Monday, March 30, 2009

இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சிலருக்கு சிலரை பிடிக்கும் சிலருக்கு சிலரை பிடிக்காது. அப்படித்தான் என் வாழ்க்கையில் நான் இதுவரை காதலித்த பத்து பேரிடம் நான் எவ்வாறு என்னை பறிகொடுத்தேன் என்பதை இங்கே சொல்கின்றேன்.(இவர்கள் பாடலால் என்னைக் கவர்ந்தவர்கள் மாத்திரமே!)

ஹரிகரன்.
காந்தக்குரலோன் ஹரிகரனின் குரல் ஏனோ என்னை காந்தத்தோடு ஓட்டுவது போல ஒட்டவைத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை சோககப்பாடல்களையும் மெலடியான பாடல்களையும் தமிழை கொல்லாமல் அழகாக பாட இவர் தான் என் முதல் Choice. வசீகரமான குரல் எல்லோரையும் வசியப்படுத்திவிடும். (இவரைப் போலவே நானும் பாட Try பண்ணுவது வேறு கதை) அயன் திரைப்படத்தில் இடம்பெறும் "பள பளக்கிற....." பாடல் இப்போது என் favourite.(கூந்தலுடன் கூடிய இவர் சிகை அலங்காரம் ஸ்பெஷல்)

ஷங்கர் மஹாதேவன்.
கம்பீரக்குரல்! குத்துப் பாட்டென்றால் அதில் ஒரு ஸ்டைல். காதல் பாடல் என்றால் அதில் ஒரு ஆழம். கலகலக்க வைக்கும் இவரின் பாடல்களும் குரலும் ஏதோ ஒரு மாயாஜாலம் செய்துவிடும் என்னை. அண்மையில் வந்த "யாவரும் நலம்...." பாடல் தான் இப்போது என் tonic. "கட்டிப்பிடி கட்டிப்பிடிடா......" என பாடினாலும் ஒரு கவர்ச்சி "இல்லை இல்லை ......." என பாடினாலும் உணர்ச்சி.

S.P.பாலசுப்ரமணியம்.
இவரைப் பற்றி சொல்லவா வேண்டும். ஒவ்வொரு பாடலிலும் இவர் ஸ்டைல் தனி. பாடல்களைக் கேட்கும் பொது ஏதோ ஒரு சுகம். ஏதோ ஆகாயத்தில் மிதப்பது போல உணர்வு. எத்தனை வயதானாலும் இன்னும் மாறாத அந்த இளைய நிலாவின் குரல் தனிமைக்கு ஒரு துணை. SPB என்ற மூன்றெழுத்து பாடும் தத்துவ பாடல்களுக்கு நான் அடிமை.

கார்த்திக்.

கிட்டத்தட்ட ஹரிகரனின் குரல் சாயல் இருந்தாலும் தனக்கென ஒரு பாணி. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே தன் ஆரம்பகாலங்களில் பாடிய பெருமை. அருமையான தமிழ் வளம். திரும்பத்திரும்ப கேட்கவைக்கும் ஈர்ப்பு சக்தி. இவர் பாடலில் என்றென்றும் என்னை பாடவைப்பது "கண்பேசும் வார்த்தைகள்........" பாடல்.

திப்பு.

மிகவும் சிறப்பான உச்சரிப்பு. குத்தும் சரி காதலுக்காக குழையும் பாடலானாலும் சரி திப்புவின் பாடலில் எனக்கு ஏதோ ஒரு பிடிப்பு. ஒரு பக்கம் "இலங்தப்பழம்........ " என அதிர வைப்பவர் மறு பக்கம் "தாய் மடியே......." என கண்கலங்கவும் வைப்பார்.

உன்னி கிருஷ்ணன்.
என் சிறுவயதில் இவர் குரல் எனக்கேனோ தேன் வார்க்கும். பாடசாலைக்கு போகும் காலத்தில் செல்லும் வாகனத்தில் இவர் பாடல் அடிக்கடி ஒலிக்கும் பொது எனக்குள் பிறக்கும் உற்சாகம் அன்றைய நாள் முழுவதும் எனக்கான Boost.

உதித் நாராயணன்.

என்ன தான் தமிழை கடிச்சு துப்பினாலும் அந்த மழலைக் குரல் என்னைக் கிறங்கடிக்கும். தமிழை கொள்ளும் பாடகர்களை நான் வெறுத்தாலும் ஏனோ இவரை வெறுக்க முடியவில்லை. "காதல் பிசாசே......." என பலரது நெஞ்சத்தை "அள்ளு அள்ளு ....." என அள்ளியவர். என் நெஞ்சத்தையும் அள்ளிவிட்டார்.

அனுராதா ஸ்ரீராம்.
ஒருவருக்குள் இத்தனை வகையாகப் பாடும் குரலா? என அதிசயிக்கவைத்தவர். காதல், மோதல், சோகம், ஒப்பாரி, ஸ்டைல் எல்லாவற்றிலும் பெண் பாடகிகளில் என் முதல் மனம் கவர்ந்தவர் இவர்தான். "கறுப்புத்தான் எனக்கு........" பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் அதேவளை "ஏண்டி சூடாமணி......." பாடலும் பட்டையைக்கிளப்பும். ஹரிகரனும் இவரும் சேர்ந்து பாடல் தந்தால் என்னையே மறந்து விடுவேன்.

சித்ரா.
சின்னக்குயிலின் குரல் என்றுமே புத்துணர்ச்சி தரும். "பாடறியேன் படிப்பரியேன்......"என பாடினாலும் பாடலில் அத்தனை நுணுக்கங்களும் இருக்கும். கர்நாடக இசையாக இருக்கட்டும் காதல் முதல் அதிரடிப்பாடல்களிலும் கலக்கும் சித்ராவின் சோகப்பாடல்களும் கருத்தாளம் மிக்க பாடல்களுக்கும் என் செவி என்றும் பக்தன்.

ஹரிணி.
திப்புவின் மனைவி இப்போது. "எனக்கென ஏற்க்கனவே பிறந்தவள் இவளா.....?" என பாடியபோதே இசையில் எனக்கானவள் இவள் என திரும்பிப் பார்க்க வைத்து உன்னி கிருஷ்ணனுடன் சேர்ந்து தந்த பாடல்கள் இன்றும் எனக்கு தேசிய கீதங்கள். முக்கியமாக கர்நாடக சங்கீத சாயல் பாடல்களில் பாட ஹரிணிக்கு நிகர் அவர்தான்.

8 கருத்துரைகள்:

Sinthu said...

""பள பளக்கிற....." பாடல் இப்போது என் favourite"
ராமா ராமா இல்லையா?

Sinthu said...

குடித்து விட்டுப் பாடுபவர்கள் மாதிரிப் பாடுவதற்கு SPB sir தான் special....

Sinthu said...

"சின்னக்குயிலின் குரல் என்றுமே புத்துணர்ச்சி தரும். "பாடறியேன் படிப்பரியேன்......"என பாடினாலும் பாடலில் அத்தனை நுணுக்கங்களும் இருக்கும். கர்நாடக இசையாக இருக்கட்டும் கலக்கும்"
அம்மா சங்கீத ஆசிரியை என்பதற்காக இப்படியா?

Thusha said...

S.P.பாலசுப்ரமணியம், ஹரிகரன, ஷங்கர் மஹாதேவன், திப்பு, கார்த்திக், உதித் நாராயணன், உன்னி கிருஷ்ணன், இதில் இன்னொருத்தர் மானோ, சித்ரா,
ஹரிணி, அனுராதா ஸ்ரீராம்.
இது என்னோட பட்டியல்

shathiesh said...

ஹரிஹரனின் பாடலில் பள பளக்கிற பாடல் பிடிக்கும். ஏன் ஒரு பாடலுக்கு மேல் வேறு பாடல் பிடிப்பது தப்பா?

மாதேவி said...

உங்கள் தெரிவுகள் பலருக்கும் பிடிதமானவர்கள்தான்.

pthumaikal said...

கார்த்திக்,உன்னி கிருஷ்ணன் ,அனுராதா ஸ்ரீராம் Shiraijakosal i um pidikkum enakku avrai maranthuddingkapola?

shathiesh said...

ஸ்ரேயா ஹோஸல் நன்றாகப் பாடுகின்றார். அவரை நான் மறக்கவில்லை. இருப்பினும் இன்னும் என் நெஞ்சில் அவர் நுழையவில்லை. இது எனக்கு பிடித்தவர்கள் மட்டுமே. எனவே அவரை சேர்க்காததால் அவரை நான் குறைத்து மதிப்பிட்டதாக நினைக்கவேண்டாம்.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive