இளைய தளபதியாக திரை உலகில் வலம் வரும் விஜய்க்கும் சூர்யாவிற்கும் நல்ல நட்பு உண்டு. இரண்டு பேரும் கல்லூரி கால நண்பர்கள் என்பது இன்னொரு பலம். அதற்கு அச்சாரமாக நேருக்கு நேர், பிரெண்ட்ஸ் இரண்டு படங்களிலும் நடித்தனர். ஆனால் அப்போது சூர்யா பிரபலமாகாத நடிகர். முன்னணியிலும் இல்லை. ஆனால் இப்போதோ விஜயையும் விஞ்சி முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். விக்ரமோடு விஜய்க்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அது வெளி உலகிற்கு தான் என்பது சாதாரண ரசிகனுக்கும் தெரியும். அதேநேரம் விஷாலுடன் விஜய் சண்டை கோழிதான். வெளி இடங்களுக்கு இருவரும் நெருக்கமாக காட்டினாலும் தன் பாதையில் விஷால் வருகின்றார் என்பது முதல் தன் பட்டத்தை சுட்டு வைத்தது வரை இரண்டுபேருக்கும் ஆகாது.
இது ஒருபுறமிருக்க. விக்ரமும் சூர்யாவும் பிதாமகனுடன் வேறு எந்த படத்திலும் இணைந்து நடிக்க முடியாதளவிற்கு முறுகல். அதுவும் இரண்டு பேரின் பாதையும் இப்போது ஒரே தடத்தில் போவது கண்கூடு. இந்த நிலையில் இவர்களுக்குளான கூட்டணியும் மீண்டும் சாத்தியம் இல்லை. விக்ரம் விஷாலுடன் நடிப்பது எந்த பிரச்சனைகளும் இல்லை. விஜயுடன் விக்ரம் நடித்தாலும் சரியான கதாபாத்திரம் அமைய வேண்டும். முன்னொருமுறை விஜய்க்கு வில்லானாக கூட நடிப்பேன் பாத்திரம் மிக சிறப்பாக இருந்தால் என சொல்லி உள்ளார் சீயான்.
மறுபக்கம் சூர்யாவிற்கு விஜயுடன் நடிப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. ஆனால் நிச்சயம் விஜய்க்கு இணையான கதாபாத்திரம் இம்முறை வழங்கப்பட வேண்டும். அடுத்து விக்ரம் சூர்யா கூட்டு கடினமானதுதான். அதேநேரம் விஷாலை ஒரு பொருட்டாக நினைக்காமல் சூர்யா நடிக்கும் வாய்ப்புகள் உண்டு.
அடுத்தவர், பட்டத்தை துறந்திருக்கும் விஷால். விஜயின் ரசிகர்களின் எதிர்ப்பலையோடு இடை இடையே விஜய் புராணம் பாடுபவர் என்றாலும் விஜயுடன் சேரும் வாய்ப்பு நினைக்க முடியாதது. அதேநேரம் மற்ற இரண்டு பேருடனும் சேர்வதில் எந்த பிரச்சனையும் ஏற்ப்பட போவதில்லை. இந்த நிலையில் தான் இந்த நான்கு பேரும் ஒரே திரையில் வரப்போகின்றனர். இந்த மகத்தான சாதனையை செய்திருப்பது லயோலா காலேஜ் என்பது பெருமைப் படக்கூடிய விடயம். விஜய் அண்டனியின் இசையில் வர இருக்கும் லயோலா காலேஜின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை அல்பத்தில் தான் இவர்கள் ஒன்றாக நடிக்க உள்ளனர். ஒன்றாக என்றவுடன் நேருக்கு நேர் சந்திப்பார்கள் என்று கனவு கண்டால் அதுதான் இல்லையாம். ஒப்பந்தம் கேட்டு போனவுடனேயே எல்லோரும் ஒரே பிரேமில் வருவது கஷ்டம் என்னும் வசனத்தை பேசி வைத்து பாடமாக்கி சொன்னது போல சொல்லி இருக்கின்றார்கள் நால்வரும்.
ஆஹா கிளம்பிட்டாங்கையா என முணுமுணுத்துக்கொண்டிருந்தவர்களிடம் இன்னொரு விடயத்தை சொல்லி இருக்கின்றார்கள். அதுதான் மகா கொடுமையுங்க மற்றவர்கள் வராத நாட்களிலேயே எனக்கு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்க ஏனென்றால் நான் ரொம்ப பிசி என்றிருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் தலை(அஜித்தில்லைங்கோ) அசைத்திருக்கின்றார்கள் லயோலா கல்லூரி) என்னதான் இருந்தாலும் மனதுக்குள் திட்டி இருப்பாங்க இங்கே ஒருத்தன் இருந்த சீட்டில் தானே இருந்திருப்பாய் இப்ப என்ன முகத்தையே பார்க்க மாட்டேன் என்கிறாய் என்று. என்னவோ படித்த கல்லூரிக்காக சேர்ந்து நடிக்க சம்மதிதிருப்பவர்கள் இப்படியே படங்களிலும் ஒன்றாக நடித்தால் தமிழ் சினிமா எங்கேயோ போய்விடும்.
2 கருத்துரைகள்:
தமிழ் சினிமா இப்பவே குழம்பிக்கிடக்கு, உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி
விக்ரம் விஜயோட, விஜய் விக்ரமோட, விஜய் விஷாலோட எண்டு எல்லா 'வி' களும் வர குழம்பிற்றன் நடுவில...
பிறகு திருப்பி இருந்து வாசிச்சன்... கொஞ்சம் விளங்கிச்சு...
அதுசரி, கடைசியா என்ன செய்தி?
எல்லாரும் ஒரே அல்பத்தில வரப்போறாங்க ஆனா ஒரே நேரத்தில திரையில வாறதுக்கு சாத்தியம் இல்ல... அது தானே?
எனக்கு விளங்கியிருக்குதா?
Post a Comment