லோஷன். இந்த பெயர் இலங்கை வானொலி வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர். தமிழ் சினிமாவில் எப்படி ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகர்கள் ஆண்டார்களோ அப்படி இப்போது இலங்கை வானொலிகளின் சூப்பர் ஸ்டார் லோஷன் அண்ணா தான். கடந்த பத்து வருடங்களாக அறிவிப்பு துறையில் கலக்கிக்கொண்டிருக்கின்றார். அங்கே கலக்கியது போதாதென்று இப்போது பதிவுலகிலும் தன்னை ஒரு முன்னணி பதிவராக நிலை நிறுத்தி பல பதிவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் லோஷன் அண்ணாவை என் ஐந்தாம் ஆண்டில் இருந்து வானொலியில் தொடர்ந்தவன் நான்.
முதல் முறையாக பார்த்த நாளே இன்னும் நினைவை விட்டு அகலா நிலையில் இன்று அவருடன் அருகாமையில் இருப்பது மகிழ்வளிக்கிறது. லோஷன் அண்ணாவிடம் பலருக்கு பல கேள்விகளை கேட்க மனதில் ஆசை இருக்கும் ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காது. சிலருக்கு இந்த கேள்வியை கேட்டால் அவர் எப்படி பதில் சொல்வார்? சங்கடப்படுவாரா என தாங்கள் சங்கடப்பட்டு கேட்காமல் விட்டோரும் பலர். இப்போது என் முறை கேள்விகளால் அவர் அந்தரங்கங்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.
லோஷன் அண்ணாவுடன் நான்...இரண்டு பேரும் பக்கத்திலேயே நின்று கொண்டு தொலைபேசியில் எங்களுக்குள் பேசவில்லை.
இங்கே நான் கேள்விகளை கேட்க லோஷன் அண்ணா தன் மனம் திறந்து உள்ளதை உள்ளபடி கொட்டி உள்ளார். இப்படி ஒரு பதிவு இடப்போகின்றேன் என அவரிடம் கேட்டவுடன் தலை ஆட்டிவிட்டார். இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றிகள். என்னிடம் பதிலகை அவர் ஒப்படைத்து இன்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. நேரம் கிடைக்காமல் இழுபட்டு இப்போதுதான் அந்தரங்கத்தை உங்களிடம் சொல்ல நேரம் வந்திருக்கின்றது. எந்த கேள்வியானாலும் உள்ளதை உள்ளபடி சொல்கின்றேன் என தன் மன ஓட்டத்தை கொட்ட தயாரான லோஷன் அனாவே இனி உங்களுடன் அடிக்கடி பேசப்போகின்றார்.
இன்னும் பல உண்மைகளை அவர் வாயிலிருந்தே கறக்க தயாராகுங்கள். நீங்களும் உங்கள் கேள்விகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் பரிசீலனையின் பின் கேள்விகளுக்கான விடைகளுடன் பதிவு தொடர்ந்து உங்களை நாடிவரும். ஆனால் இங்கே யாரும் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது என்பதையும் சொல்லிவிடுகின்றேன்.
உங்கள் கேள்விக் கணைகளை அனுப்புங்கள். sshathiesh@gmail.com
இதோ என் கேள்விகளும் அதற்கான லோஷன் அண்ணாவின் பதில்களும் கேள்வி பதில் வடிவில்? ஆரம்பத்தில் சிறிது சிறிதாக ஆரம்பிப்போம் அப்புறம் கேட்போம் கேட்க வேண்டிய கேள்விகளை..... லோஷன்.
கேள்வி: பிறந்து தவழ்ந்து வளந்த மண்ணைப்பற்றி சொல்லுங்களேன்?
லோஷன் அண்ணா: யாழ்ப்பாணத்தில் அழகிய கிராமம் இணுவில். ஆனால் அங்கு வசித்து 7 வருடங்களுக்கு உட்பட்ட காலமே.வாழ்க்கையில் பெரும்காலம் கொழும்பிலேயே வசித்துள்ளேன்.
கேள்வி: குடும்பப்பின்னணி பற்றி சொல்லுங்களேன்?
லோஷன் அண்ணா:அழகான ,அன்பான அக்கறையான மனைவி,குறும்பும் குழப்படியுடனும் குதூகலம் தரும் ஒன்றரை வயது செல்லமகன். அன்பால் இணைந்த அப்பா அம்மாவுடன் இரு இளைய சகோதரர்கள்.
கேள்வி: உங்களுக்கே செல்லம் கிடைத்துள்ள நிலையில் நீங்கள் அம்மா செல்லமா அப்பா செல்லமா?
லோஷன் அண்ணா: எப்போதுமே அம்மா செல்லம்.
கேள்வி: உங்கள் கண்டிப்பில் வளர்ந்தவர்கள் நிறையப்பேர் உங்களை வீட்டில் கண்டிப்பவர் யார்?
லோஷன் அண்ணா:செல்லமாக இருந்தாலும் அதிகம் கண்டித்தவர்/ கண்டிப்பவர் அம்மாதான். இப்போது இன்னொருவர் சேர்ந்துள்ளார். தேவையான நேரம் கண்டிக்கும் என் மனைவி. (தண்டிப்பதில்லை என்பதை தெளிவாக அறிவித்து விடுகின்றேன்.)
கேள்வி: மறக்கமுடியாத பாடசாலை கால பசுமை நினைவுகளை மீட்டுங்கள்?
லோஷன் அண்ணா: இப்போது அறுவடை செய்யும் எல்லாமே பாடசாலைக் காலத்தில் விதைத்த பல தமிழ் விதைகள் தான். நான் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் படித்தேனோ இல்லையோ விவாதம், பேச்சு, நாடகம், கவிதை, சிறுகதை எழுதுதல், வில்லுப்பாட்டு மட்டுமின்றி கிரிக்கெட், சதுரங்கம் என்பவற்றில் அதிகம் ஈடுபட்டேன். இன்று என் ஊடகத்துறையில் அவை அனைத்துமே மிக உதவியாக இருக்கின்றன.
கேள்வி: வானலையின் சிங்கம் படிப்பில் சிங்கமா?
லோஷன் அண்ணா: எனது முன்னைய வகுப்பாசிரியை ஒருவர் சொன்னது போல கா.பொ.த.சா/தரம் O/L வரை மொக்கர்களின் வகுப்பில் முதலாம் பிள்ளை தான். (8 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரை.) A/L தான் தடுமாறி சராசரி ஆகிவிட்டேன்.கவனக்கலைப்பான்களில் கலைந்து விட்டாலும்- எதிர்பார்த்த பெறுபேறுகள் வராவிட்டாலும் பல்கலைக்கழகம் கிடைத்தும்- பின் ஊடகத்துறையின் மேல் வந்த ஈடுபாட்டால் செய்யவில்லை.
கேள்வி: காதலில் விழுந்த அனுபவம் உண்டா?
லோஷன் அண்ணா: உண்டு.
கேள்வி: நிறங்களில் நெஞ்சை கொள்ளை கொண்டது?
லோஷன் அண்ணா: கறுப்புதான் எனக்கு பிடித்த கலர்!
கேள்வி: நன்றாக ஒரு பிடி பிடிக்கும் உணவு?
லோஷன் அண்ணா: பசிக்கும் நேரத்தில் ருசியான எதுவும்... பால் அப்பம், சில்லி பரோட்டா & Submarines
கேள்வி: எழுத்தால் உங்களை வென்றவர்கள்?
லோஷன் அண்ணா: மகாகவி பாரதி, சுஜாதா, வைரமுத்து மற்றும் வலையுலகில் பலர்.
கேள்வி: ஆட ஆசைப்படும் விளையாட்டு?
லோஷன் அண்ணா: எப்போதுமே கிரிக்கெட்.
கேள்வி: பார்த்து பரவசப்படும் விளையாட்டு?
லோஷன் அண்ணா: கிரிக்கெட்,கால்பந்து, டெனிஸ்( பெண்கள் டெனிஸ் மட்டுமல்ல.)
கேள்வி: கொள்ளைகொண்ட விளையாட்டு வீரர்கள் மூவர்?
லோஷன் அண்ணா: ஐவரை சொல்கின்றேன். - 5 தான் எனது அதிஷ்ட இலக்கம்.
முத்தையா முரளிதரன்.
அலன் போடர்.
ரொஷான் மஹாநாம.
மத்தியூ ஹெயடன்.
ஆந்திரே அகாசி.(டென்னிஸ்.)
கேள்வி: இசையால் வருடிய இசை அமைப்பாளர்கள்.?
லோஷன் அண்ணா: 80 களின் இளையராஜா.
90 களின் ஏ.ஆர.ரகுமான்.
90 களிலிருந்தும் இப்போதும் வித்யாசாகர்.
கேள்வி: குரலால் மயக்கிய பாடக பாடகியர்?
லோஷன் அண்ணா: S.P. பாலசுப்ரமணியம்.
P. சுசீலா.
சித்ரா.
சுஜாதா. ஸ்ரேயா ஹோஷல்.
கேள்வி: கடவுள் நம்பிக்கை?
லோஷன் அண்ணா: தனிப்பட்ட முறையில் இல்லை. அன்புக்குரியோருக்காக கொஞ்சம். அதிகம் நம்பும் கடவுள்-லோஷன்.
கேள்வி: முதல் வேலை அனுபவம்?
லோஷன் அண்ணா: முதல் நாளே ஒலிவாங்கியில் குரல் ஒலித்தது. முதல் வேல மட்டுமல்ல இப்போதும் அதே ஒலிபரப்பாளர் வேலை தான்.........ஒவ்வொரு நாளும் புதிதாய்........
கேள்விக்கணைகளும் பதில் கனிகளும் தொடரும்............
17 கருத்துரைகள்:
:)
என்ன கொடுமை சரவணா ?
தங்களிடம் ஒரு கேள்வி அந்தரங்கம் என்பதன் அர்த்தம் தெரியுமா ?
இந்த தலைப்பை பார்த்து விட்டு நான் வேறு ஏதோ என நினைத்து விட்டேன்.
நல்ல ஐடியா
பதிவை பார்த்ததும் கேக்க வேண்டும் என்று நினைத்த எல்லா கேள்விகளும் ஞாபகம் வந்தது, ஆனால் நீங்களே எல்லாத்தையும் கேட்டல் நங்கள் என்ன செய்ய......
அழகாக பேட்டி எடுத்து கோர்வையாக போட்டிருக்கிறீர்கள்.
//லோஷன் அண்ணாவுடன் நான்...இரண்டு பேரும் பக்கத்திலேயே நின்று கொண்டு தொலைபேசியில் எங்களுக்குள் பேசவில்லை. //
ஹா ஹா... நாங்க நம்பமாட்டோம்...
//லோஷன் அண்ணா:செல்லமாக இருந்தாலும் அதிகம் கண்டித்தவர்/ கண்டிப்பவர் அம்மாதான். இப்போது இன்னொருவர் சேர்ந்துள்ளார். தேவையான நேரம் கண்டிக்கும் என் மனைவி. (தண்டிப்பதில்லை என்பதை தெளிவாக அறிவித்து விடுகின்றேன்.) //
எங்கப்பன் குதிருக்குள் இல்லை...
ஹா ஹா ஹா...
லோஷன் அண்ணா மாட்டுப்பட்டுவிட்டார்...
scsc inru
nice
ஓஹோ இவ்வளவு இருக்க....
இன்னும் இருக்கும் வரட்டும்.
நல்ல ஆரம்பம். தொடருங்கள்...
ada paravalaye vettu kathiku VIYALAN VIDIYAL ME EERPU POLUM,ANY WAY NICE WORK,BUT ANDARANGAM??????????
MADHAN NE
சிங்கத்தைச் சீண்டும் ஒரு கேள்விகளையும் காணோம். அடுத்த முறை கொஞ்சம் பெரிய கேள்விகளாக கேட்கவும். நன்றாக இருக்கின்றது. அது சரி படத்தில் ஜிம் உடம்புடன் படுத்திருப்பவர் யார்?
எப்பவோ எதிர்பார்த்தது இன்றுதான் ஆரம்பித்திருக்கின்றது... நல்ல கேள்விகள். அடுத்த தொடர் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறேன்.
//குடும்பப்பின்னணி பற்றி சொல்லுங்களேன்?//
உங்கள் வளர்ந்த குடும்பம் பற்றியும் கொஞ்சம் மேலதிகமாக சொல்லியிருக்கலாமே,கலைக்குடும்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
//லோஷன் அண்ணா: எப்போதுமே கிரிக்கெட்//
அவரின் பதிவுகலில் கிரிக்கெட் பற்றி அலசும் அழகு எமக்கு புரியவைக்கிறது
//(தண்டிப்பதில்லை என்பதை தெளிவாக அறிவித்து விடுகின்றேன்.)//
லோஷன் தெளிவாக அறிவித்ததில் ஏதோ அர்த்தம் இருக்கிறது போல இருக்கு
//கேள்வி: காதலில் விழுந்த அனுபவம் உண்டா?
லோஷன் அண்ணா: உண்டு. //
உண்டு என்று மட்டும் சொன்னால் போதுமா?
இன்னும் விளக்கமாக அல்லாவா கேட்கவேண்டும்,சொல்ல வேண்டும்,
ஹிஹிஹிஹிஹி
அவனா நீயி என்ற படி பயந்து பயந்து தான் வந்தேன்... பரவால்ல...
நல்லா வைக்கிறாய்ங்கடா தலைப்பு...
அதுசரி ஜிம்மில படுத்திருப்பது யார்? நமீதாவா? பிகர் செம செக்சியாக இருக்கிறதே? வந்திக்கு கொடுக்கவும் அடுத்த சூப்பில் போடுவார்...
எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க இப்பிடி மொக்கை ப்ளாக் எழுதுறதுக்கு??
நண்பரே எனக்கும் இந்த தலைப்பு பிடிக்கவில்லை... இருபினும் அதை சற்று மனது புண் படாதபடி சொல்லி இருக்கலாமே....
எமது கருத்துகலால் மற்றவர்களை உற்சாகபடுத்த வேண்டுமே தவிர மனதை நோகடிக்க கூடாது....
ப்ளாக் எழுதும் நண்பருக்கு.....
நான் ஏற்கனவே பின்னுடம் இட்ட படி தலைப்பு // லோஷனுடன் அந்தரங்கம் // வேறு விதமான அர்த்தத்தை கொடுக்கிறது ...
இதை பின்னுடம் இட்ட பல நண்பர்களும் கூறி இருகின்ரனை..
//எங்கப்பன் குதிருக்குள் இல்லை...
ஹா ஹா ஹா...
லோஷன் அண்ணா மாட்டுப்பட்டுவிட்டார்...//
ha ha I 2nd in...
//கேள்வி: காதலில் விழுந்த அனுபவம் உண்டா?
லோஷன் அண்ணா: உண்டு. //
உண்டு என்று மட்டும் சொன்னால் போதுமா?
இன்னும் விளக்கமாக அல்லாவா கேட்கவேண்டும்,சொல்ல வேண்டும்,
ஹிஹிஹிஹிஹி
I 2nd in.. WE NEED DETAILED INFO ABT THIS LUV..
//அதுசரி ஜிம்மில படுத்திருப்பது யார்? நமீதாவா? பிகர் செம செக்சியாக இருக்கிறதே? வந்திக்கு கொடுக்கவும் அடுத்த சூப்பில் போடுவார்...//
Eeeeeeeeeew...... Yuck......
Post a Comment