உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label இந்தியா.. Show all posts
Showing posts with label இந்தியா.. Show all posts

Saturday, November 20, 2010

உலக அழகி என் மாமி ஐஸ்க்கு இன்று வயது 16!

உலக அழகி ஐவர்யா ராய்! பெயரை சொல்லும்போதே தொண்டைக்குள்ளே பலருக்கு ஐஸ் வரும். அதுவும் முக்கியமாய் என் மாமாவுக்கு. சரி அதெல்லாம் விடுங்க. அமிதாப்பின் மருமகள், அபிசேக்கின் மனைவி மட்டுமன்றி பிரபல நடிகை என பல முகம் கொண்ட ஐசுக்கே இன்று உலகம் ஐஸ் வைத்த நாள். என்ன ஒன்று மெ புரியலையா? இன்று தாங்க 44 வது உலக அழகியாய் நம்ம ஐஸ் ஆண்டி( மாமிக்கு ஆங்கிலம் மட்டுமன்றி வயசிலும் என ஆண்டி தானே. ) முடிசூடி இன்றுடன் பதினாறு வருடங்கள். முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்த்த ஒரு நாள் இந்த நாள். எனவே நாமும் வாழ்த்து சொல்ல வேண்டாமா? வாழ்த்துக்கள் ஆண்டி. மாமி என சொல்ல காரணம் நம்ம மாமா யாரெண்டு நான் சொல்லனுமா என்ன அடிக்கடி இவரை பற்றி தானே பேசுறார்.

ஐஸை பற்றி நான் என்ன சொல்ல வந்த நீங்க கண்குளிர ஐஸின் சில படங்களையும். பேட்டியையும் பார்த்திட்டு போங்களேன்.


கீழே இருக்கும் முதல் படத்தை பார்த்து யாரும் பொறாமைப்பட கூடாது. உலக அழகியும் உலக அழகனும் ஒரே இடத்தில்.







Share:

Saturday, June 19, 2010

சிங் is கிங் - இறுதிப்போட்டியில் இந்தியா.



உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் உலகை ஆக்கிரமித்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்று வரும் ஆசிய கிண்ண போட்டிகளை கணக்கெடுக்க மறுத்த பலரையும் இன்று மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பிய போட்டி ஒன்று இப்போதுதான் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியை பார்த்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கூட 50 ஓவர் போட்டி பற்றிய தங்கள் கருத்தை மீள் பரிசீலனை செய்வர் என சொல்கின்றது கிரிக இன்போ.

அப்படி என்ன தான் நடந்தது? என்று கேட்கிறீர்களா? வேறு என்ன கிரிக்கெட்டில் இரு துருவங்கள் மோதிய போட்டிதான். இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி வழமை போல விறு விறுப்பாக நடை பெற்று முடிந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தலைவர் அப்ரிடி முதலில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் என முடிவெடுத்தார். அதற்கமைய ஆரம்பத்தை அமர்க்களமாக தான் ஆரம்பித்தனர் சல்மான் பட்டும் பர்ஹத்தும். நீண்ட போராட்டத்தின் பின் ஹர்பஜன் சிங் இந்த இணையை பிரிக்க அடுத்ததாய் ஜோடி சேர்ந்த சானியாவின் நாயகன் மாலிக்கும் பட்டும் இணைந்து மீள கட்டி எழுப்ப மீண்டும் அதை காண தகர்க்க அடுத்தடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழ ஒரு கட்டத்தில் உமர அக்மலும் அப்பிரிடியும் இணைந்து அதிரடிக்கு மாற அப்ரிடி ஆட்டம் இழக்க மீண்டும் சோர்ந்தது பாகிஸ்தான். இருப்பினும் கம்ரன் அக்மாலின் தாண்டவத்தின் மூலம் 267 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி.

பந்துவீச்சில் இந்தியாவின் பிரவீன் குமார் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி மிரட்ட பஜ்ஜி தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். மறுமுனையில் பாரிய இலக்கொன்றை துரத்த ஆரம்பித்த இந்தியாவுக்கு அமைதியான ஒரு தொடக்கம் கொடுக்க முனைந்தனர் ஷேவாக்கும் கம்பீரும். இடையில் சேவாக் ஓட முடியாமல் அவதிப்பட்டு ரைனாவை ஓட பயன்படுத்தினாலும் சேவாக் இன்னும் போரிமில் இல்லை என்பதை இன்றைய போட்டி காட்டியது. மறுமுனையில் கடந்த போட்டி போல தொடர்கிறது காம்பீரின் அட்டகாசம்.இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அடுத்த டிராவிட், விராட் கோலி, கம்பீருக்கு பக்க பலமாக இருக்க ஓட்ட வேகம் அதிகரித்தது. பாகிஸ்தான் பந்துகள் பந்தாடப்பட்டுக்கொண்டிருக்க கோலி ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து இணைந்த டோனி, கம்பீருடன் சேர்ந்து மிகப்பெரிய இணைப்பாட்டம் ஒன்றை வழங்க இந்தியா வெற்றியை நோக்கி நகர தொடங்கியது.

இம்முறையும் சதத்தை நெருங்கி அதை பெற முடியாமல் தவற விட்டு கம்பீர் ஆட்டமிழக்க சிறிது நேரம் ஷர்மா, தோனிக்கு கைகொடுத்தார். ஆனால் ஷர்மா வெளியேறிய உடன் தோனியும் வெளியேற இந்தியா ஆட்டம் காண தொடங்கியது. மறுமுனையில் ரைனாவும் ஜடேயாவும் போராடினாலும் ஓட்ட வேகம் மந்தமானதுடன் ஜடேயா வழக்கம் போல தேவையான நேரத்தில் சொதப்பினார். ஆனால் அவர் போனது நல்லது போல வந்த பஜ்ஜி அக்தர் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து தன் கணக்கை ஆரம்பித்தார். இவர் தான் கணக்கை முடிக்கப்போகின்றார் என்று அப்போது தெரியவில்லை. வெற்றியை நோக்கி வீறு நடை போட்டுக்கொண்டிருந்த அணிக்கு பந்துகள் குறைய தொடங்க பதற்றமும் தொற்றிக்கொண்டது. இந்த பதற்றத்தில் ரைனா ரன அவுட் ஆக இந்தியா தோற்று விடும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்த பிரவீன் குமார் கைகொடுக்க. பஜ்ஜி சில பந்துகளை முகம் கொடுக்க தடுமாறினார். இடையில் அக்தர், பஜ்ஜி வாக்குவாதம் சூடாக கம்ரன் அக்மல் அவர்களை பிரித்து அழைத்து சென்றதும் சூடு. அக்தர் இன்று விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிட தக்கது.

இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருக்க மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது ஓட்டத்தை ஓட வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய பஜ்ஜி அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சிக்ஸ் பறந்து கொண்டிருக்கும் போதே சிங்கம் கர்ஜிப்பது போல அக்தரை பார்த்து கர்ஜிக்க அதற்க்கு அக்தரும் கையில் V காட்டி விட்டு போடா போடா என்பது போல கையால் காட்டியதும் செம ஹாட் மச்சி. ஆனால் என்னதான் அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ தெரியல.

மொத்தத்தில் இறுதி நேரத்தில் ஹீரோவாகி இந்தியாவை காப்பாற்றிய சிங் தான் இன்றைய கிங்.

சில சுவாரஸ்யங்கள்.

இடையில் பந்து மாற்றும் நேரம் வரும் போது பந்தை மாற்ற வேண்டாம் என அப்ரிடி சின்ன பிள்ளை போல அடம பிடித்தார்.
அக்தர்-பஜ்ஜி சண்டை...

போட்டி நிறைவடைந்த பின் இதை பற்றி கூறிய அப்ரிடி இது ஒரு நல்ல போட்டி என்றும் தாங்கள் நன்றாக ஆடியதாகவும் அதை விட இந்திய வீர்கள் ஆட்டம் சிறப்பு என்றும் பெருந்தன்மையோடு பாராட்டினார்.

அதே நேரம் இந்த வெற்றி கூல் கப்டன் என ரவி சாஸ்திரி தொனியை அழைக்க தான் இன்று கூல் இல்லை என்றும் இந்தியா பாகிஸ்தான் ஆடும் போது எப்படி கூழை இருக்க முடியும் என கெட்ட தோணி பஜ்ஜி தன்னை காப்பாற்றிவிட்டார் என்றும் சொன்னார். அதேநேரம் இனி சிங்கை ஒரு ஆல்ரவுண்டர் என சொல்லலாம் எனவும் கூறினார். இன்று மட்டுமன்றி கம்பீருடன் இந்திய ஏ அணியில் ஆடும் போதே மின்னொளியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை தான் வழங்கியதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.

எது எப்படியோ மீண்டும் ஒரு தடவை ஐம்பது ஓவர் போட்டி ஒன்று உயிர் பெற்றிருக்கின்றது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய மற்றும் இலங்கை அணிகள் தெரிவாகி உள்ளன. இதில் இறுதி லீக் போட்டியில் மொத இருக்கும் அணிகளே இறுதிப்போட்டியில் மோத உள்ளதால் ஆட்டம் சூடு பறக்கும் எனபதில் சந்தேகமில்லை.

பி.கு: எல்லோரும் ராவணன் படம் பார்த்து விட்டீர்கள் போல. விமர்சனங்கள் சூடாக வருகின்றன. படித்துள்ளேன். ஆனால் பலருக்கு பின்னூட்டம் இடவில்லை. காரணம் படம் பார்க்காமல் எப்பிடி....விரைவில் பார்ப்பேன் என நம்புகின்றேன்.
Share:

Monday, June 7, 2010

சீறி வரும் சிங்கம் சிம்பாவே.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிம்பாவே-இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை எவை என தெரிவும் ஆகிவிட்டன. ஆனால் இந்த தொடர் தொடங்கும் போது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் ஆரம்பித்தது வழக்கம் போல சிம்பாவேயை ஓரம் கட்டிவிட்டு இந்திய இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடந்தது என்ன. வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென நினைத்தார்களோ இல்லை சிம்பாவே தானே என இளக்காரமாய் நினைத்தார்களோ தெரியாது இரண்டாம் தர இந்திய அணியை தெரிவு செய்ததாக கூறி அனுப்பி வைத்தனர் இந்திய தெரிவுக்குழுவினர். கெளரவம் பார்த்து இலங்கையும் தன் வழக்கமான அணியை விடுத்து இரண்டாம் தர அணி ஒன்றை அனுப்பி வைத்தது.

போட்டிகளை பார்க்க முதல் அனுப்பி வைக்கப்பட்ட அணிகள் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அவர்களின் வழக்கமான மூன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. சச்சின் மகா போர்மில் இருக்கின்றார் இவர் இல்லாதது நட்டம் சேவாக்கும் இல்லை. இவர் காயம் காரணமாக இழந்த போர்மை மீட்க ஒரு வாய்ப்பு அதுவும் வழங்கவில்லை. அடுத்து கம்பீர் அண்மைக்காலமாக பெரிதாக இவர் பிரகாசிக்கவில்லை. அடுத்து தல தோணி இல்லை யுவராஜ் இல்லை பந்து வீச்சிலும் முக்கியமானவர்கள் இல்லைதான் ஆனால் இந்தியாவின் வருங்கால அணி என எதிர்பார்க்கப்படும் இளைய வீரர்களை கொண்ட ஒரு அணிதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. வீரர்கள் அனைவரும் இளையவர்கள் ஆனால் ஓரளவு அனுபவம் உள்ளவர்கள் தான். இப்படியான ஒரு அணியாக வந்த அவுஸ்திரேலியா தான் T20 இறுதி போட்டி வரை தோல்வி இல்லாமல் வீறு நடை போட்ட அணி. அப்படி இருக்கையில் ஐ.பி.எல்லால் வளர்க்கப்பட்ட வீரர்கள் என்னத்தை பெரிதாய் கிழித்தனர் இப்படி சொதப்ப தான் ஐ.பி.எல் என்னும் களியாட்டமா?


இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் இதில் கார்த்திக்கின் விக்கெட் காப்பு படு மோசம் அப்படி இருந்தவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கினார்கள் என்று தெரியவில்லை. மறுபக்கம் விஜய் ஐ.பி.எல்லில் முதலில் பிரகாசித்தாலும் உலக கிண்ண போட்டியில் அவர் போட்ட மொக்கை எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கையில் இது தேவையா? தினேஷ் கார்த்திக்கு பதில் விக்கெட் காப்பில் ஈடுபடுவதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ராபின் உத்தப்பாவை அனுப்பி இருக்கலாமே? நமன் ஒஜாவை எதற்காக பயன்படுத்தாமல் விட்டார்கள் என தெரியவில்லை. அந்த வீரருக்கு விஜயை தவிர்த்து வாய்ப்பு வழங்கி இருந்தால் சிலவேளை அவர் நம்பிக்கை அளித்திருக்கக்கூடும். கார்த்திக் சொதப்பிய நேரம் அவரை விட ஓஜா சிறப்பாகவே விக்கெட் காப்பும் செய்தார். விராத் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா போன்றோர் ஓரளவு திருப்திப்படுத்தினர்.

அடுத்தவர் தலைமைப் பொறுப்பை ஏற்று சின்னப்பிள்ளை ஆட்டம் ஆடிய ரைனா. தன் பாட்டுக்கு துடுப்பாட்டத்தில் கலக்கிய அவருக்கு இந்த தொடர் எல்லாவகையிலும் கறுப்பாகிப்போனது. ஒரு தலைவருக்கு உரிய பண்புகள் இன்னும் அவருக்கு போதியளவு இல்லை என்பதுடன் கிரிக்கெட் விதிகளே தெரியாமல் ஒருவர் அணிக கப்டனாக ஆடிய அவமானமும் கிடைத்தது. அவ்வளவுக்கு அறிவில்லாமல் ஆடுகின்றாரா இவர்? ஆனால் இலங்கை தெரிவாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய தெரிவாளர்கள் செய்தது ஒரு விதத்தில் நல்ல விடயம். இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு இப்போது ஓரளவுக்கு அவர்களுக்கு விடை கிடைத்திருக்கும். ரைனாவின் தலைமைப் பண்பின் வள்ளலும் விளங்கி இருக்கும். எனக்கென்னவோ இந்தியாவிற்கு பத்தொன்பது வயதுக்குட்பட்ட போட்டியில் உலக கிண்ணம் வென்று கொடுத்த கோலி பொருத்தமாக இருப்பார் என தோன்றுகின்றது. இப்போதைக்கு துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தும் அவருக்கு தலைமைப் பொறுப்பு பெரிய சுமையாக இருக்காது என நம்புகின்றேன்.

அடுத்தவர் ஜடேயா, ஒருவேளை நம் இலங்கையில் சனத்தை வைத்திருப்பது போல இவரை வைத்திருக்க வேண்டும் என்ற மரியாதை இருக்கின்றதோ? கிரிக்கெட்டின் எல்லா துறையையும் மறந்து விட்டார். தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பு முற்று முழுதாக அதை வீணாக்கி விட்டார். இனியும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தெரிவுக் குழுவும் தோனியும் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றார்கள் என்றே சொல்லலாம். கொஞ்ச காலத்துக்கு இவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது.

தன் பெயர் சொல்ல ஒரு வீரர் வேண்டும் என்பதற்காய் தோணி இவரை வளர்க்கின்றார் என நினைத்தாலும் இது அவர் பெயரை கெடுக்கும் பிள்ளையாய் இருக்கின்றது. இவரைவிட இன்னும் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சகலதுறை வீரர் தான் வேண்டும் என்கிறார் தோணி இந்த தொடரை பொருத்தவரை அஷ்வின் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளார் எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை கொடுத்தால் அது பலனளிக்கும். மறு பக்கம் ரைனா,யூசுப்,யூவி என மற்ற வீரர்களையும் தோணி பயன்படுத்தலாமே. வரும் தொடர்களிலாவது சிந்திப்பாரா பார்ப்போம். ஐ.பி.எல்லில் சென்னைக்காய் அஷ்வினை நம்பியவர் நாட்டுக்காய் நம்பினால் எல்லோருக்கும் அது நல்லது. பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அஷ்வின் மட்டுமே ஆறுதல் ஆனால் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பை வழங்கி அவர்களின் பலம் பலவீனத்தை தெரிவாளர்கள் அறிந்திருப்பர்.


கார்த்திக்,விஜய்,ரைனா,கோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான், ஜடேயா போன்றோர் சர்வதேசப்போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்களே. எனவே இந்தியாவின் இரண்டாம் தர அணி என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. சிம்பாவேயையும் இலங்கையையும் சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு நாடு சார்பாக அனுப்பப்பட்ட அணியே இது இதில் முதல் தரம் இரண்டாம் தரம் என்று சொல்ல முடியாது. அணி அணி தான் வெற்றி வெற்றி தான் தோல்வி தோல்விதான். இது இலங்கைக்கும் பொருந்தும். தில்ஷான் தலைமையில் களம இறங்கிய இலங்கையும் இன்று சிம்பாவேயிடம் தோல்விகண்டு இறுதிப்போட்டிக்கு காத்திருக்கின்றது. சங்கா,மகேல,முரளி,சனத் என முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் அணித்தலைவராக பிரகாசிக்காத தில்ஷான் தலைமையில் அணி அனுப்பப்பட்டது.

ஆரம்ப போட்டியில் தானே விக்கெட் காப்பாளராக ஆடிய தில்ஷான் தொடர்ந்து வந்த போட்டிகளில் சந்திமல் என்னும் அற்புதமான இளைய வீரர் ஒருவரை இனம்காண வைத்திருக்கின்றார். இலங்கையை பொறுத்தவரை தில்ஷான்,தரங்க, சமரவீர, அஞ்சலோ மத்தியூஸ், கபுகேதர, குலசேகர,டில்ஹார போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் மிக்கவர்கள் அப்படி இருக்கையில் இவர்களும் இரண்டாம் தர அணி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இலங்கை தெரிவாளர்கள் ஒரு அற்புதமான தலைவரை தெரிவு செய்யும் ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன். தில்ஷான் ஒரு சிறந்த தலைவர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்து டில்ஷானை தலைமைப்பொறுப்பில் வளர்க்க வேண்டிய எந்த ஒரு காரணமும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இல்லை. காரணம் சங்கா ஓய்வு பெற முன் தில்ஷான் போய்விடுவார். அப்படி இருக்கையில் அடுத்த தலைவர் என கருதப்பட்ட கபுகேதரவுக்கு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து.


மொத்தத்தில் இரண்டாம் தர அணி என்ற பெயரில் சென்ற இரண்டு அணிகளுக்கும் உண்மையில் அனுபவம் குன்றிய சிம்பாவே நல்ல பாடம் புகட்டியுள்ளது. அவர்களின் கூட்டு முயற்சிக்கும்,விளையாட்டின் மேல் உள்ள ஈடுபாட்டுக்கும் கிடைத்த வெற்றி தான் இது. இரண்டு கிரிக்கெட் வல்லரசுகள் பங்கு பற்றிய தொடரில் அவர்களை தோற்கடித்து அவர்கள் இருவரையும் விட அதிக போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளை பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது சீறிப்பாயும் சிம்பாவே. டெஸ்ட் அந்தஸ்து பறிக்கப்பட்டு கிரிக்கெட்டில் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த சிம்பாவேக்கு இது நிச்சயம் மிகப்பெரிய மருந்து. முதல் போட்டியில் சிம்பாவே வென்றபோது ஏதோ வென்றுவிட்டார்கள் என நினைத்தாலும். அந்த போட்டியில் சிம்பாவேயின் பலம் அபாரமாக வெளிப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற்றாலும் அபார துடுப்பாட்ட உதவியுடன் ஓட்ட எண்ணிக்கையை துரத்தி மலைக்க வைத்தது. தொடரை பொறுத்தவரை சிம்பாவேயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மிகப்பெரிய அரணாக இருந்து சிம்பாவேயின் வெற்றியில் பெரும் பங்காற்றினர். இருவரும் விக்கெட் விழுவதை தவிர்த்ததுடன் மிக சிறப்பாக ஓட்டங்களை குவித்து பின்னர் வரும் வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மற்றவர்கள் வெற்றிகரமாய் அதை முடித்து வைத்தனர். மசகட்சா,டெயிலர் என்ற அந்த இரண்டு வீரர்களும் எல்லா வீரர்களையும் விட சிறப்பாக ஆடினார் என்றால் அது மிகை இல்லை.

இப்படி துடுப்பாட்டத்தில் எல்லோரும் கை கொடுக்க மறு புறம பந்து வீச்சாளர்களும் சில போட்டிகளில் அசத்தினர். அனுபவம் மற்றும் இளம் ரத்தம் வெறி என்பன சேர்ந்து சிம்பாவே கிரிக்கெட்டில் ஒரு மணி மகுடத்தை கொடுத்திருக்கின்றது. மற்ற இரண்டு அணிகளையும் விட சிம்பாவேயின் களத்தடுப்பு அபாரமாக இருந்தது உண்மை. பெருமளவான ஓட்ட எண்ணிக்கையை கடுப்படுத்தியது இந்த படை. இது மற்ற இரண்டு அணி வீரர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்தது.

கத்துக்குட்டி அணி, இரண்டாம் தர அணி என விமர்சிக்கப்பட்ட அணி இப்போது தங்கள் விளையாட்டின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படித்தாலும் ஆச்சரியமில்லை. காரணம் மற்ற இரண்டு அணிகளையும் விட கிண்ணம் வெல்ல சகல தகுதியும் இந்த அணிக்கு உண்டு. சிம்பாவே, நட்சத்திரங்கள் என்பனவற்றை தவிர்த்து ஒரு கிரிக்கெட் அணியாக பார்த்தால் அசுர வளர்ச்சியைக் காட்டும் சிக்கும்புராவின் இந்த புத்துப்படைக்கு என் வாழ்த்துக்கள். உண்மையில் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சொல்கின்றேன். இலங்கை,இந்திய ரசிகர்கள் கோபிக்கபடாது. இந்த முறை கிண்ணத்தை சிம்பாவே வெல்ல வேண்டும் அதுதான் அவர்களின் கடுமையான உழைப்புக்கும் விளையாட்டின் மீதான ஈடுபாட்டுக்கும் கிடைக்கும் பரிசு. சிங்க சீற ஆரம்பித்திருக்கிறது. மிக விரைவில் பல ராஜ்ஜியங்கள் விழும் என நம்புகின்றேன். மீண்டும் ஒருதடவை சிம்பாவே கிரிக்கெட்டுக்கு என் வாழ்த்துக்கள்.
Share:

Saturday, March 13, 2010

கில்லியை தொடரும் கிரிக்கெட்.


கிரிக்கெட், விளையாட்டுகளில் எனக்கு ஓரளவு தெரிந்த விளையாட்டு எனக்கு பெரிதாக விளையாட தெரியாவிட்டாலும் அதை பற்றிய ஓரளவு அறிவை வளர்த்து வைத்துள்ளேன். 1999 பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து தான் கிரிக்கெட் பற்றி நான் அறிந்து கொண்டேன். எனவே என்னை கவர்ந்த வீரர்கள் அதன் பின் வந்த வீரர்களாக தான் இருக்கும். பெரியவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பிக்கலாமா.

அழைத்தவர்: எப்பூடி.

விதி முறைகள்:

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.


2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்

(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள் மற்றும் T20

(2) பிடிக்காத போட்டிவகை :சில டெஸ்ட் போட்டிகள். முடிவே இல்லாமல் முடிவதனால்.

(3) பிடித்த அணி : இந்தியா அதன் பின் இலங்கை,நியூசிலாந்து,இங்கிலாந்து .

(4) பிடிக்காத அணி : அவுஸ்திரேலியா. காரணம் மற்ற அணிகளில் என்ன தரமான வீரர்கள் இருந்தாலும் தாங்கள் தான் மன்னர் என ஒரு சில வீரர்கள் நினைப்பது. தங்களை மற்றவர்கள் வென்றால் அதிஷ்டம் என சொல்லி சமாளிப்பது.

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : சச்சின்(காரணம் சொல்லவேணுமா?) ,கங்குலி(அவர் போல நானும் இடக்கை.),சேவாக்(எதற்கும் அஞ்சா அதிரடி பார்க்கும் நேரம் முழுக்க வெறுப்பு வராத ஆட்டம்.),யுவராஜ்(மண்டியிட்டு சிக்ஸ் அடிக்கும் ஸ்டைல்.) ,கம்பீர்(கங்குலியின் வாரிசு.),விராட் கோலி(அதிரடி.), தோணி(தல ஆச்சே.),சங்கா(முன்னர் பிடிக்கும் இப்போ வெறுப்பு.) அர்ஜுன(ஒரு ரன்னை கூட நடந்து எடுக்கும் தைரியசாலி) ஸ்டீபன் பிளமின்க்,அடம் கில்கிறிஸ்ட்(அந்த அணியில் இருக்கும் ஒரே நல்லவர்.)

(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் :பலர் உண்டு. ஆனால் பிரபலங்களை மட்டுமே சொல்கின்றேன். அத்தப்பத்து, டில்ஷான்(இப்போ அடி அடி என அடிப்பது ஆனாலும் ஸ்டைல் இல்லா மலட்டடி.) இன்சமாம்(மனிதன் அவுட்டே ஆகமாட்டார்.) லாரா(காரணமே இல்லை.) பொண்டின்க் (திறமை இருந்தும் வாயால் அலட்டுவதால்.) மைக்கல் கிளார்க் .(குட்டி பொண்டின்க்.) சமரவீர, சல்மான் பட்(இந்தியாவை தாக்குவதனால்.)


(7) பிடித்த விக்கட் காப்பாளர் : தோணி(நம்ம அணிக்காக ஆடுவதால்.) திராவிட்(யார்மே இல்லாத நேரம் அணியின் நலனுக்காக அந்த சுமையையும் ஏற்றதால்.) சங்கா,மார்க் பவ்ச்சர், கில்கிறிஸ்ட்.

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : பார்த்திவ் பட்டேல்

(9) பிடித்த களத்தடுப்பாளர் : எப்போதும் யுவராஜ் சிங்(பாயும் புலி.) கைப்(ஓடி எடுப்பார்.) சச்சின்(இந்த வயதிலும் ஓடி ஓடி பிடிப்பதால்.) பாண்டிங்

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி(பந்து போக பார்த்துக்கொண்டிருப்பது.) அர்ஜுன(சொல்லவா வேணும்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் :வசீம் அக்ரம், சோயிப் அக்தர்(என்ன தான் குழப்படி பயலா இருந்தாலும் வேகம் எண்டால் வேகம்.) லீ( என் தங்கைக்கு பிடித்ததால் எனக்கும் பிடித்து விட்டது.)

(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : டில்ஹார பெர்னாண்டோ, மொகமத் சாமி, கிலேச்பி, ஷேன் பாண்ட் (இந்தியரை பாழாய் படுத்தியதால்.)

(13) பிடித்த ஸ்பின்னர் : முரளி(தமிழன் என்னும் பாசம்.) கும்ப்ளே(விடா முயற்சி) ஷேன் வாரன்(சாதனைகளை படைத்ததால். பின்னாளில் திருந்தியதால்)

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ்(வெட்டி பந்தா.)

(17) பிடித்த ஆடுகளங்கள் : இந்தியாவின் சென்னை, கொல்கத்தாவின் ஈடன் காடன், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன்,அடிலெயிட்,சிட்னி,இலங்கையின் காலி, பாகிஸ்தான் லாகூர், இங்கிலாந்தின் ஓவல், தென் ஆபிரிக்காவின் ஜோகனச்பெர்க்.

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : இலங்கையின் தம்புள்ள(இலங்கை வெல்ல வேண்டுமென தயாரிக்கும் மைதானம்.)

(19) பிடித்த சகலதுறை வீரர் : யுவராஜ் சிங், சச்சின், இர்பான் பதான், சனத், கலிஸ், அப்பிரிடி, டானியல் வெட்டோரி.


என்ன ஒரு சகல துறை வீரர் பாருங்க.

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்றூ சைமன்ஸ்.(குழப்படிக்கார பயல்).

(21)பிடித்த அணித் தலைவர் : கங்குலி(இந்தியாவுக்கு வெற்றி என்று ஒன்று இருக்கென சொல்லிக் கொடுத்தவர் தைரியத்தை கொடுத்தவர்) தோணி(அதிஷ்டக்கார தல) மஹேல(பொறுமை சாலி) அர்ஜுன, ஸ்டீவ் வாவ், ஸ்டீபன் பிளமின்க்(நீண்டகாலம் அணியை வெற்றிப்பாதையில் கொண்டுவந்தவர்.)

(22) பிடிக்காத அணித்தலைவர் : சச்சின்,சனத்(துடுப்பால் சாதித்தவர்கள் ஆனால் தலைமையில் சாதிக்கவில்லை.) பாண்டிங்(திமிர்.)

(23) கனவான் வீரர்கள் : சச்சின்,முரளி.

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக்,ரவி சாஸ்திரி,கவாஸ்கர்

(25) பிடிக்காத வர்ணனையாளர் :ஹர்ஷா போக்லே

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : டேவ் வட்மோர்(கத்துக்குட்டி அணியை பாயும் புலி ஆக்கியவர்) பாப் வூல்மர் (பயிற்ச்சியில் பல தொழில் நுட்பம் புகுத்தியவர்.) இப்போது கேரி கேச்டன்(இந்தியாவின் வெற்றிகளின் பங்காளன்.)


(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல்(கோச்சர் என்ற பெயரில் வந்து நாசமாக்கியது. )

(28) பிடித்த போட்டி : இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும்.

(29) பிடித்த வளரும் வீரர் : விராட் கோலி.(என்ன பொறுப்பு என்ன அதிரடி. வருங்கால இந்தியா என சொல்லலாம்.)

(30) பிடிக்காத வளரும் வீரர் : ரியான் ஜேம்ஸ் ஹரிஷ்(அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடுகின்றாரே.)


பதிவெழுத நான் அழைப்பது.

1. அகசியம் வரோ ( என்னதான் எழுதிறார் பார்ப்போமே.)
2. சாளரம் கார்க்கி(உறவுக்காக)
4. க.கோபி கிருஷ்ணா( நீண்டகாலம் வேறு ஆணிகள் புடுங்குவதால்.)

வானொலியில் என் இறுதிநாள் பற்றி விரைவில் என் பதிவு வரும். சில பல தனி வேலைகள் உறவினர்களுடன் என் நேரத்தை செலவளிப்பதர்க்காக இந்த சில நாட்களை ஒதுக்கினேன். அத்துடன் வானொலியில் இருந்து விலகிய கவலை இன்னும் மாறவில்லை. எனவே நேரம் வரும் போது என் பதிவையும் எதிர்பாருங்கள்.

பல்டி: கன்கொன் || Kangon அழைச்சதுக்கு நன்றிங்ணா....
ஆனா ஏற்கனவே பதிவிட்டுவிட்டதால் பதிவிடாத ஆதிரை அண்ணாவை (:ப) இந்தப் பதிவிட அழைக்கவும்.....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html கான்கொனின் கோரிக்கையை ஏற்று ஆதிரையை இதை தொடர அழைக்கின்றேன்.
Share:

Wednesday, February 24, 2010

200 ஓட்டங்களை தொட்டார் சச்சின்.



இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இருநூறு ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளார். கிரிக்கெட் ரசிகன் என்ற ரீதியில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினுக்கு என் வாழ்த்துக்கள்.

மிக விரைவில் சச்சின் பற்றிய என் பதிவில் முழுமையான விபரங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox