Wednesday, August 12, 2009

திரை உலகத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் விருது வழங்கி சிறப்பித்து வரும் நிலையில் பதிவுலகை சேர்ந்த நாமும் அவர்களுக்கு விருது வழங்கலாமே என தோன்றியதன் விளைவு தான் இது. இங்கே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை களைந்து நேரடியாக உங்களிடமே உங்கள் அபிமானம் பெற்றவரை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. பலர் ஆர்வமாக கலந்துகொண்டு தாங்கள் விரும்புபவர் வெற்றி பெற தங்கள் வாக்குகளை செலுத்தி இருக்கின்றீர்கள். இதோ தேர்தல் முடிவடைந்து விட்டது, வெற்றியாளர்களை நீங்களும் கண்டு கொண்டு விட்டீர்கள். தேர்தல் காலத்தில் நடந்த சுவையான சம்பவங்களோடு பிரபலங்களுக்கு விருதளித்து மகிழ்வோம் வாருங்கள்.

திரை உலகத்தவருக்கு பதிவுலகம் விருது வழங்கி சிறப்பிக்கும் நடவடிக்கைக்கு கடந்த சில நாட்களில் உங்களையும் அழைத்திருந்தேன். போட்டிக்காக நான் தெரிந்தவர்களை நீங்கள் வாக்களிப்பதோடு அதை விட மற்றவர்களை நீங்கள் தெரிவு செய்ய விரும்பினால் தெரியலாம் என்றேன். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் நேரடியாக வாக்கை மட்டும் அளித்துச் சென்றிருக்கின்றார்கள். எனவே பின்னூட்டங்களில் வந்த கருத்துக்கள் பெரிதாக இந்தக் கணக்கெடுப்பை பாதிக்கவில்லை. கருத்துகளை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் வாக்குகளை அளித்து இந்த விருது வழங்கும் நிகழ்வை வெற்றிகரமாக்கியவர்களுக்கும் நன்றிகள்.

அபிமான பாடலாசிரியர்.
விஜயின் அறிமுகப்பாடல்களை எழுதிக்கொண்டுவரும் கபிலனால் பலதரப்பட்ட பாடல்களை எழுதினாலும் 9 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. அதேநேரம் இந்த தெரிவுகளில் வைரமுத்துவிற்கு பெரிய சவால் ஒன்றை கொடுப்பார் என எதிர்பார்த்த பா.விஜயினாலும் உங்கள் அபிமானத்தை வெல்ல முடியவில்லை. வெறும் 25 வாக்குகளை 14% என்ற வீதத்திலேயே பெற முடிந்தது. நல்ல பல பாடல்களை எழுதியுள்ள முத்துக்குமார் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்று தன்னை ஓரளவிற்கு நிலை நிறுத்தி இருக்கின்றார். ஆரம்பத்தில் வைரமுத்துவிற்கு கடுமையான சவாலை கொடுத்தவர் கவிதாயினி தாமரை, ஒரு பெண் கவிதாயினியாக இருந்து கொண்டு அவர் எழுதும் வரிகளுக்கு இத்தனை ரசிகர்களா? வாழ்த்துக்கள் தாமரை. ஆனால் அதன் பின்னர் இவர்கள் இருக்கும் குழுவிற்கான போட்டி சுவாரஷ்யம் குறைந்து வைரமுத்துவின் பக்கம் முற்று முழுதாக மாறிவிட்டது. நாற்பது வாக்குகள் வித்தியாசத்தில் கவிப்பேரரசு வைரமுத்து உங்கள் அபிமானம் பெற்ற பாடலாசிரியராக முடிசூடிக்கொள்கின்றார்.

வைரமுத்து
91 (53%)
பா.விஜய்
25 (14%)
கபிலன்
9 (5%)
நா.முத்துக்குமார்
46 (26%)
தாமரை
51 (29%)


அபிமான பெண் பாடகி.
அண்மையில் சிறப்பான பாடல்களை பாடி பிரபலமாகி வரும் சுசித்ராவினால் பெரிதாக வாக்குகளை பெற முடியவில்லை. 13 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பாடலுக்கு ஏற்ப குரல் மாற்றி பாடி அசத்தும் அனுராதா ஸ்ரீராமினால் வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை தான் பெற முடிந்தது. அடுத்த இருவருக்கும் இடையில் நல்ல ஆரோக்கியமான போட்டி நடைபெற்றது. அன்றும் இன்றும் பாடி அசத்தும் சித்ராவைக்கூட ஆரம்பத்தில் கலங்கடித்து விட்டார் ஸ்ரேயா ஹோஷல். மாறி மாறி இருவரும் முன்னிலை வகிப்பதாக போய்க் கொண்டிருந்த இந்த போட்டியில் இறுதித் தருணத்தில் ஸ்ரேயா ஹோஷல் 65 வாக்குகளை 37% என்ற வீதத்தில் பெற சின்ன குயில் சித்ரா 84 வாக்குகளுடன் 48% என்ற வீதத்தில் பெற்று குயிலிசை அரசியாக பட்டம் சூடி இருக்கின்றார்.

சித்ரா
84 (48%)
ஸ்ரேயா ஹோஷல்
65 (37%)
அனுராதா ஸ்ரீராம்
49 (28%)
சுசித்ரா
13 (7%)


ஆண் பாடகர்.
இந்த குழுவில் போட்டியாளர்கள் அதிகம். ஆனால் போட்டி என்னவோ ஒருபக்கமாய் முடிந்து உப்பு சப்பு இல்லாமல் போய்விட்டது. எதிர்பார்க்கப்பட்ட இளைய பாடகர்கள் ரஞ்சித், ராகுல் நம்பியார் என்போர் படு தோல்வி அடைய திப்பு,நரேஷ் ஐயர், பென்னி தயாள் என இபோதைய முன்னணிகள் கவிழ்ந்து போக, சங்கர் மகாதேவன் ஓரளவிற்கு வாக்குகளை பெற, ஹரிகரனுக்கு ஆரம்பத்தில் கார்த்திக் சிறு போட்டியைக்கொடுத்தாலும் எந்தவித தடையும் இன்றி ஹரிகரன் 41 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக காந்தக்குரலோனாக தெரிவுசெய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்.

ஹரிஹரன்
91 (53%)
கார்த்திக்
50 (29%)
ஷங்கர்மகாதேவன்
29 (17%)
திப்பு
17 (10%)
நரேஷ் ஐயர்
16 (9%)
ரஞ்சித்
6 (3%)
ராகுல் நம்பியார்
7 (4%)
பென்னி தயாள்
16 (9%)

இசை அமைப்பாளர்.
இந்த குழுவில் எந்த வித மாற்றுக்கருத்தும் இன்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் சாதனையோடு கூடிய வெற்றியை பதிவுசெய்தார் ஒஸ்கார் நாயகன். ஜி.வி.பிரகாஷ்குமார்,தேவி ஸ்ரீ பிரசாத், வித்தியாசாகர் என்போர் குறைந்தளவு வாக்குகளை பெற, ஹரிஷ் ஜெயராஜினால் வாக்குகளை பெற முடிந்தது. இசை ஞானியின் மகனால் இசைப்புயலுக்கு முன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. புயல் மிகவேகமாக 100 வாக்குகளை கடந்து இந்த தேர்தலில் முதல் முறையாக 100 வாக்குகளை பெற்றது மட்டுமில்லாமல் இங்கே போட்டியிட்ட அத்தனை கலைஞர்களுக்குள்ளும் அதிகமான வாக்குகளை பெற்று உலக நாயகனாக இசைப்பிரிவில் மகுடம் சூடிக்கொண்டார்.ஏ.ஆர்.ரஹ்மான்
136 (69%)
யுவன்ஷங்கர்ராஜா
55 (27%)
ஹரிஷ்ஜெயராஜ்
40 (20%)
தேவிஸ்ரீ பிரசாத்
13 (6%)
வித்யாசாகர்
13 (6%)
ஜி.வி.பிரகாஷ்குமார்
10 (5%)

அபிமான இயக்குனர்.
மசாலா படங்களை தரும் தரணியின் கடைசிப்பட தோல்வி அவரை இந்த தேர்தலில் மிகவும் பாதித்திருக்கின்றது. வெறும் 10 வாக்குகளை மட்டுமே அவர் பெற, செல்வராகவன் 33 வாக்குகளுடன் அவருக்கு முந்தய இடத்தை பிடித்தார். அவருக்கு முந்தய ஸ்தானத்தை தரமான படங்களை தரும் கவதம் வாசுமேனன் பிடித்தார். ஆனால் என்ன செய்வது அவரின் கடைசியாக வந்த படங்கள் பெரிதாக சாதிக்க முடியாம போனதும் அவரின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. தமிழ் சினிமாவின் படைப்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்ப்படுத்திய பாலவினாலும் பெரிதாக சாதிக்கமுடியாமல் போய்விட்டது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், மசாலா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யதார்த்த இயக்குனர் அமீர் இறுதிவரை நீயா நானா என போட்டி இட்டவண்ணம் இருந்தனர். உண்மையில் இந்த போட்டி ரசிகர்கள் மசாலப் படமென்றாலும் சரி, யதார்த்தமான படமென்றாலும் சரி பிரமாண்ட படமென்றாலும் சரி நாங்கள் ரசிக்க தயார் என்பதை தான் நிரூபித்து இருக்கின்றது. கே.எஸ்.ஆர, ஷங்கர் இரண்டு பெரும் தலா 52 வாக்குகளை பெற 3 வாக்குகள் வித்தியாசத்தில் யதார்த்த சினிமாவின் நாயகன் பாலாவின் சிஷ்யர் அமீர் அபிமானம் பெற்ற இயக்குனராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

ஷங்கர்
52 (26%)
கே.எஸ்.ரவிக்குமார்
52 (26%)
கெளதம் வாசுமேனன்
41 (20%)
தரணி
10 (5%)
பாலா
45 (22%)
அமீர்
55 (27%)
செல்வராகவன்
33 (16%)

அபிமான நடிகை.
எப்படி வேணுமென்றாலும் நடிக்க தயார் என நடிக்கும் நமீதா, ஸ்ரேயாவினால் கூட பெரிதாக ரசிகர்களை சம்பாதிக்க முடியவில்லை. வெறும் 19 வாக்குகளை மட்டுமே அவர்களால் பெற முடிந்தது. சில வருடங்களுக்கு முன் கலக்கோ கலக்கெனகலக்கிய த்ரிஷா பெற்றதோ 34 வாக்குகள்.அவரின் சக போட்டியாளர்கள் நயன்தாரா மற்றும் சிநேகா, அசின் இந்த மூன்றுபேரும் முதல் நிலையை பெற முட்டி மோதினர். ஆனால் குடும்பத்து குத்துவிளக்காக இருக்கும் சிநேகாவினால் 41 வாக்குகளை மட்டுமே பெறக்கூடியதாக அமைந்தது. அதேநேரம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடைக்குறைப்பில் ஈடுபட்டும் நயனால் கூட முதல் இடத்தைப் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால் தமிழ் நாட்டைக் கடந்து அடித்துக்கொண்டிருக்கும் அசின் புயல் எங்க போனாலும் அங்கேயும் நான்தான் ராணி என வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மகாராணியாக முடி சூடியிருக்கின்றார்.
அசின்
91 (44%)
திரிஷா
34 (16%)
ஸ்ரேயா
19 (9%)
நயன்தாரா
45 (21%)
நமிதா
19 (9%)
சிநேகா
41 (19%)
அபிமான நடிகர்.
சகலகலாவல்லவனாக இருக்கும் சிம்புவால் என்னவோ பலரின் அபிமானம் பெற முடியவில்லை. வெறும் ஒன்பது வாக்குகளை மட்டுமே பெற்று இறுதி நிலையில் இருக்கும் சிம்புவை முந்தி 24 வாக்குகளுடன் தனுஷ் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். அவரை விட ஆறு வாக்குகள் மாத்திரமே அதிகம் பெற முடிந்தது சீயானால். மறுமுனையில் தலைக்கும் தளபதிக்குமிடையில் சரியான போட்டி நடந்தாலும் தலை தலை தான் என்பதை நிரூபித்து விட்டார். (என்ன விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் அதிகம் இணையத்தளத்தை அதிகம் பயன் படுத்துகின்றனர் என்பது உண்மையா?) மறுமுனையில் சினிமாவில் வெற்றிகள் நிஜ வாழ்வில் நல்ல சேவைகள் செய்யும் பேரழகன் சூர்யா 103 வாக்குகளுடன் எல்லோராலும் கதாநாயகனாக தமிழ் திரை உலக சக்கரவர்த்தியாக முடி சூடி இருக்கின்றார்.

அஜித்
86 (33%)
விஜய்
64 (24%)
விக்ரம்
30 (11%)
சூர்யா
103 (40%)
சிம்பு
9 (3%)
தனுஷ்
24 (9%)

வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.

9 கருத்துரைகள்:

சந்ரு said...

விருது பெற்றவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்...

SShathiesh said...

சந்ரு கூறியது...
விருது பெற்றவங்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்..

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

soundar said...

(என்ன விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் அதிகம் இணையத்தளத்தை அதிகம் பயன் படுத்துகின்றனர் என்பது உண்மையா?)
உண்மையில்லை அனைவரும் இணையத்தளத்தை படுத்துகின்றனர்

Anonymous said...

சனியனை போய் சகல கலா,,, என்ன கருமாந்திரம் இது?

SShathiesh-சதீஷ். said...

@சந்ரு

வாழ்த்து சொல்லியாயிற்று

SShathiesh-சதீஷ். said...

@soundar

நான் அந்தக் கேள்வி கேட்க காரணம் கடந்தகால சில ஆய்வுகளின் முடிவுகள்

SShathiesh-சதீஷ். said...

@Anonymous

அவர் தனிப்பட்ட ரீதியில் எப்படி இருப்பினும் திரை உலகை பொறுத்தவரை சிறு வயதில் பல விடயங்களை சாதித்த ஒருவர் என்பதை மறக்க முடியாது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஒரு மாறுபட்ட முயற்சிதான் .வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் வெற்றிப்பயணம் !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஒரு மாறுபட்ட முயற்சிதான் .வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் வெற்றிப்பயணம் !

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive