இலங்கையில் வெற்றிநடை போட்டுவரும் வெற்றி எப்.எம் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்வை வழங்க சூப்பர் சிங்கர்ஸ்,அடுத்த பிரபுதேவா,மற்றும் சகலகலாவல்லவன் சிவகார்த்திகேயனை அழைத்து வெற்றிகரமாக நடத்தியும் முடித்து விட்டது. வெற்றியில் அடியேனும் ஒருவன் என்னும் காரணத்தால் எனக்கும் ஒரு சில கடமைகள் கிடைத்தன. விமான நிலையத்தில் நான் சென்று வரவேற்றது முதல் இசை நிகழ்வு நடந்து முடிந்தது வரை நடைபெற்ற சில சுவாரஷ்யமான விடயங்களை இங்கே தொடர் பதிவாக இடப்போகின்றேன். (யாரும் அலுத்துக்கொள்ளாதீர்கள். சீரியல் போல இழுக்கமாட்டேன் சீக்கிரமே முடித்திடலாம்.) எழுத நான் தயார் வாசித்து வாக்குபோடுவதுடன் என்னை வசை பாட நீங்கள் தயாரா?
இரவு நேரம் நான் லோஷன் அண்ணாக்கு தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயம் தொடர்பாக என் சந்தேகங்களை தீர்த்ததோடு அங்கே சென்று நான் செய்யவேண்டிய செய்யத்தேவையற்ற விடயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன். சரி நாளை காலை நாங்கள் இந்தியாவின் விஜய் டி.வி .புகழ் சூப்பர் சிங்கர்ஸ் அஜீஸ்,ரவி,ரேனு,ரஞ்சனி ஆகியோருடன் அடுத்த பிரபுதேவாவாக முடிசூடிய ஷெரிப் மற்றும் மிமிக்கிரி நடனம் என அசத்தும் சிவகார்த்த்திகேயனை வரவேற்கப் போகின்றோம் என்ற ஒரு சின்ன சந்தோசத்தோடு அன்றைய இரவும் கழிந்தது.
ஆனால் மறுநாள் காலை எனக்கு ஒரு அதிர்ச்சி, சற்று நேரம் தான் என்றாலும் அது அதிர்ச்சிதான்..... நான் விமான நிலையம் சென்றேன் என்பது சிலருக்கு தெரியும் அதனால் சென்றேனா இல்லையா என கேட்கவில்லை. ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது........ தெரிந்தவர்கள் என்னவென சொல்லிவிடுங்கள்.....நான் அடுத்த அங்கத்தில் அந்த விடயத்தோடு உங்களை சந்திக்கின்றேன்.
14 கருத்துரைகள்:
hey bro wat happen..... >????????
Nimalesh சொன்னது…
hey bro wat happen..... >????????
என்ன நண்பா இப்பவே சொன்ன என்னாகிறது கொஞ்சம் காத்திருங்கள் சொல்கின்றேன்.
haiyoo haiyooo ok ok
எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்ணே...
லோஷன ஈ அடிச்சான் கொப்பி பண்ணாம புதுசா எழுதுங்க.. திட்றதுக்கு அது வசதிண்ணே..
//ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது.....//
அறிய ஆவலாக இருக்கிறேன். விரைவில் அடுத்த பதிவு வரட்டும்....
//பெயர் கூறியது...
எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்ணே...
லோஷன ஈ அடிச்சான் கொப்பி பண்ணாம புதுசா எழுதுங்க.. திட்றதுக்கு அது வசதிண்ணே..//
பெயர் கூறியது என்று சொல்லிவிட்டு பெயரையே கூறாமல் போனால் எந்த தறுதல என்று நாங்க எப்படி கண்டு பிடிக்கிறது...
பெயர் கூறுறேன் என்று பெயர் கூறாதவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
ஒருவர் ஒரு துறையிலே ஈடுபாடுகொண்டு அத்துறையில் அர்ப்பணிப்புடன் செயட்படும்போது. அவரை உற்சாகப் படுத்த வேண்டியது நல்ல மனிதர்களின் பண்பு அதனை விடுத்து நாகரிகமற்ற முறையில் அவரது மனதை புண் படுத்தும் வகையில் நடந்து கொள்வதென்பது ஒரு கீழ்த்தரமான செயலாகும்.
சரி அவர் பிழை விடுகிறார் என்று சொன்னால் அவரது பிழைகளை சுட்டிக்காட்டி அவரை திருத்துவது மனித பண்பு அதனை விடுத்து அவரை சங்கடப்பட வைப்பது ஒரு மனிதப்பண்பு அல்ல...
ஒருவர் ஒருவரை பின்பற்றுவதென்பது அது அவரது விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது. ஒரு நல்ல மனிதரை பின்பற்றுவதென்பது தப்பான விடயமல்ல இங்கு ஈ அடிப்பதென்பது எனக்கு புரியவில்லை பல பதிவர்கள் தொடர் பதிவு பதிகின்றனர். லோஷன் மட்டுமா தொடர் பதிவு பதிகிறார். அப்போ தொடர் பதிவு பதியும் பதிவர்கள் எல்லோரும் ஈ அடிப்பவர்களா...
வலைப்பதிவு என்பது பலர் வந்து பார்க்கின்ற ஒரு இடம் இதிலே தனிப்பட்ட பிரட்சனைகலையோ பார்ப்பவரை சங்கடப் படுத்தும் விடயங்களையோ தவிர்த்து நாகரிகமான முறையில் நடந்து கொள்வது நல்லது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஸ்
i agree with chandru......
அன்பின் சின்னத்தம்பி சதீசுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள் பொலிகண்டிக் கந்தவன முருகன் உங்களுக்கு எல்லா அருளும் கிடைக்க வாழ்த்துக்கின்றேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஸ்
Nimalesh கூறியது...
haiyoo haiyooo ok ok
நன்றிகள்.
சந்ரு கூறியது...
//ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது.....//
அறிய ஆவலாக இருக்கிறேன். விரைவில் அடுத்த பதிவு வரட்டும்....
இன்னும் கொஞ்சம் காத்திருங்கள். உங்கள் ஆவலுக்கு நன்றிகள்.
சந்ரு கூறியது...
//பெயர் கூறியது...
எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்ணே...
லோஷன ஈ அடிச்சான் கொப்பி பண்ணாம புதுசா எழுதுங்க.. திட்றதுக்கு அது வசதிண்ணே..//
பெயர் கூறியது என்று சொல்லிவிட்டு பெயரையே கூறாமல் போனால் எந்த தறுதல என்று நாங்க எப்படி கண்டு பிடிக்கிறது.
என்ன செய்வது விட்டு விடுவோம் நண்பா. உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
Post a Comment