Thursday, August 13, 2009

இன்றைய தினம் இடக்கை பழக்கம் கொண்டவர்களுக்கான நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இடக்கைப் பழக்கம் கொண்டவன் என்ற ரீதியில் எனக்கும் சந்தோசமே. இந்த உலகத்தில் எத்தனையோ விடயங்களுக்காக நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவும் ஒரு நாள். எழுவது(இரண்டு கையாளும் ஓரளவிற்கு முடியும்) சாப்பிடுவதை தவிர என் பழக்கம் இடக்கையே.

என்ன காரணமோ தெரியாது, இடதுகையை பயன்படுத்துவதில் எனக்கு ஏதோ ஒரு பெருமை. ஆனால் சிலர் இந்த இடதுகைப் பழக்கத்தை விரும்புவதில்லை. உலகிலே ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையையும் சில முடியாத விடயங்களையும் கொடுக்கின்றான். அந்த வகையில் நாம் இடக்கையை ஒரு நல்ல கொடையாக எடுத்துக்கொண்டால் எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

இடதுகைப் பழக்கவழக்கம் உள்ளவர்கள் பற்றிய சில விடயங்களை நண்பர் பிரபா தன் தளத்தில் http://prapaactions.blogspot.com/2009/08/blog-post_12.htmlஎழுதியுள்ளார். அதனையும் படித்துப்பாருங்கள். இடதுகைப் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

14 கருத்துரைகள்:

Nimalesh said...

Valthukkal thola.................... KOndadungooooooooooooo

யோ (Yoga) said...

வாழ்த்துக்கள், என் நண்பர்களில் 30வீதமானோர் இடதுகைகாரர்கள். ஏனோ அவர்களிடம் ஒரு வசீகரம் இருக்கிறது. என்னனு தெரியல ஆனா அவங்க ஏதோ ஒரு விதத்தில வித்தியாசமானவங்க..

சந்ரு said...

அட நீங்களுமா...

ஊடகத்துறையில இருக்கின்ற பலர் இடது கைப் பழக்கம் உள்ளவங்களா இருக்கிறாங்களே அது ஏன் சதீஸ்...

Anonymous said...

இடது கை பழக்கம் உள்ளவங்களுக்கு சீக்கிரம் கலியாணம் ஆகாது.. பாத்து பாத்து இருக்கிறதுதான் தொழில்

சந்ரு said...

//பெயரில்லா கூறியது...
இடது கை பழக்கம் உள்ளவங்களுக்கு சீக்கிரம் கலியாணம் ஆகாது.. பாத்து பாத்து இருக்கிறதுதான் தொழில்//நல்ல கண்டு பிடிப்பு......


16,17 வயத்துல திருமணம் முடித்த இடதுகை பழக்கமுள்ளவங்கள நான் பார்த்து இருக்கின்றேனே..

Nimalesh said...

பெயரில்லா கூறியது... u better come up with Name.........

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு இடக்கைப் பழக்கமுடைய பிரபலங்களைத் தேடிய போது நம்ம காந்தி
தாத்தா பற்றியும் தெரிந்தது.உங்கள் பதிவுக்கு நன்றி
அத்துடன் அமெரிக்க கடைசி வரிசையில் உள்ள ஜனாதிபதிகளில் பலர் இடக்கை.
என் ஒரு நண்பரின் மகள் 10 வயது இடக்கைப் பழக்கம்; அவளிடம் உள்ள விசித்திர திறமை எந்த
பிரஞ்சுச் சொல்லையும் பின் பக்கமாகவும் வாசிப்பாள். இப்போ சற்று நீளமான சொற்களைக்கூட சொல்லுகிறாள்.
உதாரணம்: education-noitacaude=நொய்ரகயுடி
இது ஒரு வகைக் கொடையே குறையல்ல...

SShathiesh said...

Nimalesh கூறியது...
Valthukkal thola.................... KOndadungooooooooooooo

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

SShathiesh said...

யோ (Yoga) கூறியது...
வாழ்த்துக்கள், என் நண்பர்களில் 30வீதமானோர் இடதுகைகாரர்கள். ஏனோ அவர்களிடம் ஒரு வசீகரம் இருக்கிறது. என்னனு தெரியல ஆனா அவங்க ஏதோ ஒரு விதத்தில வித்தியாசமானவங்க.

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

SShathiesh said...

சந்ரு கூறியது...
அட நீங்களுமா...

ஊடகத்துறையில இருக்கின்ற பலர் இடது கைப் பழக்கம் உள்ளவங்களா இருக்கிறாங்களே அது ஏன் சதீஸ்..

காரணம் யாருக்கு தெரியும்? நீங்களும் இடக்கை பழக்கம் போல இருக்கு வாழ்த்துக்கள்.

SShathiesh said...

பெயரில்லா கூறியது...
இடது கை பழக்கம் உள்ளவங்களுக்கு சீக்கிரம் கலியாணம் ஆகாது.. பாத்து பாத்து இருக்கிறதுதான் தொழில

பெரிய கண்டு பிடிப்புடன் உண்மையை சொன்னதுக்கு நன்றி. அப்பாடா தப்பிச்சன், அதுசரி உங்கள் தொழில் என்ன சாத்திரம் பார்க்கிறதும், ஒத்து ஊதிரதுமா? எப்போதும் பயன்தரக்கூடிய வகையில் சிந்திக்கவே மாட்டீர்களா?

SShathiesh said...

சந்ரு கூறியது...
//பெயரில்லா கூறியது...
இடது கை பழக்கம் உள்ளவங்களுக்கு சீக்கிரம் கலியாணம் ஆகாது.. பாத்து பாத்து இருக்கிறதுதான் தொழில்//நல்ல கண்டு பிடிப்பு......


16,17 வயத்துல திருமணம் முடித்த இடதுகை பழக்கமுள்ளவங்கள நான் பார்த்து இருக்கின்றேனே.

அவருக்கு அனுபவம் போதாது அறிவு பத்தாது விட்டு விடுங்கள் தோலா. சில அழுக்குகளை நாமே தேடிப்போய் விழுவது நமக்குத்தான் அசிங்கம் அவருக்கு ஏதோ என்னில் சில கருத்து வேறுபாடுகளை விட வேறு ஏதோ பிரச்ச்சனை.தம் அவர் சந்தோசம் இப்படி கீழ்த்தரமாக நடப்பதுதான் என்றால் நாம் எதற்கு அதற்க்கு தடை போடுவான்.

SShathiesh said...

Nimalesh கூறியது...
பெயரில்லா கூறியது... u better come up with Name.........

அவருக்கு பெயரோடு வர தைரியமில்லை அல்லது பெற்றோர் பெயர் வைக்கவில்லை. விட்டுவிடுங்கள்

SShathiesh said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு இடக்கைப் பழக்கமுடைய பிரபலங்களைத் தேடிய போது நம்ம காந்தி
தாத்தா பற்றியும் தெரிந்தது.உங்கள் பதிவுக்கு நன்றி
அத்துடன் அமெரிக்க கடைசி வரிசையில் உள்ள ஜனாதிபதிகளில் பலர் இடக்கை.
என் ஒரு நண்பரின் மகள் 10 வயது இடக்கைப் பழக்கம்; அவளிடம் உள்ள விசித்திர திறமை எந்த
பிரஞ்சுச் சொல்லையும் பின் பக்கமாகவும் வாசிப்பாள். இப்போ சற்று நீளமான சொற்களைக்கூட சொல்லுகிறாள்.
உதாரணம்: education-noitacaude=நொய்ரகயுடி
இது ஒரு வகைக் கொடையே குறையல்ல...

நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive