Sunday, April 12, 2009

விரோதியை வரவேற்க தயாராகும் தமிழர்களும் சிங்களவர்களும்!

எத்தனை சோதனைகள் வேதனைகள் சின்ன சின்ன சந்தோசங்கள்(இது பலருக்கு கிடைத்ததா என தெரியாது) இப்படிக்கடந்து பொய் நிற்கின்றன கடந்த சில வருடங்கள். வாழ்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள். பிறந்த இடம் எங்கோ, வளர்ந்த இடம் எதுவோ, இன்று வாழும் இடம் கூட நிரந்தரமற்ற நிலையில் தான் நாங்கள். நாளை எங்கே என நினைப்பதை விட அடுத்த கணப்பொழுதாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்குமா என ஏக்கத்துடன் வாழும் வாழ்க்கைதான் இது.

தாய், தந்தை இல்லாத குழந்தைகள், விதைவைகள், தபுதாரர்கள், இதேபோல் இன்னும் எத்தனைபேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருநேர சப்பாடவாது கிடைக்குமா என்னும் நேரம் ஒரு புது வருடம். யார் கொண்டாடப்போகிறார்கள்? யார்தான் இந்த ஒருநாளாவது நிம்மதியாக மூச்சுவிடப்போகின்றார்கள்?

மகளின் திருமணத்துக்கு வரமுடியாத பெற்றோர், ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு போகக்கூட செலவழிக்காத நேரம், கட்டுப்பாடுகள் எல்லாம் தாண்டித்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகவேண்டும். பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் இந்த நிலையில் வழமை போலவே ஒரு வருடம் ஓடி இப்போது அடுத்த வருடமாம். அதற்காக பொருட்களின் விலைக்குறைப்பாம், புத்தாடைக் கொள்வனவாம், பல தடபுடல் ஏற்பாடுகளாம் இதெல்லாம் யாருக்காக?
உயிரில்லாத உடல்களுக்கா?, உறவுகளை இழந்த உறவுகளுக்கா, மரணத்தையே பார்த்து பார்த்து மரத்துப்போன மனங்களுக்காக? இல்லை. யாருக்குமே தேவையில்லை இப்படிஒரு புதுவருடம்.

இத்தனை காலமும் வேறு வேறு பெயர்களில் வந்த வருடங்களே பலரது வாழ்க்கைக்கு விரோதியாக இருந்து காயங்களுடன் கடந்து சென்றிருக்கிறது. பிறக்கபோவதோ விரோதி வருடம். இது இனி எத்தனைபேரின் வாழ்க்கையில் விரோதியாக இருக்குமோ தெரியவில்லை. எதுவாக இருப்பினும் பிறக்கப்போகும் ஆண்டாவது பெயரில் மட்டும் விரோதியாக இருக்கட்டும் அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசி எங்கும் சமாதானமும் அன்பும் அமைதியும் நிலவவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.(என்ன செய்வது வழமையாக இப்படி சொல்லவது ஒரு Fashion ஆகிவிட்டதே!)
Share:

1 கருத்துரைகள்:

துஷா said...

"விரோதி வருடம்" என்ற இந்த பெயரைப் பார்த்தவுடன் நண்பியிடம் கூறினேன் எங்களுக்கு இருக்கிற வீரோதிகள் காணாது என்று இப்ப வருஷம் கூட வீரோதியாய் போய்விட்டது என்ன செய்ய............

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox