னவோ நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. அதனால் படிக்கும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது. சிறிது கவனமாக எழுதுங்கள். நன்றி

தமிழ் மதுரம் said...

வெல்லப் போவது யாரு? வெகு விரைவில் தெரியும்.
அப்பாடா...அருமையாகத் தொகுத்து எழுதியுள்ளீர்கள்...
கிறிக்கட் சூடு பிடிக்கட்டும்.

Sukumar said...

நல்ல அலசல் பதிவு சதீஷ்... வாழ்த்துக்கள்...

KANA VARO said...

என்னத்தை சொல்ல?
>
>
>
>
>
>
சனத் வாழ்க!

anuthinan said...

ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வெற்றி எதிர்பாராத ஒன்று! இறுதியில் ஆச்சரியமாக இங்கிலாந்து வென்றாலும் சொல்ல்வடர்க்கு இல்லை. ஜபில் என்ற கபட நாடகத்தை பார்க்கிலும் இந்த 20 போட்டிகள் தரம் வாய்ந்தவை என்பது ஒருமுறை மீண்டும் நிருபிக்கபட்டுள்ளது!

குசும்பன் said...

அருமையான புள்ளிவிவரங்களோடு நல்ல தொகுப்பு.

நடு இரவுவரை விழித்து எழுதியதுக்கு ஒர்த்தான கட்டுரை!

Philosophy Prabhakaran said...

கடமையை செய்துவிட்டேன்...,

manjoorraja said...

அருமையான அலசல்.

எனக்கென்னமோ இங்கிலாந்து ஒருமுறையாவது ஜெயிக்கவேண்டும் என்று ஆசை.

SShathiesh-சதீஷ். said...

@இளந்தி...

நன்றி நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Bavan

எதிர்பார்த்த மாதிரி ஒண்ணுமே நடக்கல அவுஸ்திரேலியாவும் சாம்பியன் ஆகல.

SShathiesh-சதீஷ். said...

@shan shafrin

நான் சொல்ல வந்ததை தவறாக எண்ணி விட்டீர்கள். கஷ்டப்பட்டு வென்ற வெற்றியில் அந்த இரண்டு வீரர்களையும் பாராட்டுவதை விட சங்கா இப்படி கூறியது எனக்கு என்னவோ அசவ்கரியமாக இருந்தது. காரணம் மிக போற்றப்பட வேண்டிய வெற்றி அது.

SShathiesh-சதீஷ். said...

@soundar

நானும் போட்டிட்டன்.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

ok

SShathiesh-சதீஷ். said...

@பாலா

கண்டிப்பாய் கவனித்துக்கொள்கின்றேன். இப்போது அவற்றை திருத்தியும் விட்டேன். கருத்துக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@கமல்

அண்ணா பார்த்து சூடு பிட்ச்சு எறிஞ்சிடப் போகிறது.

SShathiesh-சதீஷ். said...

@Sukumar Swaminathan

வாழ்த்துக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@VARO

சொல்ல வேண்டியதை சொல்லுங்க. மாண்புமிகு சனத் வாழ்க என சொல்லுங்க.

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

உண்மை கருத்துக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@குசும்பன்

முதன் முறையாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். உங்கள் வருகை தொடர்ந்து இருந்தால் அது எனக்கு மேலும் பலமாகும். வருகைக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@philosophy prabhakaran

கடமையில் கண்ணாக இருந்ததுக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

பதிவெழுத தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு சறுக்கல்கள் சில வெற்றிகள். எழுதிய அத்தனை பதிவுகளிலும் அதி கூடிய வாக்கினை அளித்து என்னை உற்சாகமூட்டிய அத்தனை நல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive