Thursday, September 17, 2009

இது தொடர் பதிவுகளின் காலம். நான் எழுத நினைக்கும் பதிவுகளை கூட எழுதமுடியாமல் இப்படி தொடர்பதிவு எழுத வேண்டுமே என்னும் ஆதங்கமும் உண்டு. என்ன செய்வது நண்பர்கள் அழைக்கும் போது அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு தானே நடக்கவேண்டும்.

அண்மையில் நண்பர் யோ வாயிஸ் தன் சார்பாக பள்ளிபயின்றதொரு காலம் என்னும் தலைப்பில் என்னை விளையாட கூப்பிட்டார். தப்பித்து விட்டேன். காரணாம் ஏற்கனவே அதே விடயத்தை நான் என் பள்ளிக்காலம் என்னும் தலைப்பில் எழுதிவிட்டேன். எனவே அந்த பதிவிற்கான இணைப்பை இங்கே கொடுக்கின்றேன். என்னை மன்னித்துவிட்டு அதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

அதை தொடர்ந்து அடுத்த அழைப்பு. இந்த முறை புதிய நண்பர் ஒருவர். காதல்,அழகு,கடவுள்,பணம் என மருதமூரான் அழைக்க இன்று இந்த பதிவு. இந்த பதிவை தொடங்க முன் இன்னொரு வேதனையான விடயம் அண்மைய என் பதிவுகள் எதுவும் தமிழிச் தளத்தில் ஹிட் அடிக்கவில்லை. என் புலம்பலை விட்டு விட்டு விடயத்துக்கு போகலாமா?

காதல்.


சொல்லும் போதே இனிக்கும் மந்திர சொல். மாயாஜால வாழ்க்கை. சிலருக்கு இது வாழ்க்கை சிலருக்கு இது பொழுதுபோக்கு. தாய் பிள்ளை மேல் கணவன்-மனைவி ஒருவருக்கிடையில், பிள்ளை தாய் மேல், ஒரு உயிர் இன்னொரு உயிரிடத்தில் என்று எல்லோரும் காதலின்றி வாழமுடியாது. காதலன் காதலி தங்களுக்கிடையில் வைக்கும் காதல் தான் இன்று காதல் என்றவுடன் பலருக்கு நினைவு வருகின்றது. அந்த பக்கத்தில் பார்த்தால் நானும் எத்தனையோ நல்ல காதல்களையும் காமக்காதல்களையும் பார்த்திருக்கின்றேன். பார்த்துக்கொண்டிருக்கின்றேன். காதல் என்னும் அற்புதம் காதலர்களுக்கிடையில் சிக்கி சின்னாபின்னமாகி அதன் புனித்ததை இழந்து கொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையே.

அழகு.


எம் மனதை பறிகொடுத்து நாங்கள் லயித்துப் போகும் இடங்கள் ஒவ்வொன்றும் அழகே. ஆனால் இந்த அழகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தெரிவதுதான் இயற்கையின் விந்தை. குழந்தையின் புன் சிரிப்பு முதல் மரணித்தவனின் மரண படுக்கை வரை ஏதோ ஒரு அழகு இருக்கத்தான் செய்கின்றது.

கடவுள்.


எங்களை மிஞ்சிய ஒரு சக்தி. எனக்கு கடவுள் மேல் முழு நம்பிக்கை உண்டு. அப்பப்போ எனக்கும் அவருக்கும் சண்டை வரும். அப்புறம் எல்லாம் நன்மைக்கே என கடவுளையே மன்னித்து விடுவேன். ஒவ்வொருவருக்கும் தங்களை விட ஏதோ ஒன்று மேலே இருக்கின்றது என்னும் எண்ணம் எப்போது வருகின்றதோ அப்போதே கடவுள் நம்பிக்கை வந்து விடுகின்றது. என் மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நான் எம் மதத்துக்கும் சம்மதம் சொல்லும் மனம் கொண்டவன். அதே நேரம் சில நல்ல மனித உள்ளங்களிலும் கடவுளைக் கண்டுள்ளேன்.

பணம்.


இந்த பிசாசுதான் இன்று இங்கே கொடுத்த நான்கு வகைகளுக்குள்ளும் முதன்மையாகி நிற்கிறது. காதலுக்கும் காசு வேணும், அழகாய் இருப்பதை விட காசை அடுக்கி வைப்பவனையே பலர் ஏற்கின்றனர். கடவுளை பார்க்கணும் என்றாலே காசு தான் தேவைப்படுகின்றது. ஒருமுறை நான் இந்தியா போனபோது சிதம்பரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ மக்கள் சிதம்பரத்தானை தரிசிக்க முட்டி மோதிய வேளை சிதம்பர ரகசியத்தை பார்க்க பணம் வாங்கிவிட்டு ரகசியத்தை மாத்திரம் சொல்லா குறையாக எல்லாவற்றையும் சொன்ன அந்தணர்களை நினைக்கும் போது இன்றும் வேதனையாக இருக்கின்றது. இந்த சிறிய சம்பவமே பணம் எந்தளவிற்கு முக்கியம் என்பதை சொல்லிவிடும. அதேநேரம் முத்து திரைப்பட பாடல் போல கழுத்துக்கு கீழே பணம் இருக்கும் வரை தான் நீ எஜமான் இல்லை பணம் தான் உனக்கு எஜமான் என்பது வாழ்க்கையின் ஓட்டத்தில் புரியாதவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றார்கள்.

என் மனதை சொல்லி விட்டேன். இப்போ இன்னும் நான்கு பேர் மனதை திறக்கவேண்டுமல்லவா.

புல்லட்-எப்போது எடக்கு முடக்காக எழுதும் இவரை இப்படி எடக்கு முடக்கான விடயங்களில் இழுத்து சீரியஸாக எழுத வைக்கும் ஒரு முயற்சி. நடக்குமா புல்லட்.?

கடலேறி- நான் லோஷன் அண்ணாவிடம் கேள்வியைக்கேட்டுவிட்டு பதிவேற்றாமல் இருக்கும் போது வந்தி அண்ணரிடம் கேள்வியால் துளைத்து எனக்கு முதல் பதிவிட்ட குற்றத்துக்காக இந்த தண்டனை.

பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?


சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.

நண்பர்களை அழைத்தமைக்கு நான் கூறிய காரணங்கள் சும்மா ஒரு சுவாரஷ்யத்துக்காகவே உண்மையில் அத்தனைபேரும் நல்ல தரம் மிக்க படைப்பை தருபவர்கள். இந்த தொடரை தொடர்வார்கள் என நம்புகின்றேன்.

எல்லாம் சொன்னாச்சு காதல் என்னும் தலைப்பிட்டு விட்டு என் காதலியை பற்றி சொல்லாமல் விடலாமா? இதோ அவர் படத்தையே தருகின்றேன். எப்பிடி இருக்காங்க ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

=>=>
=>

=>
=>
=>


=>

20 கருத்துரைகள்:

ஆதிரை said...

//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... :)

அழைப்புக்கு நன்றி... எழுதுகின்றேன்.

Sinthu said...

"சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.'
இப்படி மாட்டி விடுவீர் என்று நினைக்கவே இல்லை..

யோ வாய்ஸ் (யோகா) said...

எல்லாம் சரி, எதுக்கு சூர்யாவின் செத்து போன காதலியின் படம் போட்டீங்க..


ஹி ஹி ஹி..

வந்தியத்தேவன் said...

வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா?

Nimalesh said...

எல்லாம் ஓகே ஆன சமீரா ரெட்டி தா இடிக்குது .....................lol

சுபானு said...

//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.
ஏன்னோட ஆளை உங்கசோடி ஆக்கீட்டிங்களா??? பொறுங்க வாறன்...

நல்லாயிருக்கு பதிவு.

சந்ரு said...

//வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா?//


வயசிக்கேத்த யோடிப்பொருத்தம் வேண்டுமென்றால் ஆண்டிதானே பொருத்தம்.

மருதமூரான். said...

/////ஆதிரை சொன்னது…

//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... /////

அதுதானே, மருதமூரானின் உயரத்துக்குதான் ஷமீரா ரெட்டி சரியான பொருத்தம். மருதமூரான் 180cm ஷமீரா 174cm சரியா? உயரம் குறைவான சதீஷ்(154cm) உங்களுடைய அண்ணியைப்பற்றி யோசிக்கவே கூடாது சரியா? ஏதிர்காலத்தில் இதுதொடர்பில் கருத்துரைத்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

SShathiesh said...

ஆதிரை கூறியது...
//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... :)

அழைப்புக்கு நன்றி... எழுதுகின்றேன்

=>>>
ஆதிரை உங்கள் கருத்தை படித்து விட்டு என் ஆள் ரொம்ப கவலையில் இருக்கின்றார். எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகிவருகின்றேன்.

SShathiesh said...

Sinthu கூறியது...
"சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.'
இப்படி மாட்டி விடுவீர் என்று நினைக்கவே இல்லை.

=>>
இது நியூற்றனின் மூன்றாம் விதி. நன்றி வருகைக்கு.

SShathiesh said...

யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எல்லாம் சரி, எதுக்கு சூர்யாவின் செத்து போன காதலியின் படம் போட்டீங்க..


ஹி ஹி ஹி.

=>>
என்னது. சூர்யாவின் காதலியா? என்னுடைய நபரை வேறு ஒருவருடன் தொடர்பு படுத்தியதுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

SShathiesh said...

வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா

=>>

ஆண்டியா உங்களுக்கு வயது போய்விட்டது என்பதற்கு நல்ல உதாரணம் என்னுடைய ஆளை ஆண்டி என்றது.

புல்லட் said...

ஓ உங்களுக்கு சமீரா ரெட்டி கேக்குதா? பெசாம பக்கத்து பாய்கடையில ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுட்டு படுங்க..

ஒருவாரத்தில் எழுதுகிறேன்..

SShathiesh said...

Nimalesh கூறியது...
எல்லாம் ஓகே ஆன சமீரா ரெட்டி தா இடிக்குது .....................lo

=>>

சமீரா ரெட்டி எப்படி உங்களை இடிக்க முடியும். கனவு காணாதீர்கள்.

SShathiesh said...

சுபானு கூறியது...
//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.
ஏன்னோட ஆளை உங்கசோடி ஆக்கீட்டிங்களா??? பொறுங்க வாறன்...

நல்லாயிருக்கு பதிவு

=>>

அடப்பாவிகளா குடும்பத்தில குளறுபடி உருவாக்கிடுவிங்க போல என்னுடைய ஆளை சொந்தம் கொண்டாட இன்னொருவரா?

SShathiesh said...

சந்ரு கூறியது...
//வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா?//


வயசிக்கேத்த யோடிப்பொருத்தம் வேண்டுமென்றால் ஆண்டிதானே பொருத்தம்

=>>
சந்த்ரு அண்ணா உங்களுக்கும் கண்ணில் ஏதோ பிரச்சனை போல இருக்கு. உங்கள் வயிற்றெரிச்சல் நல்லா தெரிகிறது. என்ன செய்வது இருபது வயசு பையனின் ஆள் உங்களுக்கு ஆண்டி என்றால் என் அண்ணர் நீங்கள், மூத்தவர் வந்தி அன்னாரின் வயது இப்போ எத்தனை என எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

SShathiesh said...

மருதமூரான். கூறியது...
/////ஆதிரை சொன்னது…

//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... /////

அதுதானே, மருதமூரானின் உயரத்துக்குதான் ஷமீரா ரெட்டி சரியான பொருத்தம். மருதமூரான் 180cm ஷமீரா 174cm சரியா? உயரம் குறைவான சதீஷ்(154cm) உங்களுடைய அண்ணியைப்பற்றி யோசிக்கவே கூடாது சரியா? ஏதிர்காலத்தில் இதுதொடர்பில் கருத்துரைத்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்

=>>

அந்நிய? தம்பியின் ஆளை பின்தொடரும் வாலி மருதமூரானை ராமர் தண்டிப்பாராக.

SShathiesh said...

புல்லட் கூறியது...
ஓ உங்களுக்கு சமீரா ரெட்டி கேக்குதா? பெசாம பக்கத்து பாய்கடையில ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுட்டு படுங்க..

ஒருவாரத்தில் எழுதுகிறேன்.

=>>
ஏன் இப்படி ஒரு வயித்தெரிச்சல். உங்களுக்கு ஒரு குண்டு ஆர்த்தியோ, கோவை சரளாவோ கிடைக்காமலா போகப்போகின்றார்கள். காத்திருங்கள். நநனே அண்ணியை தேடி சொல்கின்றேன்.

LOSHAN said...

காதலைப் பற்றி எப்படி உருகி இருக்கிறார் சதீஷ்? ம்ம்ம் விளங்குது.. ;)
சதீஸின் அப்பாவிடம் பேசத் தான் வேணும் போல..


அழகைப் பற்றி சொன்ன வரிகளை ரசித்தேன்..

//ஒவ்வொருவருக்கும் தங்களை விட ஏதோ ஒன்று மேலே இருக்கின்றது என்னும் எண்ணம் எப்போது வருகின்றதோ அப்போதே கடவுள் நம்பிக்கை வந்து விடுகின்றது.//

ஆமாம் எனக்கு மேல் சீலிங் இருக்கு.. அதுக்கு மேல் கூரை,வானம் எல்லாம் இருக்கு.. அதுக்காக கடவுள் நம்பிக்கை வந்திட்டுது என்று அர்த்தமா? .. எப்பூடி?

ஆகா எல்லாமே ஒரே படத்தோட காணாமல் போன சப்பை ரொட்டிக்கு அலையுறீங்களே..
இதை விட சூப்பர் பிகர்கள் நம்ம நாட்டின் Majestic Cityஇலும் ODELஇலும் பார்க்கலாமே..
கண்ணைக் கழுவுங்கைய்யா.. சின்னப்புள்ளைத் தனமா..

சந்ரு said...

//LOSHAN கூறியது...

இதை விட சூப்பர் பிகர்கள் நம்ம நாட்டின் Majestic Cityஇலும் ODELஇலும் பார்க்கலாமே..
கண்ணைக் கழுவுங்கைய்யா.. சின்னப்புள்ளைத் தனமா..//


லோஷன் அண்ணா அடிக்கடி Majestic City மற்றும் ODEL பக்கம் போகும்போதே நினைத்தேன் ஏதோ வில்லங்கம் இருக்கு என்று...

லோஷன் அண்ணா நீங்க சதீஸின் அப்பாவிடம் போவதற்கு முதல் நான் உங்களைப்பற்றிச் சொல்ல அண்ணியிடம் போகப்போகின்றீன்.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive