இன்னும் பத்தே ஆண்டுகள் தான் மனிதனின் மூளையை வைத்து அதற்க்கு ஈடாக செயற்கை மூளை கண்டு பிடித்து அறிமுகப்படுத்தப்போவதாக ஹென்றி மாகரம் என்னும் லண்டன் விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
இந்த உலகத்திலேயே மனிதனின் மூளையை வைத்து தான் பல அசாத்தியமான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. மனித உடலின் பல உறுப்புகள் மாற்றி பார்த்த விஞ்ஞானிகள் மூளையை மட்டும் ஏன் விட்டு வைப்பான் என நினைத்தார்களோ என்னவோ, செயற்கை மூளையை கண்டு பிடிக்கும் செயர்த்திட்டம் ஒன்றை லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆரம்பித்தனர். "ப்ளூ பிரைன்" திட்டம் என பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு நரம்பியல் ஆராட்சியில் ஈடுபடும் ஹென்றி மாகரம் தலைவராக இருக்கின்றார். இவரின் சாதனையில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் எலிகளுக்கு செயற்கை மூளை தயாரித்தது.
இந்த முயற்சி தந்த வெற்றியின் உற்சாகம் காரணமாக இப்போது எலியின் மூளைக்கும் மனித மூளைக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டு பிடித்து, அதற்கேற்ப இப்போது இந்த செயற்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி இந்த மனித மூளை கண்டு பிடிக்கப்படின் உலகெங்கும் மூளை நோயால் பாதிக்கப்படும் பல மக்கள் நன்மை அடைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகதரத்தில் எத்தனையோ நடக்கின்றது இது நடந்தாலும் ஆச்சரியமில்லை. வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளுக்கு.
அப்படியே என் தளத்தில் நடைபெறும் திரை உலகிற்கான விருது வழங்கும் விழாவில் பங்கெடுத்து விட்டு போங்கள். இன்னும் ஒரு சில நாட்களே மீதமுள்ள நிலையில் உங்கள் அபிமானம் பெற்றவரை வெற்றி பெற வைப்பது உங்கள் கையிலல்லவா இருக்கின்றது.
4 கருத்துரைகள்:
செயற்கை மூளை அவசர தேவை இருக்கிறது.
சிலருக்கு சொந்த மூளை இல்லை அவர்களுக்கு பிரயோசனமாக இருக்குமே சதீஸ்... தகவலுக்கு நன்றி சதீஸ்..
சிறந்த ஒரு தகவல்... சாத்தியமானால் அமர்க்களம் தான்....
வாழ்த்துக்கள் சதீஷ்.....
அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க சதீஷ்......
சந்ரு கூறியது...
செயற்கை மூளை அவசர தேவை இருக்கிறது.
சிலருக்கு சொந்த மூளை இல்லை அவர்களுக்கு பிரயோசனமாக இருக்குமே சதீஸ்... தகவலுக்கு நன்றி சதீஸ்..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
சிறந்த ஒரு தகவல்... சாத்தியமானால் அமர்க்களம் தான்....
வாழ்த்துக்கள் சதீஷ்.....
அப்படியே எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க
கண்டிப்பாக உங்க areaமட்டும் இல்லை எல்லா areavவிற்கும் வருவேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
Post a Comment