உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!


கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.


''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

காவியக்கவிஞனே!

உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்
நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்
தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்
தங்கள் குணமோ ஏன் ஆட்சியாளர் பக்கம் சாய்தல்
உந்தன் உயிரினும் மேலான தமிழினம் சாதல்
கண்டு உன் மனதுக்குள் வரவில்லையா கூதல்.

மார்க்கண்டேயனே!

மாற்றத்திலும் மாறாத உன் தமிழை ரசிக்கின்றேன்
நீயோ
மறத்தமிழ் குருதியை ருசித்தவனை ரசிக்கின்றாய்

எம் வலியும் வரிகளில் விதைத்தாய் வியக்கின்றேன்
அதே பேனாவால்
வலியைக் கொடுத்தவனையும் இந்திரன் சந்திரன் என வாய்கூசாமல் விழிக்கின்றாய்

வாலி!

உன் வரிகளில் தெறித்தது நம்மவரின் வலி
உன் வார்த்தைகளில் ஏன் இன்று இந்த போலி
ஈழத்தமிழன் கொண்டதோ உயிர் கிலி
ஈனத்தவனாய் ஆட்சிமாறியதும் நீ கொண்டதும் கிலி
நீ துதி பாடிய நிதியால் அறுந்தது பல தாலி
எந்த நிதியால் கொடுக்க முடியும் இழந்த உயிர்களுக்கு கூலி
கவிதைகளில் நீ பராக்கிரமசாலி
களங்க மனத்தால் நீ இனி மக்கள் மனதில் எலி
நின் பெயருக்கு ஏற்றது போல பிடிக்காதே வாளி
உந்தன் களங்கம் களைந்து நீ பல்லாண்டு வாழி!
Share:

Saturday, May 21, 2011

தகத்தகாய தாரகை நமீதா ரசிகராக கலைஞர்

கடந்த சில வருடங்களாக காலை உணவுக்கும் மாலை தேநீருக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தும் மனைவி துணைவியுடன் சந்தோசமாக இருந்து தமிழ் நாட்டுக்கு குடும்பம் நடத்துவது எப்படி என வகுப்பெடுத்த பெயரிலே நிதியை வைத்திருப்பதால் எல்லா நிதியும் தமக்கு தன் என எண்ணிய தமிழின தலைவர் என தன்னை தானே சொல்லி தன்னை தானே செருப்படி அடித்துக்கொண்ட மதிப்புக்குரிய கலைஞர் ஐயாவுக்கும் அவர் தம அருந்தவப்புதல்வி கனி பரிக்கப்போய் கையான கனிமொழி ஆண்டிக்கும் இவர்கள் நடுவே பலிக்கடவானா முன்னாள் ராசா இந்நாள கூசாவுக்கும் பொருத்தமான பாடல்கள் சில மனதிலே தட்டின.

அதை கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு ஐடியாவில் வரும் பதிவு இது. அநேகமான தமிழர்கள் இதே மனநிலையில் தான் இருப்பிங்க என நினைக்கின்றேன்.....

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பாட்டுக்கு மேலே சந்தர்ப்பம் சொல்லி இருக்கேன். பொருள் இடம் காலம் சந்தர்ப்பம் எல்லாம் போட்டு பொருத்தமாய் ஒவ்வொரு வரியை பாட்டை கேட்கணும் சொல்லிப்புட்டன்.


ஹா ஹா கனிமொழி ஆண்டி உள்ளுக்குள்ள இருந்து இப்படிதான் பாடுவாவோ






ராசாவாக இருந்து கூசாவாகிப்போயிருக்கும் பலிக்கடா உள்ளுக்க இருந்து இப்பிடித்தான் பாடுவாரோ?





குடும்பமாக சேர்ந்து ஆடிய ஆட்டம் அடங்கிப்போயிருக்கும் நிலையில் அந்த குடும்பத்துக்கு தன் மான தமிழர்கள் பாடும் பாடல்.





தமிழின் மூத்த மகன் தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாசத்தலைவன் நமீதாவின் முதல் ரசிகன் கலையுலகின் தலைமகன் என தன்னை தானே சொல்லிக்கொண்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஐயா கலைஞர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சொல்ல நினைக்கும் சேதி.



எனக்கு ஒரு சந்தேகம் இந்த பாடல்கள் எல்லாம் கலைஞர் காலத்திலேயே வந்தவை சினிமாவில் ஆடிய இவர் இதை எல்லாம் கேட்காமலா விட்டார்...ஆப்பு இப்படி கண்ணு தெரியாமல் தான் இருக்குமோ?
Share:

Saturday, January 15, 2011

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.

இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


காலையில் எழுந்து தோய்ந்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு படைத்து அப்பா தீபம் காட்ட பின்னே நின்று ஆதவனை வணங்கி அம்மா கையால் பொங்கல் உண்ணும பொங்கல் இந்த முறை எனக்கு இல்லை. இருந்தாலும் நினைவுகளால் மனதில் ஒரு பொங்கல் லண்டனிலும் கொண்டாடுவேன் உங்கள் வாழ்த்துக்களோடு.

மாட்டுப்பொங்கல்.

உழவர்களுக்கு உறுதுணையாய் நின்ற உன்னத உயிர்களை பூஜிக்கும் நாள் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இருப்பினும் நம்மில் சிலரும் இந்த நாளில் தான் குளித்து உடுத்தி கொண்டாடுவார்கள் அவர்களுக்கு வாழ்த்து சொல்லாவிட்டால் கோபி(அட நல்லாய் பொருந்துது)ப்பாங்க இல்லையா? வாழ்த்துக்கள்!




பொங்கல் எப்போ?
(இது மொக்கை அல்ல)

தமிழர்கள் அன்று முதல் இன்றுவரை தை மகளின் முதல் நாளை தான் தைத்திருநாளாக கொண்டாடுகின்றனர். என் தத்தா பாட்டன் பூட்டன் என்று எல்லோரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தான் இந்த நாளை கொண்டாடி வந்தனர். ஆனால் அண்மையில் தமிழ் தாத்தா(ஆனால் இளைஞன் என்று விளம்பரப்படுத்திறாங்க என்ன கொடுமை இது. கீழுள்ள படத்தை பாருங்கோ) தை திருநாளை புத்தாண்டாகவும் கொண்டாட சொல்லி கழுத்தறுகின்றார்.
இந்த நிலையில் லண்டனில் பல காலண்டர்களில் 14.01.2011 தான் தை பொங்கல் என பிரசுரித்துள்ளதுடன் ஒரு சில ஆலயங்களிலும் இன்று தை திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மற்றும் இந்தியாவில் நாளை(15.01.2011) தான் பொங்கல் என அறியக்கிடைத்ததுடன் இன்றும் 14.01.2011 சிலர் பொங்கலை இந்தியாவில் கொண்டாடியதாய் அறியக்கிடைத்தது. இதை பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ஏன் இன்று லண்டனில் கொண்டாடினார்கள் என்று அதுக்கு அவர் சொன்ன பதிலோ கொஞ்சம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது. (இங்கே எல்லாம் இப்பிடி தான்) சனிக்கிழமை வந்தால் மாமிசம் உண்ண உண்ண முடியாது என்பதற்காய் தை மகள் ஒரு நாள் முன்னரே பிறந்து விட்டால் என்று. பிள்ளையை தான் முந்தி பிந்தி பெறுகின்றார்கள் என்றால் இப்போ தை மகளும் இப்படியா?

உண்மையில் இன்று லண்டனில் பொங்கல் என சொல்ல காரணம் நேர வித்தியாசம் என்றனர். சரி உங்கள் வழியிலேயே வருகின்றேன். அப்படி நேர வித்தியாசம் என்றால் இலங்கை இந்திய நேரத்துடன் ஒப்பிடுகையில் லண்டன் நேரம் 5.30 மணித்தியாலங்கள் பின்னரே. அதாவது நீங்கள் காலை 6.00 மணி என்று சொன்னால் லண்டனில் நேரம் அதிகாலை 12.30. அப்படி பார்த்தால் இலங்கை இந்தியாவில் தை மகள் பிறந்த பின்னர் அல்லவா லண்டனில் பிறக்க வேண்டும். அதாவது January 15 ம் திகதி தான் தமிழுக்கு தை முதலாம் தயக்கத்தில் என்றால் அது எப்படி January 14 தை திருநாளாக முடியும். லண்டனில் பொதுவாக மூன்று W க்களை நம்ப முடியாது என்பர். Weather, Work, Wife இப்போ நம்பிக்கைகளாய் காலம் காலமாய் வந்த மரபுகளையே நம்ப முடியலையே! நண்பர்களே! உண்மையில் எப்பதாங்க பொங்கல் சொல்லிட்டு கொஞ்சம் நமக்கும் அனுப்பி வையுங்க.
Share:

Sunday, April 18, 2010

சோனியாவிடம் சொல்லு அடுத்த பாராட்டு விழாவிற்கு...

என் முதல் போட்டோ கொமண்ட்ஸ் பதிவிற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இதோ அடுத்தது. பெரிதா என்ன கேட்கப்போறன். உங்கள் வாக்கை குத்துங்க கருத்தை சொல்லுங்க.











Share:

Monday, April 12, 2010

ரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.

ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி , போஜ்புரி மொழி படங்கள் என மொத்தம் நூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இந்த அழகுப்புயல். சிரஞ்சீவி, சல்மான் கான், அணில் கபூர், அஜய் தேவ்கான், கோவிந்தா என வேற்று மொழி முன்னணி நாயகர்களின் ஜோடியாகி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

உழவன் திரைப்படத்தில் பிரபு பானுப்பிரியாவுடன் இணைந்து நடித்து தன் அறிமுகத்தை மேற்கொண்ட தொடையழகி கார்த்திக்குடன் இணைந்து நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் மக்களின் உள்ளத்தையும் அள்ளிவிட்டார். தொடர்ந்து அர்ஜூனுடன் அடிமைச்சங்கிலி, பிரபுதேவா அப்பாசுடன் சிம்ரனும் ரம்பாவும் இணைந்து வி.ஐ.பில் கலக்கி எடுத்தனர். அதற்க்கு அடுத்த திரைப்படம் ரம்பாவின் திரை உலக வாழ்க்கையில் இன்னொரு மைக்கல். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூடவே வரும் கதாபாத்திரம் (ஆனால் ஜோடி இல்லை.) அருணாச்சலத்தில் அனார்கலியாகி அள்ளினார் மீண்டும் ரசிகர்களை. அடுத்த படம் அடுத்த தலைமுறையில் முக்கிய நாயகனான தல அஜித்துடன். ஆனால் அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை திரைப்படங்கள் ரம்பாவை ஏமாற்றின.


ஆனால் அடுத்த வருடம் உலக நாயகன் பிரபுதேவா இணைவில் வந்த காதலா காதலா படம் ரம்பாவிற்கு இன்னொரு வரலாறு. அதே ஆண்டு காதலர் தினம் திரைப்படத்தில் ஓ மரியா பாடலுக்கு மட்டும் ஆடினார். படம் படுத்தாலும் அந்த பாடலின் நிலை உங்களுக்கே தெரியும். இவர் நடிக்கும் படங்களில் அனேகமாக இரண்டு கதாநாயகிகள் இருந்து கொண்டே வந்தனர். இந்த வரிசையில் இன்னொரு முக்கிய நடிகரான இளைய தளபதியுடன் முதல் முறையாக கைகோர்த்தார் ரம்பா நினைத்தேன் வந்தாயில். இடுப்பு மச்சத்தை வைத்தே மனதில் பச்சை குத்தியது இளைஞர் கூட்டம்.
ஆனால் அடுத்து வந்த ஜானகி ராமன் பெரிய பெயரைக் கொடுக்கா விட்டாலும் அடுத்து வந்த உனக்காக எல்லாம் உனக்காகவில் மீண்டும் கார்த்திக்குடன் ஜோடி சேர உனக்காக நாங்கள் இருக்கின்றோம் என மீண்டும் ரசிகர்களை சொல்ல வைத்தார். அடுத்து பார்த்தீபனுடன் உன்னருகே நானிருந்தால் படத்தில் நடித்தார். அந்த வருடம் நிறைய படங்களில் ரம்பா நடித்திருந்தாலும் பெரிதாக போன படங்கள் ஒன்று இரண்டுதான்.

குடும்பக்கதையாக காதலை கலந்து வந்த பிரஷாந்தின் பூமகள் ஊர்வலம் படமும் மீண்டும் ஒருதடவை குஷ்பூ,மோனிக்காவுடன் இளையதளபதி நடித்த மின்சாரக்கண்ணாவில் விஜய் ஜோடி இல்லாமல் கதாநாயகியாக நடித்தார். படம் படுத்துக்கொண்டது. அடுத்ததும் அதேவருடம் வந்தது விஜயுடன் என்றென்றும் காதல். இந்த படமும் ஏமாற்றியது. இடையில் சுயம்வரம் படத்தில் பல நாயகர்கள் நாயகிகளுடன் இணைந்து உலக சாதனை படைத்தார் இந்த சிணுங்கல் நாயகி.


தொடர் தோல்விகள் கொஞ்சம் ஆட்டியதோ என்னவோ லொள்ளு நாயகனுடன் குங்குமப்பொட்டுக்கவுண்டர் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் கௌசல்யா இன்னொரு நாயகி. அடுத்து அன்புடனில் அருண்குமாருடனும்(இப்போதைய அருண் விஜய்) மீண்டும் அர்ஜூனுடன் நடித்த சுதந்திரமும் தொடையை சாரி காலை வாரி விட்டது. மீண்டும் கார்த்திக்குடன் இணைந்த அழகான நாட்கள் அழகியை மறக்கவேண்டிய நாட்க
ளாக்கிவிட அடுத்து வந்த ஆனந்தத்தில் தலைகாட்டினார் ரம்பா. மம்முட்டி, முரளி, அப்பாசுடன் நாயகிகள் தேவயாணி, சினேகா நடித்த இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் அதற்க்கு பின் யாரும் ரம்பாவை சீண்டவில்லை. இதனால் தன் சொந்த செலவில் சூனியம் வைக்க தயாராகி த்ரீ ரோசெஸ் என்ற படத்தில் ஜோதிகா, லைலாவுடன் சேர்ந்து நடித்துப்பார்த்தார். அதுவும் சூனியமாகிப்போக அப்படியே தமிழை விட்டு மெதுவாக ஒதுங்கிய ரம்பா, அதன் பின் தன் முதல் நாயகன் பிரபு அப்பாஸ் நடித்த பந்தா பரமசிவத்தில் நடித்தார் அந்தப்படம் பந்தா காட்டாமல் விட சத்ரபதி அழகிய தீயே படங்களில் சிறு காட்சிகளில் வந்து போனார் .சுக்ரனில் விஜயுடன் குத்தாட்டம் போட்டார்.

அப்படியே அண்மைக்காலத்தில் மானாட மயிலாடாவில் நடுவராக அசத்தி வந்தவர் தன் திருமண வாழ்விற்கான இந்திரனை கண்டுபிடித்துவிட்டார் இந்த ரம்பை. அண்மையில் நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பிற்கு ரம்பாவின் தொடையையும் கவர்ச்சியையும் காட்டி வெற்றி பெற்ற ரஜினி,கமல்,விஜய் அஜித் போன்ற முன்னணி நாயகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது கவலையான விடயமே. ஒரு காலத்தில் கலக்கோ கலக்கென கலக்கிய புயலின் வீரியம் குறைந்து விட்டது என நினைத்தார்களா இந்த நட்சத்திரங்கள். இப்போதே இப்படி என்றால் ஒரு காலத்தில் ரம்பாவிற்கு ஒரு கவலைக்குரிய விடயம் நடந்தாலோ அல்லது ஏதும் பிரச்சனை என்று வந்தாலோ இவர்கள் எல்லாம் ஏறேடுத்துப்பார்பார்களா? தயவு செய்து இந்த நடிகர்களின் ரசிகர்கள் கோவித்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம் ஆனால் இதுவும் ஒரு வேலையாக கொண்டு நீங்கள் செய்யத்தானே வேண்டும் காரணம் உங்களை எல்லோரும் கவனிக்கின்றார்கள். இல்லாவிடால் என்னை போல ஒரு சிலர் எழுதலாம் ஊடகங்கள் கிழிக்கலாம்.



சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே உங்களுடன் நடிக்காத தப்பு செய்த புவனேஸ்வரி
க்கு வக்காலத்து வாங்கிய கூட்டத்துக்கு போனீர்கள் வாழ்த்து சொல்ல நேரம் இல்லையா உங்களுடன் நடித்தவருக்கு?

உலகநாயகனே உங்களுக்கு வேண்டுமென்றால் திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் பந்தத்தில் இணைபவர்களுக்கு வாழ்த்துவது மரபுதானே.

இளைய தளபதி உங்களுக்கு ஆயிரம் தலைவலிதான் ஆயிரம் திருமணம் செய்துவைப்பதை விட ஆயிரம் காலப்பயிர் ஒன்று நன்றாய் வாழவேண்டுமென வாழ்த்துவது எவ்வளவு முக்கியம் என தெரியாதா? த்ரிஷா உங்கள் திருமணத்துக்கும் வரமாட்டார். அரசியலில் ஆணி பிடுங்கமுதல் இப்படி நாலு இடம் போய் வாழ்த்தினால் தானே நீங்களும் அரசியல் வாதி ஆகலாம். காரணம் கடைசியில் சொல்கின்றேன்.

தல கல்யாணம் போய் வாழ்த்த கட்டுப்பாடு இல்லை யாரும் கட்டாயப்படுத்திறதும் இல்லை. நீங்கள் இங்கே இல்லையோ தெரியாது ஆனால் சோனா பிறந்தநாளுக்கு போறிங்க யாரும் கட்டாயப்படுத்தாமல் இந்த ரம்பைக்கு ஒரு வாழ்த்து சொன்னால் என்ன தல.

இவங்கெல்லாம் இருக்கட்டும் வந்தா என்ன வராவிட்டால் என்ன இவ்வளவு வேலைகளுக்கும் நடுவில் இந்த வயதிலும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர் கலைஞர் கருணாநிதி நேரே வந்து வாழ்த்தும் போது உங்களுக்கு எங்கே போய்விட்டது. எனக்கு இப்போ காரணம் புரிந்து விட்டது ரஜினி,கமல்,விஜய்,அஜித். அவர் போனால் பாராட்டு விழா வைப்பாங்க இவ்வளவு சுமைக்கு நடுவில் வந்து வாழ்த்தியதுக்கு வாழ்த்து தெரிவித்து மிக விரைவில் பாராட்டு விழா நடக்கும் அப்போது இங்கே வராத இவர்கள் அங்கெ வர வேண்டுமே. இங்கே வராததுக்கு காரணம் அஜித் சொன்னதுபோல எல்லா இடமும் போனால் டஎர்ட் ஆகிடுவாங்க. அதேபோல இவங்க வந்தா என்ன பாராட்டு விழாவா நடத்தப்போறாங்க.
Share:

Monday, March 22, 2010

மு.க. அழகிரி நடிக்கும் தூங்கா நகரம்.


மத்திய அமைச்சரும் கலைஞரின் வாரிசுமான மு.க. அழகிரி தன் மகன் தயாரிப்பில் உருவாகும் தூங்கா நகரம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பதாக பேச்சடிபடுகின்றது. (கலைஞரே எவ்வளவு பெரிய நடிகர் இவரால் முடியாதா என்ன? சாரி பாசத்தலைவர் நடிகர் இல்லை வசன கர்த்த என்ன. அப்போ உள்குத்தெண்டு நினைக்கிறிங்களா நினச்சிட்டு போங்க.) நமபமுடியாமல் இருந்தாலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்கின்றார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தை தொடக்கி வைத்தவரே இந்த மதுரை நாயகன் தான். அப்படி இருக்கையில் மதுரையை பற்றிய படத்தில் இவர் இல்லாமல் போகமுடியுமா. பாசக்கார தலைவர் பாடையில் போன பின் வரலாறாய் அவர் வாழ்ந்தகாலம் வந்தாலும் வரும் பள்ளிப்பாடத்தில்.

தமிழ் படத்துக்கும் தலையின் படத்துக்கும் இடையில் தன் தனயன் தயாரிக்கும் படத்தில் தன் இப்போதைய பதவியான மத்திய அமைச்சராகவே பட்டையை கிளப்ப தயாரிவிட்டார் அண்ணல். தொண்டர்களே ஹீரோவைவிட பெரிய கட அவுட்,பனர், பால் அபிஷேகம் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ரெடி...ஸ்டார்ட்....

ஒரு சின்ன சந்தேகம் தளபதி இருக்கார்....இளைய தளபதியும் இருக்கார்....சின்ன தளபதியும் இருக்கார் அப்போ இவருக்கு பெரிய தளபதி என டைட்டில் போடுவாங்களோ?
Share:

கலைஞருக்கு எதிராக விஜய்?- சண் டி.வி ஆதரவு.


கடந்த முறை தூக்கிவிடும் என நினைத்த சண் தொலைக்காட்சியே வேட்டைக்காரனை மறைமுக வேட்டை ஆடியது தெரிந்த சங்கதி. அரசியல் ஆர்வத்தில் விஜய் பேசிய பன்ச் டயலக் எல்லாவற்றையும் வெட்டியது மட்டுமில்லாமல் சில காட்சிகளை மீள எடுக்கச் சொல்லி செய்தவை உங்களுக்கு தெரிந்ததுதான். ஒருவன் நிலை தாழ்ந்து போனால் அவன் நிழல் கூட அவனை மிதிக்கும் என தெரியாமலா சொன்னார் கண்ணதாசன். இதெல்லாம் போன வருடம் இது இந்த வருடம் என்று வடிவேல் டயலாக் தன இப்போ பொருந்துகின்றது விஜய்க்கும் சன்னுக்கும்

அப்படி என்னதான் நடந்திருக்கின்றது. சுறா படத்தின் கதை என்று இயக்குனர் சொன்னதை பார்த்தால் நிச்சயம் இது அரசியல் படம் என்பது தெளிவாகி விட்டது. இந்த அரசியல் படத்தில் இஷ்டத்துக்கு பன்ச் வைத்துக்கொள்ளுங்கள் என சன்னே சொல்லிவிட்டது. எனவே இந்தமுறை கடந்தமுரைக்கும் சேர்த்து பன்ச் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுநாள் வரை எதிரியாக பார்த்த சண் இப்போ விஜயை தூக்கி வைக்க என்ன காரணம். அங்கேதான் அரசியல் இருக்கே.

வேறொன்றுமில்லை தயாநிதி, உதயநிதி என்று இரண்டு நிதிகளும் தயாரிப்பாளராகி வியாபார யுக்தி மூலம் தங்கள் படங்களை பிரபல்யப்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே சன்னின் நிலை இப்போது கொஞ்சம் கவலைக்கிடமாம். இதனால் தான் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட இந்த அதிரடியாம். மொத்தத்தில் சுறாவிரில் பல பாராவில் பன்ச் இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. முதலில் கலைஞருக்காக விஜயை நாஸ்தி பண்ணியவர்கள் இப்போது அதே விஜயை வைத்து கலைஞருக்கு ஒரு அபாய மணி அடிக்கப்போவதாக் சொல்லப்படுகின்றது. என்ன தான் நடக்கிறது நடக்கட்டுமே......
Share:

Tuesday, May 12, 2009

தமன்னாவுடன் ஜோடிசேரும் விஜய் தேர்தலில் ஜெயிப்பாரா?

{தமிழ் நாட்டு மன்மதனே(சாரி மக்கள் தளபதியே) வாராய் நீ வெற்றி மாலைக்கென்று பிறந்தவனோ?}


நடிகர் இளயதளபதி விஜய் நடிக்கவந்து ஐம்பதாவது படத்தை தொடப்போகின்றார். யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் விஜய். வெற்றிகளை கொடுக்கும் போது தூக்கிவைத்து கொண்டாடிவிட்டு இன்று தோல்விகள் பார்த்தவுடன் இப்படி அவரைப் பற்றி கிண்டலடிப்பது தப்பே. இருந்தாலும் அது இயற்கையே.(ரஜினி கூட தப்பவில்லையே)

வேட்டைக்காரன் விஜயின் 49வது படம். விறுவிறுப்பாக வளர்ந்து வரும் நிலையில் ஒரு பாடல் அறிமுகமாகி விட்டது என எல்லோரும் பெரிதாக கூவினார்கள். ஆனால் அது இன்னொரு திரைப்படபாடல் என்பது இன்னும் பலருக்குத் தெரியாது. அதேபோலத்தான் சிம்புவின் விண்ணைத்தாண்டிவருவாயா, அஜித்தின் அசல் பாடல்களும் வந்திருப்பதாக சொல்கின்றார்கள். நிச்சயமாக இவை எல்லாம் பொய்யாகவே இருக்கப்போகின்றன.

இந்த நிலையில் தான் இப்போது விஜயின் ஐம்பதாவது பட விபரங்கள் அடுத்தடுத்து வந்து தீனி போடுகின்றது. தேர்தல் பரபரப்புக்குள் இதுவும் தமிழ் சினிமாவின் பரபரப்பே. காரணம் விஜயும் அஜித்தும் ஒரே நேரத்தில் ஐம்பதாவது படத்தை கொடுக்கப்போகின்றனர். எனவே இந்த போட்டியாளர்களில் யார் ஜெயிக்கப்போகின்றார் என அவரவர் ரசிகர் மட்டுமல்ல தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருக்கின்றது.

இரண்டுபேரின் கடைசியாக வந்த படங்களும் சரியாகப்போகாவிட்டலும் அடுத்து இருவரும் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு குறையவே இல்லை. அதற்கு ஒரு சாட்சி தான் இந்த பாடல்கள் லீக் என்னும் விடயம். அதேபோல் இவர்கள் படங்கள் வெளிவரும்போது பரபரப்பும் வரும் வசூலும் வரும்.(முதலுக்கு மோசமில்லாமல்)

விஜயின் ஐம்பதாவது படத்துக்கு சித்திக் முதல் ஜெயம் ராஜா வரை பல இயக்குனர்கள் பேசப்பட்டு இப்போது திருப்பாச்சி, சிவாகாசி எனும் இரு சரவெடிகளை விஜய்க்கு கொடுத்து உயர்த்திய ஊர் பெயர் பிரபலம், மசாலா நாயகன் பேரரசு இந்த படத்தை இயக்கப்போகின்றார். இருந்தாலும் இம்முறை கதை அவர்கதை இல்லை. கதை, திரைக்கதை, வசனம் பொன்மனம் என்ற நல்ல படத்தை கொடுத்து இன்று அழகர்மலை என்னும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் எஸ்.பி.ராஜ்குமார்தான் திருமலைக்காக(அதுதாங்க விஜய்) எழுதுகின்றார்.

நகைச்சுவை, மசாலா இந்த இரண்டுமே விஜயை ஏற்றிவிட்டுள்ள நிலையில் இந்தப்படத்திலும் அதே கைங்கரியத்தில் களம் இறங்கப்போகின்றார். (குருவி, வில்லு போல நல்ல படமா இல்லாட்டி சரி!)

விஜயின் ஆரம்பகால தோல்விகளில் எல்லாம் தோள்கொடுத்து தூக்கிவிட்ட விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப்படத்தை தயாரிக்கவில்லை.(அப்பாடா நிம்மதி இயக்குனருக்கு) சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப்போகின்றது. ஏற்கனவே விஜயின் திரையுலக மைல்கல் காதலுக்கு மரியாதையை தந்தது இதுதான்.(படம் பப்படமானால் காதலுக்கு மரியாதை செய்த வசூலை இதற்காக கழிக்கசொல்வார்களோ தயாரிப்பாளர் கவனம்.)

இசை யார்? தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாதான்.(இசைஞானியும் விஜய்க்காக குத்து தான் போடுவாரோ? எப்பிடியோ பாட்டு சூப்பர் ஹிட் ஆவது உறுதி)

எல்லாம் சொன்னாச்சு, நாயகி யார்? வேறு யார் இப்போ தமிழ்சினிமாவின் ஆப்பிள் கன்ன அழகி தமன்னா தான். மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி ஆகிவிட்ட தமன்னா இப்போ விஜயுடன். எங்கோ ஆரம்பித்து தனுஷ், சூர்யா என வளர்ந்து இன்று ஒரு தலைமுறையின் முன்னணி நாயகனுடன் ஜோடி போடப்போகின்றார்.(சூர்யா என்னதான் ஹிட் கொடுத்தாலும் விஜய் எத்தனை தோல்விகொடுத்தாலும் இன்னும் விஜயின் அந்தஸ்து குறையவில்லை.)மொத்தத்தில் இந்த அழகிக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலம் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கும். விஜயுடன் நடித்தால் கண்டிப்பாக பலதரப்பட்ட மக்களிடம் சென்றடையும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் மேலும் முன்னணி நடிகையாக வலம்வர தமன்னாவிற்கு வாய்ப்புண்டு.

(அப்பாடா ஒருமாதிரி சரியான ஆளைத்தான் பார்த்து பிடிச்சிருக்கேன்போல! ?)

ஒருவாறாக முக்கியமான கலைஞர்கள் தேர்வு முடிவிற்கு வந்திருக்கின்றது. அதேபோல் கதையிலும் புதுமையுடன் சிறப்பாக செய்தால் ஐம்பதாவது பட தேர்தலில் விஜயின் வெற்றி உறுதி. தன் கடந்தகால படங்களில் இருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொண்டு இந்தப்படத்துக்கு கஷ்டப்பட்டு உழைத்து நல்ல கதை திரைக்கதையுடன் கொடுத்தால் பல முன்னணி கலைஞர்கள் ஒன்று சேரும் இந்தப்படமும் விஜய்க்கு ஐம்பதல்ல 200 not out ஐ கொடுக்கும்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox