Saturday, January 15, 2011

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!
பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

4 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் சகோதரம்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

தமிழ்ப் பையன் said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...

நீங்க வேற சாமி லண்டன் மற்றும் கனடாவில் வெள்ளிக் கிழமைத்தானுங்க பொங்கல். அதாவது வெள்ளிக் கிழமை காலையில் கோயிலுக்குப் போனால் வெள்ளிக் கிழமை ராத்திரி பார்ட்ட்டிக்கு போலாம்ல.. அதுக்காகத்தானுங்க. நம்மாளுங்க. இப்படி எல்லாம் பொங்கல் கொண்டாடனும்னு யாரு அழுதா.....

சனிக்கிழமைத்தான் உண்மையான பொங்கலுங்க....

பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+

தர்ஷன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

Bavan said...

பொங்கல் வாழ்த்துக்கள் சதீஸ் அங்கிள்..:D

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox