உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label கந்தசாமி. Show all posts
Showing posts with label கந்தசாமி. Show all posts

Friday, September 11, 2009

ஸ்ரேயாவின் பிறந்தநாளும் மீண்டு வந்த நானும்.



இப்போதுள்ள கதாநாயகிகளில் மிக முக்கியமான ஒருவர். இறுதியாக வந்த கந்தசாமியில் கூட தன கதாபாத்திரத்தில் கூட வித்தியாசம் காட்டியவர். இருப்பினும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஒருவர். குறுகிய காலத்திலேயே ரஜினி,விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகைய பெருமைக்காரி. அழகான அம்மணி பல ரசிகர்களின் கனவுக்கன்னி. இப்படி எல்லாம் கொண்டாடப்படும் ஸ்ரேயாவிற்கு இன்று இருபத்தேழாவது பிறந்தநாள்.(எனக்கு அக்காவுங்கோ!)




2001ஆம் ஆண்டு இஷ்டம் திரைப்படம் மூலம் தெலுங்கில் திரைபிரவேசம் செய்தார் ஸ்ரேயா.இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ஸ்ரேயாவை அடையாளம் காட்டியது. தொடர்ந்து நான்கு படங்கள் செய்தபின் 2003ஆம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பின் மீண்டும் தெலுங்குப்பக்கம் போனவரை தமிழ் சினிமாவும் 2003ஆம் ஆண்டு எனக்கு20 உனக்கு18 மூலம் அழைத்துவந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி வேடம் இல்லை என்றாலும் பலரின் மனதில் பசக்கென ஒட்டிவிட்டார். அதற்க்கு காரணாம் முதல் படத்திலேயே அவர் அணிந்த ஆடைகள். ஆனால் என்ன செய்வது இந்த கிளி மீண்டும் தெலுங்கும் ஹிந்தியும் பேச போய்விட்டது. அங்கே பிரபலமாகி விட்டால் விடுவார்களா. ஜெயம் ரவியுடன் மழை திரைப்படத்தில்தனிக்கதாநாயகியாகதன் இன்னிங்க்சை ஆரம்பித்தார். 2005ஆம் ஆண்டு தெலுங்கு சத்ரபதி திரைப்படத்துக்காக பிலிம்பெயர் வழங்கிய தெலுங்கு சிறந்த நடிகை விருது ஸ்ரேயாவை அலங்கரித்தது. மழை மிகப்பிரமாண்டமான வெற்றியை பெற்றுக்கொடுக்க தமிழிலும் ஸ்ரேயா கால் ஊன்றினார்.




அதன் பின் மாமனாருடனும் மருமகனுடனும் ஒரே நேரத்தில் நடிக்கும் பாக்கியம் ஸ்ரேயாவிற்கு கிடைத்தது. ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம். இதில் திருவிளையாடல் ஆரம்பம் முதலில் வந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து ஸ்ரேயாவை இங்கேயே தங்க வைத்தது. அதன் பின் வந்த சிவாஜி ஸ்ரேயாவின் தலை எழுத்தையே மாற்றி விட்டது. தமிழில் நடித்ததோ மூன்று படங்கள் நாலாவதிலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி. எல்லோரும் திரும்பிப்பார்க்கும் நேரம் வந்த சிவாஜி செய்த சாதனைகள் ஸ்ரேயாவின் நடிப்பு நடனம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். இந்த படத்துடன் நட்சத்திர அந்தஸ்துள்ள முன்னணி நடிகை ஆகிவிட்டார். தலைவருடன் ஜோடியான அதிஷ்டம் தளபதியுடனும் ஜோடியாக்கியது. விஜயின் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நன்றாக நடித்திருக்கின்றார் என பாராட்டப்பட்டது. ஆனால் என்ன செய்வது படம் படுத்துக்கொண்டது. இடையில் கன்னட பக்கமும் போய் வந்தார்.




இதுவரை முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்த ஸ்ரேயா சனியனை தூக்கி தன் ஜாக்கட்டுக்குள் போட்டார். இந்திரலோகக்த்தில் நா அழகப்பன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வடிவேலுக்கு ஜோடியாக ஆடியதால் பல முன்னை கதாநாயகர்களின் எரிச்சலுக்கு உள்ளானார். மிக முக்கியமாக தல அஜித்தின் பாடங்களில் இன்றுவரை ஸ்ரேயா நடிக்க முடியாமல் போக காரணமும் இதுதான். தமிழில் இருந்து சற்றே ஒதுங்கியவர்(ஒதுக்கப்பட்டார்) The Other End of the Line என்ற படத்தின் மூலம் ஆங்கிலத்திலும் காலடி வைத்தார். பல மொழிகளில் சிறகடித்து பறக்க ஆரம்பித்த கிளியை தோரணை செய்ய கூடி வந்தார் விஷால் படம் பப்படமாகி மீண்டும் கிளியை கிழித்தெடுத்தது.



அதன் பின்னர்தான் கந்தசாமி வந்தார். சிறுவர் முதல் பெரியோர் வரை Excuse me என சொல்லும்படி பிரபலம் கிடைத்தது. வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கின்றார். இருப்பினும் கந்தசாமியை கடித்து குதரியவர்களிடம் இருந்தும் ஸ்ரேயாவினால் தப்பமுடியவில்லை. எல்லாவற்றிலும் இருந்து மீள இப்போது மீண்டும் தனுஷுடன் நடிக்கும் குட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார். தொடர்ந்து ஜக்கு பாய்,சிக்கு புக்கு பாடங்களில் எதிர்பார்ப்போடு நடித்து வருகின்றார். What's cooking, Stella?என்ற ஆங்கில படமும் இப்போ ஸ்ரேயா வசமே. அவரின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள். அதேநேரத்தில் இன்னும் சிறப்பாக நடித்து(அப்படி எண்டால் என்ன) வெற்றித் திரைப்படங்களில் இருக்க(காரணம் வெற்றி பெற்றால் கதாநாயகியால் என சொல்வது குறைவு) பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கூடிய வாழ்த்துக்கள்.




ஸ்ரேயாவின் பிறந்தா நாள் எல்லாம் சரி மீண்டு வந்த நான் என்பது என்ன என சொல்லாமலா?. மிகப்பெரிய ஒரு இடைவேளைக்கு பின் மீண்டும் ஒரு பதிவு வாயிலாக சந்திக்கிறேன். என் பெரியப்பாவின் சுகவீனம் காரணாமாக நான் வெளியூர் செல்லவேண்டி ஏற்ப்பட்டது அதை எல்லாம் முடித்து விட்டு வந்திருக்கின்றேன். இதை தான் மீண்டு வந்த நான் என்றேன். போதுமா இதை விட நயன்தாராவின் சிங்கத்துக்கு வாழைப்பழம் கொடுக்கும் அளவிற்க்கெல்லாம் எனக்கும் ஸ்ரேயாவிற்கும் தொடர்ப்பில்லை என நினைக்காதீர்கள் இருந்தாலும் இருக்கலாம் முடிந்தால் ஸ்ரேயாவிடம் கேட்டுப்பாருங்கள்.


பி.கு: ஸ்ரேயா என்றாலே மழை நினைவு வரும் மழை என்றால் குளிர்ச்சி நினைவு வரும் அந்தக்குளிர்ச்சிக்காக இந்த படங்கள் படங்களை தெரிந்து தந்ததே ஸ்ரேயாதான் நம்புங்க.
Share:

Thursday, August 27, 2009

ஸ்ரேயாவை களங்கப்படுத்தினாரா விக்ரம்?

பதிவர்கள் என்பவர்கள் மிகப்பெரிய சக்தியாக உருவாகி விட்டார்கள். அவர்கள் நினைத்தால் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் என்பதுக்கு அண்மையில் கந்தசாமியை நொந்தசாமியாகவும் நொண்டிச்சாமியாகவும் சூப்பர் சீரோவாகவும் வர்ணித்து எழுதி அந்த படத்தை தாறுமாறாக கிழித்ததே ஒரு நல்ல உதாரணம்.

என் விடயம் இதுதான். ஊடகம் என்பது மிக முக்கியமான ஒரு ஆயுதம். பதிவர்கள் நாங்களும் அந்த வகையில் பொறுப்பானவர்களே. எண்கள் ஒருவருக்கு ஒருவரை பிடிக்கும் ஒருவரை பிடிக்காமல் போகும். ஆனால் எனக்கு தெரிந்தவரை பதிவர்கள் எல்லோருக்கும் பிடிக்காத இரண்டு விடயங்கள் ஒன்று இளைய தளபதி விஜய் இன்னொன்று கந்தசாமி திரைப்படம். இந்த இரண்டிலும் பதிவர்களுக்கு என்ன பிரச்சனையோ எனக்கு தெரியவில்லை.(அடப்பாவி எங்களுக்கும் தான் தெரியவில்லை என நீங்கள் முனு முணுப்பது எனக்கு கேட்கின்றது.)

வில்லு திரைப்படம் வந்தபோது வரிந்து கட்டிக்கொண்டு எல்லோரும் விஜய் டி.வி மதன் போல விமர்சம் எழுதினார்கள். படம் படுத்துக்கொண்டது. என் இதற்கு முன் வந்த விஜய் படம் பர்க்காதவர்களா நீங்கள்? விஜய் படம் என்றால் இதுதான். நாலு சண்டை, ஆறு பாட்டு, நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த மசாலா தான் என கடந்த பத்துவருடமாக தெரியும். அப்படி விஜய் கொடுத்த கில்லி,திருப்பாச்சி,சிவகாசி எல்லாவற்றையும் வெற்றி ஆக்கிய ரசிக பதிவர்கள் இப்போது மட்டும் விஜய் கெட்டப் மாற்றவில்லை நடிக்கதெரியாது என்பது எந்த வகையில் நியாயம்?.


விஜய் விஜயாக வருவது தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கின்றது. அதேநேரம் தொடர்ந்து அவர் அப்படி நடித்த படங்கள் தானே வெற்றியும் பெற்றிருக்கின்றன. நீ என்ன விஜயின் கொள்கை பரப்புச் செயலாளரா என கேட்கலாம்.விஜய் மட்டுமல்ல விக்ரம் பற்றியும் பேசத்தான் போகின்றேன். எனக்கு தெரிந்த ஆரம்பத்தில் இருந்து வருகின்றேன். குருவி,வில்லு படங்களுக்கு பிறகு விஜய் என்பவர் ஒரு நடிக்கத்தெரியாதவர், என்னும் தோற்றப்பாடு மட்டுமில்லாமல் எள்ளிநகையாடும் ஒரு பொருளாக பதிவுலகில் பார்க்கப்படுகின்றார். விஜய் ரசிகர்கள் கூட எத்தனையோ பேர் இப்போது தங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமென விஜயை தாழ்த்தி பதிவிடுகின்றனர். பலரின் கேட்ட பழக்கத்தில் ஒன்று ஒரு பதிவர் ஒன்றை கெட்டதென்றால் அது எல்லோருக்கும் கெட்டது இல்லாவிட்டால் நல்லதென்றுவிட்டால் அது நல்லதுதான். ஒருவேளை கந்தசாமியை பற்றி நான் முதலில் பதிவிட்டிருந்தால் எல்லோரும் கந்தசாமியை போற்றிப்புகழ்ந்திருப்பீர்கள்.

இவ்வளவு சொல்கின்றாயே உனக்கு என்ன விஜய் மச்சானா அல்லது தாணு காசு கொடுத்தாரா என கேட்கலாம் கேட்டும் இருக்கின்றனர் சிலர். அவர்களிடம் கேட்கின்றேன் ஒருவரை தாழ்த்தி எழுதுவதால் உங்களுக்கு என்ன பயன். எழுத எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. ஆனால் இப்படியான வேலைகள் செய்யும் போது ஹிட், மற்றவர் இப்படி சொல்லிவிட்டாரே என எண்ணி செயற்படாதீர்கள்.

அடுத்து கந்தசாமி.

எவ்வளவுகால உழைப்பு. பிரமாண்டம். ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் செலவழித்து படமெடுப்பார். அதை எல்லாம் யோசிப்பதுமில்லை சிலர் படத்தை பார்ப்பதுமில்லை. பார்த்து புளித்து போனதுபோல இன்னொரு பதிவரின் பதிவை பார்த்து விமர்சனம் போட்டு விடுவார். உண்மையில் சில பதிவர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் மற்ற பதிவுகளை பார்த்து விட்டு அதேபோல தாங்கள் எழுதவில்லை என்று. இதில் என்ன கொடுமை என்றால் சிலர் வசன நடையை கூட மாற்றவில்லை. படம் வந்து ஒருவாரம் தாண்ட முதலே ஒரு படம் தோல்வி என சொல்ல நீங்கள் என்ன திரை உலக மேதாவிகளா?(நான் மேதாவி இல்லைங்கோ?)

ஷங்கரை பின்பற்றினார் என்கிறீர்கள் சுசி. ஏற்றுக்கொள்கிறேன். அதில் இரண்டு விடயம் இருக்கின்றது. சிவாஜி என்னும் அற்புத காவியம்(உங்கள் மொழியில்) தயாரான காலத்திலே தான் உங்கள் நொந்தசாமியும் கருப்பெற்றான். கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டான். சிவாஜி,ரமணாவின் நகல் என்னும் நீங்கள் தானே அன்று இதேபோல வந்த அந்தப்படங்களை வெற்றிபெற வைத்தீர்கள். இன்று அதேபோல வரும் கந்தசாமி சரியில்லையாம் என்ன நியாயம் இது. ஒருவேளை கந்தசாமி முதல் வந்து சிவாஜி பிந்தி வந்திருந்தால் சிவாஜியையும் இப்படி நாறடித்திருப்பீர்களா?

சிலரின் பதிவில் சுசி,இன்னொரு ஷங்கர் ஆக முயல்கின்றார் என போடப்பட்டிருந்தது. ஷங்கரை இன்று நல்ல இயக்குனர். பிரமாண்ட இயக்குனர் என கொண்டாடும் நீங்கள் அதேபோல பிரமாண்டத்தை தரும் இன்னொருவரை ஏன் ஏற்கமறுக்கின்றீர்கள்? பருத்தி வீரனை வெற்றி ஆக்கிய நீங்கள் பொக்கிஷத்தை சுருட்டினீர்கள். ஆனால் இதே பாணியில் தந்த ஆட்டோகிராப்பை வெல்ல வைத்தீர்கள்.கந்தசாமி விக்ரமின் காசி,சேது போன்ற படம் என யாரும் உங்களை சொல்லி ஏமாற்றினார்களா? முழுக்க முழுக்க வணிக ரீதியான படம் இது. அங்கே எங்களால் செய்ய முடியாத செய்ய நினைக்கும் விடயங்கள் தான் அதிகம் வரும். அதை ஏற்கும் பக்குவம் எம்மில் சிலரிடம்
இல்லையே என்பதே என் கருத்து.


எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நீங்கள் என்ன மாதிரி படங்களை ரசிக்கின்றீர்கள்? வணிக ரீதியாக எடுப்பதும் தப்பு யதார்த்தம் தந்தாலும் தப்பு என்றால் உங்கள் ரசனை என்ன? எப்படி படம் எடுத்தால் அத்தனை பதிவரும் ஆகா ஓகோ என புகழ்வீர்கள்.? விமர்சனங்கள் எழுதி பழக்கப்பட்ட உங்கள் கைகளால் இன்றாவது எந்த மாதிரி படம் எப்படி உங்களுக்கு வேண்டுமென கருத்து சொல்லிவிட்டு போங்கள். இல்லையேல் வழக்கம் போல என்னை கும்மி விட்டு போங்கள்.

படங்கள் அனைத்தும் சூடனர்வர்களை குளிர்விக்கவும் சூடாகாவிட்டால் இன்னும் சூடாகவும்.

அடடா எல்லாம் முடிந்ததே தலைப்புக்கு பதிலா காணமே எனப்பார்க்கிறிங்களா? கந்தசாமி பாருங்க ஸ்ரேயா விக்ரமின் அலுவலகத்தில் வந்து செய்யும் சேட்டையின் விளைவு தான் தலைப்பு. அப்பாடா எனக்கு ஒரு ஸ்ரேயா சிக்கிட்டாங்க.
Share:

Saturday, August 22, 2009

கந்தசாமி-காப்பாற்ற வந்த சாமி.

முக்கிய குறிப்பு: நான் ஒரு விக்ரம் ரசிகன் அல்ல. அதேநேரத்தில் விக்ரமின் அநேக படங்களை பாராட்டாதவன். இங்கே என் மனதில் தோன்றிய நடுநிலை கருத்தை விமர்சனமாக தருகின்றேன்.

நீண்ட காலமாக சாக்கு போக்கு காட்டி வரும் ஆனால் வராது என இழுத்தடித்த கந்தசாமி திரைப்படம் ஒருவாறு வந்து விட்டது. முதல் நாளே முதல் ஷோ பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேற்று இந்த நேரம் அந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என ஆரம்பத்தில் நினைக்கவில்லை. அதேநேரம் என் தொழில் நிமித்தம் வரும் புதுப்படங்களை பார்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு.(என்ன தான் மொக்கை என்றாலும் பார்த்து தான் தீரணும். என் தலை விதி அது.) இந்தப்படமும் தலை விதி தான் என்ற எண்ணத்தில் திரை அரங்குக்கு போயிருந்தேன்.

படமும் ஆரம்பம். டைட்டிலே சூப்பர் ஹீரோ சீயான் விக்ரம் என போட்டது, விக்ரம் சிறுவர்களுக்கான படம் என்றது, கிரிஷ் படத்தின் தழுவல் என படம் வர முதலே வந்த எறிகணைகளை தாண்டி இந்த படத்துக்கான எதிர்பார்ப்பில் நானும் அடங்கிப்போனேன்.

கண்ணீரை துடைப்பவன் கடவுள் என்று போடும் போதே இந்த படத்தில் லாஜிக் பார்க்க தேவை இல்லை என்பதோடு கடவுளையும் சம்பந்தப்படுத்தி தான் திரைக்கதை செல்லும் என்பது தெரிந்துவிடுகின்றது. அதற்கு ஏற்றால்போல உயிருக்காக போராடும் ஒருவரின் குடும்பத்துக்கு பணம் கொடுத்து வள்ளல் சாமியாக படத்தை தொடங்குகின்றார். அதற்கு பின் மன்சூர் அலிகானுடன் மோத விக்ரம் அறிமுகமாகும் காட்சியே அருமையாக இருக்கின்றது. சேவல் வேடமிட்டு மன்சூரை பந்தாட விக்ரம் செய்யும் சின்ன சின்ன அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கட்டிப்போடுகின்றது.

அதற்கு அடுத்த காட்சியில் ஒரு சி.பி.ஐ அதிகாரி வேடம் விக்ரமுக்கு.(இரட்டை வேடமல்ல). கந்தசாமி என்னும் பெயரில் அவர் அறிமுகமாகும் போதே இவர் தான் சேவல் என்பதும் தெரிந்துவிடுகின்றது. அவரின் மேலதிகாரியாக பிரபல தெலுங்கு நடிகர் கிரிஷ்ணா. விக்ரமின் சி.பி.ஐ அதிகாரி வேடத்துக்கு பெரிய பில்ட் அப்புகள் இல்லாதது நல்லது. மனிதர் பார்க்க அழகாக இருக்கின்றார். சின்ன சின்ன அசைவுகளிலும் நடிக்கின்றார். அதேநேரம் கடைமை தவறாத ஒரு நல்ல அதிகாரியாக இருந்து கொண்டே கந்தசாமி சேவல் அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவதை முதலே சொல்லாமல் இறுதியில் சொல்லி படம் பார்க்கும் ரசிகனை முட்டாளாக்காமல் எப்படி எல்லாம் பறக்கின்றார், பாய்கின்றார் என்பதை வெளிப்படையாக சொல்லி இருப்பதே படத்தின் பெரிய பலம்.

பெண் வேடமிட்டு அசத்துவது வயோதிபர் வேடம் சேவல் கலக்கல் தவிர(இவை திரையில் வரும் நேரம் குறைவு) விக்ரமின் நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரமில்லை இது. விக்ரமிடம் நடிப்புடன் கூடிய படத்தை எதிர்பார்க்காமல் போனால் நல்ல படமிது. படம் வெளிவர இவ்வளவு தாமதம் ஏன் என்று படம் ஆரம்பித்தவுடனேயே தெரிந்து விடுகின்றது. பிரமாண்டம் என்றால் என்ன என்பதை காட்ட ஷங்கருக்கு அடுத்து இன்னொரு இயக்குனர் வந்திருக்கின்றார். படத்தின் கதை எல்லோரும் சொல்லவதுபோல சிவாஜி+அந்நியன்+சாமுராய்+ரமணா=கந்தசாமி. இதில் கோட்டை விட்ட இயக்குனர் சுசி கணேஷன் திரைக்கதையில் கோட்டை கட்டி இருக்கின்றார். நாங்கள் பார்த்த படங்களின் காட்சிகள், ஆனால் அலுப்பு தட்டவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதற்கு காரணம் சுசியின் making style என்றால் பொய்யல்ல. அதேநேரம் படம் பெரிதாக இருப்பது ஒரு குறை என்றாலும் திரைக்கதை ஓட்டத்தின் வேகம் அதை சரி செய்து விடுகின்றது.

விக்ரமுக்கு அடுத்து கிருஷ்ணாவின் கதாபாத்திரம் வழக்கமான விஜயகாந்தின் போலீஸ் படங்களில் வந்த மேலாதிகாரி வேடம். ஆனால் அதுவும் இவருக்கு பொருந்தி இருக்கின்றது.(ரகுவரன் நடிக்க இருந்த வேடம் இதுதானோ) பிரபு.(கொஞ்சம் உடம்பை குறையுங்க சார் நீங்கள் திரையில் வந்தால் உங்களுக்கு பின்னுக்கு நிற்பவர்களை தெரியவில்லை.) அண்மையில் பில்லா படத்தில் பார்த்த அதே பிரபு. இங்கும் அதே வேலை வேறு ஒன்றும் இல்லை சொல்ல. ஆனால் அதுவும் ரசிக்கும்படி செய்திருக்கின்றார்.

கதாநாயகி+வில்லி ஸ்ரேயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவென்றாலும் வில்லத்தனமான பாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆடைக்குறைப்பு(கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம்) என வந்திருந்தாலும் கவர்ச்சியை தேட வேண்டி இருக்கின்றது. அதேநேரம் பாடல் கட்சிகளில் வளைந்து நெளிந்து இடுப்பை கூட ஆட்டோ ஆட்டென ஆட்டி கலக்கி இருக்கின்றார். பாடல்காட்சிகளில் என்னவோ விக்ரமை விட நடனத்தில் கலக்குவது ஸ்ரேயாதான். அம்மா சுசித்ரா தாயே நீங்கள் பாடுவதுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. உங்கள் குரலை அதுவும் அழகான நடிகைககளிடம் கேட்க பயமா இருக்கிறது. தந்தைக்காக விக்ரமை காதலிப்பதாக நடிக்க வந்து பின் வழக்கம் போல விக்ரமிடம் சரணடையும் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என சுருக்கமாக சொன்னாலும் மோதல்,காதல் விறுவிறுப்பு, பழி வாங்கல்கள் என சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லை.

இருவரும் தத்தமது வேலைகளுக்காக காதலை பாவித்து இறுதியில் அந்த ஆயுதத்துக்கே பலியாகிப்போகின்றார்கள்.ஸ்ரேயாவின் அப்பாவாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி என்ன நடிப்பது. வழக்கமான வில்லன் என்றாலும் சிறப்பாக செய்திருக்கின்றார். போடி போடா என ஒரு திரைப்படம் பற்றி பேச்சு வந்தது நினைவிருக்கலாம் அதற்க்கு விளம்பரத்துக்காகவோ என்னவோ பாடலிலும் வசனத்திலும் பிரபலமான வார்த்தைகளாக இவை. ஆஷிஷ் வித்யாராத்தியின் கையாளாக வரும் வை.ஜி.மகேந்திரன் கதாபாத்திரம் சிறப்பானது.
விவேக்கின் இடத்தில் வந்த வடிவேல் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார். வயிறு குலுங்க சிரிக்க வைக்க அவர் உத்தரவாதம். அதுவும் பிரபுவிடம் மாட்டி விசாரணையில் அவர் செய்யும் அலப்பறை இன்னொரு குஷி.புதிய சரக்கோடு மீண்டும் சிரிக்க வைக்கும் வடிவேலு அன்மைப்படங்களில் தெரிகின்றார்.இதை விட விக்ரம் தன் நண்பர்களோடு இரந்து ஏன் இந்த மாதிரி காரியத்தில் ஈடுபடுகின்றார்? என்ன நடந்தது என்னும் சொல்லும் சின்ன கிளைமாக்ஸ் வரும் போதே பிரதான வில்லன் யார் என தெரிந்து விடுகின்றது. என்ன ஆட்டமையா அது.தமிழ் நாட்டின் அடையாளம் என்றுகொண்டே ஒரு வாகனத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் முடிப்பது அமர்க்களம். அதே நேரம் இன்னும் கொஞ்சம் அவருக்கு அழுத்தமாக குடுத்திருக்கலாமோ என தோன்றி இருந்தாலும் அது கூட ஆபத்தாக அமைந்து விடும்.

மேக்ஸ்சிகோ காட்சிகள் படத்தில் கொஞ்சம் நீளம் என்றாலும் அந்த Locationsகளுக்காக பார்க்கலாம். சண்டைக்காட்சிகளில் லாஜிக்கை தவிர்த்து பார்த்தால் ரசிக்க முடிகின்றது. பின்னணி இசை பாடல்கள் என தேவி ஸ்ரீ பிரசாத் தன பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார். தாணு காசை தண்ணி போல செலவு செய்திருக்கின்றார் என்பது படத்துக்கு பெரிய பலம். அதேநேரம் பிரபுவுடன் மட்டுமன்றி மற்ற முக்கியமான தலைகளுடன் எல்லாம் விக்ரமின் நண்பர்கள் இருந்து அவருக்கு உதவி செய்வது தெரிய வரும் இடங்கள் நல்ல திருப்பங்கள். அடுத்தது என்ன என்கின்ற எதிர்பார்ப்போடு வேகமாக நகரும் திரைக்கதை தான் படத்தை காப்பாற்றி இருக்கின்றது. மொத்தத்தில் இந்த திரைப்படத்தை பற்றி பல பதிவுலக நண்பர்கள் எழுதிய விமர்சனகள் இந்த படத்தை பொறுத்தவரை ஏன் என தெரியவில்லை. ஆனால் உண்மையில் இப்படியான வித்தியாசமான படங்களில் சில லாஜிக் பார்க்காதீர்கள் அதேபோல படத்தின் கதை பழையதாக இருந்தாலும் அதை கொடுத்திருக்கும் விதம் புதிசாக இல்லாவிட்டாலும் நன்றாக இருக்கின்றது. விக்ரம் சொன்னது போல நிச்சயம் இந்தப்படம் குழந்தைகளையும் பெண்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் நம்மிடம் இல்லாத ஒரு அதிசய சக்தியை தான் குழந்தைகள் ரசிக்கின்றார்கள். அதேபோல பெரியவர்களை ஏமாற்றாமல் எப்படி இப்படி எல்லாம் நடக்கின்றது என விளக்காமாக சொல்லி இருப்பது பாராட்டக்கூடியதுடன் புரிந்து ரசிக்க கூடியதே.
மொத்தத்தில் படம் பார்க்கும் நேரம் முழுவதும் சோர்வை தராமல் ஒரு படம் இருந்தால் அது நிச்சயம் வெற்றியே. அதை கந்தசாமி கொடுக்கின்றார். பக்தி செண்டிமெட் இருப்பது அடிமட்ட மக்களை சென்றடையும் அதேநேரம் கதையும் அவர்களிடமிருந்து ஆரம்பித்து பெரிதாக சொல்லப்படிருப்பது வர்க்க வித்தியாசங்களை உடைத்து ரசிகர்களை கூட்டும். அதேபோல ஒரு படத்தை பார்த்தால் குறைந்தது மூன்று மணி நேரம் ஆவது அந்தப் படத்தின் பாதிப்பு எங்களை ஆட்டுவித்தால் அதுதான் படத்தின் வெற்றி. உண்மையை சொல்லுங்கள் கந்தசாமி உங்களை பாதிக்கவில்லையா?.

சிலர் சொல்வதுபோல கந்தசாமி நொந்தசாமி இல்லை தாணுவை விக்ரமை சுசியை என எல்லோரையும் காப்பாற்ற வந்தசாமி.

கந்த கந்த கந்த கந்த கந்தசாமி எல்லோரையும் காப்பாற்ற வந்தசாமி.
Share:

Wednesday, August 19, 2009

ரஜினியின் சிவாஜியை முந்திய விக்ரமின் கந்தசாமி.


பூஜைக்கான அழைப்பிதழ் தொடக்கம் இன்றுவரை பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் பிரமாண்டத்துக்கும் குறைவில்லாமல் இருக்கும் சீயானின் விக்ரம் படம் ஒருவாறு வரும் வெள்ளிக்கிழமை வெளிவரப்போகின்றது. நடிப்பில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கும் விக்ரம் தன் ரசிகர்களை இத்தனை நாள் காக்கவைத்து இட்டு இப்போது தன் நடிப்புக்கும் ரசிகர்களுக்கும் தீனி போட இருக்கும் படம்தான் கந்தசாமி.

ரஜினியின் சிவாஜியை விட விஞ்சி அதிகமாக பிரிண்ட் போடப்பட்டிருக்கின்றதாம் கந்தசாமிக்கு. எல்லோரையும் காப்பாற்ற வருகின்றான் கந்தசாமி என்று பாடலிலேயே சொலிக்கொண்டு வருகின்றார் விக்ரம். படத்தின் பாடல்கள் பலவற்றை அவரே பாடி இருக்கின்றார். பாடல்களும் பட்டையைக்கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

இன்று நாளை என இழுத்தடித்துக்கொண்டிருந்த கந்தசாமி இப்போது வரப்போகின்றார். வருபவர் கோட்டைகட்டும் சாமி ஆவாரா அல்லது நொந்தசாமி ஆவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox